Saturday 17 September 2016

​வாழ்த்துகூறும் சகோதரர்களே​

*​வாழ்த்துகூறும் சகோதரர்களே​*

📢  ⓂAKKAL ⓂEDIA 📢

💠 *பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்*💠


✅ தியாக திருநாளை போற்றும் விதமாக முஸ்லீம்களுக்கு வாழ்த்து கூறும் உடன் பிறவா சகோதரர்களே.

✅தாங்கள் வாழ்த்து கூறுகிறீர்கள் அதில் எங்களுக்கு மற்றற்ற மகிழ்ச்சி தான் ஆனால் நீங்கள் புரிந்துக்கொள்ள வேண்டும் இந்த தியாகத்திருநாளை முஸ்லீம்கள் ஏன் கொண்டாடுகிறார்கள் என்று.

✅ சுமார் 5000ஆண்டுகளுக்கு முன் இப்ராஹிம் (அலை) என்ற இறைதூதர் இருந்தார் அவர் இறைவனுக்கு முழுமையாக கட்டுப்பட்டாவராக இருந்தார் ஆனால் அவருக்கு இறைவன் குழந்தை பாக்கியத்தை வழங்கவில்லை.

✅ அவர் இறைவனிடம் பிராத்தனை செய்தார் பிள்ளை வேண்டும் என்று *அந்த பிராத்தனையை இறைவன் ஏற்று ஓர் ஆண்மகனை கொடுத்தான்.*

✅ சகோதரர்களே சிந்திய்யுங்கள் குழந்தை இல்லாமல் குழந்தை செல்வம் கிடைத்தால் அந்த தந்தை அடையும் மகிழ்ச்சியை  நாம் அனைவரும் அறிந்ததே!!!!

✅அது பலவருடம் இல்லாமல் கிடைத்த பிள்ளை செல்வத்தின் மீது அதிக அன்பையும் பாசத்தையும் பொழிந்து வந்தார் *அங்கே இறைவனின் சோதனை வந்தது*

✳அதாவது அன்பு மகனை பலிகொடுக்க வேண்டும் என்று இப்ராஹிம் (அலை) அவர்களுக்கு இறைவன் கனவின் மூலம் வெளிப்படுத்தினான் அதை செயல்படுத்த இப்ராஹிம் (அலை) அவர்கள் தனது மகனிடம் கூற அந்த அன்பு மகன் இறைவனின் கட்டளைக்கு முழுமையாக நான் கட்டுப்படுவேன் என்று கூறினார்.

✳ அதை செயல் படுத்தவும் துனிந்தார்கள் ஆனால் இது இறைவனின் சோதனை தான் அதில் அவர்கள் வெற்றி பெற இறைவன் அங்கே மகனுக்கு பதிலாக ஓர் ஆட்டை அறுக்க இறைவன்  கட்டளை இட்டான் அதுவே இந்த தியாக திருநாளின் சுறுக்க வரலாறு ஆகும்.

✳அன்பு சொந்தங்களே இதன் மூலம் இறைவன் முஸ்லீம்களிடம் எதிர்பார்பது எல்லாம்

✳ஒவ்வொரு முஸ்லிமும் தன் குடும்பத்தார்கள் மீது அன்பும், கருணையும் கொண்டு தன் செல்வத்தை செலவு செய்வது  போன்று,பிற மக்களின் மீது கருணை கொண்டு, அவர்களின் துன்பத்தை நீக்கவும், இன்பத்தை பெருக்கவும், தன்னால் இயன்ற உதவியை செய்ய வேண்டும் என்பதையே!!!!


🔮🔮🔮🔮🔮🔮🔮🔮🔮🔮

🔮 இஸ்லாமிய மார்க்க செய்திகளை அழகிய முறையில் அறிய

♻ *வாட்ஸ்அப்பில் எங்கள் செய்தியை பெற* 👇

📲+919087971872


📲 +919994675186

*பேஸ்புக்கில் எம்மை தொடர* 👇

https://m.facebook.com/Makkalmedia-1684365771847561/?ref=wizard

📮 பதிவு நாள்: 12: SEPTEMBER 2016

Part of 👇
📡 *ECHO DAWAH FOUNDATION* 📡

No comments:

Post a Comment