Saturday, 17 September 2016

​வாழ்த்துகூறும் சகோதரர்களே​

*​வாழ்த்துகூறும் சகோதரர்களே​*

📢  ⓂAKKAL ⓂEDIA 📢

💠 *பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்*💠


✅ தியாக திருநாளை போற்றும் விதமாக முஸ்லீம்களுக்கு வாழ்த்து கூறும் உடன் பிறவா சகோதரர்களே.

✅தாங்கள் வாழ்த்து கூறுகிறீர்கள் அதில் எங்களுக்கு மற்றற்ற மகிழ்ச்சி தான் ஆனால் நீங்கள் புரிந்துக்கொள்ள வேண்டும் இந்த தியாகத்திருநாளை முஸ்லீம்கள் ஏன் கொண்டாடுகிறார்கள் என்று.

✅ சுமார் 5000ஆண்டுகளுக்கு முன் இப்ராஹிம் (அலை) என்ற இறைதூதர் இருந்தார் அவர் இறைவனுக்கு முழுமையாக கட்டுப்பட்டாவராக இருந்தார் ஆனால் அவருக்கு இறைவன் குழந்தை பாக்கியத்தை வழங்கவில்லை.

✅ அவர் இறைவனிடம் பிராத்தனை செய்தார் பிள்ளை வேண்டும் என்று *அந்த பிராத்தனையை இறைவன் ஏற்று ஓர் ஆண்மகனை கொடுத்தான்.*

✅ சகோதரர்களே சிந்திய்யுங்கள் குழந்தை இல்லாமல் குழந்தை செல்வம் கிடைத்தால் அந்த தந்தை அடையும் மகிழ்ச்சியை  நாம் அனைவரும் அறிந்ததே!!!!

✅அது பலவருடம் இல்லாமல் கிடைத்த பிள்ளை செல்வத்தின் மீது அதிக அன்பையும் பாசத்தையும் பொழிந்து வந்தார் *அங்கே இறைவனின் சோதனை வந்தது*

✳அதாவது அன்பு மகனை பலிகொடுக்க வேண்டும் என்று இப்ராஹிம் (அலை) அவர்களுக்கு இறைவன் கனவின் மூலம் வெளிப்படுத்தினான் அதை செயல்படுத்த இப்ராஹிம் (அலை) அவர்கள் தனது மகனிடம் கூற அந்த அன்பு மகன் இறைவனின் கட்டளைக்கு முழுமையாக நான் கட்டுப்படுவேன் என்று கூறினார்.

✳ அதை செயல் படுத்தவும் துனிந்தார்கள் ஆனால் இது இறைவனின் சோதனை தான் அதில் அவர்கள் வெற்றி பெற இறைவன் அங்கே மகனுக்கு பதிலாக ஓர் ஆட்டை அறுக்க இறைவன்  கட்டளை இட்டான் அதுவே இந்த தியாக திருநாளின் சுறுக்க வரலாறு ஆகும்.

✳அன்பு சொந்தங்களே இதன் மூலம் இறைவன் முஸ்லீம்களிடம் எதிர்பார்பது எல்லாம்

✳ஒவ்வொரு முஸ்லிமும் தன் குடும்பத்தார்கள் மீது அன்பும், கருணையும் கொண்டு தன் செல்வத்தை செலவு செய்வது  போன்று,பிற மக்களின் மீது கருணை கொண்டு, அவர்களின் துன்பத்தை நீக்கவும், இன்பத்தை பெருக்கவும், தன்னால் இயன்ற உதவியை செய்ய வேண்டும் என்பதையே!!!!


🔮🔮🔮🔮🔮🔮🔮🔮🔮🔮

🔮 இஸ்லாமிய மார்க்க செய்திகளை அழகிய முறையில் அறிய

♻ *வாட்ஸ்அப்பில் எங்கள் செய்தியை பெற* 👇

📲+919087971872


📲 +919994675186

*பேஸ்புக்கில் எம்மை தொடர* 👇

https://m.facebook.com/Makkalmedia-1684365771847561/?ref=wizard

📮 பதிவு நாள்: 12: SEPTEMBER 2016

Part of 👇
📡 *ECHO DAWAH FOUNDATION* 📡

ஹஜ்ஜை நிறைவேற்றி விட்டு வருபவர்களுக்கு

*​ஹஜ்ஜை நிறைவேற்றி விட்டு வருபவர்களுக்கு​*

📢  ⓂAKKAL ⓂEDIA 📢

💠பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்💠


*ஹஜ்ஜின் நோக்கம் என்ன*

✅அல்ஹம்துலில்லாஹ் அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் வல்லரஹ்மான் உங்களுக்கு ஹஜ்ஜை நிறைவேற்றும் பாக்கியத்தை கொடுத்தான்

✅💯முஸ்லீம்கள் உள்ளத்தில் வாழ்க்கையில் ஒரு முறையாவது ஹஜ்ஜை நிறைவேற்ற வேண்டும் என்ற ஆசையும் ஆர்வமும் இருக்கும் ..

✅அல்லாஹ் நமது ஆசைகளை நிராசை ஆக்காமல் பூர்த்தி செய்து தரவேண்டும்.

💐 *ஹஜ் பயனத்தை நிவர்த்தி செய்து தாயகம் திரும்பும் சகோதரர்களே*💐

✅அல்லாஹ் கூறுகிறான்👇🏻

✳...(ஹஜ்ஜுக்குத்) தேவையானவற்றைத் திரட்டிக் கொள்ளுங்கள்! திரட்டிக் கொள்ள வேண்டியவற்றில் (இறை) அச்சமே மிகச் சிறந்தது. அறிவுடையோரே! என்னை அஞ்சுங்கள்!. (2:197)

✅இந்த வருடம் நீங்கள் செய்த ஹஜ்ஜின் மூலமாக நீங்கள் கற்றுக்கொண்ட படிப்பினைகள் என்ன வென்று புரிந்து கொணடிர்களா?

✅ஹஜ்ஜிலிருந்து திரும்பிய பின் நம்க்குல் என்ன மாற்றம் வேண்டும் என்பதை குறித்துக் கொண்டோமா???

✅ஹஜ் என்பது தொலைதூரம் பயணப்பட்டு, ஆடை ஆபரணங்களை தவிர்த்து, வெயிலிலும் தாகத்திலும் உடல் வருந்தி செய்யப்படும் ஒரு சம்பிரதாயமல்ல.....

✅ ஹஜ் என்பது ஆசை ஆசையாய் வளர்த்த அன்பு மகனை அல்லாஹ்வின் கட்டளைக்காய் பலிகொடுக்க முன்வந்த அருமை நபி இப்றாஹீமின் வழியில், அவரின் வாழ்க்கையை சற்றே வாழ்ந்து பார்க்கவும்.

✅ ஆசாபாசங்களை மறந்து, செல்வ சுகத்தையும், செல்லச்செல்வங்களையும் பிரிந்து மனம் வருந்த உடல் வருந்த இன்னோர் உலகில் சில நாழிகை வாழ்ந்து பார்க்கவும்.

✅ எம் தந்தை இப்றாஹீமின் (அலை)அவர்களின் அழைப்பிற்கு பதிலளித்தவர்களாகவும் செல்லும் ஓர் புனிதப் பயணமே ஹஜ்.

👆🏻இத்தகய  சிறப்பான பயணத்தின் இறுதியில் வெறும் நினைவுகள் மட்டுமே மிஞ்சினால்?

❌ *சில நாட்களில் வீணாகிப் போகக்கூடிய வெறும் பொருட்கள் மட்டுமே எஞ்சினால்??* இதற்காகவா ஆர்ப்பர்க்கிறோம்??? வாருங்கள் சிந்தனை செய்வோம்...

*தொடரும்*

🔮🔮🔮🔮🔮🔮🔮🔮🔮

🔮 இஸ்லாமிய மார்க்க செய்திகளை அழகிய முறையில் அறிய

♻ *வாட்ஸ்அப்பில் எங்கள் செய்தியை பெற* 👇

📲+919087971872


📲 +919994675186

*பேஸ்புக்கில் எம்மை தொடர* 👇

https://m.facebook.com/Makkalmedia-1684365771847561/?ref=wizard

📮 பதிவு நாள்: 17: SEPTEMBER 2016

Part of 👇
📡 *ECHO DAWAH FOUNDATION* 📡

Sunday, 11 September 2016

இஸ்லாம் உயர் மார்க்கம்-3

✅ *இஸ்லாமிய மார்க்கம் உயர்ந்த மார்க்கம்​*✅

📢  ⓂAKKAL ⓂEDIA 📢

💠பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்💠

         _பாகம்-------3_


*இஸ்லாம் மார்க்கம் உயர் மார்க்கம்*

✳ஓர் உன்மை முஸ்லீம் அதிகாரத்தின் கீழ் உள்ளவர்களிடம் தனது பொறுப்பை உனர்ந்து பணி செய்ய வேண்டும்.

✳மேலும் ஒரு முஸ்லிமின் அதிகாரத்தில் உள்ள குடும்ப உறுப்பினர்களிடம் எப்படி நடக்க வேண்டும் அல்லாஹ் கட்டளை இட்டானோ அதை பற்றியும் விசாரிக்க படுவார்.

 ✳அல்லாஹ் இன்னும் அவனது தூதரின் கட்டளைகளில் அலட்சியம் மற்றும் குறைபாடுகள் ஏற்பட்டால், அதற்கு அந்த முஸ்லிம் பொறுப்பாளியாகி இறைவனால் விசாரிக்கப்படுவார்.

✅ நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “நீங்கள் அனைவரும் பொறுப்பாளர்களே! *நீங்கள் அனைவரும் உங்களின் பொறுப்பின் கீழ் உள்ளவர்களைப்பற்றி விசாரிக்கப்படுவீர்கள்.* (ஸஹீஹுல் புகாரி)

✅தனது பொறுப்பை உணர்ந்திருக்கும் ஓர் முஸ்லிம் தனது குடும்ப உறுப்பினர்கள் அல்லாஹ்வின் கட்டளைகளில் வரம்பு மீறுவதை ஒரு போதும் சகித்துக்கொள்ள மாட்டார்.

✅ அவரால் இது விஷயத்தில் பொறுமை காக்கவே முடியாது.

✅அது எத்தகய  விளைவுகளை எற்படுத்தினாலும் சரியே *அந்த தவறை அகற்றுவதில் தீவிரமாக இருப்பார்*

✅கடமையில் அலட்சியம் செய்யமாட்டார் தனது ஈமானில் பலவீனம் கொண்ட, ஆண்மையற்ற கோழை மட்டுமே தனது அதிகாரத்தில் உள்ளவர்களின் வரம்புமீறலை சகித்துக்கொள்ள முடியும்.

✅ சகோதரர்களே நமது கட்டுப்பாட்டில் இருப்பவர்கள் மார்கத்தின் பெயரால் பல அனாச்சாரங்களை செய்கிறார்கள் ஆனால் அதை கண்டும் காணமல் இருப்பது *ஏன்?*

✳ குழம்பில் உப்பு காரம் இல்லாவிட்டால் பொங்கும் பலர் மார்கத்திர்க்கு வளைந்து கொடுப்பது *ஏன்??*

✅ நமது நபி அவர்கள் கூறியதை நன்கு நினைவில் கொள்ளுங்கள் யாரும் அல்லாஹ்விடம் இருந்து தப்ப முடியாது.


*இஸ்லாம் இதை மட்டுமா கூறுகிறது இல்லை இன்னும் பல விசயங்களை கூறுகிறது தெரியுமா????????*

        ✅ *தொட....ரும்*


🔮🔮🔮🔮🔮🔮🔮🔮🔮🔮

🔮 இஸ்லாமிய மார்க்க செய்திகளை அழகிய முறையில் அறிய

♻ *வாட்ஸ்அப்பில் எங்கள் செய்தியை பெற* 👇

📲+919087971872

📱+919629167027

📲 +919994675186

*பேஸ்புக்கில் எம்மை தொடர* 👇

https://m.facebook.com/Makkalmedia-1684365771847561/?ref=wizard

📮 பதிவு நாள்: 10: SEPTEMBER 2016

Part of 👇
📡 *ECHO DAWAH FOUNDATION* 📡

இஸ்லாம் உயர் மார்க்கம்-2

✅ *இஸ்லாமிய மார்க்கம் உயர்ந்த மார்க்கம்​*✅

📢  ⓂAKKAL ⓂEDIA 📢

💠பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்💠

         _பாகம்-------2_


✅ *ஓர் முஸ்லிம் முழுமையாக இறை கட்டளைக்கு அடிபணிவார்*

✅உண்மை முஸ்லிம் தனது அனைத்து சந்தர்ப்பங்களிலும் அல்லாஹ்வுக்கு முற்றிலும் வழிப்பட்டு, அவனைப் பணிந்து அஞ்சி நடக்க வேண்டும்.

✅ தனது விருப்பத்திற்கு மாறாக இருப்பினும் அவர் அல்லாஹ்வின் கட்டளைக்கு முற்றிலும் அடிபணிந்து, எந்நிலையிலும் அல்லாஹ்வின் வரம்புகளை மீறமாட்டார்.

✅ மேலும் அவரது விருப்பத்திற்கு மாற்றமாக இருந்தாலும் அல்லாஹ்வின் வழிகாட்டுதலையே ஏற்பார்.

✅ *ஓர் உன்மை முஸ்லிம் அல்லாஹ் & அவனது தூதரின் வழிகாட்டுதலிலுள்ள சிறிய, பெரிய ஒவ்வொரு விஷயத்தையும் எந்தவித பாகுபாடுமின்றி பின்பற்றுவார்.*

✅நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

✅“நான் கொண்டு வந்ததற்கேற்ப *தனது மனோ இச்சையை மாற்றிக் கொள்ளாதவரை உங்களில் ஒருவரும் விசுவாசியாக மாட்டார்.*”

 *(ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)*

✅ஆனால் உம் இறைவன் மீதும் சத்தியமாக, அவர்கள் தங்களுக்குள் ஏற்பட்ட சச்சரவில் உம்மை நீதிபதியாக அங்கீகரித்து நீர் செய்யும் தீர்ப்பைத் தங்கள் மனதில் எத்தகைய அதிருப்தியுமின்றி அங்கீகரித்து முற்றிலும் வழிப்படாத வரையில் அவர்கள் உண்மை விசுவாசிகளாக மாட்டார்கள்.

 (அல்குர்அன் 4:65)

✅ஈமான் என்பது அல்லாஹ் மற்றும் அவனது தூதரின் கட்டளைகளை முழுமையாக ஏற்று பூரணமாக அடிபணிவதாகும்.

✅இந்த இரண்டுமின்றி ஈமானும் இல்லை, இஸ்லாமும் இல்லை. உண்மை முஸ்லிமின் வாழ்வில் அல்லாஹ்வின் நேர்வழியைப் புறக்கணிப்பதும், அவனது தூதருக்கு மாறு செய்வதும் இருக்க முடியாது.

✅இது தன்மைகள்  முஸ்லிமிடமும், அவருக்குக் கட்டுப்பட்ட அவரது குடும்பத்தினர் வாழ்விலும் காணப்படும் சிறப்புத் தன்மையாகும்.

*இஸ்லாம் இன்னும் பல விசயங்களை கூறுகிறது தெரியுமா????????*

        ✅ *தொட....ரும்*


🔮🔮🔮🔮🔮🔮🔮🔮🔮🔮

🔮 இஸ்லாமிய மார்க்க செய்திகளை அழகிய முறையில் அறிய

♻ *வாட்ஸ்அப்பில் எங்கள் செய்தியை பெற* 👇

📲+919087971872

📱+919629167027

📲 +919994675186

*பேஸ்புக்கில் எம்மை தொடர* 👇

https://m.facebook.com/Makkalmedia-1684365771847561/?ref=wizard

📮 பதிவு நாள்: 9: SEPTEMBER 2016

Part of 👇
📡 *ECHO DAWAH FOUNDATION* 📡

​தியாக திருநாளை வரவேற்க்கும் நாம்​ இஸ்லாத்திற்க்கு என்ன தியாகம் செய்தோம்​??????*

*​தியாக திருநாளை வரவேற்க்கும் நாம்​*

 *இஸ்லாத்திற்க்கு என்ன தியாகம் செய்தோம்​??????*


📢  ⓂAKKAL ⓂEDIA 📢

💠பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்💠

      *தியாகம்*


✳பக்ரீத் வந்து விட்டாலே போதும் அனைவரும் நினைவு கூறுவது இப்ராஹிம் (அலை) அவர்களின் தியாகத்தை தான்

✳ஆம் அவர்கள் அந்த அளவிர்க்கு அல்லாஹ்விகாகவும் அவனது மார்க்கத்திர்காகவும் பல துன்பங்களையும் பல தியாங்களையும் செய்துள்ளார்கள்

✳ *வருடாவருடம் இந்த தியாகத்தை நாம் நினைவு கூறுவது என்ன சாங்கியத்திர்காகவா????*

✳அல்லாஹ் இந்த விசயத்தின் மூலம் நம்மிடம் எதிர்ப்பார்பது தான் என்ன

✳நாம் சிந்திக்க வேண்டாமா???

✳இப்ராஹிம் (அலை) அவர்களை  அல்லாஹ் கலீல் (நண்பன்) என்று கூறினானே அது சாதரனமாக நிகழ்ந்ததா????

✳அந்த தகுதியை அடைய இப்ராஹிம் (அலை) அவர்கள் பட்ட துன்பத்தை சொல்லில் அடக்க முடியுமா???

*சகோதரர்களே சிந்திக்க வேண்டாமா?????*

✳அல்லாஹ் இந்த உம்மதிடம் இதன் மூலம் எதிர்பார்பது என்ன சிந்திக்க வேண்டாமா???

✳சகோதரர்களே!!!
அல்லாஹ் நம்மிடம் இதன் மூலம்  எதிர்பார்பது அந்த தியாக மனபான்மை நம்மிடம் வற வேண்டும் என்று தான்.

⁉ ஆனால் நம்மிடம் சிரிய தியாங்கள் கூட இல்லை.

⁉ அவர்கள் பல நாள் பிள்ளை இல்லாமல் பெற்ற பிள்ளையையே தியாகம் செய்ய முன்வந்தார்கள்.

✳ ஆனால் நம்மால் சின்ன சின்ன விசயங்களை கூட இறைவனுக்காக தியாகம் செய்ய அஞ்சுகிறோம் என்பதை யாரும் மறுக்க முடியாது.

👇🏻 அவற்றில் சில

      *தொட....ரும்*

🔮🔮🔮🔮🔮🔮🔮🔮🔮🔮

🔮 இஸ்லாமிய மார்க்க செய்திகளை அழகிய முறையில் அறிய

♻ *வாட்ஸ்அப்பில் எங்கள் செய்தியை பெற* 👇

📲+919087971872

📱+919629167027

📲 +919994675186

*பேஸ்புக்கில் எம்மை தொடர* 👇

https://m.facebook.com/Makkalmedia-1684365771847561/?ref=wizard

📮 பதிவு நாள்:8- SEPTEMBER 2016

Part of 👇
📡 *ECHO DAWAH FOUNDATION* 📡

தியாக திருநாள் ஹஜ்பெருநாள்*

*தியாக திருநாள் ஹஜ்பெருநாள்*

📢  ⓂAKKAL ⓂEDIA 📢

💠பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்💠

*தியாக திருநாள்*

✅வாழ்நாள் எல்லாம்  இறைப்பணிக்காக  கஷ்டப்பட்டு  சொல்லமுடியாத
துன்பங்களை எல்லாம் சகித்துக்கொண்டு

✅ ஊரையும், நாட்டையும்,
உறவுகள் யாவையும்  விட்டு பல  வருடம் பிள்ளை இல்லாமல் இருந்து இறைவனிடம் பிராத்தனை செய்து  பிள்ளையை பெற்று

✅ அந்த பிள்ளை பிறந்த உடன் பாலைவனத்தில் கொண்டு சென்று விட்டு இறைக்கட்டளையை நிறைவேற்றியவருக்கு  சோதனை காத்திருந்தது....

✅ *தான் பெற்ற மகனை பலி கொடுக்கச்சொன்னால் நாம் செய்வோமா??*

✅ *இல்லை...நம்முடைய மகன் தான் ஒத்துக்கொள்வானா??*

✅ *இல்லை...நம்முடைய மனைவி ஏற்றுக்கொள்வாரா??*


✅ஆனால் அந்த மகன் ஒத்துக்கொண்டார்👇🏻

✅என்னருமை மகனே! நான் உன்னை அறுத்து பலியிடுவதாக நிச்சயமாகக் கனவு கண்டேன்.

 *இதைப்பற்றி உம் கருத்து என்ன என்பதைச் சிந்திப்பீராக!” (மகன்) கூறினான்; “என்னருமைத் தந்தையே! நீங்கள் ஏவப்பட்டபடியே செய்யுங்கள். அல்லாஹ் நாடினால் - என்னை நீங்கள் பொறுமையாளர்களில் நின்றுமுள்ளவனாகவே காண்பீர்கள்.*”37:102.

✅மகனை அறுக்கும் பரிட்சையிலும் இப்ராஹீம் (அலை) வென்றார்....

✅அதற்கு பதிலாகதான் ஆட்டை அறுத்து குர்பானி கொடுத்தார்
அவரின் தியாகத்தை நினைவு கூறத்தான் குர்பானி கொடுக்கிறோம்.
வருடம் இருமுறை கொண்டாடும் பெருநாளில் ஒரு பெருநாளே
இப்ராஹீம் அலை அவர்களின் தியாகத்தை நினைவு கூறத்தான்.....

✅ *இப்படிப்பட்ட தலைவரைக் கொண்டுதான் அல்லாஹு  தன் இறையில்லத்தை உயர்த்தினான்....*

✅ *அவர்நின்றுதொழுத இடத்தை மகாமு இப்ராஹீம் என சிறப்பித்துகூறுகிறான்.*

✅ *அவரும்அவர் மனைவியும் செய்த அமல்களே நாம் ஹஜ்ஜில் செய்கிறொம்....*

✅அல்லாஹ் வைத்த எல்லா சோதனைகளிலும் இப்ராஹீம் (அலை) வெற்றி பெற்றார்கள்✅
அதனால்தான் அல்லாஹ் அவரை உலக மக்களுக்கு தலைவராக ஆக்கியுள்ளான்.

✅இறைவனின் நண்பரான இப்ராஹீம் (அலை) அவர்களுக்கு ஏற்ப்பட்ட சோதனைகளுக்கு முன் நாம் கஷ்டப்படுவது எல்லாம் ஒரு விசயமே அல்ல....

✅எந்த ஒரு கஷ்டம் ஏற்படும்போதும் இப்ராஹீம் அலை அவர்களின் சோதனைகளைசிந்தித்தால் நம் கஷ்டங்களும்,துன்பங்களும் லேசாகத்தெரியும்.

✅அல்லாஹ் நம்மை வாழும்போது முஸ்லிமாகவும்,மரணிக்கும்போதும் முஸ்லிமாகவும்,மறுமையில் எழுப்பும்போதும் முஸ்லிமாக ஆக்க அருள்புரிவானாக!


🔮🔮🔮🔮🔮🔮🔮🔮🔮🔮

🔮 இஸ்லாமிய மார்க்க செய்திகளை அழகிய முறையில் அறிய

♻ *வாட்ஸ்அப்பில் எங்கள் செய்தியை பெற* 👇

📲+919087971872

📱+919629167027

📲 +919994675186

*பேஸ்புக்கில் எம்மை தொடர* 👇

https://m.facebook.com/Makkalmedia-1684365771847561/?ref=wizard

📮 பதிவு நாள்: 7: SEPTEMBER 2016

Part of 👇
📡 *ECHO DAWAH FOUNDATION* 📡

வெள்ளிக்கிழமை

*இன்று வெள்ளிக்கிழமை *

📢  ⓂAKKAL ⓂEDIA 📢

💠பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்💠

⚡பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹிம்⚡


✅ *இன்று சில நபிமொழிகள்*✅

*நாட்களிலே சிறந்த நாள்*

 ✅நபி (ஸல்)அவர்கள் கூறினார்கள்: “சூரியன் உதிக்கக்கூடிய நாளிலே சிறந்த நாள் வெள்ளிக்கிழமை நாளாகும்” (ஆதாரம்: முஸ்லிம்)


*பிரார்த்தனை ஏற்றுக்கொள்ளப்படக்கூடிய ஒரு நேரம் உள்ள நாள்*

✅நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:“வெள்ளிக்கிழமையில் ஒரு நேரம் இருக்கின்றது; அதில் எவரொருவர் இறைவனை தொழுது அவனிடம் பிரார்த்திக்கின்றாரோ நிச்சயமாக அல்லாஹ் அவனுடைய பிரார்த்தனையை ஏற்றுக் கொள்வான் என்று கூறிவிட்டு, அது செற்பமான நேரம் என்று தனது கையினால் சுட்டிக்காட்டினார்கள்.” (ஆதாரம்: புகாரி, முஸ்லிம்)

*மறுமை நாள்  நிகழக்கூடிய நாள்*

✅ நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “வெள்ளிக்கிழமை நாளிலே மறுமை நிகழும்” (ஆதாரம்: முஸ்லிம்

*பாவங்கள் மன்னிக்கப்படும் நாள்: நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்*

✅ “எவரொருவர் வெள்ளிக்கிழமை தினத்தில் குழித்து சுத்தம் செய்துகொண்டு, தலையில் எண்ணை தெய்த்து,வாசனை திரவியங்களை தடவிக்கொண்டு பின்னர் பிரரை கடந்து செல்லாமல்  பள்ளியினுல் நுழைந்து தனக்கு கடமையான தொழுகையை தொழுகின்றாரோ அவரது  இரண்டு வெள்ளிக்கிழமைகளுக்கும் இடைப்பட்ட பாவங்கள் மன்னிக்கப்படும்” (ஆதாரம்:புகாரி)

*ஜும்-ஆவுக்கு நடந்து செல்வதற்குறிய நன்மை:நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்*

✅ “எவரொருவர் ஜும்-ஆதினத்தில் அதிகாலையில் எழுந்து குளித்து, வாகனத்தில் ஏறாமல், ஜும்-ஆவுக்காக நடந்து சென்று, இமாமுக்கு அருகாமையில் அமர்ந்து, அவர் சொல்வதை செவிமெடுக்கின்றாரோ அவர் நடந்து சென்ற ஒவ்வொரு எட்டுக்கும், நின்று வணங்கிய, நோன்பு நோற்ற  நன்மை கிடைக்கும்” (ஆதாரம்: அபூதாவூத்)

*இரண்டு வெள்ளிக்கிழமை மற்றும் மூன்று நாட்களுக்கு இடைப்பட்ட பாவங்கள் மன்னிக்கப்படும்*

✅ நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “எவரொருவர் குளித்து ஜும்ஆவுக்குச் சென்று தொழுதுவிட்டு, இமாம்  ஜும்ஆவை  முடிக்கும் வரை மெளனமாக இருந்துவிட்டு ,அவருடன் தொழுகின்றாரோ அவருக்கு இரண்டு ஜும்ஆவுக்கும் மேலதிகமாக மூன்று நாட்களுக்கும் இடைப்பட்ட பாவங்கள் மன்னிக்கப்படும்” (ஆதாரம்: முஸ்லிம்)

*இத்தினத்தில் அதிகமாக நபி (ஸல்) அவர்கள் மீது ஸலவாத்து சொல்ல வேண்டும்*

✅நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “உங்களிடத்தில் சிறந்த நாள் வெள்ளிக்கிழமை நாளாகும். அத்தினத்தில் தான் நபி ஆதம் (ஆலை) அவர்கள் படைக்கப்பட்டார்கள். அதிலேதான் அவர் மரணித்தார், அதிலேதான் மறுமை நாள் நிகழும், மனிதன்  விசரனைக்காக மீண்டும் எழுப்பப்படுவான். இத்தினத்தில் அதிகமதிகம் என் மீது ஸலவாத்துச் சொல்லுங்கள், நிச்சயமாக நீங்கள்  சொல்லக்கூடிய ஸலவாத்து என்னிடத்தில்  எடுத்துக் காட்டப்படும், நபிமார்கள் உடலை  பூமி உண்பதை (அழிப்பதை) விட்டும்  அல்லாஹ் ஹராமாக்கினான்”(ஆதாரம்: அஹ்மத்)

*ஜும்ஆ தினத்தில் குளிப்பது சுன்னத்தாகும்*

 ✅நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “உங்களில் ஒருவர் ஜும்ஆவுக்கு செல்பவராக இருந்தால் அவர் குளித்துக் கொள்ளட்டும்” (ஆதாரம்: புகாரி, முஸ்லிம்)


*இமாம் பிரசங்கத்தை நிகழ்த்தும் போது அதனை சிறந்த முறையில் செவிமெடுக்க அதனை விளங்கி பிரயோஸனம் அடைய வேண்டும்*

✅ நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “இமாம் பிரசங்கத்தை நிகழ்த்தும் போது ஒருவர் தனது சகோதரனுக்கு வாயை மூடு என்று கூறினால் அவர் தனது ஜும்ஆவை வீனாக்கிவிட்டார்” (ஆதாரம்: புகாரி, முஸ்லிம்)

🔮🔮🔮🔮🔮🔮🔮🔮🔮🔮

🔮 இஸ்லாமிய மார்க்க செய்திகளை அழகிய முறையில் அறிய

♻ *வாட்ஸ்அப்பில் எங்கள் செய்தியை பெற* 👇

📲+919087971872

📱+919629167027

📲 +919994675186

*பேஸ்புக்கில் எம்மை தொடர* 👇

https://m.facebook.com/Makkalmedia-1684365771847561/?ref=wizard

📮 பதிவு நாள்:2: SEPTEMBER 2016

Part of 👇
📡 *ECHO DAWAH FOUNDATION* 📡

இஸ்லாம் உயர் மார்க்கம்-1

✅ *இஸ்லாமிய மார்க்கம் உயர்ந்த மார்க்கம்​*✅

📢  ⓂAKKAL ⓂEDIA 📢

💠பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்💠

         _பாகம்-------1_

 ✅இஸ்லாத்தில் முழுயாக நுழைய இறைநம்பிக்கை பிரகாசிக்க வேண்டும்.

✅முஸ்லீம்களிடம் இஸ்லாம் விரும்பும் முதல் பண்பு அவர் *அல்லாஹ்வை அவனது தகுதிக்கேற்ப ஈமான் கொண்டு, அவனுடன் உறுதியான உறவைக் கொண்டிருத்தலாகும்.*

✅அல்லாஹ்வின் மீது மட்டும் நம்பிக்கை வைத்து, அவனை சதாவும் நினைவு கூர வேண்டும்.

 ✅ மனிதன் எவ்வளவுதான் உழைத்தாலும் தனது உள்ளத்தின் ஆழத்தில் அல்லாஹ்வின் உதவி, உபகாரமும் எனக்கு  எல்லா நிலையிலும் தேவை என்பதை உணர வேண்டும்.

✅ *உண்மை முஸ்லிமின் இதயம் விழித்திருக்கும்.*

 ✅உலகில் அல்லாஹ்வின் படைப்பினங்களிலுள்ள நுட்பங்களின்பால் அவர் தனது சிந்தனையைச் செலுத்துவார்.

✅இதனால் மறைந்திருக்கும் மகத்தான அல்லாஹ்வின் உதவிதான் இப்பிரபஞ்ச இயக்கத்தையும், மனிதர்களின் அனைத்து பிரச்சனைகளையும் எளிதாக்குகிறது என்று உறுதி .

 ✅இதனால்தான் அல்லாஹ்வை எல்லா நிலையிலும் நினைவுகூற வேண்டியவராக இருக்கிறார்.

✅அவர் அல்லாஹ்வின் மகத்தான ஆற்றலை வாழ்வின் அனைத்து சந்தர்ப்பங்களிலும் உணர்கிறார்.

👆🏻இது அவரது ஈமானைப் பலப்படுத்துகிறது, அவன் மீதே நம்பிக்கை கொள்ள காரணமாக அமைகிறது.

✅ *வானங்களையும், பூமியையும் படைத்திருப்பதிலும், இரவு பகல் மாறி மாறி வருவதிலும் அறிவுடையோருக்கு நிச்சயமாகப் பல அத்தாட்சிகள் இருக்கின்றன.*
இத்தகையோர் (தங்கள்) நிலையிலும், இருப்பிலும், படுக்கையிலும் அல்லாஹ்வையே நினைத்து, வானங்களையும் பூமியையும் அவன் படைத்திருப்பதைச் சிந்தித்து எங்கள் இறைவனே! நீ இவற்றை வீணுக்காகப் படைத்துவிடவில்லை. நீ மிகத் தூயவன். (நரக) நெருப்பின் வேதனையிலிருந்து எங்களை நீ காப்பாற்றுவாயாக… (அல்குர்அன் 3:190,191)

        ✅ *தொட....ரும்*


🔮🔮🔮🔮🔮🔮🔮🔮🔮🔮

🔮 இஸ்லாமிய மார்க்க செய்திகளை அழகிய முறையில் அறிய

♻ *வாட்ஸ்அப்பில் எங்கள் செய்தியை பெற* 👇

📲+919087971872

📱+919629167027

📲 +919994675186

*பேஸ்புக்கில் எம்மை தொடர* 👇

https://m.facebook.com/Makkalmedia-1684365771847561/?ref=wizard

📮 பதிவு நாள்:1: SEPTEMBER 2016

Part of 👇
📡 *ECHO DAWAH FOUNDATION* 📡

கடன் வாங்கி குர்பானி கொடுக்கலாமா?​*🐃

🐏 *கடன் வாங்கி குர்பானி கொடுக்கலாமா?​*🐃


📢  ⓂAKKAL ⓂEDIA 📢

💠பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்💠


✅ *இஸ்லாமிய மார்க்கம் இலேசானது படைத்தவனுக்கு தெரியும் எனது அடியான் எந்தஅளவு சமாலிக்க முடியும் என்று*

✅ நாம் இஸ்லாமிய சட்டதிட்டங்களை உற்று நோக்கினால் தெரியும் இந்த சத்திய மார்க்கம் எவ்வளவு எளிதாக உள்ளது என்று.

🐏 ஆனால் சிலர் கடன் வாங்கியாவது குர்பானி கொடுக்க வேண்டும் என்று நினைக்கின்றார்கள்.

🐏 இதை நிறைவேற்றுவதற்கு மிகவும் சிரமப்படுகிறார்கள்

❌கடன் வாங்கியாவது குர்பானி கொடுக்க வேண்டும் என்ற கருத்தில் சில ஹதீஸ்கள் வருவதால் இவ்வாறு செய்கிறார்கள்.

❌உண்மையில் இது தொடர்பாக வரும் செய்திகள் *மிகவும் பலவீனமானதாகும்*

❌ *ஒருவர் கடனாளியாக இருந்தால் குர்பானி கொடுப்பது அவர் மீது கட்டாயம் ஆகாது.*❌

 ✅கடனாளியாக ஒருவர் இருந்தால் அவர் முதலில்  கடனையே நிறைவேற்ற வேண்டும் என மார்க்கம் நமக்கு பல வகையில் கற்று தருகிறது.

⁉ ஏனென்றால் இஸ்லாத்தின் தூண்களாக விளங்கும் *ஜகாத் ஹஜ் போன்ற கடமைகள் கூட நம் சக்திக்கு உட்பட்டால் தான் கடமையாகும்.* மிகவும் வலியுறுத்திச் சொல்லப்பட்ட இந்தக் கடமைகளை கடன் வாங்கி நிறைவேற்ற வேண்டும் என்று மார்க்கம் பணிக்கவில்லை.

✅நபி (ஸல்) அவர்கள் தடுத்த காரியங்களை முழுமையாக தவிர்த்துக் கொள்ள வேண்டும்.

✅ அவர்கள் கட்டளையிட்டால் அதை நம்மால் முடிந்த அளவு நிறைவேற்ற வேண்டுமே தவிர சிரமப்பட்டு நிறைவேற்ற வேண்டிய அவசியமில்லை.

✅ *இவ்வாறு தான் நமது  மார்க்கம் நமக்கு உபதேசிக்கிறது.*

✅நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள ஒன்றைச் செய்ய வேண்டாமென உங்களுக்கு நான் தடை விதித்தால் அதிலிருந்து நீங்கள் தவிர்த்து கொள்ளுங்கள்.

✅ஒன்றைச் செய்யுமாறு உங்களுக்கு நான் கட்டளையிட்டால் அதை உங்களால் முடிந்த அளவிற்குச் செய்யுங்கள்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)

நூல் : புகாரி (7288)

✅வசதியில்லாதவர் சிரமப்பட்டு கொடுக்க வேண்டிய அவசியமில்லை. ஏனெனில் எந்த ஒருவரையும் அவர் சக்திக்கு மீறி அல்லாஹ் சிரமப்படுத்தமாட்டான்.

✅ *எவரையும் அவரது சக்திக்குட்பட்டே தவிர அல்லாஹ் சிரமப்படுத்த மாட்டான்.*

(அல்குர்ஆன் 2 : 286)

✅அல்லாஹ்வின்  பாதையில் உயிர் நீத்த தியாகியானாலும் கடனுடன் மரணித்தால் அல்லாஹ் அவரை மன்னிப்பதில்லை. எனவே முதலில் கடனை நிறைவேற்றும் கடமை அவருக்கு உள்ளது.

✅ *கடனைத் தவிர அனைத்து பாவமும் அல்லாஹ்வின் பாதையில் மரணித்தவருக்காக மன்னிக்கப்படுகிறது என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.*

அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் அம்ர் பின் அல்ஆஸ் (ரலி)

நூல் : முஸ்லிம் (3498)

✅ ஆக சகோதரர்களே நம்மிடம் குர்பானி கொடுக்க வசதி இருந்தால் கொடுப்போம்.

👍🏼 *இல்லையென்றால்  வல்லரஹ்மானிடம் பிராத்திப்போம்*👍🏼

🔮🔮🔮🔮🔮🔮🔮🔮🔮🔮

🔮 இஸ்லாமிய மார்க்க செய்திகளை அழகிய முறையில் அறிய

♻ *வாட்ஸ்அப்பில் எங்கள் செய்தியை பெற* 👇

📲+919087971872

📱+919629167027

📲 +919994675186

*பேஸ்புக்கில் எம்மை தொடர* 👇

https://m.facebook.com/Makkalmedia-1684365771847561/?ref=wizard

📮 பதிவு நாள்:31 AUGUST 2016

Part of 👇
📡 *ECHO DAWAH FOUNDATION* 📡

நினைவிருக்கட்டும்

**

📢  ⓂAKKAL ⓂEDIA 📢

💠பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்💠

*குர்பானி கொடுப்பவர்களுக்கு ஓர் முக்கிய செய்தி*

🗣 *2.9.16 வெள்ளிக் கிழமை  மஹ்ரிபிற்குப்  பிறகு* தமிழகத்தில் துல்ஹஜ்   மாதத்தின்  பிறை தேடவேண்டிய சந்தேகத்திற்குரிய நாளாகும்.

🗣எனவே குர்பானி குடுக்கவிருக்கும் சகோதரர்கள் வெள்ளிக்கிழமைக்குள்  *நகம் மற்றும் முடியை தேவைப்பட்டால் வெட்டிக்கொள்ளுங்கள்*

🗣 குர்பானி கொடுப்பவர்கள் துல்ஹஜ் மாதத்தின் பிறையை பார்த்ததில் இருந்து குர்பானி கொடுக்கும்வரை நகம் மற்றும் முடியை வெட்டக்கூடாது என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தடை செய்திருக்கிறார்கள்.

🗣ஆகவே சகோதரர்களே குர்பானி எனும் தியாகதிருநாளுக்காக அனைவரும் தங்களை தயார் செய்துக்கொள்ளுங்கள்


🗣வல்ல ரஹ்மான் நம் அனைவருக்கும் இக்லாஸாகா அவனுக்காக மட்டுமே குர்பானி கொடுக்கும் பாக்கியத்தை வழங்குவானாக!!!!!!!

🔮🔮🔮🔮🔮🔮🔮🔮🔮🔮

🔮 இஸ்லாமிய மார்க்க செய்திகளை அழகிய முறையில் அறிய

♻ *வாட்ஸ்அப்பில் எங்கள் செய்தியை பெற* 👇

📲+919087971872

📱+919629167027

📲 +919994675186

*�பேஸ்புக்கில் எம்மை தொடர�* 👇

https://m.facebook.com/Makkalmedia-1684365771847561/?ref=wizard

📮 பதிவு நாள்:30 AUGUST 2016

Part of 👇
📡 *ECHO DAWAH FOUNDATION* 📡

செல்பி குர்பானி*📱

📱 *செல்பி குர்பானி*📱

📢  ⓂAKKAL ⓂEDIA 📢

💠பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்💠

💈அன்பார்ந்த சகோதரர்களே இன்ஷா அல்லாஹ் இன்னும் சில நாட்களில் தியாக திருநாள் வர இருக்கிறது.!!

📱இந்த தியாக திருநாளில் நாம் செய்ய வேண்டிய  பல அமல்களை அல்லாஹ்வும் ரசூலும் நமக்கு கற்று  தந்து உள்ளனர்.!!

💈ஏழை மக்களுக்கு உதவி செய்யவேண்டும்.!!

💈உதவி செய்தோமா  ஆம் செய்தோம் .!!

💈ஆனால் இதை எல்லாம் நாம் மறுமைக்காக செய்தோமா என்றால்  இல்லை.!!

💈நாம் செய்தது எல்லாம் பிறருக்கு காட்ட செய்கிறோம்.!!

💈செல்பி கொண்டு நாம் தியாகம் பாழ்படுத்துகிறோம் .

💈இப்படி பட்டவர்களை அல்லாஹ் சொல்லுகிறான்.!!

🔰 *பிறருக்கு காட்ட அமல் செய்தால் அவர்கள் அமல் மறுமை நாளில் தூசிகளாக பறக்கவிட படும் என்று.!!*

💈ஏன் இந்த வசனம் இருப்பது தெரியாதா.?

💈இல்லை என்றால் அல்லாஹ்வின் வார்த்தையின்
முக்கியத்துவம் தெரியவில்லையா.??

💈இந்த மாதிரி செயல் யாரை சந்தோசம் படுத்துவதற்கு .!!

💈இறைவனையா அல்லது மற்றவர்களுக்கா?

💈குர்பானி கொடுப்பது செல்பி எடுப்பதற்காகவா.?

💈நாம் கொடுக்கும் குர்பானி இறைவனுக்கு பயந்து கொண்டு கொடுக்க வேண்டும்.!!

💈இறைவன் இந்த குர்பானியை எற்று கொள்வானா என்ற பயம் தான் நமக்கு இருக்க வேண்டும்.!!

💈ஆனால் நமக்கோ நம்ம ஆட்டை விட யாரும் நம்ம  எரியாவில் பெரிசா வாங்க கூடாது என்ற கவலையில் இருக்கிறோம்.!!

💈இதில் செல்பியை குத்தகைக்கு எடுத்தவர் போல.!!

💈குர்பானி கொடுக்கும் போது ஒரு போட்டோ.!!

💈அறுக்கும் போது ஒரு போட்டோ .!!

💈அறுத்து முடிந்தவுடன் ஒரு போட்டோ.!!

💈பிரியாணி சாப்பிடும் போது ஒரு போட்டோ.!!

💈இதுல போட்டா நல்லா வரலனா  கவலை படுகிறோம்.!!

💈ஒரு உண்மையான  இறை அடியான் பற்றி அல்லாஹ் கூறுகிறான்..!!

🔰 *நீர் கூறும்: “மெய்யாக என்னுடைய தொழுகையும், என்னுடைய குர்பானியும், என்னுடைய வாழ்வும், என்னுடைய மரணமும் எல்லாமே அகிலங்களின் இறைவனாகிய அல்லாஹ்வுக்கே சொந்தமாகும்.*
*(அல்குர்ஆன் : 6:162)*

💈அல்லாஹ் சொல்லும் இந்த நிலை நம்மிடம் இருக்கிறாதா என்று சிந்தித்து பாருங்கள்.!!

💈நாங்க எல்லாம் கலிமா சொன்னவர்கள் என்று வெளியில் சொல்லும் முன் நம் நடை , உடை ,செயல்பாடுகள் , கலிமாவிற்கு ஏற்றதாக இருக்கிறதா என்று பாருங்கள்!!

💈ஆனால் நம் செயல் பாடு கலிமாவிற்கு மாற்றமாகவே இன்றைய கால கட்டத்தில் நாம் வாழ்கிறோம் என்பதே நிசத்தமான உண்மை.!!

💈அன்பான சகோதர்களே .!!

💈நாம் இந்த உலகத்தின் சிறந்த சமுதாயத்தில் வாழ்கிறோம்.!!

💈எளிதாக மார்க்கம்(நேர்வழி) கிடைத்ததால் அதன் பயனை  நாம் அறியவில்லை.!!

💈மற்ற மதத்தில் இருந்து இஸ்லாத்திற்கு வந்தவர்களிடம் பாருங்கள்.!!

💈அப்போது புரியும்.!!

💈நம் வாழ்க்கையின் நோக்கம்.!!

💈காலை முழிப்பது முதல் இரவு தூங்கும் வரை எல்லா விசயங்களிலும் யூத ,நசரானிகள் சூழ்ச்சியில் வாழ்கிறோம்.!!

💈அவர்களால் சூழ்ச்சி செய்ய முடியாத ஒரு இடம் அல்லாஹ்வின் மார்க்கம் தான் .!!

💈அல்லஹ்வின் மார்க்கத்தை அழிக்க முடியாது என்பதால் ,
மாற்ற(அழிக்க)  அவர்களுக்கு நாமே பாலமாக செயல்படுவது தான் வெட்கம் பட வேண்டிய விசயம்.!!

💈இன்ஷா அல்லாஹ் வருகின்ற தியாக திருநாளை அல்லாஹ்வின் நிழலில் கொண்டாடும் பாக்கியத்தை அருள் புரியட்டும்.!!

💈செல்பியில்லாத திருநாள் கொண்டாடுவோம்.

🔮🔮🔮🔮🔮🔮🔮🔮🔮

🔮 இஸ்லாமிய மார்க்க செய்திகளை அழகிய முறையில் அறிய

♻ *வாட்ஸ்அப்பில் எங்கள் செய்தியை பெற* 👇

📲+919087971872

📱+919629167027

📲 +919994675186

*பேஸ்புக்கில் எம்மை தொடர* 👇

https://m.facebook.com/Makkalmedia-1684365771847561/?ref=wizard

📮 பதிவு நாள்: 10: SEPTEMBER 2016

Part of 👇
📡 *ECHO DAWAH FOUNDATION* 📡

நாம் கொடுக்கும் குர்பானி எதர்க்கு????*

*நாம் கொடுக்கும் குர்பானி எதர்க்கு????*

📢  ⓂAKKAL ⓂEDIA 📢

💠பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்💠

*குர்பானி எதற்கு*

🐃தியாகத்தை நினைவு கூறும் குர்பானி எதற்கு இறைச்சிக்காகவா??

🐃 குர்பானியின் மூலம் நம்மிடம் இறைவன் எதிர்பார்ப்பது ரத்தத்தையோ மாமிசத்தையோ அல்ல. நமது இறைஅச்சத்தை தான்.

பல பகுதிகளில் கூட்டுக்குர்பானி என்ற பெயரில் இறைச்சிக்காகவே குர்பானி கொடுக்கிறார்கள்.

கூட்டுக்குர்பானி என்ற பெயரில் குர்பானி கொடுக்கும் அன்று இறைச்சியை மட்டும் எடுத்துவருவார்கள்

ஆனால் குர்பானி என்றால் என்ன வென்று கூட தெரியாது

குர்பானி கொடுக்கப்படும் பிராணியை கூட பார்த்திருக்க மாட்டார்கள்

குர்பானியில் கடைபிடிக்க வேண்டிய ஒழுக்கங்களை கடைபிடிக்க மாட்டார்கள்

~ஏதோ சாங்கியத்திர்க்காக குர்பானி கொடுப்பார்கள்~

சகோதரர்களே சிந்தி்யுங்கள்.

அல்லாஹ் நம்மிடம் இந்த தியாக திருநாள் மூலம் எதிர்பார்ப்பது இதையா???

✅ சகோதரர்களே நாம் குர்பானி கொடுப்பதை ஏதோ சாங்கியம் என்று எண்ணாமல் அதை அறுக்கும் இடத்தில் சென்று நீங்கள் கொடுக்கும் பிராணியை பாருங்கள்.


🔮🔮🔮🔮🔮🔮🔮🔮🔮🔮

🔮 இஸ்லாமிய மார்க்க செய்திகளை அழகிய முறையில் அறிய

♻ *வாட்ஸ்அப்பில் எங்கள் செய்தியை பெற* 👇

📲+919087971872

📱+919629167027

📲 +919994675186

*பேஸ்புக்கில் எம்மை தொடர* 👇

https://m.facebook.com/Makkalmedia-1684365771847561/?ref=wizard

📮 பதிவு நாள்: 11: SEPTEMBER 2016

Part of 👇
📡 *ECHO DAWAH FOUNDATION* 📡

ஈதுல் அழ்ஹா

*ஈதுல் அழ்ஹா​*

📢  ⓂAKKAL ⓂEDIA 📢

💠பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்💠


✳சகோதரர்களே  "ஈதுல் அழ்ஹா"வை *பக்ரீத்* என்று கூறும் பழக்கம் நம்மில் பலருக்கும் உள்ளது.

❌அது முற்றிலும் தவறான வார்த்தையாகும்.

✳மாற்றுமத சகோதரர்கள் அப்படி சொல்வதால் நாமும் அந்த வார்த்தையே பயன்படுத்துகிறோம்.

✅ சரி அந்த வார்த்தைக்காவது பொருள் தெரியுமா???

✳ *பக்ரீத் என்பதன் பொருள்: பகரா + ஈத்" பகரா என்றால் மாடு. ஈத் என்றால் பெருநாள். மாட்டுப்பெருநாள் என்று பொருள்*

✳இப்படி கூறுவது  நம்முடைய நாட்டிலும் முஸ்லிம் சமூகத்தில் வழக்கமாக ஆகிவிட்டது.

✳ சகோதரர்களே சிந்தியுங்கள் இந்த தியாக திருநாளை நாம் மாட்டுக்காகவா கொண்டாடுகிறோம் இல்லையே பிறகு ஏன் அந்த வார்த்தையை பயன்படுத்த வேண்டும்.

✳நபி இப்ராஹிம் (அலைஹி வஸல்லம்) அவர்களின் தியாகத்தை போற்றும் வகையில் கொண்டாடப்படுவதே *"தியாக திருநாள் - ﻋﻴﺪ ﺍﻵﺿﺤﻰ - ஈதுல் அழ்ஹா"* என்றே அழைப்பதே சிறந்தது.

✅ அப்படிதான் முஸ்லீம்கள் கூற வேண்டும்

✅ *ஈத் என்றால் பெருநாள் அழ்ஹா என்றால் தியாகம்.*

👍🏼தியாகத்தை போற்றும் பெருநாளை *ஈதுல் அழ்ஹா* என்றே அழைப்போம்👍🏼

❌ *பக்ரீத் என்ற பெயர் மார்க்கத்தில் பின் தங்கிய முகலாயர்களின் ஆட்சியின் போது புகுத்தப்பட்டது.*❌

✅நமது நிகழ்கால இழைய சமுதாய குழந்தைகளுக்கு ஈதுல் அழ்கா, தியாக பெருநாள், அல்லது ஹஜ் பெருநாள் என்று அழகிய வாக்கியங்களையுடைய பெயரை கற்று கொடுப்போம்.

✅பக்ரீத் என்று கூறுவதினால் தவறு ஒன்றும் இல்லையே என நாம் நினைக்கலாம் ஆனா அதில் என்ன பயன் உள்ளது என சிந்திய்யுங்கள்.


✅அழகிய வார்த்தையுடைய பெயர் இருக்கும் போது *மாட்டு பெருநாள் என கூறுவது சரியா?*

✅சகோதரர்களே ஒரு குழந்தை பிறக்கிறது பெயர் வைக்க வேண்டும் என்றால்  அப்துல்லாஹ் மற்றும் பசுமதி என்ற இரு பெயரில் நாம் எதை தேர்வு செய்வோம்.

👆🏻இதில் அழகிய பெயர் எது என்பது நம் அனைவருக்கும் தெரியும்.

✅அதைப் போன்று மாட்டு பெருநாள், தியாக பெருநாள் இதில் அழகிய பெயர் எது என்பதை வாசகர்கள் முடிவுச் செய்துக் கொள்ளுங்கள்.

*அல்லாஹ் போதுமானவன்*

🔮🔮🔮🔮🔮🔮🔮🔮🔮🔮

🔮 இஸ்லாமிய மார்க்க செய்திகளை அழகிய முறையில் அறிய

♻ *வாட்ஸ்அப்பில் எங்கள் செய்தியை பெற* 👇

📲+919087971872

📲 +919994675186

*பேஸ்புக்கில் எம்மை தொடர* 👇

https://m.facebook.com/Makkalmedia-1684365771847561/?ref=wizard

📮 பதிவு நாள்: 11: SEPTEMBER 2016

Part of 👇
📡 *ECHO DAWAH FOUNDATION* 📡