Sunday 13 March 2016

❤ காதல் ❤ பகுதி - 5

📢  ⓂAKKAL ⓂEDIA 📢

💠பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்💠

            ❤ காதல் ❤

               பகுதி - 5⃣


💐அல்ஹம்துலில்லாஹ்💐

☝🏻அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் காதல் பற்றி நான்கு பகுதிகள் முடிந்த நிலையில் ஐந்தாவது பகுதியை தொடங்கி இருக்கிறோம் அல்ஹம்துலில்லாஹ்

♻பெற்றோர்களை கலங்க வைக்கும் காதல் ❗

♻காதல் என்று பொதுவாக எடுத்து கொண்டால் பிள்ளைகள் பெற்றோர்களுக்கு தெரியாமல் தான் காதலிப்பார்கள்

♻ சினிமாகளில் மட்டும் தான்  பெற்றோர்கள் தம் பிள்ளையின் காதலுக்கு உதவுவது போல் காட்டுவார்கள்  நிஜத்தில் அது பெரும்பான்மையாக சாத்தியம் இல்லாத ஒன்று

♻ஒரு தாய் தன் இரத்தத்தை பாலாக்கி தன் பிள்ளைக்கு  ஊட்டி வளர்ப்பதில் இருந்து அவன்  வளர்ந்து பெரியவர்களாக ஆகும் வரை பாசத்துடன் பார்த்து கொள்கிறாள்.

♻அந்த பிள்ளைக்கு ஒவ்வொரு வயது அவருக்கு கூடிக்கொண்டே போனாலும் தம் பிள்ளைகள் என்றும் அந்த தாயிக்கு குழந்தைகள் தான்


♻இப்படி தன் கண்ணுக்குள்ளே வைத்து பார்த்து வளர்த்துக் கொண்டு தம் பிள்ளைகள் ஒரு நாள் யாரையோ காதலிப்பது என்று தெரியவருவது அந்த தாயை பெரிதும் களங்கப்படுத்திவிடும்

♻இதை தொடர்ந்து அந்த பிள்ளைக்கு அந்த தாயும் தந்தையும் அறிவுரை கூறுவார்கள் இது வரை எந்த தாய் தந்தை பேச்சை மதித்து பேசி கொண்டு இருந்த பிள்ளை அந்த தாயும் தந்தையும் அறிவுரை கூறும் உதாசீனப் படுத்தி விட்டு செல்லுகின்றனர்

👆🏻 இதை பார்க்கும் போது அந்த பெற்றோர்களுக்கு அது கலக்கத்தை ஏற்படுத்துகின்றது

♻இன்னும் ஓர் சில இடங்களில் ஒரு துளி அளவுக்கூட தம் பெற்றோர்களை மதிக்காமல் தம் மனம் போன போக்கில் காதலில் விழுந்து தம் வாழ்க்கையை தொலைக்கின்றனர்

♻இந்த காதல் என்று பொதுவாக சொல்லப்படும் விபச்சாரத்தை பார்க்கும் ஒவ்வொரு பெற்றோர்களும் தம் பிள்ளைகள் இப்படி செய்யாது என்று நினைப்பில் இருக்கும் போது தன் பிள்ளை காதலில் விழுந்து வீட்டை விட்டு வெளியேறும் போது அந்த பெற்றோர்களுக்கு ஏற்படும் கலக்கத்தை வார்த்தைகளால் சொல்ல முடியாது.

♻இதிலும் வேதனை என்னவென்றால் தம்மை அன்போடு அரவனைத்த அந்த தாய் தந்தையை பார்த்து நீங்கள் தான் எங்களுக்கு எதிரி என்று வாய் கூசாமல்  பேசுகின்றனர்

♻இதில் சில மூடர்கள் பெற்றோர்கள் ஏன் காதலை எதிர்க்கின்றனர் என்று கேட்கின்றனர்.

♻எந்த பெற்றோர்களாவது தம் பிள்ளைகள் விபச்சாரத்தின் பக்கம் சென்றால் எதிர்க்காமல் இருப்பார்களா?

♻இன்று காமத்தின் மோகத்தால் காதல் செய்து கொண்டு அவசர அவசரமாக திருமணம் செய்து கொண்டு ஓர் இரு மாதங்கள் வாழ்ந்து விட்டு வாழ்க்கையை தொலைத்து நிற்கும் காட்சிகளை பார்க்கும் பெற்றோர்கள் தம் பிள்ளைக்கு இப்படி நடக்கக்கூடாது என்று தடுக்க மாட்டார்களா?

♻இந்த காதல் என்ற விபச்சாரத்தில் விழுந்து கற்பையும் இழந்து முடிவில் தாய்மையையும் இழந்து விட்டு கண்ணீர் வடித்து கொண்டு வந்து நிற்கும் பெண்களின் நிலைமை அறிந்த  அந்த பெண்(தாய்) முன்கூட்டியே அதிலிருந்து விலக்க மாட்டாளா?

♻அன்பார்ந்தவர்களே நம் பெற்றோர்கள் இந்த கேடுகெட்ட சாபக்கேடான காதலை பற்றி உங்களுக்கு எச்சரித்துள்ளார்கள்

♻ஆனால் நீங்கள் அதை சிறிதும் காதில் வாங்காமல் உங்களுடைய விபச்சாரத்தை தொடர்ந்து செய்து கொண்டு இருந்தீர்கள் என்றால் இந்த வசனத்தில்   அல்லாஹ்  கூறுவதை  சற்று  கவனியுங்கள்

🔰🔰🔰🔰🔰🔰🔰🔰


📓اَيَحْسَبُ الْاِنْسَانُ اَنْ يُّتْرَكَ سُدًى‏

📓வெறுமனே விட்டுவிடப் படுவான் என்று மனிதன் எண்ணிக் கொள்கிறானா?
(அல்குர்ஆன் : 75:36)

📓இன்னும் அறியாமையில் மூழ்கி இருக்கும் மனிதர்களே கியாம நாளை மறந்து விட்டீர்களா உங்களுக்கு நினைவூட்டுகிறேன் இந்த வசனத்தை படித்து பாருங்கள்

📓يَقُوْلُ الْاِنْسَانُ يَوْمَٮِٕذٍ اَيْنَ الْمَفَرُّ‌
‏ 
📓அந்நாளில் “(தப்பித்துக் கொள்ள) எங்கு விரண்டோடுவது?” என்று மனிதன் கேட்பான்.
(அல்குர்ஆன் : 75:10)

كَلَّا لَا وَزَرَ‏ 
“இல்லை, இல்லை! தப்ப இடமேயில்லை!” (என்று கூறப்படும்).
(அல்குர்ஆன் : 75:11)

நீங்கள் உங்கள் பெற்றோர்களுடைய பேச்சை உதாசீனப் படுத்திவிட்டு இந்த உலகத்தில் வேண்டுமென்றால்  தப்பிக்கலாம் ஆனால் தப்பா முடியாத இடமான அந்த கியாமத்து நாளில் கண்டிப்பாக மாட்டுவீர்கள்.

♻என்பதை நினைவில்கொண்டு பெற்றோருக்கு பிடித்தமான முறையில் வாழ்க்கையை அமைத்து கொள்ளுங்கள்


⭕இன்ஷா அல்லாஹ் தொடரும்.....


🔃🔃🔃🔃🔃🔃🔃🔃🔃🔃🔃
🔮 இஸ்லாமிய மார்க்க செய்திகளை அழகிய முறையில் அறிய

♻ வாட்ஸ்அப்பில் எங்கள் செய்தியை பெற 👇

📱 0091- 9994675186

📱 0091- 9629167027

பேஸ்புக்கில் எம்மை தொடர 👇
https://m.facebook.com/Makkalmedia-1684365771847561/?ref=wizard

📢 ⓂAKKAL ⓂEDIA 📢
📝 பதிவு நாள்:  12 FEB 2016

Part of👇🏼
📡ECHO DAWAH FOUNDATION 📡

No comments:

Post a Comment