🤑 பேய் பிசாசு பொய்யே ➖தொடர் 1/6
*ⓂAKKAL ⓂEDIA*
1⃣ *இறந்தவர்கள் ஆவி உலகிற்கு திரும்ப வராது*
💯 *மனித வாழ்வில் அனைத்துப் பிரச்சனைகளுக்கும் தெளிவான தீர்வை அளிக்கும் வாழ்க்கை நெறியே இஸ்லாம். இதனை உணராத காரணத்தினால் தான் இன்று முஸ்லிம் சமுதாயம் தடம் புரண்டு சென்று கொண்டிருக்கிறது.*
🤔 *மனிதன் மரணித்த பிறகு அவனது உயிர் (ஆவி) எங்கே செல்கிறது? என்ன செய்கிறது? என்ற வினாக்களுக்கு விடை கண்டால் பேய்கள் உண்டா? என்ற வினாவுக்கும் விடை கிடைக்கும். ஏனெனில் இறந்தவர்களின் ஆவிகள் இவ்வுலகுக்குத் திரும்பி வந்து சுற்றிக் கொண்டிருக்கின்றன என்ற நம்பிக்கை தான் பேய்களைப் பற்றிய நம்பிக்கையின் அடிப்படை.*
❓ *இறந்தவர்களது ஆவிகளின் நிலை என்ன? என்பதை முதலில் காண்போம்*
📖 *உயிர்களை அவை மரணிக்கும் நேரத்திலும், மரணிக்காதவற்றை அவற்றின் உறக்கத்திலும் அல்லாஹ் கைப்பற்றுகிறான். எதற்கு மரணத்தை விதித்து விட்டானோ அதைத் தனது கைவசத்தில் வைத்துக் கொண்டு மற்றதைக் குறிப்பிட்ட காலம் வரை விட்டு விடுகிறான். சிந்திக்கின்ற மக்களுக்கு இதில் பல சான்றுகள் உள்ளன.*
திருக்குர்ஆன் 39:42
✍🏼பேய், பிசாசுகள் கிடையாது என்பதற்கு திருக்குர்ஆனின் இந்த ஒரு வசனமே போதிய சான்றாக அமைந்துள்ளதை சிந்திப்பவர்களால் அறிய முடியும். இறந்து விட்ட மனிதர்களின் ஆவிகளைத் தனது கைவசத்தில் வைத்திருப்பதாக இவ்வசனத்தில் இறைவன் குறிப்பிடுகிறான்.
✍🏼 ஆவிகள் அனைத்தும் இறைவனது கைவசத்தில் இருப்பதாக இறைவன் தெளிவாக அறிவித்த பின்னர் அவனது கட்டுப்பாட்டை உடைத்தெறிந்து விட்டு ஆவிகள் தப்பித்து வந்து விடுகின்றன என்று ஒரு முஸ்லிம் நம்ப முடியாது.
😱 *பேய்கள் இருப்பதாக நம்புபவர்கள் இறைவனது இந்த வசனத்தை மறுத்தவர்களாவார்கள்; அல்லது இறைவனது கட்டுப்பாடு வலுவற்றது என்பதைச் சொல்லாமல் சொல்கிறார்கள். இரண்டில் எதை ஏற்றாலும் அவர்கள் இஸ்லாமிய வட்டத்திலிருந்து தாங்களாகவே வெளியேறி விடுகின்றனர்.*
✍🏼நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கற்றுத் தந்த ஒரு பிரார்த்தனை இந்த வசனத்திற்கு விளக்கமாக அமைந்துள்ளதைக் காணுங்கள்.
🤲🏻 *உங்களில் யாரேனும் படுக்கைக்குச் சென்றால், ‘என் இறைவா! உன் திருப்பெயராலேயே திரும்பவும் எழுவேன். (உறக்கத்தில்) எனது உயிரை நீ கைப்பற்றிக் கொண்டால் அற்கு நீ மன்னித்து அருள் புரிந்திடு! அதை நீ திரும்ப அனுப்பினால் உனது நல்லடியார்களை நீ பாதுகாப்பது போல் எனது உயிரையும் நீ பாதுகாத்து விடு’ என்று கூறட்டும் என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளனர்.*
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)
நூல்கள் : புகாரி 6320, 7393 முஸ்லிம் 5257
💯 *மனிதன் தூங்கும் போது தற்காலிகமாகவும், மரணத்தின் போது நிரந்தரமாகவும் மனித உயிர்களை அல்லாஹ் தன் கைவசத்தில் எடுத்துக் கொள்கிறான் என்று இந்த நபிமொழியும் தெளிவாக்க் கூறுகின்றது.*
திருக்குர்ஆனின் 39:42 வசனம் கூறும் அதே கருத்தை இந்த நபிமொழியும் கூறுகின்றது.
📖 முடிவில் அவர்களில் யாருக்கேனும் மரணம் வரும்போது "என் இறைவா! நான் விட்டு வந்ததில் நல்லறம் செய்வதற்காக என்னைத் திருப்பி அனுப்புங்கள்!'' என்று கூறுவான். அவ்வாறில்லை! இது (வாய்) வார்த்தை தான். அவன் அதைக் கூறுகிறான். அவர்கள் உயிர்ப்பிக்கப்படும் நாள் வரை அவர்களுக்குப் பின்னால் திரை உள்ளது.
திருக்குர்ஆன் 23:99,100
💯 *அல்லாஹ் மரணத்திற்கு பிறகு எந்த ஆன்மாவையும் உலகிற்கு அனுப்ப மாட்டேன் என்று கூறி விட்டான்.ஏன் நல்லறங்கள் செய்வதற்காகக் கூட மனிதன் திரும்ப அனுப்பப்படுவதில்லை என்றால் பிறரைப் பயமுறுத்தவும், பிறருக்குத் தொல்லை தரவும், பிறர் மீது மேலாடி அமைதியின்மையை ஏற்படுத்தவும் இறந்தவர்களின் உயிர்கள் எப்படி உலகுக்குத் திரும்ப இயலும்❓*
*...தொடரும்...*
〰⚜〰⚜〰⚜〰⚜
🔮 *மார்க்கத்தை தெளிவான முறையிலும் ஆதாரத்துடனும் கற்றுக்கொள்ள #_மக்கள்_மீடியா_Facebook_பக்கத்தை_like_செய்து_கொள்ளுங்கள்*
*https://m.facebook.com/Makkalmedia-1684365771847561/?ref=wizard*
*குழுமத்தில் இணைய விரும்பும் சகோதரர்கள் கீழ் உள்ள link மூலமாக இணைந்து கொள்ளவும்*👇🏻👇🏻
https://chat.whatsapp.com/8SnREh4Lh0CFBJo9xjL8O6
*ⓂAKKAL ⓂEDIA*
Part of....👇🏽👇🏽
*ECHO DAWA FOUNDATION*