Sunday 13 March 2016

🌺திருமணம் ஓர் அலசல்🌺 🍀பகுதி-6⃣

📢  ⓂAKKAL ⓂEDIA 📢

🍥அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)🍥

🌺திருமணம் ஓர் அலசல்🌺

            🍀பகுதி-6⃣

      🚫திருமணத்தில் நடக்கும் அணாச்சாரம்🚫

🔮உலகத்திற்கு முன்மாதிரியாக திகழ வேண்டிய இஸ்லாமிய.சமூகம் இன்று கலாச்சார.சீரழிவை நோக்கி அபார வளர்ச்சி அடைந்து வருகிறது.

🎁திருமணத்தில்.நடக்கும் அனாச்சாரம்
அதுதான்


🎁திருமணம் என்பது ஒரு சுன்னத்.

🍀ஆனால் அதை நிறைவேற்ற நாம் பல பர்ளுகளை விடுகிறோம்.

🔹பல மூடநம்பிக்கைககளையும் பித்அத்களையும் செய்கிறோம்.

💰வரதட்சணை யிலிருந்து ஆரம்பித்து  அதனை நடக்கக்கூடிய அனாச்சாரத்தை பாருங்கள்

📃பத்திரிகை என்று சொல்லக்கூடிய திருமணம் அழைப்பிதழ் தன் சொந்தக் காரர்களுக்கு கொடுக்க வேண்டும் என்பதற்காக விலையுயர்ந்த பத்திரிகைகளை அடிக்கின்றனர்.ஒரு முறை பார்த்து தூக்கி எறிய கூடிய பத்திரிகைகளை எதற்கு இவ்வளவு விலையுயர்ந்தவை தேவையா❓

🎉திருமணத்திற்காக ஏற்பாடு செய்ய மண்டபம் மிகவும் அழகாகனதாகவும் ஜொலிக்க கூடிய தாகவும் ஏற்பாடு செய்கின்றனர் அதுமட்டுமல்லாமல் வீட்டின் வாசலில் போடக்கூடிய பந்தலோ பத்து தெருவுக்கு போடுகின்றனர்.

🏮இன்னும் அதை அளங்காரப் படுத்துவதற்காக வண்ண வண்ண விளக்குகளை கொண்டு மேலும் அழகுபடுத்துகின்றனர்.

🍱🍤அடுத்து தன் கவுரவத்தையும் தன் மதிப்பையும் காட்ட வேண்டும் என்பதற்காக ஒரு விருந்து வைக்கின்றனர் பஃப்பே (BUFFET) என்று சொல்லக்கூடிய மேற்கத்திய கலாச்சாரத்தின் அடிப்படையில் விருந்தை வைத்து வீண் விரையம் செல்கின்றனர்.

🎶இன்றைய திருமணம் விழாவில் இன்னிசை கச்சேரி என்பது முக்கிய பங்கு வகிக்கிறது.இஸ்லாமிய திருமணம் என்பதை பெயர் மாற்றி இஸ்லாமிய இன்னிசை கச்சேரி என்று மார்க்கத்தை கூறு போட்டு கொண்டு இருக்கிறார்கள்.

🎆 திருமணம் என்னவோ அந்த ஒரு வீட்டில் தான் ஆனால் வெடிக்கக்கூடிய வாணவேடிக்கையோ அந்த ஊரே திரும்பி பார்க்கும் அளவிற்கு வெடியின் சத்தமும் வெளிச்சமும் அந்த அளவிற்கு இருக்கும்🎇

📜அடுத்து திருமணத்திற்காக அடிக்க கூடிய பேனர்களும்,போஸ்டர்களும் ஊரில் எந்த பக்கம் திரும்பினாலும் அந்த திருமணத்திற்குறிய பேனர்களும்,போஸ்டர்களும் தான் இருக்கும்.

🔹அதிலும் ஹராமான நடிகர்களை இனைத்தும் வைப்பார்கள்.


📓ஏனென்றால், மிதமிஞ்சி செலவு செய்பவர்கள் ஷைத்தானுடைய சகோதரர்களாக இருக்கின்றனர். ஷைத்தானோ தன் இறைவனுக்குக் கூட நன்றி செலுத்தா(து மாறு செய்)தவன்.
(அல்குர்ஆன் : 17:27)

     🍀......தொடரும்.....🍀

🔮 இஸ்லாமிய மார்க்க செய்திகளை அழகிய முறையில் அறிய

♻ வாட்ஸ்அப்பில் எங்கள் செய்தியை பெற 👇
📱 0091- 9629167027

📱 0091- 9994675186

பேஸ்புக்கில் எம்மை தொடர 👇
https://m.facebook.com/Makkalmedia-1684365771847561/?ref=wizard

📢 ⓂAKKAL ⓂEDIA 📢

📝 பதிவு நாள்: 16 JAN 2016

No comments:

Post a Comment