Sunday, 13 March 2016

📖குர்ஆனும் விஞ்ஞானமும்🔭

📢  ⓂAKKAL ⓂEDIA 📢

💠பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்💠

📖குர்ஆனும் விஞ்ஞானமும்🔭

💧அனைத்து உயிரினமும் நீரிலிருந்து தோன்றின

📖குர்ஆனின் பார்வையில்


📓நிச்சயமாக வானங்களும், பூமியும் (முதலில்) இணைந்திருந்தன என்பதையும், இவற்றை நாமே பிரித்(தமைத்)தோம் என்பதையும், உயிருள்ள ஒவ்வொன்றையும் நாம் தண்ணீரிலிருந்து படைத்தோம் என்பதையும் காஃபிர்கள் பார்க்கவில்லையா? (இவற்றைப் பார்த்தும்) அவர்கள் நம்பிக்கை கொள்ள வில்லையா?
(அல்குர்ஆன் : 21:30)

📓மேலும், எல்லா உயிர்ப் பிராணிகளையும் அல்லாஹ் நீரிலிருந்து படைத்துள்ளான்; அவற்றில் தன் வயிற்றின் மீது நடப்பவையும் உண்டு; அவற்றில் இரு கால்களால் நடப்பவையும் உண்டு; அவற்றில் நான்கு (கால்)களை கொண்டு நடப்பவையும் உண்டு; தான் நாடியதை அல்லாஹ் படைக்கிறான்; நிச்சயமாக அல்லாஹ் எல்லாவற்றின் மீதும் பேராற்றலுடையவனாக இருக்கின்றான்.
(அல்குர்ஆன் : 24:45)


👆🏼மேலே கூறப்பட்ட வசனத்தை ஆராய்ந்து பார்த்தால் இதில் அனைத்து உயிரினங்களும் நீரிலிருந்து தோன்றியது என்பது நம்மால் அறிய முடிகிறது..

🔭விஞ்ஞானத்தின் பார்வையில்

💦இன்று விஞ்ஞானம் பல முன்னேற்றங்களை கண்டுவிட்டது. நமது உடலில் உள்ள உயிரணுவின் ( cell ) உள்ளீடாய் விளங்கும் ' ஸைட்டோபிளாஸம் ' ( cytoplasm) 80% சதவீதம் தண்ணீர்யே.  அடிப்படையாய் கொண்டே அமைந்துள்ளது என்பதை என்று இன்று நம்மால் அறிந்து கொள்ள முடிகிறது.

💦மேலும் இந்த உலகில் வாழக் கூடிய அனைத்து உயிரினங்களும் 50% முதல் 90% தண்ணீர்யே அடிப்படையாக கொண்டு உள்ளது என்று இன்றைய விஞ்ஞானம் கூறுகிறது.

🤔சிந்திப்போம்❗

🛡அன்பார்ந்தவர்களே ஒவ்வொரு உயிரினங்களும் நீரிலிருந்து படைக்கப்படுகிறது என்பதை பதினான்கு நூற்றாண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த ஒரு மனிதரால் கற்பனை செய்து இருக்க முடியுமா❓

🛡அதிலும் குறிப்பாக தண்ணீருக்கே தட்டுப்பாடு என்று இருக்கும் அரேபிய பாலைவனத்தில் வசிக்கும் ஒரு நபர் இதை எண்ணி பார்த்திருக்கத் தான் இயலுமா❓

📓மேலும் அவர்கள் இந்தக் குர்ஆனை ஆராய்ந்து பார்க்க வேண்டாமா? அல்லது அவர்கள் இருதயங்கள் (இருக்கின்றனவே) அவற்றின் மீது பூட்டுப் போடப்பட்டு விட்டனவா?
(அல்குர்ஆன் : 47:24)


🔃🔃🔃🔃🔃🔃🔃🔃🔃🔃🔃
🔮 இஸ்லாமிய மார்க்க செய்திகளை அழகிய முறையில் அறிய

♻ வாட்ஸ்அப்பில் எங்கள் செய்தியை பெற 👇

📱 0091- 9994675186

📱 0091- 9629167027

பேஸ்புக்கில் எம்மை தொடர 👇
https://m.facebook.com/Makkalmedia-1684365771847561/?ref=wizard

📢 ⓂAKKAL ⓂEDIA 📢
📝 பதிவு நாள்:  19 FEB 2016

Part of👇🏼
📡ECHO DAWAH FOUNDATION 📡

No comments:

Post a Comment