Sunday 13 March 2016

❤ காதல் ❤ பகுதி - 3

📢  ⓂAKKAL ⓂEDIA 📢

💠பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்💠

               ❤ காதல் ❤

                  பகுதி - 3⃣

💞டேட்டிங் கலாச்சாரம் ...

🎀டேட்டிங் ஒரு பார்வை ...

💕மேலை நாடுகள் இரண்டாம் உலகப்போரின் போதே இந்த கலாச்சாரத்தை பின்பற்றி வந்தன..

💕ஆண்களும்,பெண்களும்
திருமணத்திற்க்கு முன்பாக சுதந்திரமாக பழகவேண்டும் என்பதற்காக ஏற்படுத்தப்பட்டதே இந்த நவீன கலாச்சார முறை ..

🎀இந்நோய் இப்பொழுது இந்தியாவிலும் ,குறிப்பாக தமிழகத்திலும் தொற்றிக்கொண்டது ..

🎀முன்பெல்லாம் யாருக்கும் தெரியாமல் ,மறைமுகமாக தங்கள் ஈர்ப்பின் உணர்சிகளை வெளிப்படுத்தி வந்தார்கள்..

💓அடிக்கடி பிரச்சனை வெளிப்பட்டு ,
சில சமயங்களில் தற்கொலை வரை சென்றுவிடும் நிலை அதிகமானதால் இதை தடுக்க மேலை நாடுகளின் பக்கம் கவனம் திரும்பியது ...

💓அங்கே ஆண்கள் ,பெண்கள் திருமணத்திற்கு முன் சகஜமாக பழகினாலும் ஏன் எந்த பிரச்சனைகளும் ஏற்படுவதில்லை என்று உற்றுநோக்கிய நம் இளைய சமுதாயத்திற்கு ஒரு தீர்வு கிடைத்துவிட்டது ....

❤அதுவே "டேட்டிங் "கலாச்சாரம் ..❤

💟முன்பெல்லாம் திருமணத்திற்கு முன் காதலித்தால் வாழ்க்கை நன்றாக இருக்கும் என்று காதல் எனும் அசிங்கத்தையும் ,அதன் மூலம் ஏற்பட்ட விபரீதங்களையும்,
இச்சமூகம் பார்த்தது ...

💟தற்போது காதலிப்பதற்கு முன்பாக டேட்டிங் வைத்துக்கொண்டால் காதல் வாழ்க்கை நன்றாக இருக்குமென்று டேட்டிங் எனும் அசிங்கத்தை அரங்கேற்றுவதையும்,
அதன் மூலம் ஏற்படும் விபரீதங்களையும் இச்சமூகம் பார்க்கத் துவங்கியுள்ளது ...

🎀காதலித்தால் கட்டாயம் திருமணம் முடிக்க வேண்டும் ,அல்லது தோல்வியில் முடிந்தால் மனரீதியான பல கஷ்டங்களை அனுபவிக்க வேண்டிய நிலை இருந்தது ..

💞ஆனால் டேட்டிங் மூலம் இப்பிரச்சனைகள் எதுவும் இருப்பதில்லை என்று அதில் ஈடுபடுபவர்கள் கூறுகின்றனர் ..

🏮காரணம் ...

🎀டேட்டிங் மூலம் ஒருவரை ஒருவர் முழுமையாக புரிந்த பிறகு, காதலித்து, திருமணம் முடிப்பதுதான் ..

❤நமக்குள் உடலுறவு நிலைகள் எப்படி ,!!!

❤பேச்சுவார்த்தைகள் எப்படி ,!!

❤கதாபாத்திரங்கள்
எப்படி ,!!!

❤இவன் நமக்காக செலவு செய்யும் நிலைகள் எப்படி !!!

🎀சுருக்கமாக கூறவேண்டுமெனில் ..

💟ஒரு ஆணிண் ஆண்மையையும்,
ஒரு பெண்ணின் பெண்மையையும் முழுவதுமாக இருவரும் அனுபவித்த பிறகு ,நாம் இருவரும் வாழ்க்கை நடத்த அனைத்து நிலைகளிலும் தகுதியானவர்களா என்பதை தீர்மானிக்கின்றனர் ..

🍃ஆனால் இஸ்லாம் ...

🚫காதலையும் ,டேட்டிங்கையும்
 துளியும் அனுமதிக்கவில்லை ..

🍥அல்லாஹ் குர்ஆனில் கூறுவதை பாருங்கள் ...

👱🏼ஆண்களுக்கு தனியாகவும் ...
 
📓 (நபியே!) நம்பிக்கையாளர்களான ஆண்களுக்கு நீங்கள் கூறுங்கள்: அவர்கள் தங்கள் பார்வைகளைக் கீழ் நோக்கியே வைக்கவும். அவர்கள் தங்கள் கற்பையும் பாதுகாத்துக் கொள்ளவும். இது அவர்களைப் பரிசுத்தமாக்கி வைக்கும். நிச்சயமாக அல்லாஹ் அவர்கள் செய்பவைகளை நன்கறிந்து கொள்கிறான்.

📖அல்குர்ஆன் 24:30

👩🏻பெண்களுக்கு தனியாகவும்


📓(நபியே)  நம்பிக்கையுள்ள பெண்களுக்கும் நீங்கள் கூறுவிராக.........

அவர்களும் தங்கள் பார்வையைக் கீழ் நோக்கியே வைத்துத் தங்கள் கற்பையும் பாதுகாத்துக் கொள்ளவும்.

📖அல்குர்ஆன் 24:31


🔰கட்டளையிட்டுள்ளான் ...

🍂நபி அவர்களின் வார்த்தைகளை பாருங்கள் ...

📕ஆயிஷா(ரலி) அறிவித்தார்.  

முஹம்மதின் சமூதாயமேஓர் ஆணோ, பெண்ணோ விபச்சாரம் செய்யும்போது அல்லாஹ் கடுமையாக ரோசம் கொள்கிறான்.  முஹம்மதின் சமுதாயமே! நான் அறிவதை நீங்கள் அறிந்தால் குறைவாகச் சிரித்து அதிகமாக அழுவீர்கள்' என்று நபி ஸல் அவர்கள் குறிப்பிட்டார்கள்.

📜ஸஹீஹுல் புகாரி 1044

💝அதுமட்டுமில்லாமல் திருமணத்திற்க்கு
முன்பாக காதல் ,டேட்டிங் என்று பல சல்லாப வேலைகளில் ஈடுபடுபவர்களுக்கு நபியின் எச்சரிக்கை

📘இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
தம் சமூகத்தில் விபச்சாரம் செய்த ஆண் பெண் இருவரை யூதர்கள் நபி(ஸல்) அவர்களிடம் அழைத்து வந்தார்கள். நபி(ஸல்) அவர்கள் கட்டளையிட்டபடி அவ்விருவரும் பள்ளிவாசலில் ஜனாசாத் தொழுகை தொழுமிடத்திற்கருகில் கொண்டு செல்லப்பட்டுக் கல்லெறிந்து கொல்லப்பட்டார்கள்.

📜ஸஹீஹுல் புகாரி 1329

💢நம் நாடு ஜனநாயக நாடு என்பதற்காக நாம் தவறு செய்தாலும் ,நம்மை யாரும் கேட்கபோவதில்லை என்ற மமதை வேண்டாம் ..

💢அல்லாஹ் பார்க்கிறான் என்ற பயமும் ,நாளை கோடானக்கோடி மக்களுக்கு மத்தியில் அவமானப்பட போகிறோம் என்கிற  
அச்சமும் இருக்க வேண்டும் ...

💢அல்லாஹ்வின் அச்சங்களோடு வாழ அல்லாஹ்விடம் மன்றாடுவோம் ....

💟இன்ஷா அல்லாஹ் நாளை தொடரும் ...


🔃🔃🔃🔃🔃🔃🔃🔃🔃🔃🔃
🔮 இஸ்லாமிய மார்க்க செய்திகளை அழகிய முறையில் அறிய

♻ வாட்ஸ்அப்பில் எங்கள் செய்தியை பெற 👇

📱 0091- 9994675186

📱 0091- 9629167027

பேஸ்புக்கில் எம்மை தொடர 👇
https://m.facebook.com/Makkalmedia-1684365771847561/?ref=wizard

📢 ⓂAKKAL ⓂEDIA 📢
📝 பதிவு நாள்:  10 FEB 2016

Part of👇🏼
📡ECHO DAWAH FOUNDATION 📡

No comments:

Post a Comment