Sunday 11 September 2016

தியாக திருநாள் ஹஜ்பெருநாள்*

*தியாக திருநாள் ஹஜ்பெருநாள்*

📢  ⓂAKKAL ⓂEDIA 📢

💠பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்💠

*தியாக திருநாள்*

✅வாழ்நாள் எல்லாம்  இறைப்பணிக்காக  கஷ்டப்பட்டு  சொல்லமுடியாத
துன்பங்களை எல்லாம் சகித்துக்கொண்டு

✅ ஊரையும், நாட்டையும்,
உறவுகள் யாவையும்  விட்டு பல  வருடம் பிள்ளை இல்லாமல் இருந்து இறைவனிடம் பிராத்தனை செய்து  பிள்ளையை பெற்று

✅ அந்த பிள்ளை பிறந்த உடன் பாலைவனத்தில் கொண்டு சென்று விட்டு இறைக்கட்டளையை நிறைவேற்றியவருக்கு  சோதனை காத்திருந்தது....

✅ *தான் பெற்ற மகனை பலி கொடுக்கச்சொன்னால் நாம் செய்வோமா??*

✅ *இல்லை...நம்முடைய மகன் தான் ஒத்துக்கொள்வானா??*

✅ *இல்லை...நம்முடைய மனைவி ஏற்றுக்கொள்வாரா??*


✅ஆனால் அந்த மகன் ஒத்துக்கொண்டார்👇🏻

✅என்னருமை மகனே! நான் உன்னை அறுத்து பலியிடுவதாக நிச்சயமாகக் கனவு கண்டேன்.

 *இதைப்பற்றி உம் கருத்து என்ன என்பதைச் சிந்திப்பீராக!” (மகன்) கூறினான்; “என்னருமைத் தந்தையே! நீங்கள் ஏவப்பட்டபடியே செய்யுங்கள். அல்லாஹ் நாடினால் - என்னை நீங்கள் பொறுமையாளர்களில் நின்றுமுள்ளவனாகவே காண்பீர்கள்.*”37:102.

✅மகனை அறுக்கும் பரிட்சையிலும் இப்ராஹீம் (அலை) வென்றார்....

✅அதற்கு பதிலாகதான் ஆட்டை அறுத்து குர்பானி கொடுத்தார்
அவரின் தியாகத்தை நினைவு கூறத்தான் குர்பானி கொடுக்கிறோம்.
வருடம் இருமுறை கொண்டாடும் பெருநாளில் ஒரு பெருநாளே
இப்ராஹீம் அலை அவர்களின் தியாகத்தை நினைவு கூறத்தான்.....

✅ *இப்படிப்பட்ட தலைவரைக் கொண்டுதான் அல்லாஹு  தன் இறையில்லத்தை உயர்த்தினான்....*

✅ *அவர்நின்றுதொழுத இடத்தை மகாமு இப்ராஹீம் என சிறப்பித்துகூறுகிறான்.*

✅ *அவரும்அவர் மனைவியும் செய்த அமல்களே நாம் ஹஜ்ஜில் செய்கிறொம்....*

✅அல்லாஹ் வைத்த எல்லா சோதனைகளிலும் இப்ராஹீம் (அலை) வெற்றி பெற்றார்கள்✅
அதனால்தான் அல்லாஹ் அவரை உலக மக்களுக்கு தலைவராக ஆக்கியுள்ளான்.

✅இறைவனின் நண்பரான இப்ராஹீம் (அலை) அவர்களுக்கு ஏற்ப்பட்ட சோதனைகளுக்கு முன் நாம் கஷ்டப்படுவது எல்லாம் ஒரு விசயமே அல்ல....

✅எந்த ஒரு கஷ்டம் ஏற்படும்போதும் இப்ராஹீம் அலை அவர்களின் சோதனைகளைசிந்தித்தால் நம் கஷ்டங்களும்,துன்பங்களும் லேசாகத்தெரியும்.

✅அல்லாஹ் நம்மை வாழும்போது முஸ்லிமாகவும்,மரணிக்கும்போதும் முஸ்லிமாகவும்,மறுமையில் எழுப்பும்போதும் முஸ்லிமாக ஆக்க அருள்புரிவானாக!


🔮🔮🔮🔮🔮🔮🔮🔮🔮🔮

🔮 இஸ்லாமிய மார்க்க செய்திகளை அழகிய முறையில் அறிய

♻ *வாட்ஸ்அப்பில் எங்கள் செய்தியை பெற* 👇

📲+919087971872

📱+919629167027

📲 +919994675186

*பேஸ்புக்கில் எம்மை தொடர* 👇

https://m.facebook.com/Makkalmedia-1684365771847561/?ref=wizard

📮 பதிவு நாள்: 7: SEPTEMBER 2016

Part of 👇
📡 *ECHO DAWAH FOUNDATION* 📡

No comments:

Post a Comment