Saturday 15 September 2018

ஆஷூரா என்றால் என்ன

*ஆஷுரா*

💠பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்💠

*ஆஷுரா*

*ஆஷுரா என்றால் என்ன??*

🖋 ஆஷூரா தினம் என்பது *முஹர்ரம் மாதத்தின் பத்தாம் நாளை குறிக்கும் வார்த்தையாகும்* அதாவது முஹர்ரம் மாதத்தின் பத்தாம் நாளில் மூஸா (அலை) அவர்களையும் அவர்களின் தோழர்களையும் அல்லாஹ் அவர்களின் பகைவன் ஃபிர்அவ்னிடமிருந்து கடலைப்பிழந்து பாதுகாத்து அதே கடலில் ஃபிர்அவ்னையும் அவனின் படைகளையும் அழித்த நாளாகும். அதற்கு நன்றி செலுத்தி மூஸா (அலை) அவர்கள் நோன்பு நோற்றார்கள்.

🖋 அதை பின்பற்றி நபி (ஸல்) அவர்களும் நோன்பு நோற்று தன் தோழர்களையும் நோற்கும் படி ஏவினார்கள் *அதை நாமும் பின்பற்றி அந்த நாளில் நோன்பு நோற்பது சுன்னத்தாகும்.*

🖋 யூதர்களுக்கு மாறு செய்வதற்காக *ஒன்பதாம் நாளையும் சேர்த்துக் கொள்வது சுன்னத்தாகும்* அதாவது முஹர்ரம் மாதத்தின் ஒன்பது மற்றும் பத்தாம் நாட்களில் நோன்பு நோற்பது சுன்னத்தும் அதிகம் நன்மையை ஈட்டித்தரும் அமலுமாகும்.

*நோன்பை நோற்றால் என்ன சிறப்பு???*👇🏻

👆 இந்த நோன்பை நோற்பவரின் முன் சென்ற வருடத்தின் சிறு பாவங்கள் மன்னிக்கப்படும்

🖋 ஆஷுரா நோன்பு அதற்கு முந்திய வருடத்தின் பாவங்களுக்கு பரிகாரமாக அமையும் என நான் கருதுகிறேன் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்)

🖋 ரமழானுக்குப் பின் சிறப்பான நோன்பு முஹர்ரம் மாதத்தின் நோன்பாகும், கடமையான தொழுகைக்குப் பின் சிறந்த தொழுகை இரவுத் தொழுகையாகும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி, முஸ்லிம்)

*ஏன் நோற்க்க வேண்டும்???*👇🏻

🖋நபி (ஸல்) அவர்கள் மதீனாவிற்கு வந்தபோது யூதர்கள் ஆஷூரா தினத்தன்று நோன்பு நோற்றிருப்பதை பார்த்து, இது என்ன? என வினவினார்கள். அதற்கு அவர்கள், மூஸா (அலை) அவர்களையும் பனூ இஸ்ரவேலர்களையும் அவர்களின் பகைவன் (ஃபிர்அவ்னிடமிருந்து) அல்லாஹ் காப்பாற்றிய ஒரு நல்ல நாளாகும் என்றார்கள், (அதைக் கேட்ட) நபி (ஸல்) அவர்கள் அந்த நாளில் நோன்பு நோற்று உங்களைவிட மூஸா (அலை) அவர்கள் விடயத்தில் நான் மிக தகுதியுடையவர் எனக்கூறி தானும் அந்த நோன்பை நோற்று அந்த நோன்பை நோற்கும்படி (தன் தோழர்களுக்கும்) ஏவினார்கள். (புகாரி, முஸ்லிம்)

*கட்டாய கடமையாகும்???*👇🏻

🖋இது ஆஷுரா தினமாகும், உங்களுக்கு அல்லாஹ் அந்த நோன்பை கடமையாக்கவில்லை, நான் நோன்பு நோற்றிருக்கின்றேன். விரும்பியவர் நோன்பு நோற்கட்டும் விரும்பியவர் நோன்பை விடட்டும் என நபி (ஸல்) அவர்கள் கூற நான் கேட்டேன் என முஆவியா (ரலி) அவர்கள் கூறிய செய்தியை ஹுமைத் இப்னு அப்துர்ரஹ்மான் அவர்கள் அறிவிக்கின்றார்கள். (புகாரி,முஸ்லிம்)

🖋ரமழான் நோன்பு கடமையாக்கப்படுவதற்கு முன் ஆஷுரா நோன்பை நாங்கள் நோற்கும்படி நபி (ஸல்) அவர்கள் எங்களுக்கு ஏவுவார்கள். ரமழான் நோன்பு கடமையாக்கப்பட்ட போது அவர்கள் அதை ஏவவுமில்லை தடுக்கவுமில்லை நாங்கள் அதை நோற்றுக் கொண்டிருந்தோம் என கைஸ் இப்னு ஸஃது இப்னு உபாதா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். (அஹ்மத்)

*எப்போது நோற்க்க வேண்டும்???*

🖋 அடுத்த வருடம் நான் உயிருடன் இருந்தால் *ஒன்பதாம் நாளையும் நோற்பேன் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.* (முஸ்லிம்)

🖋 ஆஷுரா தினத்தன்று நபி (ஸல்) அவர்கள் நோன்பு நோற்று அதை நோற்கும்படி ஏவிய போது இது யூதர்களும் கிறிஸ்தவர்களும் கண்ணியப்படுத்தும் நாளல்லவா அல்லாஹ்வின் தூதரே! என நபித்தோழர்கள் கேட்டார்கள், அதற்கு நபி (ஸல்) அவர்கள், அல்லாஹ் நாடினால், *எதிர் வரும் வருடம் ஒன்பதாவது நாளையும் (சேர்த்து) நோற்பேன் என்றார்கள்.* அடுத்த வருடம் வருவதற்கு முன்பே நபி (ஸல்) அவர்கள் மரணித்து விட்டார்கள். (முஸ்லிம்)

🖋ஆகவே ஆதாரப்பூர்வமான *எதிர்வரும் வருடம் நான் இருந்தால் ஒன்பதையும் சேர்த்து நோற்பேன்* என்ற ஹதீதை ஆதாரமாக வைத்து ஒன்பதாம் நாளையும் பத்தாம் நாளையும் நோன்பு நோற்பதே சிறந்த முறையாகும்.

*அல்லாஹ் மிக நன்கறிந்தவன்.*

➖ ✨ ➖ ✨ ➖ ✨ ➖ ✨ ➖

🔮 *மார்க்கத்தை தெளிவான முறையிலும் ஆதாரத்துடனும் கற்றுக்கொள்ள  #_மக்கள்_மீடியா_Facebook_பக்கத்தை_like_செய்து_கொள்ளுங்கள்​*

*https://m.facebook.com/Makkalmedia-1684365771847561/?ref=wizard*

*குழுமத்தில் இணைய விரும்பும் சகோதரர்கள் கீழ் உள்ள link மூலமாக இணைந்து கொள்ளவும்*👇🏻👇🏻

https://chat.whatsapp.com/1rx4vEznirX5J1qRVwc902

*share to all.........*

*ⓂAKKAL ⓂEDIA*

Part of....👇🏽👇🏽

*ECHO DAWA FOUNDATION*

No comments:

Post a Comment