Thursday, 31 March 2016

முட்டாள் தினம் தேவையா பகுதி-2

📢  ⓂAKKAL ⓂEDIA 📢

💠பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்💠

❌முட்டாள் தினம் தேவையா❓


               🖲பகுதி-2

🏮முட்டாள் தினத்திற்கும் இஸ்லாத்திர்க்கும் சம்மந்தம் உண்டா❓

🏮பிறகு ஏன் நமது சகோதரர்களும் கொண்டாடுகிறார்கள்❓

💥இதற்கு காரணம் மார்க்கத்தை விளங்காததே ஆகும்.

💥மார்க்கத்தை விளங்கி இருந்தால் மார்க்கத்திற்கு சம்மதம் இல்லாத இந்த தினத்தை கொண்டாடுவார்களா❓

🏮அல்லது அவர்களுடைய பிள்ளைகளுக்கு இந்த தினைத்தை கற்று தான் கொடுப்பார்களா❓

💥சகோதரர்களே❗❗

💥இஸ்லாம் ஏமாற்றுவைதையும் ஏமாறுவதையும் வண்மையாக கண்டிக்கிறது என்பதை நாம் நினைவில் கொள்ள வேன்டும்.

💥ஒருவர் மற்றொருவரைக் கிண்டலடிப்பதை இஸ்லாம் வன்மையாகக் கண்டிக்கிறது.

💥மற்றவர்கள் பரிகாசம் செய்வதை இறைவன் எவ்வாறு கூறுகிறான் என பார்ப்போம்👇🏻



📓“முஃமின்களே! ஒரு சமூகத்தார் பிறிதொரு சமூகத்தாரைப் பரிகாசம்செய்ய வேண்டாம் ஏனெனில் (பரிகசிக்கப்படுவோர்) அவர் களை விட மேலானவர்களாக இருக்கலாம், (அவ்வாறே) எந்தப் பெண்களும் மற்ற எந்த பெண்களையும் (பரிகாசம் செய்ய வேண்டாம்) – ஏனெனில் இவர்கள் அவர்களை விட மேலானவர்களாக இருக்கலாம்”.

📖அல்குர்ஆன் 49:11


💥ஒருவர் மற்றொருவரை ஏமாற்றுவதை இஸ்லாம் கடுமையாக எச்சரிக்கை செய்கிறது👇🏻

📓நபி(ஸல்)அவர்கள் கடைத்தெருவில் உள்ள ஓர் உணவுக் குவியலைக் கடந்து சென்றார்கள். அப்போது அதனுள் தமது கையை நுழைத்தார்கள். அவர்களது கையில் ஈரம் பட்டது. உணவுக்காரரே (கடைக்காரரே) என்ன இது? எனக்கேட்க, “அல்லாஹ்வின் தூதரே மழை பொழிந்து (நனைத்து) விட்டது” என்று கூறினார். அதற்கு நபி(ஸல்)அவர்கள் மக்கள் பார்க்கும் அளவிற்கு அதை நீ மேலே வைத்திருக்க வேண்டாமா? என்று கூறிவிட்டு “எவர் ஏமாற்றுகிறாரோ அவர் என்னைச் சார்ந்தவரல்லர்”என்று கூறினார்கள்.

📜(?(முஸ்லிம் 295)

⚙இத்தகைய விளக்கங்களை மார்க்கம் தந்த பிறகும் நம் சகோதரர்கள் விளங்காததன் காரணமாகவே இத்தகைய கொண்டாட்டங்கள் இஸ்லாம் சமுதாயம் பரவலாக கொண்டாடி வருகிறது.

❓சற்று சிந்தித்துப்பாருங்கள்

✅இஸ்லாம் கூறுவதை நாம் விளங்காதவர்களாக இருந்துவிட்டு இந்த கொண்டாட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கலாமா❓

⚙உங்கள் சிறுப்பிள்ளைகளுக்கு இஸ்லாம் பிறரை ஏமாற்றுவதை கண்டிக்கிறது என்று கூறி வளர்க்கப்போறீர்களா❓

இல்லையென்றால்....

⚙விளையாடுகிறோம் என்று நினைத்துக்கொண்டு குழந்தைகளின் மனதில் ஏமாற்றும் வித்தையை விதைக்கப்போகிறீர்களா❓

🏮இன்றைக்கு குழந்தைக்கு ஏமாற்றம் விளையாட்டாக தெரியலாம்.

🏮ஆனால் வளர்ந்த பிறகு அவர்களது வாழ்க்கை விபரீதத்தை சந்திக்க நேரிடும்.

❓சிந்தித்து செயல்படுங்கள்...


🔃🔃🔃🔃🔃🔃🔃🔃

🔮 இஸ்லாமிய மார்க்க செய்திகளை அழகிய முறையில் அறிய

♻ வாட்ஸ்அப்பில் எங்கள் செய்தியை பெற 👇

📱 0091- 9994675186

📱 0091- 9629167027

பேஸ்புக்கில் எம்மை தொடர 👇
https://m.facebook.com/Makkalmedia-1684365771847561/?ref=wizard

📢 ⓂAKKAL ⓂEDIA 📢

📮 பதிவு நாள்: 31 MAR 2016

Part of 👇
📡 ECHO DAWAH FOUNDATION 📡

No comments:

Post a Comment