Saturday 8 October 2022

காதியாணிகள் என்றால் யார்? அவர்கள் முஸ்லீமா!!! முழு விவரம்

முஹம்மது நபிஸல் அவர்களுக்கு  பிறகு நானும் நபியே என்று வாதிட்ட பொய்யன் தான் மிர்சா குலாம் மிர்சா குலாம் அகமது இவர் அஹ்மதிய்யா முஸ்லிம் ஜமாஅத் எனும் இயக்கத்தின் தோற்றுனர் ஆவார். இவர் பாகிஸ்தான் நாட்டில் உள்ள பஞ்சாப் மாநில காதியான் என்ற கிராமத்தில் 13.02.1835 ல் பிறந்தார் ,  மே 26.05.1908 அன்று இறந்தார்

முஹம்மது நபி ஸல் அவர்களுக்கு பிறகு நான் தான் நபி நான் இறை தூதர் என பிரகடப்டுத்தினார், அவரை நபியாக  பின்பற்றுபவர்களே காதியாணிகள், அல்லது அஹ்மதியாக்கள் என கூறப்படுகின்றார்கள்.

இந்தியாவில் சுதந்திரப் போராட்டத்தில் தீவிரமாக ஈடுபட்டிருந்த முஸ்லிம்  சமுகத்திற்குள் குழப்பத்தை ஏற்படுத்த அப்போதைய பிரிட்டிஷ் அரசாங்கம் செய்த சதியே, காதியானிகளை முஸ்லிம் என்று அடையாளப்படுத்தியதாகும்.

ஆனால் இத்திட்டதை சரியாக அடையாளம் கண்டு கொண்ட சர்வதேச முஸ்லிம் சமுதாயமும் இவர்களை தனி மதமாக அறிவித்தனர். இவர்களுக்கும் இஸ்லாத்திற்க்கும் எந்தசம்மந்தம் இல்லை என்றும் காதியானி என்பது தனி மதம் என அறிவித்தார்கள் இதற்க்கு காரணம் முஹம்மது நபி ஸல் அவர்களே இறுதி இறைத்தூதர் என குரானில் உள்ள வசனம் தான்

Wednesday 15 April 2020

பொறுமை கொள்வோம்



 கஷ்டங்கள் நீங்கிட

நோய்த்தொற்றின் காரணமாக
 ஊரடங்கு உத்தரவை 
அரசு மேலும்  மே மூன்று வரை நீடித்திருக்கிறது
இன்ஷா அல்லாஹ் சில தினங்களில் நோன்பு ஆரம்பமாக இருக்கிறது

நெருக்கடியான காலகட்டத்தில் இருக்கிறோம்
தடையுத்தரவு காலம்வரை பள்ளிக்குச் செல்ல வேண்டாம் என்று ஜமாஅத்துல் உலமா சபை அறிவித்திருக்கிறார்கள்
தலைமைக்கு கட்டுப்படுவது நபி வழியாக இருக்கிறது  
 இது ஒட்டுமொத்த உலமாக்கள் சேர்ந்து எடுக்கும்  மசூரா
அரசு பள்ளிக்குச் செல்ல விடாமல் தடுக்கிறது
 என்கிற கோணத்தில் பார்க்க வேண்டியதில்லை
 சூழ்நிலையை அனுசரித்து
 நடப்பதும்
 ஆட்சிக்கு கட்டுப்படுவதும்
நம் மீது கடமையாக இருக்கிறது

 மார்க்க சட்டங்களை ஆராய்ந்து அதன்பிறகே
 உலமாக்கள் வீட்டிலேயே தொழுது கொள்ளுங்கள் என்று அறிவித்து இருப்பார்கள்
 அதனால் நம்மீது எந்த குற்றமும் வந்துவிடாது
 அல்லாஹ் மன்னிக்கக் கூடியவனாகவும் கருணை உள்ளவராகவும் இருக்கிறான்


 இன்னும் எங்காவது கூடுதலாக நன்மை கிடைத்துவிடும் என்கிற நோக்கில்
 கூட்டாக ஜும்மா நடத்தலாம் தராவீஹ் நடத்தலாம் என்று கூட்டம் சேர வேண்டாம்.

 எங்காவது நடக்கும் தவறு
 ஒட்டுமொத்த இஸ்லாமியர்களையும்  அவமானப்படுத்த காரணமாக அமைந்துவிடுகிறது

 50 நபர்கள் கூட்டாக ஜும்மா தொழுகை நடத்தினார்கள்
 அது சரியா என்று டிவிக்களில் விவாதம் நடக்கிறது
 உங்கள் செயலை ஒட்டு மொத்த சமுதாயமும் விரும்பவில்லை என்பதை நாம்
 உணர்ந்து கொள்ளவேண்டும்

தனித்திருந்து  கடமையான தொழுகை மற்றும்
 தராவீஹ் தொழுது
 அதிகமான இபாதத்துகள் செய்தால் அல்லாஹ் நம் மீது
 அதிகமதிகம் பிரியம் கொள்வான் என்பதையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

பெரும்பாலும் பலர் நோன்பு காலத்தில் நான்காவது கடமையான
 ஜக்காத் நிறைவேற்ற வேண்டிய கட்டாயத்தில் இருப்பவர்கள்
 சரியாக கணக்குப் பார்த்து கொடுத்து கொண்டிருந்தவர்களும்
 இப்போது வியாபார ரீதியிலும்
வேலை இழப்பின் காரணமாகவும் பாதிக்கப்பட்டு இருப்பதால்
 பல சிரமங்களை சந்திக்க வேண்டி இருக்கிறது
 இருந்தாலும் கட்டாயக் கடமையாக இருப்பதால்
 நிறைவேற்றியே ஆகவேண்டும்

 இந்தச் சூழ்நிலையில்
 நாம் பல மாதிரியான சிரமங்களையும் செலவுகளையும் சந்திக்கிறோம்
 நமது சிந்தனைகள் திசை திரும்பி விடாமல்
 வழக்கமான நமது கடமையை நிறைவேற்றவும்
 நம்மை எதிர்பார்த்துக் கொண்டிருக்கும்
 சொந்தங்கள்
 மற்றும் தேவையுடையவர்களுடைய சிரமங்களைப் போக்கும் வகையிலும்
 இருக்கும் கையிருப்பிணை வேறுவகையில் செலவு செய்வதை குறைத்துக்கொண்டு
 கட்டாய கடமையான ஜகாத்தை சரியாக நிறைவேற்ற
 எல்லாம் வல்ல அல்லாஹ் உதவிட வேண்டும்.

 அடுத்து நோன்பு நாட்களில்
 சதக்கா கொடுப்பது பல மடங்கு நன்மையை பெற்றுத் தரும்
 செயலாக இருக்கிறது
 பாவங்களிலிருந்து நீங்கிட
 நமது துஆ கபுல் ஆகவும்
 நிறைய சதகா கொடுக்க வேண்டும்.

 அவைகளை சிந்தித்து
 நமது பொருளாதாரத்தை சரி செய்து கொள்ள வேண்டும்

நோன்பின் முதல் வாரத்திற்கு பிறகு தடை உத்தரவு காலம் முடிவடைந்துவிடும் இன்ஷாஅல்லாஹ்

 இறைவன் நாடினால் அதிலிருந்து நமக்கு தொழுகை ஜும்ஆ
 தராவிஹ் போன்ற கடமைகளை பள்ளியில் நிறைவேற்றலாம் அனைவரும் இது சம்பந்தமாக அல்லாஹ்விடம் அதிக அதிகம் பிராத்தனை செயாவோம்.

பள்ளிகளில் சமுக இடைவெளியில் நோன்பு கஞ்சி கொடுக்க அரசிடம் அனுமதி கோருவோம் பலருக்கு அதுவே உணவாக கூட இருக்கலாம்.


இன்ஷா அல்லாஹ் இன்றிலிருந்து  யூனுஸ் நபி அவர்கள் மீன் வயிற்றில் இருக்கும்போது   ஓதிய
 லா இலாஹ இல்லா அன்த துஆவை அதிகமதிகம் ஓதி கொள்ளுங்கள் அல்லாஹ் சொல்கிறான்
யூனுஸ் நபியவர்களின் கஷ்டத்தை நீங்கியதைப்போல்
 மூமின்கள் ஓதினால் அவர்களின் கஷ்டத்தையும் நீக்கி
 வெற்றியை கொடுப்போம் என்கிறான்.

அல்லாஹ்வின் மீது நம்பிக்கை வைத்து
  குடியுரிமை பிரச்சனையிலிருந்து 
கொரோன வரை அனைத்திலும் வெற்றி கிடைக்க
 அனைவரும் துஆ செய்வோம்

Monday 30 March 2020

நேரத்தை வீணடிக்க வேண்டாம்

இக்கணம் திருந்தவில்லை என்றால் எப்போது திருந்துவோம்

சிந்தித்து செயல்படுவோம்

நவ நாகரீக உலகில் மூழ்கி திளைத்த நம்மை என் நாட்டமில்லாமல் துரும்பும் அசையாது என அவனது வல்லமையை பரை சாட்டியுள்ளான் ரப்புல் ஆலமின் எல்லாப் புகழும் இறைவனுக்கே.

அரசாங்கத்திற்கு ஒத்துழைத்து அவர்கள் பிறப்பித்துள்ள ஆணைகளை தவறாமல் பின்பற்றுவோம். ( தலைமைக்கு கட்டுப்படுதல் நபிவழி )

💠 திருக்குர்ஆனை ஓதி வாருங்கள் தமிழ் மொழி பெயர்ப்புகளை ஓதுங்கள் என்று அறிவுரை கூறியவர்களுக்கு மக்களிடமிருந்து கிடைத்த பதில் நேரமில்லை

💠 தொழில் செய்பவர்கள் என் தொழிலை கவனிக்கவே என்னால் முடியவில்லை,

💠 மாணவ கண்மணிகள் பள்ளி,கல்லூரிகளுக்கு செல்லவே நேரம் சரியாக உள்ளது ஐந்து வேளை தொழுகைகளை தொழுவதே சிரமமாக எண்ணி திரிந்தவர்கள் எண்ணிலடங்காதவர்கள்

💠 இறைவன் அனைத்தையும் தழைகீழாக ஆக்கியுள்ளான்.

💠 உலகத்தின் வல்லரசு நாடுகள் பட்டியலில் முதலிடம் வகித்தவர்களே இன்று நோய் தொற்றில் முதலிடம் பிடித்துள்ளார்கள்.

💠 உலக நாடுகள் அனைத்து வசதிகளும் இருந்தும் செய்வதறியாது திகைத்து உள்ளனர் மக்களை வீடுகளில் அடைப்பதை தவிர...

💠 இந்த தருணத்தையேனும் நம் மறு வாழ்க்கையின் முன்னேற்றத்திற்கு உபயோகபடுத்த நாம் நம்மை தயார்படுத்தி கொள்ளல் வேண்டும்.

💠 விடுமுறை நாட்களை தொலைக்காட்சியிலும்,இணையத்திலும் கழிப்பதை போன்று இந்நாட்களையும் வீண் ஆக்காமல் இருப்பதற்கு அதிக முயற்சிகள் செய்ய வேண்டும்.

💠 தொழுகைகளை குடும்பத்தோடு ஜமாத்தாக தொழுது வாருங்கள்

💠 தனியாக தொழுவதை விட ஜமாத்தாக தொழுவதே 27 மடங்கு நன்மை அதிகம்.

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: 'தனியாகத் தொழுவதை விட ஜமாஅத்தாகத் தொழுவது இருபத்தேழு மடங்கு சிறந்ததாகும்.

என அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார். (நூல்: புகாரி)

குறைந்தது ஒரு நாளைக்கு 10 பக்கங்களாவது திருக்குர்ஆனை அரபு மொழியில் ஓதி வாருங்கள்,

கண்டிப்பாக இது சிறமமானது அல்ல ஒவ்வொரு தொழுகைக்கு பிறகும் இரண்டு பக்கம் ஓதி வந்தால் இலகுவாக ஒரு நாளில் நம் இலக்கை அடையலாம்.

سَمِعْتُ عَبْدَ اللهِ بْنَ مَسْعُودٍ، يَقُولُ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: مَنْ قَرَأَ حَرْفًا مِنْ كِتَابِ اللهِ فَلَهُ بِهِ حَسَنَةٌ، وَالحَسَنَةُ بِعَشْرِ أَمْثَالِهَا، لاَ أَقُولُ الْم حَرْفٌ، وَلَكِنْ أَلِفٌ حَرْفٌ وَلاَمٌ حَرْفٌ وَمِيمٌ حَرْفٌ.) سنن الترمذي( *அல்லாஹ்வின் வேதத்திலிருந்து யாரேனும் ஓர் எழுத்தை ஓதினால் அவருக்கு  ஒரு நன்மை உண்டு. ஒரு நன்மை என்பது அது போன்ற பத்து மடங்காகும். ஆலிப் லாம் மீம் என்பதை ஒரு எழுத்து என்று கூற மாட்டேன். எனினும் அலிப் என்பது ஒரு எழுத்து லாம் என்பது ஒரு எழுத்து மீம் என்பது ஒரு எழுத்தாகும். மூன்றும் மூன்று எழுத்துக்களாகும். அம்மூன்றையும் ஒருவர் ஓதினால் ஒவ்வொன்ருக்கும் பத்து நன்மைகள் வீதம் முப்பது நன்மைகளை பெறுவார் என்று நபி(ஸல்) கூறினார்கள்.* அறிவிப்பவர்:அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் (ரலி) நூல்:

💠 குர்ஆன் தர்ஜுமாவையும் நாளுக்கு நாள் அரபு குர்ஆனுக்கு ஏற்ப ஓதி வாருங்கள் திருக்குர்ஆனின் முழு சுவையையும் அடையலாம்.

💠 ஹதீஸ் கிரந்தங்களையும் சக்திக்கேற்றார் போல் படித்து வாருங்கள் .இந்த பதிவோடு இணைக்கப்பட்டுள்ள புத்தகத்தை தரவிறக்கம் செய்து வைத்துகொள்ளுங்கள்.

💠 குறைந்த இவற்றையாவது கடைபிடித்து வாருங்கள் வல்ல இறைவன் நமக்கு அருள்புரிவானாக.

Sunday 29 March 2020

அவசியம் கடைப்பிடிப்போம்

அவசியம் கடைப்பிடிப்போம்

இத்தாலி அமெரிக்கா போன்ற முன்னேறிய நாடுகளின் கவனக்குறைவால் மக்கள் பெருமளவுக்கு பாதிப்புக்குள்ளாகி இருக்கிறார்கள்
நமது அரசின் மீது ஆயிரம் கருத்து வேறுபாடுகள் இருக்கலாம்
இருந்தாலும் கொரோனா வைரஸ் COVID-19 சம்மந்தமாக நமது
அரசு மேற்க்கொண்ட
ஆரம்பகட்ட நடவடிக்கைகள் திருப்தி அளிக்காவிட்டாலும் இப்போது முழு கவனத்துடன் தீர்வை நோக்கி செயல்படுகிறது
அதனால் அரசின்
அறிவுரைகளை கேட்டு
அதன்படி நடந்தால் மட்டுமே
அல்லாஹ்வின் உதவியால் மீள முடியும்

144 தடை உத்தரவுக்கு
முழுமையாக மக்கள் இன்னும் கட்டுப்படவில்லை
வந்தால் பார்த்துக்கொள்ளலாம்
என்கிற மனநிலை
பெரும்பாலான இளைஞர்களிடம் இருக்கிறது

இதுவரையில் பெரிதும் பாதிக்கப்பட்ட நாடுகளின்
சர்வேயின் முடிவில்
இறப்பு சதவிகிதம்
பெண்களைவிட ஆண்கள் அதிகமாக இருக்கிறார்கள்
இதற்கு காரணம்
நமது நாட்டைப் போல
அங்கும் ஆண்கள் முழுமையான ஒத்துழைப்பு கொடுக்காமல் இருந்திருக்கலாம்
என்பதை கவனத்தில் கொண்டு
இனிமேலாவது அரசு நடவடிக்கைகள் அனைத்திற்கும்
இளைஞர்கள் முழுமையாக ஒத்துழைக்க
வேண்டும்

ஒரு கார்ட்டூன் சமூகவலைத்தளங்களில் வந்துகொண்டிருக்கிறது
வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் தீக்குச்சிகள்
நெருப்பு வைக்கப்பட்டு சுற்றி வரும்போது
ஒரு குச்சி மட்டும் விலகி விடுகிறது
அதோடு நெருப்பு தொடர்பு கிடைக்காமல்
அணைந்து விடுகிறது
வைரஸ் பாதிக்காமல் இருக்க
தனித்திருத்தல் என்பது இதேபோன்றுதான்
தொடர்ந்து தாக்குவதற்கு
தொடர்பு கிடைக்காமல் தடுத்துக்கொள்ளலாம்
அதனால் தனிமைப் படுத்திக் கொள்வதில் கவனம் செலுத்த வேண்டும்
இன்றளவில் மருந்துகள் கண்டுபிடிக்கப்படாத காரணத்தினால்
தனித்திருப்பது ஒன்றே சிறந்த வழியாக இருக்கிறது

நமது நாட்டைப் பொருத்தவரை
வாரக்கணக்கில் வருவாய் நின்று போனால்
நெருக்கடியை சந்திக்கும் குடும்பங்கள்
நிறைய இருக்கிறார்கள்
அவர்களுக்கு அரசு உதவி கிடைக்கலாம்
அதை உடனடியாக எதிர்பார்க்க முடியாது
அதனால் அருகில் இருக்கும் வாய்ப்புள்ளவர்கள்
அவர்களுக்கு வலியச் சென்று
உதவிட வேண்டும்
சமைக்கும்போது அடுத்த வீட்டின் சூழ்நிலையை அறிந்து
கூடுதலாக சமைக்க சொன்ன மார்க்கத்தில் நாம் இருக்கிறோம்
இந்த இக்கட்டான
நேரத்தில் அவர்களுக்கு நாம் செய்யும் உதவிகளால் அல்லாஹ் நாடினால் நமது நெருக்கடியிலிருந்து நம்மை காப்பதற்கு காரணமாக அமையலாம்

நெருக்கடியான சூழ்நிலையில்
சில தேவைகளை நிறைவேற்றிக்கொள்ள
வழி தெரியாமல் சிலர் தடுமாறலாம்
அதற்கான சூழ்நிலையை ஏற்படுத்திக் கொடுப்பதும்
பெரிய நன்மைக்குரிய செயலாகும்
உதாரணமாக தூரத்தில் இருக்கும் மருத்துவமனைகளுக்கு செல்ல காவல்துறை அதிகாரியின் அனுமதி பெற்றுக்கொடுப்பது
சொந்த ஊருக்கு செல்வதற்கு அனுமதி வாங்க தெரியாமல் திணறி கொண்டிருப்பவர்களுக்கு
அதற்கான வழியைக் காட்டுவது
கிராமப்புறங்களில் உள்ளவர்களுக்கு
தொடர்ந்து எடுத்துக் கொள்ளும்
மருந்துகள்
வெளியூரில் போய் வாங்க வேண்டி இருக்கும்
அதுபோன்றவர்கள் யாரென தெரிந்து
அவர்களிடம் மருந்துச் சீட்டுகளையும்
பணத்தையும் பெற்றுக் கொண்டு
காவல் நிலையத்திற்கு சென்று
மருந்து வாங்க டவுனுக்கு செல்வதற்கு அனுமதி வாங்கி
எல்லோருக்கும் தேவையான மருந்துகளை வாங்கி கொண்டு வந்து கொடுப்பது
இது போன்ற இன்னும் பல தேவைகள் இருக்கலாம்
விபரமான இளைஞர்கள் இதுபோன்ற செயல்களில் ஈடுபடலாம்
அதேநேரம் தங்களையும் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்

Friday 27 March 2020

கியாமத்தின் அடையாளமா

கேட்டதை பார்பதை பரப்புபவன் பொய்யன்

இப்போது சமிப காலமாக ஒரு ஹதீஸ் உலாவிக் கொண்டு இருக்கிறது அதாவது

நபி(ஸல்)அவர்கள் சகாபாக்களிடம் பேசிக் கொண்டிருந்த போது.சகாபாக்கள் நபி அவர்களிடம் கேட்டார்கள் கியாமத் நாளின் கடைசி அடையாளம் எதுவென்று? நபி கூறினார் பள்ளியின் வாசல் மூடப்படும் பாங்கு ஓசை கேட்டூம் வீட்டிலே தொழுவார்கள்..ஜூம் ஆ--- லுகர் தொழுகையாக மாற்றப்படும் கொடிய நோய்கள் வந்து கொத்தாக இறப்பார்கள்.... அவ்வப்போது  ஓர் இரவில் மகதி (அலை)அவர்கள் ஊன்றுகோல் ஊன்றி வருவார் அவரை தொடர்ந்து தஜ்ஜால் தோன்றுவான் அதுதான் கியாமத் நாளின் கடைசி அடையாளம் ஆகும்......ஆகையால் தஜ்ஜால் ஆட்சி வந்தது -கியாமத் நெருங்கியது....... ஹதீஸ் 189:17

இங்கு குறிப்பிட்டுல்ல எண் 189:17
எந்த ஹதீஸிலும் இப்படிப்பட்ட எண் இலக்கம் பயண்படுத்தப்படவில்லை.

ஆதாரமற்ற இட்டுக்கட்டப்பட்ட செய்தி

அல்லாஹ் விற்க்கும் அவனது தண்டனைக்கும் அஞ்சிக்கொள்ளுங்கள்

நமது நபியவர்கள் கூறியதை கூட நினைத்து நீங்கள் பயப்படமாட்டீர்களா??

அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
'என் மீது பொய் சொல்லாதீர்கள்! என் மீது பொய் சொன்னவன் நரகத்தில் நுழையட்டும்!

அறிவிப்பவர் : அலி(ரலி)
ஆதார நூல்கள் : புகாரீ -106, முஸ்லிம் 2)

அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: 'என் மீது கூறும் பொய் (உங்களில்) ஒருவரின் மீதும் கூறும் பொய்யைப் போன்றதன்று. யார் என் மீது வேண்டுமென்றே பொய்யுரைக்கின்றானோ அவன் தன் இருப்பிடத்தை நரகத்தில் ஆக்கிக் கொள்ளட்டும்!'
அறிவிப்பவர் : முகீரா(ரலி)
நூல்கள் : புகாரீ 1291, முஸ்லிம் 5

இந்த நபிமொழிகளை படித்தாவது திருந்துங்கள் அல்லாஹ்விற்கு அஞ்சிக்கொள்ளுங்கள்

பொய்யான செய்திகளை பரப்பாதீர்கள்

Monday 4 November 2019

ஒற்றுமையே வெற்றி

ஒற்றுமையே வெற்றி

சமூகத்தின் ஒற்றுமை ஒற்றுமையில் உள்ளது வேற்றுமையில் இல்லை

சமூகம் ஒற்றுமையில் நிலைத்திருக்கவில்லை என்றால் ஷைத்தான் அவர்களைப் பல்வேறு கூறுகளாகப் பிளந்து போட்டு விளையாடுகிறான்.

நாம் இந்த ஒற்றுமை என்ற விஷயத்தில் சிறிய விரிசல் கண்டாலும் ஷைத்தான் நம்மீது முழுமையாக ஆதிக்கம் செலுத்த முற்படுகிறான்.

இறைவனின்  அடிமைகள் நாம் ஒன்று சேர்ந்து வாழ்ந்தால் ஷைத்தான் நம்மை  எதுவும் செய்ய முடியாதவனாகி விடுகிறான்.

மறுமையின் நற்பேறுகளை நம்பிக்கை கொண்டவர்கள், இதைத்
தம் சிந்தையில் ஆழப் பதிக்கத் தவறிவிட்டால் சிறு சிறு விஷயத்திற்காக சண்டையிட்டு அழிந்து போவார்கள் என்பதை நினைவில் வைக்க வேண்டும்.

நமது சிந்தனையின் இலக்கு எதுவாக  இருக்கின்றதோ அதைப் பொறுத்தே இறைவன் வழங்கும் சன்மானமும், வெகுமதியும் அமைகின்றது என்பதை நினைவில் கொள்ளவேண்டும்.

அன்பு சமூகமே

சமூகம் பிளந்து கிடக்கும் காரணத்தை உற்று நோக்கினால் ஒற்றுமை குலைய காரணம்
உலக இலாப-நஷ்டம், கண் மூடித்தனமான சுயநலம் இவைதாம் மனிதர்களைப் பிளந்து போடும் சக்திகளாகும்.

நாம் சிந்திக்க வேண்டும் நமது வெற்றி ஒற்றுமையில் தான் உள்ளது வேற்றுமையில் கிடையாது.

பலம் நிறைந்த சமூகத்தில் கருத்து வேறுபாடுகள் நுழைந்திடுமேயானால் அந்தச் சமுதாயம் பலவீனமான சமுதாயமாக மாறிவிடுகிறது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

கருத்து வேறுபாடுகள் வரலாம் ஆனால் அதுவே பகையாக மாறிவிடகூடாது

நமது சமூகம் அன்று பத்ர் என்ற இடத்தில் இடம் பெற்ற போரில் வெற்றி பெற்றபோது இறைவன் அவர்களுக்கு ஒற்றுமையின் பலத்தையும் பலனையும் ஒருங்கே புகட்டினான் .

அங்கே அவர்களுக்கு கிடைத்த வெற்றிக்கு ஒற்றுமையும் ஒரு காரணம் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

இறைவன் கூறுகிறான்

அன்றி, நீங்கள் அல்லாஹுக்கும் அவனுடைய தூதருக்கும் வழிப(ட்)டு(உங்களுக்குள் ஒற்றுமையாக இரு)ங்கள்.உங்களுக்குள் தர்கித்துக் கொள்ளாதீர்கள். அவ்வாறாயின் நீங்கள் தைரியமிழந்து, உங்கள் வலிமை குன்றி விடும். ஆகவே நீங்கள் பொறுமையாக இருங்கள். நிச்சயமாக அல்லாஹ் பொறுமையுடையோர்களுடன் இருக்கின்றான். (அல் குர்ஆன் 8 :46).

நமது  சமுதாய ஒற்றுமையைப் பாதுகாத்திட வேண்டியது, ஒவ்வொரு முஸ்லிமுடைய கடமையாகும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

சகோதரர்களே நாம் சிந்திக்க வேண்டும் முஸ்லிம்களின் எதிரிகள் விரும்புவதெல்லாம் முஸ்லிம்களின் ஒற்றுமையைக் சீர் குலைத்திட வேண்டும் என்பதைத்தான்.

முஸ்லீம்களுக்குள் பிளவை உண்டாக்க வேண்டும் என்பது தான்.

அன்பு சொந்தங்களே❗❕

நாம் எந்த நிலையிலும் அவர்களின் சூழ்ச்சியில் சிக்கி சின்னாபின்னமாக கூடாது என்பதை மனதில் ஆழமாக பதியவேண்டும்.

ஆக இஸ்லாமிய சொந்தங்களே

ஒற்றுமையே வெற்றி தரும்👍என்பதை மனதில் ஆழமாக பதிய வைத்து வல்ல ரஹ்மானுக்கு கட்டுப்பட்டு நண் மக்களாக ஒற்றுமையாக வாழகூடிய பாக்கியத்தை இறைவன் நமக்கு வழங்குவானாக!!!

✴✴✴✴✴✴✴✴✴✴

📢 ⓂAKKAL ⓂEDIA 📢

இஸ்லாம் என்றால் என்ன


அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

இஸ்லாம் என்றால் என்ன? 

இஸ்லாம் என்பதின் பொருள் இறைவனுக்கு கட்டுப்படுதல்.கீழ்படிதல்,
என்பதாகும்

அதன் இன்னொரு பொருள் அமைதி,சாந்தி
என்பதாகும்.

அதாவது இந்த உலகத்தை  படைத்து பராமரித்து,கண்கானித்துவரும் இறைவன் கூறும் கட்டளை&விலக்கல்களுக்குக் கீழ்படிந்து நடப்பது

மேலும் தனிநபர் வாழ்விலும் அதன்மூலம் சமூக வாழ்விலும் கட்டுப்பாடும்(discipline) நல்லொழுக்கமும் உண்டாகிறது.

அதன்மூலம் ஏற்படும் அமைதிக்குப் பெயரே இஸ்லாம் எனலாம்.

அவ்வாறு பேணுதலோடு வாழ்வோருக்கு இம்மையிலும் மறுமையிலும் அமைதி தொடர்கிறது என்பதில் துளிஅளவும் சந்தேகம் இல்லை

அதாவது நிரந்தர இன்பங்கள் நிறைந்த சொர்க்கம் அவர்களுக்குப் பரிசாக வழங்கப்படுகிறது என்பது இந்த இறைமார்க்கம் முன்வைக்கும் தத்துவமாகும்

நிச்சயமாக (தீனுல்) இஸ்லாம் தான் அல்லாஹ்விடத்தில் (ஒப்புக்கொள்ளப்பட்ட) மார்க்கமாகும்; வேதம் கொடுக்கப்பட்டவர்கள் (இதுதான் உண்மையான மார்க்கம் என்னும்) அறிவு அவர்களுக்குக் கிடைத்த பின்னரும் தம்மிடையேயுள்ள பொறாமையின் காரணமாக (இதற்கு) மாறுபட்டனர்;  எவர் அல்லாஹ்வின் வசனங்களை நிராகரித்தார்களோ, நிச்சயமாக அல்லாஹ் (அவர்களுடைய) கணக்கைத் துரிதமாக முடிப்பான்

(அல்குர்ஆன் : 3:19)

இன்னும் இஸ்லாம் அல்லாத (வேறு) மார்க்கத்தை எவரேனும் விரும்பினால் (அது) ஒருபோதும் அவரிடமிருந்து ஒப்புக் கொள்ளப்பட மாட்டாது; மேலும் அ(த்தகைய)வர் மறுமை நாளில் நஷ்டமடைந்தோரில் தான் இருப்பார்.

(அல்குர்ஆன் : 3:85)



ⓂAKKAL ⓂEDIA