💠பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்💠
கர்பலா வரலாற்று பின்னணி என்ன_பாகம்_2
💥அன்றய காலத்தில் அழைக்கப்பட்ட ஷீஅது அலி என்பதற்கும் இன்றைய ஷீஆ மதத்திற்குமிடையில் எவ்வித தொடர்பும் இல்லை என்பது கவனிக்கத்தக்கது கலீபா அவர்களுக்கு கட்டுப்பட வேண்டும் என்ற இஸ்லாத்தின் போதனைக்கமைய அலி (ரலி) அவர்களின் அரசியல் சார்ந்த நகர்வுகளுக்கு சார்பாக இருந்தார்களே தவிர இன்றைய நவீன ஷீஆ மதத்திற்கும் அவர்களுக்குமிடையில் எள்ளளவும் தொடர்பில்லை என்பதை புரிந்துகொள்ள வேண்டும்.
💥 அலி (ரலி) அவர்கள் ஸஹீதாக்கப்பட்ட பின்பு ஆட்சி பொறுப்பை அவரின் புதல்வர் ஹஸன் (ரலி) ஏறறார்கள் இஸ்லாமிய உம்மத்தை ஒன்றிணைக்க வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தில் தனது பதவியை விட்டுக் கொடுத்து முஆவியா (ரலி) அவர்களிடம் ஆட்சிப் பொறுப்பை கையளித்தார்கள்.
💥 முஆவியா (ரலி) அவர்களின் ஆட்சிக்கு பின்னர் அவரது மகன் யசீத் பின் முஆவியா (ரஹ்) ஆரசப் பீடம் ஏறினார்.
💥யசீத் பின் முஆவியா (ரஹ்) அவர்களின் ஆட்சிக்காலத்தில்தான் கர்பலா எனும் இடத்தில் ஹீஸைன் (ரலி) அவர்கள் கொலை செய்யப்படுகிறார்கள்.
💥 யசீத் (ரஹ்) ஆட்சிப் பொறுப்பை ஏற்றவுடன் ஹீஸைன் (ரலி) மற்றும் சிலர் “பைஅத்” செய்ய மறுக்கிறார்கள்.
👆🏻இந்நிலையில் ஈராக் வாசிகள் தொடர்ந்தேர்ச்சியாக கடிதங்கள் அனுப்புகிறார்கள் தாங்களை அங்கு வரும் படியும் தங்களுக்கு தலைமை பொறுப்பை ஏற்குமாறும் கூறினார்கள் ஈராக் வாசிகளின் உண்மை நிலையை முஸ்லிம் பின் அகீல் என்பவரிடம் உறுதிப்படுத்திக் கொண்ட பின் ஈராக்கை நோக்கி தனது பயணத்தை ஆரம்பித்தார்கள்.
👆🏻 இதன் போது மூத்த நபித்தோழர்கள் குறிப்பாக இப்னு அப்பாஸ், இப்னு உமர் போன்றோர் ஹீஸைன் (ரலி) அவர்களை ஈராக் போவதை தடுக்க முயற்சித்தார்கள் இறுதியில் அனைத்தும் தோல்வியடையவே பயணம் தொடர்ந்தது.
👆🏻 வழியில் கர்பலா எனும் இடத்தை ஹீஸைன் (ரலி) அடைந்தார்கள் அங்கே யசீதின் படைவசம் சிக்கிட சில நிகழ்வுகளுக்கு பின் ஹீஸைன் (ரலி) அவர்கள் ஸஹீதாக்கப்படுகின்றார்கள்.
💥ஹீஸைன் (ரலி) அவர்களுக்கு நிகழ்ந்த இத்துயர சம்பவத்தை ஞாபகப்படுத்தும் முகமாக ஷீஆக்கள் மேற்கொள்ளும் சடங்குதான் இந்த கர்பலா நிகழ்வு.
👆🏻 இதில் நடக்கும் அசிங்கமான சடங்குகள் வார்த்தைகளால் வர்ணிக்க முடியாதளவு காணப்படுகின்றன.
💥கர்பலா தினத்தன்று ஷீயா மத அறிஞர் மிம்பர் மேடை ஏரி சிறப்புறையும், குத்பாவும் நிகழ்த்துவதுடன் இவ்வுரைகள் ஏனைய குத்பாக்களைப் பேன்றல்லாது உரத்த சப்தத்துடன் கத்துவதுடன், இறம் பாடும் தொணியில் கர்பலா நிகழ்வை கவிதை வடிவில் பாடுவார்கள்.
💥ஒவ்வெரு ஷீயா மதத்தினரும் வாலினால், அல்லது கூரிய ஆயுதத்தினால் தனது தலையிலிருந்து இரத்தத்தை ஓட்டி ஹீஸைன் (ரலி) அவர்களை ஞாபகப்படுத்திக்கொள்வார்கள்
அஹ்லுல் பைத், மற்றும் ஹீஸைன் (ரலி) அவர்கள் பட்ட கஷ்டத்தை உணரும் விதமாக தீ மிதித்து கொள்வார்கள். இதன் பின் “லைலதுல் மஃசூஸ்” எனும் களியாட்டம் இடம் பெரும்.
💥அதாவது ஆண்களும் பெண்களுமாக ஓர் அறையில் ஒன்று சேர்ந்து, விளக்குகள் படிப்படியாக அணைக்கப்பட்டு, ஆடைகள் கழைந்து கூட்டு வழிபாடு நிகழ்த்துதல் என்பது இதன் பெருளாகும்.
💥 கர்பலா எனும் இடத்திலிருந்து ஹீஸைன் (ரலி) அவர்களின் அடக்கஸ்தளத்திற்கு நெற்றி பூமியை முத்தமிட்ட படி நடப்பவணி மேற்கொள்வார்கள்.
👆🏻 இவ்வாறு இஸ்லாமிய அடிப்படை நம்பிக்கைகளை தகர்க்கக்கூடிய பல்வேறு அனாச்சாரங்களை கைகொள்வார்கள்.
💥இறைவனை ஒருமுகப்படுத்தி அவனுக்கு இணையேதும் கூடாது என்று கூறும் இஸ்லாத்தில் தனிமனித வழிபாடு எப்படி சாத்தியமாகும் ஷீஆக்களால் உருவாக்கப்பட்ட அது முஸ்லிம்களின் ஒரு பண்டிகையாகவே பல முஸ்லிம்களும் நினைத்துக் கொண்டிருக்கின்றனர்.
👆🏻இப்படி ஹுஸைன் (ரலி) இறந்ததை பெரும் துக்க தினமாக அனுஷ்டிக்க மார்க்கத்தில் எந்த ஆதாரமும் இல்லை.
💥 நபி (ஸல்) அவர்கள் இறந்த பிறகு ஒன்றன் பின் ஒன்றாக நான்கு கலீபாக்கள் ஆட்சி நடத்தினார்கள் அவர்கள் யாரும் நபி (ஸல்) அவர்களின் இறந்த தினத்தை துக்க தினமாக அனுஷ்டிக்கவில்லை எனும் போது அவர்களது பேரர் என்ற காரணத்தினால் அவரை கடவுள் அந்தஸ்திற்கு உயர்த்துவது வரம்பு மீறிய செயலாகும்.
💥 நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் ஹஸைன், ஹுஸைன் இருவரும் உலகின் இரு நறுமணம் மிக்க மலர்கள். (ஆதாரம் புகாரி)
👆🏻 இப்படிப் பல சிறப்புகள் அவ்விருவருக்கும் உண்டு என்பதில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை ஆனால் இவர்கள் பெயரால் நடத்தப்படும் பித்அத்துக்களை ஷிர்க்களை இஸ்லாம் ஒருபோதும் அனுமதிக்கவில்லை.
💥 யா அலீ!, யா ஹுஸைன்! என்று அவர்கள் இறந்த தினத்தில் மார்பில் அடித்துக்கொண்டு ஒப்பாரி வைப்பது பக்தி எனும் பெயரில் தன் உடம்பில் காயங்களை ஏற்படுத்திக் கொள்வது
💥ஒப்பாரி வைப்பது பக்தி எனும் பெயரில் தன் உடம்பில் காயங்களை ஏற்படுத்திக் கொள்வது போன்றவற்றை இஸ்லாம் வன்மையாகக் கண்டிக்கிறது.
💥நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் “(மரணித்தவருக்காக ஒப்பாரி வைத்து அழுது) தன் கன்னத்தில் அடித்துக் கொண்டோரும் சட்டையைக் கிழித்துக் கொண்டவரும், அறியாமைக்கால அழைப்பைக் கொண்டு அழைத்தவரும் நம்மைச் சார்ந்தவரல்ல.”
(அறிவிப்பாளர் : இப்னு மஸ்வூது (ரலி), ஆதாரம் : புகாரி, முஸ்லிம்)
💥மேலும் அல்லாஹ்வும் அவன் தூதரும் காட்டித் தராத வழியில் ஹுஸைன் (ரலி) அவர்களின் மறைவிற்காக நோன்பு வைப்பது அத்தினத்தை துக்க தினமாக அனுஷ்டிப்பது நேர்ச்சை செய்வது, பாத்திஹா ஓதிக் கொளுக்கட்டை போன்ற பதார்த்தங்களைப் பரிமாறுவது போன்ற அனாச்சாரங்களை முஸ்லிம்கள் களைவதோடு அறியாத முஸ்லிம்களையும் எடுத்துக் கூறித் தடுக்க வேண்டும்.
👍அன்பிற்குறிய முஸ்லிம்களே! நமது இறைவன் ஒருவன்தான் அவனுக்கு எந்தவகையிலும் நாம் இணைவைக்கக் கூடாது.
💥நபி (ஸல்) அவர்களின் மரணத்தோடு தூதுத்துவம் நிறைவுற்றுவிட்டது அதற்குப்பின்னால் ஏற்படுத்தப்பட்ட அனைத்தும் பித்அத்துக்கள் ஆகும் நபி (ஸல்) அவர்கள் எந்த காரணத்திற்காக நோன்பு நோற்றார்களோ அதே காரணத்திற்காக நாமும் நோன்பு நோற்று அதற்குரிய முழு நன்மைகளையும் அடைய அல்லாஹ் அருள் செய்வானாக!!!
➖ ✨ ➖ ✨ ➖ ✨ ➖ ✨ ➖
🔮 *மார்க்கத்தை தெளிவான முறையிலும் ஆதாரத்துடனும் கற்றுக்கொள்ள #_மக்கள்_மீடியா_Facebook_பக்கத்தை_like_செய்து_கொள்ளுங்கள்*
*https://m.facebook.com/Makkalmedia-1684365771847561/?ref=wizard*
*குழுமத்தில் இணைய விரும்பும் சகோதரர்கள் கீழ் உள்ள link மூலமாக இணைந்து கொள்ளவும்*👇🏻👇🏻
https://chat.whatsapp.com/1rx4vEznirX5J1qRVwc902
*share to all.........*
*ⓂAKKAL ⓂEDIA*
Part of....👇🏽👇🏽
*ECHO DAWA FOUNDATION*
No comments:
Post a Comment