💠பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்💠
கர்பலா வரலாற்று பின்னனி
💥தனி மனித வழிபாட்டின் மொத்த வடிவமாக ஷீயாயிஷம் உள்ளது.
*அலி (ரலி) அவர்கள் மீதான வழிபாட்டின் மீதுதான் இந்த மதமே நிறுவப்பட்டுள்ளது.*
💥அலி (ரலி) அவர்களையும் தமது இமாம்களையும் எல்லை மீறிப் புகழ்வதுதான் இவர்களின் மதத்தின் சாரமாக உள்ளது இவர்களில் சிலர் அலி (ரலி) அவர்களை அல்லாஹ்வின் இடத்திற்கே உயர்த்தினர்.
👆🏻 இவர்களது ஒரு பாடலில், *லாஇலாஹ இல்லஸ் ஸஹாரா’ பாத்திமா தவிர வேறு இறைவன் இல்லை என்றும் இடம்பெற்றுள்ளது.*
💥 மேலும் இந்த மதத்தினர் தமது பன்னிரெண்டு இமாம்களும் மறைவானவற்றை அறிந்தவர்கள் என்றும், பாவங்களை விட்டும் பாதுகாக்கப்பட்ட *மஃசூம்கள் என்றும் நம்புகின்றனர்.*
💥 தமது இமாம்களுக்கு முர்ஸலான தூதர்களோ, சங்கையான மலக்குகளோ அடைய முடியாத உயர்ந்த அந்தஸ்து உள்ளதாக நம்புகின்றனர்.
🖋முஸ்லிம் சமூகத்திற்குள் கப்று வழிபாட்டை நுழைவித்ததில் இவர்களுக்கு அதிக பங்கு உள்ளது.
🖋 ஹஜ்ஜிற்கு வந்தாலும் இவர்கள் கப்றுகளுக்குத்தான் முக்கியத்துவம் கொடுத்துக் கொண்டிருப்பதைக் காணலாம்.
💥 ஹுஸைன் (ரலி) அவர்களது கப்ரை ஸியாரத் செய்பவர் அல்லாஹ்வை அர்ஷில் சந்தித்தவர் போலாவார் என்று இன்றுவரையும் பிரசாரம் செய்கின்றனர் கப்றுக்குச் செல்லும்போது தவழ்ந்தும் இழுகியும் செல்லும் காட்சிகளை இன்றும் இணையத்தளங்களில் காணலாம்.
💥 *இவர்களிடம் கர்பலா பூமி* மக்கா, மதீனா, பலஸ்தீனத்தை விட இவர்களிடம் புனிதம் பெற்றதாகும் கர்பலா யுத்தம் நடந்த தினத்தை துக்க தினமாக இன்றும் அனுஷ்டிக்கின்றனர்.
💥 தமது உடல்களில் காயத்தை ஏற்படுத்திக் கொள்கின்றனர். ‘யா ஹுஸைன்! யா ஹுஸைன்!’ என்று ஒப்பாரி வைக்கின்றனர்.
💥 *இஸ்லாமிய வரலாற்றில் கர்பலா எனும் தினம் எங்கும் இல்லை அது புதிதாக ஷீஆ மதத்தினரால் உருவாக்கப்பட்டது.*
💥 கர்பலா எனும் இடத்தைத்தான் காண முடிகிறது மூன்றாம் கலீபா உஸ்மான் (ரழி) அவர்களிள் ஆட்சிக்காலத்தில் ஏற்பட்ட அரசியல் குழப்ப நிலையில் இருந்து கர்பலாவின் பின்னணி துவங்குகிறது.
💥 நான்காம் கலீபாவாக ஆட்சிப் பொறுப்பை ஏற்ற அலி (ரழி) அவர்கள் தமது ஆட்சிக்காலத்தில் பல சவால்களை எதிர்கொண்டார்கள் அதில் மிக முக்கியமானது *உஸ்மான் (ரழி) அவர்களை படுகொலை செயதவர்களை கண்டு பிடித்து ஷரீஆத்தின் தீர்ப்பை நடைமுறைப்படுத்துவதாகும்.*
👆🏻 இவ்விடயம் தொடர்பில் கருத்து முரண்பாடு ஏற்பட இரு குழுக்களாக முஸ்லிம்கள் பிரிகின்றனர் இதன் ஒரு கட்டமாக கலீபா அலி (ரழி) அவர்களுக்கும் ஆயிஷா (ரழி) அவர்களுக்குமிடையில் நடைபெற்ற ஜமல் யுத்தம் காணப்படுகிறது.
💥பின்பு கலீபா அவர்களுக்கும் முஆவியா (ரழி) அவர்களுக்குமிடையில் நடைபெற்ற “சிப்பீன்” யுத்தம் என்பன கர்பலா நிகழ்வின் வழிகோலிய காரணிகளாக இருந்ததன.
👆🏻 இவ்யுத்தம் இடையில் நிறுத்தப்படுகிறது இதன் விளைவாக அலி (ரலி) அவர்கள் தரப்பு இரண்டாக பிளவு படுகிறது.
இந்நிமிடத்தில் இருந்து அலி (ரிலி) அவர்களின் படையிலிருந்து வெளியேரிச் செய்றவர்கள் “காவாரிஜ்” என்றும், சேர்ந்து இருந்தவர்கள் “ஷீஅது அலி” என்றும் இரு பிரிவுகளாக பிரிந்தனர்.
💥💥தொடரும்💥💥
➖ ✨ ➖ ✨ ➖ ✨ ➖ ✨ ➖
🔮 *மார்க்கத்தை தெளிவான முறையிலும் ஆதாரத்துடனும் கற்றுக்கொள்ள #_மக்கள்_மீடியா_Facebook_பக்கத்தை_like_செய்து_கொள்ளுங்கள்*
*https://m.facebook.com/Makkalmedia-1684365771847561/?ref=wizard*
*குழுமத்தில் இணைய விரும்பும் சகோதரர்கள் கீழ் உள்ள link மூலமாக இணைந்து கொள்ளவும்*👇🏻👇🏻
https://chat.whatsapp.com/1rx4vEznirX5J1qRVwc902
*share to all.........*
*ⓂAKKAL ⓂEDIA*
Part of....👇🏽👇🏽
*ECHO DAWA FOUNDATION*
No comments:
Post a Comment