Sunday 10 July 2016

நபி(ஸல்) வாழ்க்கை வரலாறு​ ​பகுதி-54🔰

📢  ⓂAKKAL ⓂEDIA 📢

💠பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்💠

☮ ​முஹம்மது நபி(ஸல்) வாழ்க்கை வரலாறு​

         🕋 ​பகுதி-54🔰

🔶அடுத்து ஸமவ்அல் இப்னு ஆதியா பற்றிய சம்பவமாவது: ஸமவ்அலிடம் இம்ரவுல் கைஸ் சில கவச ஆடைகளை அமானிதமாகக் கொடுத்திருந்தார்.

💠 ‘ஹாஸ்’ என்ற கஸ்ஸானிய மன்னன் அதனை அபகரிக்க நாடினான்.

💠ஸமவ்அல் தீமாவிலுள்ள தனது கோட்டையில் தஞ்சம் புகுந்தான்.

💠அவருடைய பிள்ளைகளில் ஒருவர் கோட்டைக்கு வெளியில் மாட்டிக்கொண்டார்.

💠 அவரை மன்னன் ஹாஸ் பணயமாகப் பிடித்துக்கொண்டு கவச ஆடைகளை கொடுக்காவிட்டால் பிள்ளையைக் கொன்று விடுவேன் என மிரட்டினான்.

💠ஸமவ்அல் கொடுக்க மறுத்து தன் கண்ணெதிரே தன் பிள்ளை கொல்லப்படுவதையும் சகித்துக்கொண்டார்.

🔶3) சுயகௌரவம் மற்றும் அநீதத்தை சகித்துக் கொள்ளாத் தன்மை:

💠இப்பண்புகள் அவர்களிடம் கட்டுக்கடங்கா வீரத்தையும் அதிரடி ரோஷத்தையும் வேகமாக உணர்ச்சி வசப்படுவதையும் தூண்டின.

💠எவருடைய சொல்லாவது தனக்கு கௌரவக் குறைவை அல்லது இழிவை ஏற்படுத்துகிறது என அறிந்தால் அவர்களுக்கு எதிராகக் கிளர்ந்தெழுவார்கள்.

💠 தங்களது உயிரைப் பற்றி சிறிதும் இலட்சியம் செய்யாமல் வாளாலும், அம்புகளாலும் அதற்கு பதிலடி கொடுப்பார்கள்.

🔶4) செயலில் உறுதியுடன் இருத்தல்:

💠 அம்மக்கள் ஒரு செயல் தங்களது பெருமைக்கும் உயர்வுக்கும் காரணமாக அமையும் என நம்பினால் அதை செயல்படுத்துவதிலிருந்து அவர்களை எந்தவொரு சக்தியும் தடுத்துவிட முடியாது.

💠 தங்களது உயிரைக் கொடுத்தாவது அதனை அவர்கள் செய்து முடிப்பார்கள்.


✳ ​தொட.....ரும்​....

(உதவி- அல் ரஹீக் அல் மக்தூம் கிதாப்)

🍃🍂🍃🍂🍃🍂🍃🍂🍃

🔮 இஸ்லாமிய மார்க்க செய்திகளை அழகிய முறையில் அறிய

♻ வாட்ஸ்அப்பில் எங்கள் செய்தியை பெற 👇

📲+919087971872

📲 +919994675186

​பேஸ்புக்கில் எம்மை தொடர​ 👇

https://m.facebook.com/Makkalmedia-1684365771847561/?ref=wizard

📮 பதிவு நாள்: 11 JULY 2016

📢 ⓂAKKAL ⓂEDIA 📢

Part of 👇

📡 ECHO DAWAH FOUNDATION 📡

நபி(ஸல்) வாழ்க்கை வரலாறு​ ​பகுதி-53🔰

📢  ⓂAKKAL ⓂEDIA 📢

💠பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்💠

☮ ​முஹம்மது நபி(ஸல்) வாழ்க்கை வரலாறு​

         🕋 ​பகுதி-53🔰

🔶இதுபற்றி அன்தரா இப்னு ஷத்தாத் அல் அபஸீ தனது கவிதைத் தொகுப்பில் கூறுகிறார்:

🔶”மதிய வேளைக்குப் பின் வடிகட்டியுடன் உள்ள

🔶மஞ்சள் நிறக் கண்ணாடி கெண்டியிலிருந்து

🔶அடையாளமிடப்பட்ட தெளிவான கண்ணாடிக் கிண்ணத்தில் ஊற்றி

🔶இடக்கையால் மது அருந்தினேன்.

🔶நான் குடித்தால் என் செல்வங்கள் அனைத்தையும் வாரி இறைப்பேன்.

🔶ஆனால் எனது கண்ணியத்தை கரைபடியாது காப்பேன்.

🔶மது மயக்கம் தெளிந்த பின்னும் வாரி வழங்குவதில் ஒரு குறையும் வைக்கமாட்டேன்.

🔶இத்தகைய என் பண்பாடும் பெருந்தன்மையும் உனக்குத் தெரிந்ததே!”

🔶சூதாடுவதையும் தங்களது கொடைத்தன்மையின் வெளிப்பாடாக அவர்கள் கருதினார்கள்.

🔶ஏனெனில், சூதாட்டத்தில் வெற்றி பெறுபவர், தான் செலவிட்டதை மட்டும் எடுத்துக் கொண்டு மீதத்தை ஏழை, எளியோருக்கு கொடுத்து விடுவார்.

🔶இதனாலேயே மது அருந்துவதிலும் சூதாடுவதிலும் எப்பலனுமே இல்லை என்று குர்ஆன் மறுக்கவில்லை.

🔶மாறாக, அதன் பலனைவிட அதன் தீய விளைவுதான் அதிகம் என்று கூறுகிறது.

🔶(நபியே!) மதுவைப் பற்றியும் சூதாட்டத்தைப் பற்றியும் உங்களிடம் கேட்கின்றனர். (அதற்கு) நீங்கள் கூறுங்கள்:

🔶 ”அவ்விரண்டிலும் பெரும் பாவங்களும் இருக்கின்றன மனிதர்களுக்குச் சில பயன்களும் இருக்கின்றன.

🔶 ஆனால், அவற்றிலுள்ள பாவம் அவற்றின் பயனை விட மிகப் பெரிது.” (அல்குர்ஆன் 2 : 219)

🔶2) ஒப்பந்தங்களை நிறைவேற்றல்: அவர்கள் ஒப்பந்தங்களை நிறைவேற்றுவதிலும் வாக்குகளைக் காப்பாற்றுவதிலும் மிக உறுதியாக இருந்தனர்.

🔶 தங்களது பிள்ளைகள் கொலை செய்யப்பட்டாலும் தங்களது வீடுகள் தகர்க்கப்பட்டாலும் அது குறித்து சிறிதும் இலட்சியம் செய்யாமல் தங்களது ஒப்பந்தத்தை நிறைவேற்றினர்.

🔶இதற்கு ஹானி இப்னு மஸ்வூத் ஷைபானி, ஸமவ்அல் இப்னு ஆதியா போன்றவர்களின் சம்பவங்கள் சான்றாகும். (இதிலுள்ள ஹானியின் சம்பவம் ‘ஹீரா நாட்டில் ஆட்சி’ என்ற தலைப்பில் சென்றுள்ளது.)

✳ ​தொட.....ரும்​....

(உதவி- அல் ரஹீக் அல் மக்தூம் கிதாப்)

🍃🍂🍃🍂🍃🍂🍃🍂🍃

🔮 இஸ்லாமிய மார்க்க செய்திகளை அழகிய முறையில் அறிய

♻ வாட்ஸ்அப்பில் எங்கள் செய்தியை பெற 👇

📲+919087971872

📲 +919994675186

​பேஸ்புக்கில் எம்மை தொடர​ 👇

https://m.facebook.com/Makkalmedia-1684365771847561/?ref=wizard

📮 பதிவு நாள்: 08 JULY 2016

📢 ⓂAKKAL ⓂEDIA 📢

Part of 👇

📡 ECHO DAWAH FOUNDATION 📡

நபி(ஸல்) வாழ்க்கை வரலாறு​ பகுதி-52🔰

📢  ⓂAKKAL ⓂEDIA 📢

💠பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்💠

☮ ​முஹம்மது நபி(ஸல்) வாழ்க்கை வரலாறு​

         🕋 ​பகுதி-52🔰

🔶பண்பாடுகள்

🔶அக்கால மக்களிடையே செம்மையான சிந்தனையோ பகுத்தறிவோ இல்லை என்பதால் அக்காலத்தை ”அறியாமைக்காலம்” என வருணிக்கப்பட்டது.

🔶 ஏற்க இயலாத செயல்பாடுகளும் இழிவான நடத்தைகளும் குடி கொண்டிருந்தன.

🔶அதே நேரத்தில் வியக்கத்தக்க சில அரிய பண்புகளும் அவர்களிடம் குடிகொண்டிருந்தன.

🔶அவையாவன:

🔶1) கொடைத் தன்மை மற்றும் தயாளத்தன்மை: அவர்கள் கொடைத் தன்மையில் ஒருவரையொருவர் போட்டியிட்டனர்.

🔶இந்தக் கொடைத் தன்மையைக் கொண்டே தங்களது பெரும்பாலான கவிகளில் தங்களையும் பிறரையும் புகழ்ந்து கொண்டனர்.

🔶கடுமையான குளிரும் பஞ்சமும் நிலவி வரும் காலத்தில் ஒருவரிடம் விருந்தினர் ஒருவர் வருகிறார்.

🔶அம்மனிதரிடம் தனது குடும்பத்தின் தேவைக்காக இருக்கும் ஓர் ஒட்டகையைத் தவிர வேறொன்றுமில்லாத நிலையிலும் அந்த ஒட்டகையை அறுத்து விருந்தினரை உபசரிக்க அவரைத் தூண்டுமளவு அவர்களிடம் விருந்தோம்பல் குணம் மிகைத்திருந்தது.

🔶அவ்வாறே அவர்களில் இயலாத ஒருவர் நஷ்டஈடு வழங்க வேண்டியிருந்தால் அது தங்களது சக்திக்கு மீறியதாக இருப்பினும் அந்தத் தொகையைத் தான் தருவதாக பொறுப்பேற்றுக் கொள்வார்கள்.

🔶 இதனால், பிறர் உயிர் பறிக்கப்படுவதிலிருந்து பாதுகாத்தார்கள். இதைத் தங்களுக்குப் பெருமையாகக் கருதினார்கள்.

🔶அவர்களிடமிருந்த தர்ம சிந்தனையின் விளைவாக மது அருந்துவதை பெருமைக்குரியதாக கருதினர்.

🔶அது ஒரு சிறப்பான செயல் என்பதற்காக அதனை அவர்கள் நேசிக்கவில்லை.

🔶மாறாக, மது அருந்துவது தர்மம் செய்வதற்கான ஒரு வழியாக இருக்கிறது.

🔶 செல்வத்தை வாரி இறைப்பதை மனதிற்கு எளிதாக்குகிறது என்பதால் அதை நேசித்தனர்.

🔶 அதனாலேயே திராட்சைக் கொடிக்கு ‘கரம்’ (கொடை) என்றும் அதிலிருந்து பிழியப்பட்ட மதுவுக்கு ‘பின்துல் கரம்’ (கொடையின் புதல்வி) எனவும் பெயரிட்டிருந்தனர்.

🔶 எனவேதான், மது அருந்துவதை பெருமைப்படுத்தியும் புகழ்ந்தும் பல அரபுக்கவிதைகள் அறியாமைக் காலத்தில் இயற்றப்பட்டதை நாம் பார்க்கிறோம்.

✳ ​தொட.....ரும்​....

(உதவி- அல் ரஹீக் அல் மக்தூம் கிதாப்)

🍃🍂🍃🍂🍃🍂🍃🍂🍃

🔮 இஸ்லாமிய மார்க்க செய்திகளை அழகிய முறையில் அறிய

♻ வாட்ஸ்அப்பில் எங்கள் செய்தியை பெற 👇

📲+919087971872

📲 +919994675186

​பேஸ்புக்கில் எம்மை தொடர​ 👇

https://m.facebook.com/Makkalmedia-1684365771847561/?ref=wizard

📮 பதிவு நாள்: 06 JULY 2016

📢 ⓂAKKAL ⓂEDIA 📢

Part of 👇

📡 ECHO DAWAH FOUNDATION 📡

நபி(ஸல்) வாழ்க்கை வரலாறு​ ​பகுதி-51🔰

📢  ⓂAKKAL ⓂEDIA 📢

💠பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்💠

☮ ​முஹம்மது நபி(ஸல்) வாழ்க்கை வரலாறு​

         🕋 ​பகுதி-51🔰

🔶சுருங்கக்கூறின் சமூக அமைப்பு தரங்கெட்டு உருக்குலைந்து இருந்தது.

🔶 மூட நம்பிக்கைகள் மிகைத்திருந்தன. அறியாமை அவர்களை ஆட்டிப் படைத்தது.

🔶 மனிதர்கள் கால்நடைகளாக வாழ்ந்தனர்.

🔶பெண்கள் விற்பனைப் பொருளாக்கப்பட்டு ஜடமாகவே பாவிக்கப்பட்டனர்.

🔶 சமூகங்களுக்கிடையில் உறவுகள் துண்டிக்கப்பட்டிருந்தன.

🔶 குடிமக்களைச் சுரண்டி தங்களது கருவூலங்களை நிரப்பிக்கொள்வது அல்லது எதிரிகளின் மீது தாக்குதல் நடத்துவதே ஆட்சியாளர்களின் நோக்கமாக இருந்தது.

🔶நமது நோக்கமல்ல.

🔶சமூக நிலைமைக்கேற்ப பொருளாதாரம் அமைந்திருந்தது.

🔶 அரபியர்களின் வாழ்க்கை முறைகளை ஆய்வு செய்யும்போது இக்கருத்து நமக்குத் தெரியவரும்.

🔶அவர்களது வாழ்க்கைத் தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்கு வியாபாரமே பெரும் துணையாக இருந்தது.

🔶அமைதியும் பாதுகாப்பும் இருந்தால்தான் வியாபாரப் பயணத்தை மேற்கொள்ள முடியும் என்பது தெரிந்ததே!

🔶 ஆனால், அரபிய தீபகற்பத்தில் புனித மாதங்களைத் தவிர ஏனைய மாதங்களில் அந்த அமைதியும் பாதுகாப்பும் இருக்கவில்லை.

🔶இப்புனித மாதங்களில்தான் உக்காள், தில்மஜாஸ், மஜன்னா போன்ற அரபியர்களின் பெயர் போன வியாபாரச் சந்தைகள் நடைபெற்றன.

🔶அரபியர்களிடம் தொழில் துறைகளைப் பற்றிய அறிவு காணப்படவில்லை.

🔶துணி நெய்தல், தோல் பதனிடுதல் போன்ற சில தொழில் யமன், ஹீரா மற்றும் ‘மஷாஃபுஷ் ஷாம்’ ஆகிய பகுதிகளில் மட்டும் காணப்பட்டன.

😳அரபிய தீபகற்பத்தின் உட்புறத்தின் சில பகுதிகளில் விவசாயமும் கால்நடை வளர்ப்பும் நடைபெற்று வந்தன.

🔶 அரபியப் பெண்கள் அனைவரும் நெசவுத் தொழில் செய்தனர்.

🔶 எனினும், அனைத்து செல்வங்களும் போர்களில் செலவழித்து வீணடிக்கப்பட்டன.

🔶 அவர்களிடையே வறுமையும் பஞ்சமும் தலைவிரித்தாடியது. அணிவதற்கான ஆடைகள் கூட இல்லாமல் தவித்தனர்.

✳ ​தொட.....ரும்​....

(உதவி- அல் ரஹீக் அல் மக்தூம் கிதாப்)

🍃🍂🍃🍂🍃🍂🍃🍂🍃

🔮 இஸ்லாமிய மார்க்க செய்திகளை அழகிய முறையில் அறிய

♻ வாட்ஸ்அப்பில் எங்கள் செய்தியை பெற 👇

📲+919087971872

📲 +919994675186

​பேஸ்புக்கில் எம்மை தொடர​ 👇

https://m.facebook.com/Makkalmedia-1684365771847561/?ref=wizard

📮 பதிவு நாள்: 04 JULY 2016

📢 ⓂAKKAL ⓂEDIA 📢

Part of 👇

📡 ECHO DAWAH FOUNDATION 📡

நபி(ஸல்) வாழ்க்கை வரலாறு​ பகுதி-50🔰

📢  ⓂAKKAL ⓂEDIA 📢

💠பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்💠

☮ ​முஹம்மது நபி(ஸல்) வாழ்க்கை வரலாறு​

         🕋 ​பகுதி-50🔰

🔶ஸஅது இப்னு அபீ வக்காஸ், அப்து இப்னு ஜம்ஆ ஆகிய இருவருக்கிடையே ஜம்ஆவின் அடிமைப் பெண்ணுக்குப் பிறந்த அப்துர் ரஹ்மான் இப்னு ஜம்ஆவின் விஷயத்தில் ஏற்பட்ட சச்சரவுகள் மிகப் பிரபலமானதாகும். (பார்க்க ஸஹீஹுல் புகாரி 2053, 2218…)

🔶அரபியர்கள் தங்களது பிள்ளைகளுடன் கொண்டிருந்த தொடர்பு பலவகைகளில் அமைந்திருந்தது.

🔶 அவர்களில் சிலர் தங்களது பிள்ளைகளை உயிருக்குயிராக நேசித்தனர்.

🔶இதைப் பற்றி ஒரு கவிஞர் கூறுவதாவது:

🔶”நமது குழந்தைகள் புவியில் தவழும் நமது ஈரக்குலைகளாவர்.”

🔶தற்காலத்தைப் போன்றே, அக்காலத்தில் சிலர் பெண் பிள்ளைகளை அவமானமாகக் கருதியும் செலவுக்குப்பயந்தும் உயிருடன் புதைத்தனர்.

🔶 மேலும் சிலர், வறுமைக்கு அஞ்சி தங்களின் ஆண் குழந்தைகளையும் கொலை செய்தனர். (பார்க்க அல்குர்ஆன் (6 : 151), (16 : 58, 59), (17 : 31), (81 : 8) எனினும் இப்பழக்கம் பரவலாகக் காணப்படவில்லை.

🔶 காரணம், எதிரிகளுடன் போரிடுவதற்கு அவர்களுக்கு ஆண் மக்களின் தேவை அதிகமாக இருந்தது.

🔶அரபியர்கள் தங்களது குடும்ப உறுப்பினர்களுக்குள் மிக நெருக்கமான உறவு வைத்திருந்தனர்.

🔶 குலப்பெருமைக்காகவே வாழவும் குலப்பெருமைக்காகவே சாகவும் துணிந்தனர்.

🔶ஒரே கோத்திரத்தை சேர்ந்தவர்கள் தங்களுக்குள் சமூகப் பித்தும் இனவெறியும் கொண்டு அலைந்தனர்.

🔶 இனவாதமும் இரத்த பந்தமான குடும்பப் பாரம்பரியமும் அவர்களது சமூக அமைப்பின் அஸ்திவாரமாகத் திகழ்ந்தன.

🔶 அவர்களிடையே அறியப்பட்ட ”உன் சகோதரன் அநியாயக்காரனாக இருந்தாலும் அநீதி இழைக்கப்பட்டவனாக இருந்தாலும் அவனுக்கு நீ உதவி செய்” என்ற பழமொழியின் வெளிப்படையான பொருளுக்கேற்பவே அவர்கள் நடந்து வந்தார்கள்.

🔶ஆனால், இஸ்லாம் இப்பழமொழிக்கு நேரடிப் பொருள் கொள்வதை மாற்றி அநியாயக்காரனை அவனுடைய அநியாயத்திலிருந்து தடுப்பதுதான் அவனுக்குச் செய்யும் உதவி என பொருள் தந்தது.

🔶 எனினும், சில நேரங்களில் தலைமைத்துவத்தை அடைவதற்காக ஒரே வமிசத்தில் தோன்றியவர்கள் கூட தங்களுக்குள் வாளெடுத்துப் போரிட்டுக் கொண்டனர்.

🔶 எடுத்துக்காட்டாக அவ்ஸ்-கஸ்ரஜ், அப்ஸ்-துப்யான், பக்ர்-தக்லிப் கோத்திரத்தினர் தலைமைப் பதவிக்காக தங்களுக்குள் பகைவர்களாக இருந்தனர்.

🔶பல மாறுபட்ட கோத்திரத்தைச் சேர்ந்தவர்கள் தங்களுக்குள் தொடர்பற்றவர்களாக பிரிந்து வாழ்ந்தனர்.

🔶 குடும்பச் சண்டையிலேயே தங்கள் ஆற்றல்களை இழந்தனர்.

🔶 சில நேரங்களில் அவர்கள் கொண்டிருந்த மத நம்பிக்கைகளும் பழக்க வழக்கங்களும் அவர்களுக்கிடையில் இருந்த பகைமையின் வேகத்தை குறைத்தன.

🔶 மற்றும் சில நேரங்களில் சமாதான ஒப்பந்தங்களும் நட்பு ஒப்பந்தங்களும் பல மாறுபட்ட கோத்திரத்தை சேர்ந்தவர்களுக்கிடையே நெருக்கமான உறவை ஏற்படுத்தின.

🔶புனித மாதங்கள் அவர்களுக்கு அருளாகவும் வாழ்வுக்கும் வியாபாரத்திற்கும் பேருதவியாகவும் அமைந்திருந்தன.

🔶புனித மாதங்களை அவர்கள் கண்ணியப்படுத்தி வந்ததால் அம்மாதங்களில் மட்டும் அவர்கள் முழு நிம்மதியுடனும் பாதுகாப்புடனும் இருந்தனர்.

📜அபூரஜா அல் உதாதி (ரழி) கூறுகிறார்: ”ரஜபு மாதம் வந்துவிட்டால் நாங்கள் ஈட்டிகளின் கூர்மையை அகற்றும் மாதம் வந்துவிட்டது” என்று கூறி ஈட்டி, அம்புகளின் முனையை அகற்றிவிடுவோம். இவ்வாறே மற்ற புனித மாதங்களிலும் நடந்து கொள்வோம். (ஸஹீஹுல் புகாரி. ஃபத்ஹுல் பாரி)

✳ ​தொட.....ரும்​....

(உதவி- அல் ரஹீக் அல் மக்தூம் கிதாப்)

🍃🍂🍃🍂🍃🍂🍃🍂🍃

🔮 இஸ்லாமிய மார்க்க செய்திகளை அழகிய முறையில் அறிய

♻ வாட்ஸ்அப்பில் எங்கள் செய்தியை பெற 👇

📲+919087971872

📲 +919994675186

​பேஸ்புக்கில் எம்மை தொடர​ 👇

https://m.facebook.com/Makkalmedia-1684365771847561/?ref=wizard

📮 பதிவு நாள்: 03 JULY 2016

📢 ⓂAKKAL ⓂEDIA 📢

Part of 👇

📡 ECHO DAWAH FOUNDATION 📡

நபி(ஸல்) வாழ்க்கை வரலாறு​ பகுதி-49🔰

📢  ⓂAKKAL ⓂEDIA 📢

💠பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்💠

☮ ​முஹம்மது நபி(ஸல்) வாழ்க்கை வரலாறு​

         🕋 ​பகுதி-49🔰


🔶சிலசமயம் இரு வகுப்பாரிடையே போர் நடைபெறும்.

🔶அதில், தோல்வி அடைந்தவர்களின் பெண்களை வெற்றிபெற்ற பிரிவினர் சிறைபிடித்து தங்களது அடிமைகளாக்கி அனுபவிப்பார்கள்.

🔶இதில் பிறக்கும் குழந்தைகளின் பெயர்கள் காலம் முழுவதும் அடிமைகளான அவர்களது தாய்மார்களின் பெயர்களுடன் சேர்த்து அழைக்கப்படும் அவமானம் இருந்து வந்தது.

🔶அறியாமைக் காலத்தில் ஆண்கள் எவ்வித வரம்புமின்றி பல பெண்களை மணந்து கொண்டனர்.

🔶இஸ்லாம் அதை தடுத்து நான்கு பெண்களுக்கு மேல் மணமுடிக்கக் கூடாது என வரையறுத்தது.

🔶மேலும், இரு சகோதரிகளை ஒரே காலத்தில் மணந்து கொண்டனர். தங்களது தந்தை இறந்துவிட்டால் அல்லது விவாகரத்து செய்துவிட்டால் அவன் மனைவியை (மாற்றாந்தாயை) மணந்து கொள்ளும் பழக்கமும் அவர்களிடையே காணப்பட்டது.


🔶 இவ்விரண்டையும் இஸ்லாம் தடை செய்தது. (பார்க்க அல்குர்ஆன் 4 : 22, 23). அவ்வாறே விவாகரத்து செய்வதில் குறிப்பிட்ட முறை எதுவுமின்றி விரும்பிய நேரத்தில் தலாக் (விவாகரத்து) கூறி விரும்பிய நேரத்தில் மனைவியரை திரும்ப அழைத்துக் கொண்டனர்.

🔶 இதை தடை செய்து மூன்று முறைக்கு மேல் இவ்வாறு செய்யலாகாது என இஸ்லாம் வரையறுத்தது. (ஸுனன் அபூதாவூது)

🔶சமூகத்தின் அனைத்து தரப்பினரிடமும் விபசாரம் பரவியிருந்தது.

🔶சிலர் மட்டும் இந்த இழிசெயலை வெறுத்து கௌரவத்துடன் வாழ்ந்தனர்.

🔶அடிமைப் பெண்களின் நிலைமை சுதந்திர பெண்களின் நிலைமையைவிட மிக மோசமாக இருந்தது.

🔶அந்த அறியாமைக்கால மக்களில் பெரும்பாலோர் விபசாரத்தை ஒரு குற்றச் செயலாகவே கருதவில்லை.

🔶இது குறித்து நபி (ஸல்) அவர்களின் முன்னிலையில் ஒரு மனிதர் எழுந்து ”அல்லாஹ்வின் தூதரே! இன்னவன் என் மகனாவான்.

🔶அறியாமைக் காலத்தில் நான் அவனது தாயுடன் விபசாரம் செய்துள்ளேன் என்றார்.

🔶அதற்கு நபி (ஸல்) அவர்கள் ”இஸ்லாமிய மார்க்கத்தில் இவ்வாறான உரிமைக் கோரலுக்கு வாய்ப்பில்லை.

🔶 அறியாமைக் கால செயல்களெல்லாம் முடிந்துபோய் விட்டன. இப்போது குழந்தை அதனுடைய தாயின் கணவனையே சாரும்.

🔶 விபசாரம் புரிந்தவனைக் கல்லால் எறிந்து கொல்லப்படும்” என்று கூறினார்கள். (ஸுனன் அபூதாவூது)

✳ ​தொட.....ரும்​....

(உதவி- அல் ரஹீக் அல் மக்தூம் கிதாப்)

🍃🍂🍃🍂🍃🍂🍃🍂🍃

🔮 இஸ்லாமிய மார்க்க செய்திகளை அழகிய முறையில் அறிய

♻ வாட்ஸ்அப்பில் எங்கள் செய்தியை பெற 👇

📲+919087971872

📲 +919994675186

​பேஸ்புக்கில் எம்மை தொடர​ 👇

https://m.facebook.com/Makkalmedia-1684365771847561/?ref=wizard

📮 பதிவு நாள்: 01 JULY 2016

📢 ⓂAKKAL ⓂEDIA 📢

Part of 👇

📡 ECHO DAWAH FOUNDATION 📡

நபி(ஸல்) வாழ்க்கை வரலாறு​ ​பகுதி-48🔰

📢  ⓂAKKAL ⓂEDIA 📢

💠பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்💠

☮ ​முஹம்மது நபி(ஸல்) வாழ்க்கை வரலாறு​

         🕋 ​பகுதி-48🔰

🔶ஆனால், கீழ்மட்ட மக்களிடத்தில் ஆண், பெண் இணைந்து வாழ்வதற்கு பல்வேறு நடைமுறைகள் காணப்பட்டன.

🔶அவை அனைத்தும் வெட்கமற்ற இழிவான ஈனத்தனமான பழக்க வழக்கங்களாகவே இருந்தன.

🔶 இது குறித்து அன்னை ஆயிஷா (ரழி) அவர்கள் கூறியதாவது:

🔶திருமணங்கள் அறியாமைக் காலத்தில் நான்கு வகைகளாக இருந்தன.

🎾முதல் வகை:

🔶இன்று மக்களிடையே நடைமுறையிலுள்ள திருமணத்தைப் போன்றதாகும்.

🔶ஒருவர் மற்றொருவரின் பொறுப்பிலுள்ள ஒரு பெண்ணையோ அல்லது அவருடைய மகளையோ பெண் பேசி ‘மஹ்ர்’ (விவாகக் கொடை) கொடுத்து மணந்து கொள்வார்.

🎾இரண்டாம் வகை:

🔶ஒருவர் தம் மனைவியிடம் ”நீ உன் மாதவிடாயிலிருந்து தூய்மை அடைந்தவுடன் இன்ன நபருடன் படுக்கையைப் பகிர்ந்து கொள்!” என்று கூறி அனுப்பி விடுவார்.

🔶 அதன்பின் அந்த மனிதர் மூலம் கர்ப்பமானது தெரியும்வரை அவர் தன் மனைவியுடன் சேராமல் விலகி இருப்பார்.

🔶அந்த மனிதர் மூலம் அவள் கர்ப்பமாகி விட்டாளெனத் தெரியவந்தால் தன் விருப்பத்திற்கேற்ப கணவர் அவளுடன் சேர்ந்து கொள்வார்.

🔶 திடகாத்திரமிக்க குழந்தை பிறக்க வேண்டுமென்ற ஆர்வத்தினாலேயே இவ்வாறு செய்து .

🔶இந்தத் திருமணத்திற்கு ‘நிகாஹுல் இஸ்திப்ழாவு’ என்று அரபியில் பெயர் கூறப்படும்.

🎾மூன்றாம் வகை:

🔶பத்துப் பேருக்குக் குறைவான ஒரு குழுவினர் ஒன்றுகூடி அவர்கள் அனைவரும் ஒரே பெண்ணுடன் உறவு கொள்வார்கள்.

🔶அவள் கர்ப்பமாகி குழந்தை பிரசவித்த சில நாட்களுக்குப் பின் அவர்கள் அனைவரையும் தன்னிடம் வரச் சொல்வாள்.

🔶அவர்கள் அனைவரும் எவ்வித மறுப்புமின்றி அவளிடம் ஒன்று கூடுவார்கள்.

🔶அவர்களிடம் அவள்: ”நீங்கள் செய்தது உங்களுக்குத் தெரிந்ததே! (இப்போது) எனக்குக் குழந்தை பிறந்து விட்டது” என்று கூறிவிட்டு (அவர்களில் ஒருவரை நோக்கி) ”இது உன் குழந்தையே” என தான் விரும்பியவன் பெயரைக் குறிப்பிடுவாள்.

🔶 அக்குழந்தை அந்த நபரிடம் ஒப்படைக்கப்படும். அதை அனைவரும் ஏற்றுக்கொள்வார்கள்.

🎾நான்காம் வகை:

🔶பலர் ஒரு பெண்ணுடன் உடலுறவு கொள்வர்.

🔶 தன்னிடம் வரும் யாரையும் அவள் தடுக்க மாட்டாள்.

🔶இப்பெண்கள் விலை மாதர்கள் ஆவர். இவர்கள் தங்களது வீட்டு வாசலில் கொடியை நட்டு வைத்திருப்பார்கள்.

🔶பலர் அங்கு வந்து போவார்கள். இதில் ஒருத்தி கர்ப்பமாகிக் குழந்தை பெற்றால் மக்கள் ஒன்று கூடி அங்க அடையாளங்களை வைத்து குழந்தையின் தந்தையை கண்டறியும் முகக்குறி நிபுணர்களை அழைத்து வருவார்கள்.

🔶அந்த நிபுணர்கள் ஆராய்ந்து தந்தையை முடிவு செய்து அம்மனிதனுடன் அந்தக் குழந்தையை இணைத்து விடுவார்கள்.

🔶அவனிடம் அக்குழந்தை ஒப்படைக்கப்பட்டு அவனுடைய மகன் என்று பெயர் சொல்லி அழைக்கப்படும்.

🔶அதைத் தன் குழந்தையல்ல என்று அவனும் மறுக்க மாட்டான்.

🔶அல்லாஹ் சத்திய மார்க்கத்துடன் முஹம்மது (ஸல்) அவர்களை அனுப்பியபோது இன்று மக்களின் வழக்கிலுள்ள இஸ்லாமியத் திருமணத்தைத் தவிர அறியாமைக் காலத்திருமணங்கள் அனைத்தையும் தகர்த்து விட்டான். (ஸஹீஹுல் புகாரி, ஸுனன் அபூதாவூது)

✳ ​தொட.....ரும்​....

(உதவி- அல் ரஹீக் அல் மக்தூம் கிதாப்)

🍃🍂🍃🍂🍃🍂🍃🍂🍃

🔮 இஸ்லாமிய மார்க்க செய்திகளை அழகிய முறையில் அறிய

♻ வாட்ஸ்அப்பில் எங்கள் செய்தியை பெற 👇

📲+919087971872

📲 +919994675186

​பேஸ்புக்கில் எம்மை தொடர​ 👇

https://m.facebook.com/Makkalmedia-1684365771847561/?ref=wizard

📮 பதிவு நாள்:30 JUNE 2016

📢 ⓂAKKAL ⓂEDIA 📢

Part of 👇

📡 ECHO DAWAH FOUNDATION 📡

நபி(ஸல்) வாழ்க்கை வரலாறு​ ​பகுதி-47

📢  ⓂAKKAL ⓂEDIA 📢

💠பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்💠

☮ ​முஹம்மது நபி(ஸல்) வாழ்க்கை வரலாறு​

         🕋 ​பகுதி-47🔰

🔶கிறிஸ்துவ மதம் சிலைவணங்கும் மதமாக மாறியது.

🔶அல்லாஹ்வுக்கும் மனிதர்களுக்குமிடையே புதுமையானதொரு கலப்படத்தை கிறிஸ்துவ மதம் போதித்தது.

🔶அந்த மதத்தைப் பின்பற்றிய அரபியிடம் அது எவ்வித தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை.

🔶 ஏனெனில், அதன் போதனைகள் வாழ்க்கை நெறிக்கு ஏற்றதாக இருக்கவில்லை.

🔶 அம்மக்களுக்கு அதிலிருந்து விலகுவதும் சிரமமாக இருந்தது.

🔶அரபியர்களின் ஏனைய மதக்கோட்பாடுகள் சிலைவணங்கிகளின் மதக்கோட்பாடுகளுக்கு ஒத்திருந்தன.

🔶அவர்களின் இதயங்கள், கொள்கைகள், மூடநம்பிக்கைகள், பழக்கவழக்கங்கள் கூட ஒன்றுபட்டிருந்தன.

🔶 இதுவரை அரபிய தீபகற்பத்தில் நிலவிய அரசியல் மற்றும் மதக் கோட்பாடுகளை அறிந்தோம்.

🔶இப்போது அதன் சமூக அமைப்பு, பொருளாதாரம் மற்றும் பண்பாடுகளைப் பற்றி சுருக்கமாகக் காண்போம்.

🎾சமுதாய அமைப்பு

🔶அரபியர்களில் பலதரப்பட்ட வகுப்பினர் இருந்தனர். அவர்களில் உயர்மட்ட குடும்பங்களில் ஆண்கள் தனது குடும்பப் பெண்களுடன் உயர்வான நடத்தையைக் கொண்டிருந்தார்கள்.

🔶 அக்குடும்பங்களில் பெண்கள் சுய அதிகாரத்துடனும் கௌரவத்துடனும்

🔶. பெண்களுக்கு மிகுந்த பாதுகாப்பும் மரியாதையும் அளிக்கப்பட்டது. பெண்களின் கண்ணியத்தைப் பாதுகாக்க வாளேந்தி போர் செய்யவும் அவர்கள் துணிந்திருந்தனர்.

🔶ஓர் ஆண் தனது கொடைத்தன்மை, வீரம், வலிமையைக் கூறி தன்னைப் புகழ்ந்துக்கொள்ள நினைக்கும்போது தனது கவிதைகளில் பெண்ணை விளித்து பேசுவது போல பேசுவார்.

🔶சில சந்தர்ப்பங்களில் பெண் விரும்பினால் தங்களது குலத்தாரிடையே காணப்படும் பிளவுகளை சரிசெய்து அமைதி நிலவச் செய்திடுவாள்.

🔶அவள் நினைத்தால் மக்களிடையே போர் நெருப்பை மூட்டிவிடுவாள்.

🔶 எனினும், எவ்விதக் கருத்து வேறுபாடுமின்றி ஆண் குடும்பத் தலைவனாக விளங்கினான்.

🔶அவனே முடிவெடுக்கும் அதிகாரத்தைப் பெற்றிருந்தான்.

🔶 அவர்களிடையே ஆண், பெண் தொடர்பு என்பது அப்பெண்களுடைய காப்பாளர்களின் அனுமதி பெற்று திருமணத்தின் மூலமே ஏற்படுத்தப்பட்டது.

🔶 தங்கள் குடும்ப ஆண்களை மீறி செயல்பட, பெண்கள் அதிகாரமற்றவர்களாக இருந்தார்கள்.

✳ ​தொட.....ரும்​....

(உதவி- அல் ரஹீக் அல் மக்தூம் கிதாப்)

🍃🍂🍃🍂🍃🍂🍃🍂🍃

🔮 இஸ்லாமிய மார்க்க செய்திகளை அழகிய முறையில் அறிய

♻ வாட்ஸ்அப்பில் எங்கள் செய்தியை பெற 👇

📲+919087971872

📲 +919994675186

​பேஸ்புக்கில் எம்மை தொடர​ 👇

https://m.facebook.com/Makkalmedia-1684365771847561/?ref=wizard

📮 பதிவு நாள்: 29 JUNE 2016

📢 ⓂAKKAL ⓂEDIA 📢

Part of 👇

📡 ECHO DAWAH FOUNDATION 📡

லைலத்துல் கத்ரு

📢  ⓂAKKAL ⓂEDIA 📢

💠 *பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்*💠

👍 *ஆயிரம் மாதங்கள் செய்த நன்மை ஓரே இரவில்*👍

💥 *லைலத்துல் கத்ரு*💥

🌴மகத்துவமிக்க இரவில் இதை நாம் அருளினோம். மகத்துவமிக்க இரவு என்றால் என்னவென உமக்கு எப்படித் தெரியும்? மகத்துவமிக்க இரவு ஆயிரம் மாதங்களை விடச் சிறந்தது. வானவர்களும், ரூஹும் அதில் தமது இறைவனின் கட்டளைப்படி ஒவ்வொரு காரியத்துடனும் இறங்குகின்றனர். ஸலாம்! இது வைகறைவரை இருக்கும்.
(அல்குர்ஆன் 97:1-5)

👆🏽 *இந்த இரவில் முந்தைய பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன*👇🏼

✳அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்👇🏼

💐 எவர் நம்பிக்கையுடனும் நன்மையை எதிர்பாத்தவராகவும் லைலத் துல் கத்ரு இரவில் நின்று வணங்குகிறாரோ அவரது முந்திய பாவங்கள் மன்னிக்கப்படும்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி),
நூல்: புகாரி (35)

💐லைலத்துல் கத்ரு இரவில் இவ்வளவு சிறப்பை இறைவன் வைத்திருந் தாலும் அது எந்த இரவு என்று மறைக்கப்பட்டுள்ளது யாருக்கும் தெரியாது.


💐நபி (ஸல்) அவர்களுக்கு எடுத்து சொல்லப்பட்ட அந்த இரவை அல்லாஹ் ஏதோ ஒரு காரணத்திற்காக மறக்கடித்துள்ளான்.


💐நபி (ஸல்) அவர்கள் லைலதுல் கத்ரு இரவைப் பற்றி அறிவிப்பதற் காக தமது வீட்டிலிருந்து வெளியே வந்தார்கள்.

💐 அப்போது முஸ்லிம்க ளில் இருவர் சச்சரவு செய்து கொண்டிருந்தார்கள் லைலதுல் கத்ரு இரவு பற்றி நான் உங்களுக்கு அறிவிப்பதற்காக வந்தேன்.

💐அப்போது இன்னின்ன மனிதர்கள் தமக்குள் சண்டை செய்து கொண்டிருந்தார்கள். உடனே அது (என் நினைவிலிருந்து) அகற்றப்பட்டு விட்டது அதுவும் உங்களுக்கு நன்மையாக இருக்கலாம் ரமலான் மாதத்தின் இருபத்து ஏழு, இருபத்தி ஒன்பது, இருபத்தி ஐந்து ஆகிய இரவுகளில் அதனைப் பெறமுயற்சி செய்யுங்கள்'' என்றார்கள்.

அறிவிப்பவர்: உபாதா பின் ஸாமித் (ரலி),
நூல்கள்: புகாரி (49), முஅத்தா (615)


💐ரமலானில் கடைசிப் பத்து நாட்களில் உள்ள ஒற்றைப்படை இரவுக ளில் லைலதுல் கத்ரைத் தேடுங்கள் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

🗣அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி),
நூல்கள்: புகாரி 2017, முஸ்லிம் 1997

💥நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எங்களுக்கு லைலதுல் கத்ரு இரவைப் பற்றிச் சொல்லும் போது, அது ரமலான் மாதத்தில் தான் இருக்கிறது. எனவே அதை ரமலானில் கடைசிப் பத்தில் தேடுங்கள்.

👍 *அது ஒற்றைப்படை இர வான இருபத்தி ஒன்று அல்லது இருபத்தி மூன்று அல்லது இருபத்தி ஐந்து அல்லது இருபத்தி ஏழு அல்லது ரமலானின் கடைசி இரவில் (29) இருக்கும்''*

👍என்று சொல்லி விட்டு, யார் அதில் ஈமானோடும் நன்மையை எதிர்பார்த்த வராகவும் நின்று வணங்குகிறாரோ அவருடைய முந்திய பாவங்கள் மன்னிக்கப்படும்''என்று கூறினார்கள்.

🗣அறிவிப்பவர்: உபாதா பின் ஸாமித் (ரலி),
நூல்: அஹ்மத் (20700)

💐 *சகோதரர்களே*💐

👆🏽மேற்கூறிய ஹதீஸ்கள் ஐயத்திற்கு இடமின்றி லைலதுல் கத்ர், ரமலான் மாதத்தில் கடைசிப் பத்து இரவுகளில் *21, 23, 25, 27, 29* ஆகியவற்றில் ஏதாவது ஒன்றில் தான் இருக்கும் என்பதைத் தெளிவாகக் காட்டுகிறது.

💐 *ஆக இந்த இரவுகளில் அதிகமான நன்மைகளை செய்து வல்ல ரஹ்மானின் பொருத்தத்தை அடையக்கூடிய நன்மக்களாக அல்லாஹ் நம்மை ஆக்குவானாக!!!!!*
💐💐💐💐💐💐💐💐💐💐💐

🔮 இஸ்லாமிய மார்க்க செய்திகளை அழகிய முறையில் அறிய

♻  *வாட்ஸ்அப்பில் எங்கள் செய்தியை பெற* 👇

📲+919087971872

📲 +919994675186

*​பேஸ்புக்கில் எம்மை தொடர​*👇

https://m.facebook.com/Makkalmedia-1684365771847561/?ref=wizard

📮 பதிவு நாள்:28  JUNE 2016

📢 ⓂAKKAL ⓂEDIA 📢

Part of 👇

📡 ECHO DAWAH FOUNDATION 📡

நபி(ஸல்) வாழ்க்கை வரலாறு​ பகுதி-46🔰

📢  ⓂAKKAL ⓂEDIA 📢

💠பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்💠

☮ ​முஹம்மது நபி(ஸல்) வாழ்க்கை வரலாறு​

         🕋 ​பகுதி-46🔰

🎾ஸாபியிய்யா:

🔶இது நட்சத்திரங்களை வணங்கும் மதம்.

🔶அதாவது, கோள்களும் நட்சத்திரங்களும் தான் இவ்வுலகை இயக்கி வருகின்றன என்று நம்பிக்கை கொள்ளும் மதமாகும்.

🔶இராக் மற்றும் அதன் சுற்றுப் பகுதிகளில் நடைபெற்ற அகழ்வாராய்ச்சியும், தொல்பொருள் ஆராய்ச்சியும் இது இப்றாஹீம் (அலை) அவர்களின் கல்தானி இனத்தவர் மதமாக இருந்தது என தெரிவிக்கின்றன.

🔶 முற்காலத்தில் ஷாம் மற்றும் யமன் நாடுகளில் அதிகமானவர்கள் இம்மதத்தையே பின்பற்றினர்.

🔶எனினும், யூத மற்றும் கிறிஸ்துவ மதங்கள் தோன்றி வலிமை பெற்றபோது ஸாபியிய்யா மதத்தின் அஸ்திவாரம் ஆட்டம் காண ஆரம்பித்து,

🔶 அதன் வளர்ச்சி பெரிதும் குன்றியது. எஞ்சியிருந்த இம்மதத்தைச் சேர்ந்தவர்கள் மஜூஸிகளுடன் கலந்து வாழ்ந்தனர்.

🔶அல்லது அரபிய வளைகுடா பகுதிகளிலும் இராக்கிலும் வாழ்ந்து வந்தனர்.

🔶யமன் நாட்டிலுள்ள ஹீரா பகுதியின் வழியாக இம்மதத்தை பின்பற்றியவர்களின் கலாச்சாரம் அரபியர்களிடமும் பரவியது.

🔶 அவ்வாறே பாரசீகர்களுடன் வியாபாரத் தொடர்பு கொண்டிருந்ததன் காரணமாக அவர்களின் மதக் கலாச்சாரம் குறைஷியர்களில் சிலரிடமும் காணப்பட்டது.

🔶சமயங்களின் நிலைமைகள்

🔶இஸ்லாமியப் பேரொளி பிரகாசிக்கத் தொடங்கியபோது இம்மதங்களையே அரபியர்கள் பின்பற்றிக் கொண்டிருந்தனர்.

🔶அதற்கு முன்பிருந்தே கொஞ்சம் கொஞ்சமாக இம்மதங்கள் வீழ்ச்சியடைய ஆரம்பித்தன.

🔶‘நாங்களே நபி இப்றாஹீம் (அலை) அவர்களின் மார்க்கத்தில் நிலைத்திருக்கிறோம்’ என வாய்ப்பந்தல் கட்டியிருந்த முஷ்ரிக்குகள் உண்மையில் நபி இப்றாஹீம் (அலை) அவர்களுடைய மார்க்கச் சட்ட ஏவல்களையும் விலக்கல்களையும் பின்பற்றுவதிலிருந்து வெகுதூரம் விலகியிருந்தனர்.


🔶அவர்கள் கற்றுத் தந்த நற்பண்புகளை முழுதும் புறக்கணித்து வாழ்ந்தனர்.

🔶 அவர்களிடையே குற்றங்கள் மலிந்து, சிலை வணங்கிகளிடம் இருக்கும் மூட நம்பிக்கைகளும் வழிகேடுகளும் கால ஓட்டத்தில் அவர்களின் மதச் சடங்குகளாக மாறின.

🔶 இச்சடங்குகளும் மூட நம்பிக்கைகளும் அவர்களது சமய, சமூக, அரசியல் வாழ்க்கையின் அனைத்து துறைகளிலும் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தின.

🔶யூத மதம் முற்றிலும் முகஸ்துதியாகவும், சர்வாதிகாரமாகவும் மாறியிருந்தது.

🔶அம்மதத் துறவிகளும் அதன் தலைவர்களும் கடவுளர்களாக விளங்கினர்.

🔶 மார்க்க சட்டங்கள் என்ற பெயரால் வாழ்க்கையை நெருக்கடியாக்கி தங்கள் விருப்பத்திற்கேற்ப மக்களைக் கசக்கிப் பிழிந்தனர்.

🔶 மக்களிடையே இறை நிராகரிப்பும், சமூகச் சீர்கேடுகளும் பரவிக் கிடந்தாலும், நேரிய மார்க்கம் சிதைக்கப்பட்டு சீர்கெட்டிருந்தாலும், அதைப் பற்றிச் சிறிதும் கவலையின்றி தலைமைத்துவத்தை தக்க வைத்துக் கொள்வதிலும் செல்வங்களை சேகரிப்பதிலுமே கவனம் செலுத்தினார்கள்.

🔶 எத்தகைய உயர் போதனைகளைக் கற்று அதனைப் பின்பற்றி வாழ வேண்டுமென அல்லாஹ் கட்டளையிட்டிருந்தானோ அவையனைத்திற்கும் சமாதி கட்டினர்.

✳ ​தொட.....ரும்​....

(உதவி- அல் ரஹீக் அல் மக்தூம் கிதாப்)

🍃🍂🍃🍂🍃🍂🍃🍂🍃

🔮 இஸ்லாமிய மார்க்க செய்திகளை அழகிய முறையில் அறிய

♻ வாட்ஸ்அப்பில் எங்கள் செய்தியை பெற 👇

📲+919087971872

📲 +919994675186

​பேஸ்புக்கில் எம்மை தொடர​ 👇

https://m.facebook.com/Makkalmedia-1684365771847561/?ref=wizard

📮 பதிவு நாள்: 28 JUNE 2016

📢 ⓂAKKAL ⓂEDIA 📢

Part of 👇

📡 ECHO DAWAH FOUNDATION 📡

நபி(ஸல்) வாழ்க்கை வரலாறு​ பகுதி-45🔰

📢  ⓂAKKAL ⓂEDIA 📢

💠பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்💠

☮ ​முஹம்மது நபி(ஸல்) வாழ்க்கை வரலாறு​

         🕋 ​பகுதி-45🔰

🔶இதைப் பற்றி அல்லாஹ் தனது அருள்மறையில் இவ்வாறு குறிப்பிடுகிறான்:

🔶அகழுடையவர்கள் அழிக்கப்பட்டார்கள். (அவ்வாறே இம்மக்காவாசிகளும் அழிக்கப்படுவார்கள்.)

🔶அது, விறகுகள் போட்டெரித்த நெருப்பு (அகழ்.) அதன் முன் அவர்கள் உட்கார்ந்து கொண்டிருந்த சமயத்தில், நம்பிக்கையாளர்களை (நெருப்புக் கிடங்கில் போட்டு) நோவினை செய்வதை அவர்கள் (வேடிக்கையாகப்) பார்த்துக் கொண்டுமிருந்தார்கள். (அல்குர்ஆன் 85 : 4 – 7)

🎾கிறிஸ்துவ மதம்:

🔶 ஹபஷியர் மற்றும் சில ரோமானிய குழுக்களின் ஆக்கிரமிப்புகளால் அரபிய நாடுகளுக்குள் இம்மதம் புகுந்தது.

🔶ஹபஷிகள் யமன் நாட்டை முதன்முறையாக கி.பி. 340 ஆம் ஆண்டில் கைப்பற்றினர்.

🔶அவர்களது ஆக்கிரமிப்பு நீண்ட காலம் நிலைத்திருக்கவில்லை.

🔶 கி.பி. 370லிருந்து 378 வரையுள்ள காலத்தில் அவர்கள் யமனிலிருந்து விரட்டியடிக்கப்பட்டார்கள்.

🔶 எனினும், கிறிஸ்துவ மதத்தைப் பரப்புவதில் அவர்கள் வெறிகொண்டு அலைந்தனர்.

🔶 ஹபஷியர்களின் ஆக்கிரமிப்பு காலத்தில் கிறிஸ்துவ மதத்தைச் சார்ந்த ‘ஃபீம்யூன்’ எனும் ஓர் இறைநேசர் நஜ்ரான் வந்தடைந்தார்.

🔶அங்கு வசிப்பவர்களை கிறிஸ்துவத்தைத் தழுவ அழைத்தார்.

🔶அவன் வாய்மையையும் அவரது நேரிய மார்க்கத்தையும் கண்ட அம்மக்கள் ஆர்வத்துடன் கிறிஸ்துவத்தில் இணைந்தனர். (இப்னு ஹிஷாம்)

🔶நஜ்ரானில் வசித்த கிறிஸ்துவர்களை மன்னன் தூ நுவாஸ் நெருப்பு அகழியில் எரித்துக் கொன்றானல்லவா!

🔶 அதற்குப் பழிவாங்கும் முகமாக ஹபஷியர்கள் இரண்டாவது முறையாக கி.பி 525ஆம் ஆண்டில் யமனைக் கைப்பற்றினர்.

🔶 அப்போது ‘அப்ரஹா அல் அஷ்ரம்’ என்பவன் யமனை ஆட்சி செய்தான்.

🔶அவன் கிறிஸ்துவத்தை தீவிரமாக பரப்புவதில் மிகுந்த ஆர்வம் காட்டினான்.

🔶 அவன் யமனில் ஒரு கிறிஸ்துவ கோயிலைக் கட்டினான்.

🔶கஅபாவை ஹஜ்ஜு செய்யச்செல்லும் அரபியர்கள் ஹஜ்ஜுக்காக கஅபா செல்வதைத் தடுத்து, தான் கட்டிய கோயிலைத் தரிசிக்க வரவேண்டும்;

🔶 கஅபாவை இடித்துத் தகர்த்திட வேண்டுமென விரும்பினான். ஆனால் கடுந்தண்டனையால் அல்லாஹ் அவனை அழித்துவிட்டான்.

🔶மற்றொரு புறம், ரோம் பகுதிகளை ஒட்டியிருந்த காரணத்தால் கஸ்ஸானிய அரபியர்கள், தங்லிப், தய்ம் வமிசத்தைச் சேர்ந்த அரபியர்களும் கிறிஸ்துவ மதத்தைத் தழுவினர்.

🔶 இதைத்தவிர ஹீராவின் சில அரசர்களும் கிறிஸ்துவத்தைத் தழுவினர்.

🎾மஜூஸிய்யா:

🔶 (நெருப்பை வணங்கும் மதம்) இது பெரும்பாலும் பாரசீகத்தை ஒட்டியிருந்த அரபியர்களிடம் காணப்பட்டது.

🔶 இராக், பஹ்ரைன், அல் அஹ்ஸா, ஹஜர் மற்றும் அரபிய வளைகுடா பகுதிகளில் வசித்து வந்த அரபியர்களும் இதைப் பின்பற்றினர்.

🔶🔶இது மட்டுமின்றி யமன் நாட்டை பாரசீகர்கள் கைப்பற்றியிருந்த காலத்தில் யமனியர் பலர் மஜூஸி மதத்தில் இணைந்தனர்.

✳ ​தொட.....ரும்​....

(உதவி- அல் ரஹீக் அல் மக்தூம் கிதாப்)

🍃🍂🍃🍂🍃🍂🍃🍂🍃

🔮 இஸ்லாமிய மார்க்க செய்திகளை அழகிய முறையில் அறிய

♻ வாட்ஸ்அப்பில் எங்கள் செய்தியை பெற 👇

📲+919087971872

📲 +919994675186

​பேஸ்புக்கில் எம்மை தொடர​ 👇

https://m.facebook.com/Makkalmedia-1684365771847561/?ref=wizard

📮 பதிவு நாள்: 27 JUNE 2016

📢 ⓂAKKAL ⓂEDIA 📢

Part of 👇

📡 ECHO DAWAH FOUNDATION 📡

இஸ்லாமிய போர்வையில் மனஇச்சை 10☠

📢ⓂAKKALⓂEDIA📢

💠பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்💠

☠ இஸ்லாமிய
போர்வையில்
மனஇச்சை 10☠

💚 *அன்பான சகோதரர்களே*💚

❌அந்த மனஇச்சையை பின்பற்றும் வழிகேடர்கள்....🐒

☠தாங்கள் பின்பற்றும் கேடுகெட்ட மனஇச்சைக்கு நபியவர்களின் பொன்மொழி
களிலிருந்தும் ஆதாரம் வைத்துள்ளார்களாம்...❌❌❌❌

என்று இந்த ஹதீஸ்களையும் ஒரு உஸுலையும் காட்டுகிறார்கள்...
👇👇👇👇👇👇👇

💥நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: என் பெயரில் (ஏதேனும் ஒரு) செய்தியை நீங்கள் கேள்விப்படும் போது அச்செய்தியை உங்களது உள்ளங்கள் ஒத்துக் கொள்ளுமானால், இன்னும் உங்கள் தோல்களும் முடிகளும் (அதாவது உங்கள் உணர்வுகள்) அச்செய்திக்குப் பணியுமானால், இன்னும் அச்செய்தி உங்களு(டைய வாழ்க்கைக்கு)க்கு நெருக்கமாக இருப்பதாக நீங்கள் கருதினால் அ(தைக் கூறுவ)தில் நானே உங்களில் மிகத் தகுதி வாய்ந்தவன். என் பெயரில் (ஏதேனும் ஒரு) செய்தியை நீங்கள் கேள்விப்படும் போது அச்செய்தியை உங்களது உள்ளங்கள் வெறுக்குமானால், இன்னும் உங்களது தோல்களும் முடிகளும் (அதற்குக் கட்டுப்படாமல் அதை விட்டு) விரண்டு ஓடுமானால், இன்னும் அச்செய்தி உங்களு(டைய வாழ்க்கை)க்கு (சாத்தியப்படுவதை விட்டும்) தூரமாக இருப்பதாக நீங்கள் கருதினால் உங்களில் நானே அதை விட்டும் மிகத் தூரமானவன்.

அறிவிப்பவர்: அபூ உஸைத் (ரலி)

நூல்: அஹ்மத் 15478

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

💥பொய் எனக் கருதப்படும் ஒரு செய்தியை என்பெயரால் யார் அறிவிக்கிறாரோ அவரும் பொய்யர்களில் ஒருவராவார்.

அறிவிப்பவர்: சமுரா பின் ஜுன்தப் (ரலி)

நூல்: முஸ்லிம் 1

💥எனவே தான் நடைமுறைப்படுத்த இயலாத இதுபோன்ற ஹதீஸ்கள் நிராகரிக்கப்பட வேண்டியவை என்று ஹதீஸ் கலையில் கூறப்பட்டுள்ளது.

✳இட்டுக்கட்டப்பட்ட செய்தியை அறிந்து கொள்வதற்கான அடையாளங்களில் ஒன்று: விளக்கம் கொடுக்க முடியாத வகையில் அறிவுக்கு அச்செய்தி மாற்றமாக இருப்பதாகும். அல்லது உறுதியான குர்ஆனுடைய கருத்திற்கு எதிராக அந்தச் செய்தி அமைந்திருக்கும்.

💥 நடைமுறைக்கும் இயல்பான சூழ்நிலைக்கும் ஒத்து வராத செய்தியும் இந்த வகையில் அடங்கும்.

நூல்: தத்ரீபுர்ராவீ, பாகம்: 1, பக்கம்: 276

💚 *அன்பான சகோதரர்களே!*💚

✳மேலுள்ள ஹதீஸும் .,அந்த உஸுலும்  இரண்டுமே ஒரு ஹதீஸ் ஆதாரப்பூர்வமான ஹதீஸாகயிருந்தும் அது அறிவுக்கு உட்படவில்லை என்றால் அதை தூக்கி எறிந்திட வேண்டும் என்று சொல்வதற்காக ஒருபோதும் பயன்படுத்தக் கூடியதல்ல..❓❓❓❓

❌மாறாக மார்க்கத்திற்கு முரணாக நபியவர்களின் மீது இட்டுக்கட்டப் பட்ட செய்தியை வெளிப்படையாக அறிந்து கொள்ளும் வண்ணமாக கூறப்பட்டவைகள்.,.💐

☠இவைகளை போய் இந்த வழிகேடர்கள்☠

💐ஆதாரப்பூர்வமான அறிவிப்பாளர் தொடர் கொண்ட ஹதீஸை மறுப்பதற்கு ஆதாரமாக காட்டுவதே போதுமானது..,
இவர்கள் தங்களின் மனஇச்சை நிரம்பிய தவ்ஹீத் என்ற மதத்திற்கு முஸ்லிம்களை மதமாற்ற திட்டம் தீட்டியவர்கள் என்று...☠☠☠☠

💚 *அன்பான சகோதரர்களே*💚

❌❌ஒரு வேளை அவர்கள் கூறுவது போன்று ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களையும் நம்முடைய உள்ளமும் அறிவும் ஏற்றால்தான் இது நபியிடமிருந்து வந்தது என்று நாம் நம்ப வேண்டும் என்று கூறினால் ...❓❓❓

❌ *உலகத்தில் ஒரு ஹதீஸைகூட நம்மால் மீதம் வைத்துக் கொள்ள முடியாது...*❌❌

❌ஏனென்றால் உலகில் ஒவ்வொருவரும் தன் அறிவிற்கு ஏற்க முடியாத ஹதீஸை இதை ஏற்க கூடாது ...

☠ஏனெறால் என் அறிவுக்கு இது உட்பட வில்லை என்று அல்லாஹ்வின் தூதரின் எல்லா சொற்களை காலில் போட்டு மிதித்துவிடுவார்கள்...☠☠☠

🌴அல்லாஹ் பாதுகாப்பானாக🌴

💐 *ஆக அன்பான சகோதரர்களே*💐

☠இந்த வழிகெட்ட மடயர்கள்  ஹதீஸ்கள் அது நபியிடமிருந்தும் உள்ளதுதானா???
என்பதை நீரூபிக்க யாருடைய அறிவை நிர்ணயிக்கப் போகிறார்கள்...❓❓❓❓❓❓❓❓


✳ *சிந்தித்துப் பாருங்கள்*✳

☠இது ஒரு வழிகெட்ட வாதம் என்பதை மட்டும் உங்களின் உள்ளங்களில் ஆழப்பதிய வைத்துக் கொள்ளுங்கள் சகோதரர்களே!!🍁


🌴இன் ஷா அல்லாஹ் தொடரும்🌴

🍃🍂🍃🍂🍃🍂🍃🍂🍃

🔮 இஸ்லாமிய மார்க்க செய்திகளை அழகிய முறையில் அறிய

♻ வாட்ஸ்அப்பில் எங்கள் செய்தியை பெற 👇

📲+919087971872

📲 +919994675186

​பேஸ்புக்கில் எம்மை தொடர​ 👇

https://m.facebook.com/Makkalmedia-1684365771847561/?ref=wizard

📮 பதிவு நாள்:26: june
2016 :

📢 ⓂAKKAL ⓂEDIA 📢

Part of 👇

📡 ECHO DAWAH FOUNDATION 📡

இஸ்லாமிய போர்வையில் ☠மனஇச்சை 9

📢ⓂAKKALⓂEDIA📢

💠பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்💠

☠இஸ்லாமிய போர்வையில்
☠மனஇச்சை  9 ☠

💚அன்பான சகோதரர்களே💚
🌷ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களும் குர்ஆனிற்கு முரண்படும்,....
 என்று இட்டுக்கட்டக்கூடிய வழிகேடர்களிடம்,... 🐒

அடுத்தபடியாக இப்படி ஒரு கேள்வியையும் நீங்கள் முன்வையுங்கள்...❓❓❓❓❓❓❓❓

📚இமாம் புஹாரி(ரஹ்)
அவர்கள் 📚

🌷இந்த ஆதாரப்பூர்வமான ஹதீஸை தவறுதலாக தன்னுடைய கிரந்தத்தில் பதிவு செய்துவிட்டார்கள் என்று கூறுகிறீர்கள் அல்லவா.?...🗣

சரி...,..🍁🍁🍁🍁

❌""அப்படியானால் உங்களின் அன்னனும் அவரின் பிச்சிலங்களும்  தவறே நிகழ முடியாதவர்களோ❓❓❓❓❓❓❓❓

💀என்று மண்டைகளில் உரைக்கும்படி கேளுங்கள்....💀

💚அன்பான சகோதரர்களே💚

📓புஹாரி என்ற கிரந்தம் எழுதப்பட்டு 1000 ஆண்டுகள் கடந்துவிட்டது ...📓

🗓வரலாற்றில் யாராவது ஒருஇமாம்,....🗓

❌இந்த வழிகேடர்கள் கூறுவது போன்று❌

📓குர்ஆனிற்கு முரண்படும் ஒரு  ஹதீஸை இமாம் புஹாரி தெரியாமல் பதிவு செய்துவிட்டார் என்று கூறியதாக காட்ட முடியுமா❓❓❓❓❓❓❓❓❓❓❓

🗣ஒரு போதும் முடியாது....

ஏனென்றால் 🌴அல்ஹம்து லில்லாஹ்🌴

அவர்களெல்லாம் இந்த ஹதீஸ்கள் குர்ஆனிற்கு முரண்பட்டவைகள் அல்ல என்று தெள்ளத் தெளிவாக விளக்க
மளித்துள்ளார்கள்...🍁🍁🍁🍁

🐒வழிகெட்ட அன்னன் மத்ஹபின் மூதாதையர்களான முஃதஸிலாக்கள் மட்டுமே இந்த கேடுகெட்ட வாதத்தை முன்வைத்து......

🌴இன்றைக்கும் சத்திய உலமாக்களின் சாபத்தை சம்பாரித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதை மறந்திட வேண்டும்..☠☠☠

அல்லாஹ் அந்த வழி கேடர்களின் ஆபத்தான கொள்கையை விட்டும் நம் அனைவரையும் பாதுகாப்பானாக...🍁🍁🍁🍁

🌴இன் ஷா அல்லாஹ் தொடரும்🌴

🍃🍂🍃🍂🍃🍂🍃🍂🍃

🔮 இஸ்லாமிய மார்க்க செய்திகளை அழகிய முறையில் அறிய

♻ வாட்ஸ்அப்பில் எங்கள் செய்தியை பெற 👇

📲+919087971872

📲 +919994675186

​பேஸ்புக்கில் எம்மை தொடர​ 👇

https://m.facebook.com/Makkalmedia-1684365771847561/?ref=wizard

📮 பதிவு நாள்:26: june
2016 :

📢 ⓂAKKAL ⓂEDIA 📢

Part of 👇

📡 ECHO DAWAH FOUNDATION 📡

நபி(ஸல்) வாழ்க்கை வரலாறு​ ​பகுதி-44🔰

📢  ⓂAKKAL ⓂEDIA 📢

💠பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்💠

☮ ​முஹம்மது நபி(ஸல்) வாழ்க்கை வரலாறு​

         🕋 ​பகுதி-44🔰

🔶இணைவைத்தல், சிலை வணக்கம், மூட நம்பிக்கைகள், மூடப்பழக்க வழக்கங்கள் ஆகியவையே அரபிய தீபகற்பத்தில் பரவி இருந்தன.

🔶இது தவிர யூத, கிருஸ்துவ, மஜூஸி, ஸாபி போன்ற மதங்கள் அரபிய தீபகற்பத்தில் ஆங்காங்கே காணப்பட்டன.

🔶இரண்டு கட்டங்களில் யூதர்கள் அரபிய தீபகற்பத்தில் ஊடுருவினர்.

🔶1) ஃபலஸ்தீனத்தை ‘புக்து நஸ்ரு’ என்ற மன்னன் கி.மு. 587 ஆம் ஆண்டு கைப்பற்றி அங்கு வாழ்ந்த யூதர்களை நெருக்கடிக்குள்ளாக்கினான்.

🔶 யூதர்களின் நகரங்களை அழித்து அவர்களது வசிப்பிடங்களை நாசமாக்கினான்.

🔶மேலும், அவர்களில் அதிகமானோரை பாபில் நகருக்கு கைதிகளாக்கிக் கொண்டு சென்றான்.

🔶 இதனால் அவர்களில் ஒரு பிரிவினர் ஃபலஸ்தீனத்தை துறந்து ஹிஜாஸின் வட பகுதிகளில் குடியேறினர்.

🔶2) கி.பி. 70 ஆம் ஆண்டில் ‘டைடஸ்’ என்ற ரோமானிய மன்னன் ஃபலஸ்தீனை கைப்பற்றினான்.

🔶அவன் யூதர்களையும் அவர்களது வசிப்பிடங்களையும் அழித்தொழித்தான்.

🔶அதன் விளைவாக ஏராளமான யூதர்கள் ஹிஜாஸ் பகுதியிலுள்ள மதீனா, கைபர், தீமா ஆகிய நகரங்களில் குடியேறினர்.

🔶 அங்கு தங்களுக்கென சிறந்த வசிப்பிடங்களையும் கோட்டைக் கொத்தளங்களையும் ஏற்படுத்திக் கொண்டனர்.

🔶 இந்த யூதர்களால் அரபியர்களிடையே யூத மதம் பரவ ஆரம்பித்தது.

🔶 இஸ்லாமின் வருகைக்கு முன்பும் இஸ்லாமுடைய வருகையின் ஆரம்ப காலக்கட்டத்திலும் நடந்த அரசியல் சார்ந்த அனைத்து நிகழ்வுகளிலும் யூத மதத்திற்குக் குறிப்பிடத் தகுந்த முக்கியத்துவம் இருந்தது.

🔶இஸ்லாம் தோன்றியபோது இருபதுக்கும் மேற்பட்ட யூத கோத்திரங்கள் அரபிய தீபகற்பத்தில் இருந்தன.

🔶 அவற்றில் பிரபலமானவை கைபர், நழீர், முஸ்தலக், குரைளா, கைனுகாஃ ஆகிய கோத்திரங்களாகும். (ஸஹீஹுல் புகாரி, வஃபாவுல் வஃபா)

🔶‘துப்பான் அஸ்அத் அபூ கரப்’ என்பவனால் யூதமதம் யமன் நாட்டிலும் நுழைந்தது.

🔶இவன் மதீனாவின் மீது போர் தொடுத்தான்.

🔶பிறகு அங்கே, யூதர்கள் மூலம் யூத மதத்தைத் தழுவினான்.

🔶 குரைளா குடும்பத்தைச் சார்ந்த இரு யூத அறிஞர்களை அவன் தன்னுடன் யமன் நாட்டுக்கு அழைத்துச் சென்றான்.

🔶 அதிலிருந்து யமனில் யூதமதம் பரவியது. அபூ கரபுக்குப் பிறகு அவனது மகன் யூஸுப் தூ நுவாஸ் யமனின் அரசனானான்.

🔶 அவன் நஜ்ரான் பகுதியிலிருந்த கிறிஸ்துவர்கள் மீது படையெடுத்து அவர்களை யூத மதத்திற்கு மாறும்படி நிர்ப்பந்தித்தான்.

🔶 அவர்கள் மறுத்துவிடவே பெரும் அகழிகளைத் தோண்டி அதை நெருப்புக் குண்டமாக ஆக்கி அதில் ஆண், பெண், குழந்தைகள் என்ற எந்த வேறுபாடும் பார்க்காமல் அனைவரையும் தூ நவாஸ் வீசி எறிந்தான்.

🔶அதில் ஏறத்தாழ இருபதாயிரத்திலிருந்து நாற்பதாயிரம் கிறிஸ்துவர்கள் வரை கொல்லப்பட்டனர்.

🔶இந்நிகழ்ச்சி கி.பி. 523ம் ஆண்டு அக்டோபர் மாதம் நடைபெற்றது. (இப்னு ஹிஷாம்)

✳ ​தொட.....ரும்​....

(உதவி- அல் ரஹீக் அல் மக்தூம் கிதாப்)

🍃🍂🍃🍂🍃🍂🍃🍂🍃

🔮 இஸ்லாமிய மார்க்க செய்திகளை அழகிய முறையில் அறிய

♻ வாட்ஸ்அப்பில் எங்கள் செய்தியை பெற 👇

📲+919087971872

📲 +919994675186

​பேஸ்புக்கில் எம்மை தொடர​ 👇

https://m.facebook.com/Makkalmedia-1684365771847561/?ref=wizard

📮 பதிவு நாள்: 26 JUNE 2016

📢 ⓂAKKAL ⓂEDIA 📢

Part of 👇

📡 ECHO DAWAH FOUNDATION 📡

நபி(ஸல்) வாழ்க்கை வரலாறு​ ​பகுதி-43🔰

📢  ⓂAKKAL ⓂEDIA 📢

💠பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்💠

☮ ​முஹம்மது நபி(ஸல்) வாழ்க்கை வரலாறு​

         🕋 ​பகுதி-43🔰

🔶4) ஹரமின் வெளிப் பகுதியிலிருந்து வருபவர்கள் கஅபாவை வலம் வரும்போது ‘ஹும்ஸ்’கள் கொடுக்கும் ஆடைகளை அணிந்தே வலம் வருவதை ஆரம்பிக்க வேண்டும்.

🔶இதற்காக வெளியிலிருந்து வரும் ஆண்களுக்கு குறைஷி ஆண்களும், அதே போன்று பெண்களுக்குக் குறைஷிப் பெண்களும் ஆடைகளை நன்மையைக் கருதி இலவசமாகக் கொடுத்து வந்தனர்.

🔶ஆடைகள் கிடைக்காத பட்சத்தில் ஆண்கள் நிர்வாணமாக வலம் வருவார்கள்.

🔶 பெண்கள் தங்களது அனைத்து ஆடைகளையும் களைந்துவிட்டு முன்பகுதி திறந்துள்ள ஒரு மேல் சட்டையை மட்டும் அணிந்துகொண்டு வலம் வருவார்கள்.

🔶அப்போது அப்பெண்கள் இக்கவிதையைக் கூறுவார்கள்.

”இன்று (உடலின்) சில பகுதிகளோ அல்லது முழுப் பகுதியோ வெளிப்படுகிறது.

🔶அவற்றில் எது வெளிப்படுகிறதோ அதைக் காண்பது எவருக்கும் முறையற்றது.”

🔶இச்செயலைக் கண்டித்து அல்லாஹ் பின்வரும் வசனத்தை அருளினான்:

🔶ஆதமுடைய மக்களே! ஒவ்வொரு பள்ளிவாசல்களிலும் (ஆடைகளினால்) உங்களை அலங்கரித்துக் கொள்ளுங்கள். (அல்குர்ஆன் 7 : 31)

🔶அதேநேரத்தில் யாரேனும் ஓர்ஆண் அல்லது பெண் தங்களை மேன்மையானவர்களாக கருதி இரவல் ஆடை வாங்காமல் தாங்கள் கொண்டு வந்த ஆடையிலேயே வலம் வந்துவிட்டால் அது முடிந்தவுடன் அந்த ஆடையை எறிந்து விடுவார்கள்.

🔶 வேறு யாரும் அதனைப் பயன்படுத்த மாட்டார்கள். (ஸஹீஹுல் புகாரி, இப்னு ஹிஷாம்)

🔶5) அவர்கள் இஹ்ராம் அணிந்த பிறகு தங்களது வீட்டுக்கு செல்ல வேண்டிய அவசியம் ஏற்பட்டால் வீட்டு தலைவாசல் வழியாக நுழையாமல் பின்பக்கச் சுவரை உடைத்து வழி ஏற்படுத்திக் கொண்டு அதன் வழியாகவே போவார்கள், வருவார்கள்.

🔶 இந்த மூடத்தனமான செயலை மிகவும் உயர்ந்த நற்செயல் என அவர்கள் கருதினார்கள். இதை கண்டித்து பின்வரும் வசனத்தை அல்லாஹ் இறக்கினான்:

🔶(நம்பிக்கையாளர்களே! இஹ்ராம் கட்டிய) நீங்கள் (உங்களுடைய) வீடுகளுக்கு அவற்றின் பின்புறமாக வந்து விடுவதனால் நல்லவர்களாக ஆகிவிடமாட்டீர்கள்.

🔶 எனினும், எவர் அல்லாஹ்வுக்குப் பயந்து நடக்கின்றாரோ அவரே நல்லவர்.

🔶ஆதலால், நீங்கள் (உங்களுடைய) வீடுகளுக்கு அவற்றின் தலைவாசல்களின் வழியாக(வே) வாருங்கள்.

🔶 அல்லாஹ்வுக்குப் பயந்தும் நடந்து கொள்ளுங்கள். இதனால் நீங்கள் வெற்றியடையலாம். (அல்குர்ஆன் 2 : 189) (ஸஹீஹுல் புகாரி)

✳ ​தொட.....ரும்​....

(உதவி- அல் ரஹீக் அல் மக்தூம் கிதாப்)

🍃🍂🍃🍂🍃🍂🍃🍂🍃

🔮 இஸ்லாமிய மார்க்க செய்திகளை அழகிய முறையில் அறிய

♻ வாட்ஸ்அப்பில் எங்கள் செய்தியை பெற 👇

📲+919087971872

📲 +919994675186

​பேஸ்புக்கில் எம்மை தொடர​ 👇

https://m.facebook.com/Makkalmedia-1684365771847561/?ref=wizard

📮 பதிவு நாள்: 25 JUNE 2016

📢 ⓂAKKAL ⓂEDIA 📢

Part of 👇

📡 ECHO DAWAH FOUNDATION 📡

நபி(ஸல்) வாழ்க்கை வரலாறு​ ​பகுதி-42🔰

📢  ⓂAKKAL ⓂEDIA 📢

💠பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்💠

☮ ​முஹம்மது நபி(ஸல்) வாழ்க்கை வரலாறு​

         🕋 ​பகுதி-42🔰

🔶அறியாமைக்கால அரபியர்களிடம் இவ்வாறான மூட நம்பிக்கைகள் நிறைந்திருந்தபோதிலும் இப்றாஹீம் (அலை) அவர்களுடைய மார்க்கத்தின் சில நெறிமுறைகளும் அவர்களிடையே எஞ்சியிருந்தன.

🔶அந்த மார்க்கத்தை அவர்கள் முற்றிலுமாக புறக்கணித்து விடவில்லை.

🛢 எடுத்துக்காட்டாக, இறையில்லமான கஅபாவை கண்ணியப்படுத்துதல், அதனை வலம் வருவது, ஹஜ், உம்ரா செய்வது, அரஃபா முஜ்தலிஃபாவில் தங்குவது, அல்லாஹ்வுக்காக அறுத்துப் பலியிடுதல் போன்ற நற்செயல்கள் அவர்களிடம் நிலைபெற்றிருந்தன.

🔶 எனினும், அந்த நற்செயல்களில் பல மூட நம்பிக்கைகளையும் புகுத்தியிருந்தனர்.

🔶அந்த மூடநம்பிக்கைகளில் சில,

1) குறைஷிகள் இவ்வாறு கூறி வந்தனர்: நாங்கள் நபி இப்றாஹீம் (அலை) அவர்களின் சந்ததிகள்;

🔶 புனித மக்காவின் பூர்வகுடிகள்; சங்கைமிகு கஅபாவின் நிர்வாகிகள். ஆகவே ”எங்களைப் போன்ற அந்தஸ்தோ உரிமைகளோ வேறு அரபியர் எவருக்கும் கிடையாது” என்றனர்.

🔶 அவர்கள் தங்களுக்கு ‘ஹும்ஸ்’ எனப் பெயரிட்டுக் கொண்டனர். ஹஜ் காலங்களில் நாங்கள் ஹரமின் எல்லையை விட்டு வெளியேறி ஹில் (ஹரம் அல்லாத) பகுதிகளுக்குச் செல்லக் கூடாது என்று கூறி அவர்கள் ஹஜ் காலத்தில் அரஃபாவில் தங்க மாட்டார்கள்.

🔶 முஜ்தலிஃபாவில் இருந்தே திரும்பி விடுவார்கள்.

🔶இதனைத் தடை செய்து அல்லாஹ் பின்வரும் குர்ஆன் வசனத்தை இறக்கினான்,

🔶பின்னர் மனிதர்கள் திரும்புகின்றந் இடத்திலிருந்தே நீங்களும் திரும்பிவிடுங்கள். (அல்குர்ஆன் 2 : 199) (ஸஹீஹுல் புகாரி, இப்னு ஹிஷாம்)

🔶2) அவர்கள் கூறினார்கள்: ஹும்ஸ் ஆகிய எங்களுக்குப் பாலாடைக் கட்டி செய்வதும் நெய் உருக்குவதும் இஹ்ராமுடைய நிலையில் தடை செய்யப்பட்டது.

🔶 மேலும், இஹ்ராமில் இருக்கும் போது கம்பளிக் கூடாரங்களில் நுழைய மாட்டோம்.

🔶தோலினால் ஆன கூடாரங்களைத் தவிர மற்ற கூடாரங்களில் நிழலுக்காக ஒதுங்கமாட்டோம். (இப்னு ஹிஷாம்)

🔶3) ஹரமுக்கு வெளியிலிருந்து ஹஜ் மற்றும் உம்ராவுக்கு வருபவர்கள் தங்களது பகுதியிலிருந்து கொண்டு வந்த உணவு மற்றும் பானங்களை ஹரமுக்குள் உண்ணவோ பருகவோ கூடாது.

🔶ஹரமின் பகுதியில் கிடைப்பதையே உண்ண வேண்டும். (இப்னு ஹிஷாம்)

✳ ​தொட.....ரும்​....

(உதவி- அல் ரஹீக் அல் மக்தூம் கிதாப்)

🍃🍂🍃🍂🍃🍂🍃🍂🍃

🔮 இஸ்லாமிய மார்க்க செய்திகளை அழகிய முறையில் அறிய

♻ வாட்ஸ்அப்பில் எங்கள் செய்தியை பெற 👇

📲+919087971872

📲 +919994675186

​பேஸ்புக்கில் எம்மை தொடர​ 👇

https://m.facebook.com/Makkalmedia-1684365771847561/?ref=wizard

📮 பதிவு நாள்: 24 JUNE 2016

📢 ⓂAKKAL ⓂEDIA 📢

Part of 👇

📡 ECHO DAWAH FOUNDATION 📡

இஸ்லாமிய போர்வையில் மனஇச்சை 8☠

📢  ⓂAKKAL ⓂEDIA 📢

💠பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்💠

☠இஸ்லாமிய
போர்வையில்
மனஇச்சை 8☠

💐 *அன்பான சகோதரர்களே*💐

🍁முந்திய பதிவில் ஒரு முக்கியமான அடிப்படையை நான் விளக்கியிருந்தோம்..

🌴அதாவது குர்ஆனிற்கு முரண்படுகிற ஒரு மோசமான ஹதீஸை யூதர்களிடமிருந்து  பதிவு செய்தது ஹதீஸ்கலை வல்லுநர்கள்தான் என்று அந்த வழிகெட்ட கூட்டம் ஒரு அபாண்ட பழியை முஹத்திஸீன்கள் மீது சுமத்தியதை சுட்டிக்காட்டி
யிருந்தோம்..🌴

🐒 *இந்த வழிகேடர்கள் தங்களின் வார்த்தையில் எவ்வளவு மோசடிக்காரர்கள் என்பதை மற்றுமொரு கேள்வியின் மூலம் நீங்கள் தெள்ளத் தெளிவாக புரிந்து கொள்ளலாம்...*

🗣 *நீங்கள் இப்படிக் கேளுங்கள்...*🗣

💥 ~இந்த ஆதாரப்பூர்வமான ஹதீஸ் குர்ஆனிற்கு முரன்படுகிறது என்று நீங்கள் கூறுகிறீர்கள்..~

இன்னும் புஹாரி போன்ற,...

🌷ஸஹீஹான ஹதீஸ்கள் மட்டுமே இடம் பெற்றிருக்கும் புத்தகதில் உள்ள ஹதீஸையும் ஒரு யூதன் இட்டுக்கட்டி
யிருக்கலாம்...
என்கிறீர்கள்....

 👆🏽இதற்கு வலுசேர்க்கும் வண்ணமாக உங்களின் அற்பமான ஒரு யூகத்தை ...
அதாவது புஹாரியும் மனிதர்தானே அவரும் தவறிழைத்  திருக்கலாம் என்றும் அவர்மீதும் பழிசுமத்துகிறீர்கள்..

⁉ *அப்படியென்றால்*

💥புஹாரியில் இந்த இஸ்லாத்தை தகர்க்கும் ஆதாரப்பூர்வமான ஹதீஸை யார் இட்டுக்கட்டியது என்று கேளுங்கள்...❓❓❓

⁉புஹாரியில் நீங்கள் கூறும் ஹதீஸ்கள் அனைத்தும் நபி(ஸல்)அவர்கள் வரைக்கும் சங்கிலித்தொடராக அறிவிப்பாளர் பட்டியலும் இருக்கிறது... அவர்களைப்பற்றிய
வாழ்க்கை வரலாறும் இருக்கிறது...

🗣 *~இப்பொழுது சொல்லுங்கள் இவர்களில் யார் யூதன்~*
❓❓❓❓❓❓❓

🕵கியாமத் வரைக்கும் அவர்களால் தங்களின் கேடுகெட்ட யூகத்திற்கு பதிலளிக்க முடியாது..❌❌❌❌

💐 *அன்பான சகோதரர்களே*💐

💐நான் ஒன்றை மட்டும் எப்போதும் உங்களுக்கு நினைவூட்டிக் கொள்கிறேன்...💐

👍 *நிச்யமாக ஆதாரப்பூர்வமான ஹதீஸ்கள் குர்ஆனிற்கு  ஒருபோதும் முரண்படாது....*👍

☠ *தனது மனோ இச்சைக்கு மார்க்கத்தை வலைக்க வேண்டும் என்று எண்ணுபவர்களின் புத்திக்கு வேண்டுமானால் முரண்படலாம்...*☠

🌴இன் ஷா அல்லாஹ் தொடரும்🌴

✳✳✳✳✳✳✳✳✳✳

🔮 இஸ்லாமிய மார்க்க செய்திகளை அழகிய முறையில் அறிய

♻ வாட்ஸ்அப்பில் எங்கள் செய்தியை பெற 👇

📲+919087971872

📲 +919994675186

*​பேஸ்புக்கில் எம்மை தொடர​* 👇

https://m.facebook.com/Makkalmedia-1684365771847561/?ref=wizard

📮 பதிவு நாள்: 23 JUNE 2016

📢 ⓂAKKAL ⓂEDIA 📢

Part of 👇

📡 ECHO DAWAH FOUNDATION 📡

நபி(ஸல்) வாழ்க்கை வரலாறு​ ​பகுதி-41🔰

📢  ⓂAKKAL ⓂEDIA 📢

💠பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்💠

☮ ​முஹம்மது நபி(ஸல்) வாழ்க்கை வரலாறு​

         🕋 ​பகுதி-41🔰

🎾அர்ராஃப்:

🔶தன்னிடம் வருபவர்களின் சொல், செயல் நிலைகளை ஆராய்ந்து செய்திகளைக் கூறுபவன்.

🛢 எடுத்துக்காட்டாக திருடுபோன பொருள்கள் எங்கிருக்கிறது? திருடியவன் யார்? காணாமல் போன பொருள் எங்கிருக்கிறது? போன்ற விபரங்கள் அனைத்தையும் தன்னால் அறிந்து கொள்ளமுடியும் என்று கூறுபவனைப் போல!

🎾முநஜ்ஜிம்:

🔶நட்சத்திரம் மற்றும் கோள்களின் சுழற்சியைக் கவனித்து உலகின் நிலைமைகளையும் வருங்காலத்தில் நடக்கவிருக்கும் நிகழ்வுகளையும் தன்னால் அறியமுடியும் எனக் கூறுபவன்.

🔶இந்த முநஜ்ஜிம்களின் கூற்றை அவர்கள் நம்புவது உண்மையில் நட்சத்திரத்தை நம்புவதாகும்.

🔶அவர்கள் நட்சத்திரங்களின் மீது நம்பிக்கை கொண்டிருந்ததின் காரணமாக, மழை பொழிந்தால் அம்மழை பருவ நட்சத்திரத்தின் காரணமாகவே பொழிந்தது என்று கூறுபவர்களாக இருந்தனர். (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)

🔶அவர்களிடையே துற்குறி மற்றும் சகுனம் பார்க்கும் வழக்கம் நடைமுறையில் இருந்தது.

🔶அவர்களுடைய வழக்கத்தில் ஒன்று, ஏதாவதொரு காரியத்தை செய்ய நினைத்தால் ஒரு பறவையை அல்லது மானை விரட்டுவார்கள்.

🔶அது வலப்புறமாகச் சென்றால் அதை நற்சகுனமாகக் கருதி தான் விரும்பியிருந்த காரியத்தை செயல்படுத்துவார்கள்.

🔶 இடப்புறமாகச் சென்றால் அதை அபசகுணமாகக் கருதி செயல்படுத்த மாட்டார்கள்.

🔶இவ்வாறே அவர்கள் சென்று கொண்டிருக்கும் பாதையில் ஏதேனும் பிராணிகளோ, பறவைகளோ குறுக்கிட்டால் அதிலும் சகுனம் பார்ப்பார்கள்.

🔶அவ்வாறே அவர்கள் முயலின் கெண்டைக்கால் பகுதியை தங்களது இல்லங்களில் தொங்க விடுவார்கள். (நம் நாட்டில் நரிப்பல், புலிப்பல் மயில் இறகு போன்றவற்றை பயன்படுத்துவதுபோல) சில நாள்கள், மாதங்கள், பிராணிகள், வீடுகள், பெண்கள் ஆகியவற்றிலும் அபசகுனம் பார்த்தனர்.

🔶 மேலும், தொற்று நோய் இருப்பதாகவும் நம்பினர்.

🔶 மேலும் ‘ஹாம்மா’ என்பதும் அவர்களது நம்பிக்கையாக இருந்தது. அதாவது, ”ஒருவன் கொலை செய்யப்பட்டால் கொலையாளியிடம் பழி தீர்க்கப்படாதவரை அவனது ஆன்மா சாந்தியடையாமல் வீடுகளின் மேல் ஆந்தை உருவில் பறந்துகொண்டு ”தாகம்! தாகம்! என் தாகத்தைத் தணியுங்கள்! என் தாகத்தைத் தணியுங்கள்” என கூச்சலிட்டுக் கொண்டிருக்கும்.

🔶 கொலையாளியை பழிவாங்கினால் மட்டுமே ஆன்மா சாந்தியடையும்” எனவும் நம்பிக்கை கொண்டிருந்தனர். (ஸஹீஹுல் புகாரி)

✳ ​தொட.....ரும்​....

(உதவி- அல் ரஹீக் அல் மக்தூம் கிதாப்)

🍃🍂🍃🍂🍃🍂🍃🍂🍃

🔮 இஸ்லாமிய மார்க்க செய்திகளை அழகிய முறையில் அறிய

♻ வாட்ஸ்அப்பில் எங்கள் செய்தியை பெற 👇

📲+919087971872

📲 +919994675186

​பேஸ்புக்கில் எம்மை தொடர​ 👇

https://m.facebook.com/Makkalmedia-1684365771847561/?ref=wizard

📮 பதிவு நாள்: 23 JUNE 2016

📢 ⓂAKKAL ⓂEDIA 📢

Part of 👇

📡 ECHO DAWAH FOUNDATION 📡