Sunday 13 March 2016

🔴கப்ரிலும் கல்வி 🔴 🌱பகுதி 15

📢  ⓂAKKAL ⓂEDIA 📢

🍥அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)🍥
 
           ♨கல்வி♨


  🔴கப்ரிலும் கல்வி 🔴


         🌱பகுதி  1⃣4⃣


📝கப்ரில் எப்படி கல்வி என்று நமக்குள் கேள்வி எழலாம் !!!

↔ ஆமாம் உண்மை அதுதான்...

✳கல்வி உலகத்தோடு முடிந்துபோவது
கிடையாது ...

↔ இஸ்லாத்தின் அமைப்பின்படி ..

📌 கருவிலும் கல்வி ...

📌 வாழும் காலத்திலும் கல்வி ...

📌 கப்ரிலும் கல்வி ...

↔ எப்படி ஒரு மாணவன் ஓராண்டு முழுவதும் படித்துவிட்டு தேர்வுக்காக காத்திருப்பானோ ...

↔ அதுபோலவே நாமும் நமக்கு கப்ரில் நடக்கவிருக்கும் பரீட்ச்சைக்காக உலகத்தில் காத்திருக்கிறோம்.


↔ நாம் உலகில் கற்ற கல்வியின் படி வாழ்ந்தோமா ? இல்லையா ? என்பதை அங்கே விசாரிக்கப்படும்...

🔰 உலகத்தில் மாணவர்களுக்கு நடைபெறும் தேர்வில் தோல்வி கண்டாலும்

🔰 மீண்டும் அவர்களுக்கு ஒரு வாய்ப்பு வழங்கப்படும்.


🏮 ஆனால் கப்ரில் நடைபெறும் தேர்வில் தோற்றால் எந்த வாய்ப்பும் மீண்டும் நமக்கு கிடைக்காது ..

🏮 கப்ரில் முதல் 3⃣ கேள்விகள்

1⃣ உன்னுடைய இறைவன் யார்❓
 2⃣உன்னுடைய நபி யார் ❓
3⃣ உன்னுடைய மார்க்கம் எது ❓

🚏இந்த கேள்விகளுக்கான பதில் நமக்கு தெரிந்தாலும் இஸ்லாமிய கல்வி அடிப்படையில் வாழ்ந்து ,வணக்கங்கள் புரிந்தால் மட்டுமே நம்மால் பதில் கூற முடியும்..

🔰 மூன்று காரியங்கள் மனிதன் மரணித்த பிறகும் அவனை பின்துயரும் ...

1⃣ அவன் செய்த தர்மம்.

2⃣ அவன் மூலம் பயன்பெறப்படும் கல்வி .

3⃣ அவனுக்காக துஆ செய்யும் அவனுடைய ஸாலிஹான
குழந்தை ..

(நபி மொழி )

💠 நாம் உலகத்தில் வாழும்போது யார்யாருக்கெல்லாம் கல்வி கற்றுக்கொடுத்தோமோ அவர்கள் மூலம் கப்ரிலும் நமக்கு நன்மைகள் தொடர்கின்றன ..

💠 நாம் கல்வி கற்பதே மறுமை வாழ்க்கை ஈடேற்றம் பெற வேண்டும் என்றுதானே ...

↔ பிறகு எதற்காக மார்க்க கல்வியை அலட்சியம் செய்கிறோம் ..

↔ தேர்வில் 35 மதிப்பெண்கள் எடுத்து எப்படியாவது வெற்றிபெறவேண்டும் என்று நினைக்கிறோம்..


💠 அல்லது நம் பிள்ளைகளை தேர்வில் அதிக மதிப்பெண்கள் எடுக்கவைக்க முயற்சிகள் செய்கிறோம் ..

⚡ காரணம் பணம் சம்பாதிக்க வேண்டும் ... ⚡

💠 ஆனால் கப்ரில் நடைபெறும் தேர்வில் நாம் தோற்றால் கப்ரு நம்மை நெருக்குமே ...

💠 நம் பிள்ளைகள் தோற்றால் அவர்களும் இதே போல் வேதனை படுவார்களே என்கிற அச்சம் ஏன் இல்லாமல் போனது ???

👉 நிரந்தமில்லா பணத்திற்காக கவலைபடும் நாம்

👉 நிரந்தரமான வாழ்க்கை பற்றி ஏன் கவலை படுவதில்லை ...

📘இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:  ஓர் அடியானது உடலைக் கப்ரில் அடக்கம் செய்துவிட்டு, அவனுடைய தோழர்கள் திரும்பும்போது அவர்களின் செருப்பின் ஓசையை மய்யித் செவியேற்கும். அதற்குள் இரண்டு வானவர்கள் அவனிடம் வந்து அவனை எழுப்பி உட்கார வைத்து முஹம்மத் எனும் இந்த மனிதரைப் - பற்றி நீ என்ன கருதிக் கொண்டிருந்தாய்?“ எனக் கேட்பர். அதற்கவன் “இவர் அல்லாஹ்வின் அடியாரும் அவனுடைய தூதருமாவார் என நான் சாட்சி கூறுகிறேன்“ என்பான். பிறகு “(நீ கெட்டவனாக இருந்திருந்தால் நரகத்தில் உனக்கு கிடைக்கவிருந்த) தங்குமிடத்தைப் பார்! (நீ நல்லவனாக இருப்பதால்) அல்லாஹ் இதற்குப் பதிலாக உனக்குச் சொர்க்கத்தில் தங்குமிடத்தை ஏற்படுத்தியுள்ளான்“ என்று அவனிடம் கூறப்பட்டதும் அவன் அவ்விரண்டையும் ஒரே நேரத்தில் காண்பான். நிராகரிப்பவனாகவோ நயவஞ்சகனாகவோ இருந்தால் கேள்வி கேட்கப்பட்டதும், “எனக்குத் தெரியாது; மக்கள் சொல்வதையே நானும் சொல்லிக் கொண்டிருந்தேன்“ என்பான். அப்போது அவனிடம் “நீயாக எதையும் அறிந்ததுமில்லை; (குர்ஆனை) ஓதி (விளங்கி)யதுமிலலை என்று கூறப்படும். பிறகு இரும்பாலான சுத்தியால் அவனுடைய இரண்டு காதுகளுக்குமிடையே (பிடரியில்) ஓர் அடி கொடுக்கப்படும். அப்போது மனிதர்கள், ஜின்களைத் தவிர மற்ற அனைத்தும் செவியேற்குமளவுக்கு அவன் கத்துவான்.”  அனஸ்(ரலி) அறிவித்தார்.
ஸஹீஹ் புகாரி - 1338

சிந்தியுங்கள்..❗❗❗



................தொடரும்.

🔃🔃🔃🔃🔃🔃🔃🔃🔃🔃🔃


🔮 இஸ்லாமிய மார்க்க செய்திகளை அழகிய முறையில் அறிய

♻ வாட்ஸ்அப்பில் எங்கள் செய்தியை பெற 👇

📱 0091- 9994675186

📱 0091- 9629167027

பேஸ்புக்கில் எம்மை தொடர 👇
https://m.facebook.com/Makkalmedia-1684365771847561/?ref=wizard

📢 ⓂAKKAL ⓂEDIA 📢

📝 பதிவு நாள்: 06 FEB 2016

No comments:

Post a Comment