🧠 *அல்லாஹ்வை நாம் நேசிக்கிறோமா பாகம்2⃣❓*🧠
*ⓂAKKAL ⓂEDIA*
🗣 மூன்று தன்மைகள் அமையப் பெறாத எவரும் இறை நம்பிக்கையின் சுவையை உணர மாட்டார் அவை👇🏻
1⃣ஒருவரை நேசிப்பதானால் அல்லாஹ்விற்காகவே நேசிப்பது.
2⃣இறை மறுப்பிலிருந்து அல்லாஹ் காப்பாற்றிய பிறகு மீண்டும் அதற்குத் திரும்புவதை விட நெருப்பில் வீசப்படுவதையே விரும்புவது.
3⃣மற்ற எதையும் விட அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் அவருக்கு நேசத்திற்குரியோராவது.
நூல்: புகாரி (6041)
💗எல்லாருடைய நேசத்தையும் விட அல்லாஹ்வையே நாம் அதிகம் நேசிக்க வேண்டும் என்ற விஷயம் மூன்றாவதாகக் கூறப்பட்டாலும் நன்கு கவனித்துப் பார்க்கும் போது முதலிரண்டு விஷயங்களும் அல்லாஹ்வை நேசிப்பதால் ஏற்படக் கூடிய விளைவுகள் தான் என்பதைச் சந்தேகமற அறியலாம்.
🤲🏻 அதனால் தான் நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்விடம் இப்படி பிரார்த்தனை செய்துள்ளார்கள்.
🗣 *(இறைவா) உன்னை நேசிப்பதையும் உன்னை யார் நேசிப்பார்களோ அவர்களை நேசிப்பதையும், உனது நேசத்தின் பால் எந்தக் காரியம் நெருக்கி வைக்குமோ அந்த நற்காரியத்தை (நான்) விரும்புவதையும் உன்னிடத்தில் வேண்டுகிறேன் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.*
நூல்: திர்மிதி (3159)
🗣 *சிலர் அல்லாஹ்வின் மீது வைக்க வேண்டிய அளவுகடந்த பாசத்தை அடியார்கள்,படைப்பினங்கள் அவ்வலியாக்கள் மேல் வைத்து விட்ட காரணத்தினால் தான் இணை வைப்பில் சிக்கிக் கொண்டிருக்கிறார்கள்.*
🗣 *நமது நபி (ஸல்) அவர்களை நேசிப்பதற்கு என்று ஒரு தனி இடத்தை உள்ளத்தில் ஒதுக்க வேண்டும்.*
🗣 *ஆனால் அல்லாஹ்விற்குக் கொடுக்க வேண்டிய அந்தஸ்தை நபி (ஸல்) அவர்கள் உட்பட யாருக்கும் கொடுத்து விடக் கூடாது.*
🗣 *ஒருவன் அல்லாஹ்வை நேசிக்காமல் நபி (ஸல்) அவர்களை மட்டும் நேசிப்பான் என்றால் அவன் முஸ்லிமாக இருக்க முடியாது. அவன் நபி (ஸல்) அவர்களை நேசித்தவனாகவும் ஆக முடியாது.*
💯 *நபி (ஸல்) அவர்கள் இறைவனால் நியமிக்கப்பட்ட தூதர். வாழ்க்கை வழிகாட்டி என்பதற்காக அவர்களை நேசிக்கிறோம் இந்தத் தூதுப் பணியை இறைவன் அவர்களுக்கு வழங்கியிருக்காவிட்டால் நபி (ஸல்) அவர்கள் யாரென்றே நமக்குத் தெரியாமல் போயிருக்கும்.*
💗 *எனவே அல்லாஹ்வால் அனுப்பப்பட்ட தூதரை நேசிக்கக்கூடிய நாம், அகில உலகை படைத்து கோடான கோடி படைப்புகளை படைத்து நம்மையும் நேர்வழியில் செலுத்தும் அல்லாஹ்வை அதை விடவும் கடுமையாக நேசிக்க வேண்டும்.*
*அல்லாஹ்வை நேசிப்பது எப்படி👇🏼*
🗣 *நீங்கள் அல்லாஹ்வை விரும்பினால் என்னைப் பின்பற்றுங்கள்! அல்லாஹ் உங்களை விரும்புவான். உங்கள் பாவங்களை மன்னிப்பான். அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன் என்று கூறுவீராக!*
அல்குர்ஆன் (3:31)
💗 *நம் நேசத்திற்குரியவர்களுக்கு எதிராக யார் நடந்தாலும் அவரை நாம் விரும்ப மாட்டோம் நம்மால் நேசிக்கப்படுபவர்கள் யாரை வெறுக்கிறார்களோ அவர்களை நாமும் வெறுப்போம்.*
🗣 இந்த அடிப்படையில் அல்லாஹ்விற்கு மாற்றமான காரியங்களை *நமது தாயோ, தந்தையோ,சகோதர, சகோதரிகளோ, மனைவியோ, பிள்ளைகளோ யார் செய்தாலும் அவர்கள் அல்லாஹ்விற்குப் பிடிக்காத காரியத்தைச் செய்வதால் அவர்களை நாம் வெறுக்க வேண்டும் என்று குர்ஆன் கூறுகிறது.*
🗣 *அப்படியானால் தாய், தந்தை, மற்ற உடன்பிறப்புகளை நேசிப்பதை விட அல்லாஹ்வை நேசிப்பதன் அவசியத்தை இதிலிருந்து உணர முடிகிறது.*
💗அல்லாஹ்வை நேசிப்பது என்பது
🔹அல்லாஹ் ஏவிய நல்லவைகளை செய்வதும்
🔹அல்லாஹ் தடுத்த பாவமான காரியங்களை விட்டுவிடுதலும்
🔹முஹம்மது நபியை முழுமையா பின்பற்றுதலுமே ஆகும்.இவைகளை அல்லாஹ்விற்காகவே செய்வதே நேசம் ஆகும்.
〰⚜〰⚜〰⚜〰⚜
🔮 *மார்க்கத்தை தெளிவான முறையிலும் ஆதாரத்துடனும் கற்றுக்கொள்ள #_மக்கள்_மீடியா_Facebook_பக்கத்தை_like_செய்து_கொள்ளுங்கள்*
*https://m.facebook.com/Makkalmedia-1684365771847561/?ref=wizard*
*குழுமத்தில் இணைய விரும்பும் சகோதரர்கள் கீழ் உள்ள link மூலமாக இணைந்து கொள்ளவும்*👇🏻👇🏻
https://chat.whatsapp.com/8SnREh4Lh0CFBJo9xjL8O6
*ⓂAKKAL ⓂEDIA*
Part of....👇🏽👇🏽
*ECHO DAWA FOUNDATION*
No comments:
Post a Comment