Saturday 8 October 2022

காதியாணிகள் என்றால் யார்? அவர்கள் முஸ்லீமா!!! முழு விவரம்

முஹம்மது நபிஸல் அவர்களுக்கு  பிறகு நானும் நபியே என்று வாதிட்ட பொய்யன் தான் மிர்சா குலாம் மிர்சா குலாம் அகமது இவர் அஹ்மதிய்யா முஸ்லிம் ஜமாஅத் எனும் இயக்கத்தின் தோற்றுனர் ஆவார். இவர் பாகிஸ்தான் நாட்டில் உள்ள பஞ்சாப் மாநில காதியான் என்ற கிராமத்தில் 13.02.1835 ல் பிறந்தார் ,  மே 26.05.1908 அன்று இறந்தார்

முஹம்மது நபி ஸல் அவர்களுக்கு பிறகு நான் தான் நபி நான் இறை தூதர் என பிரகடப்டுத்தினார், அவரை நபியாக  பின்பற்றுபவர்களே காதியாணிகள், அல்லது அஹ்மதியாக்கள் என கூறப்படுகின்றார்கள்.

இந்தியாவில் சுதந்திரப் போராட்டத்தில் தீவிரமாக ஈடுபட்டிருந்த முஸ்லிம்  சமுகத்திற்குள் குழப்பத்தை ஏற்படுத்த அப்போதைய பிரிட்டிஷ் அரசாங்கம் செய்த சதியே, காதியானிகளை முஸ்லிம் என்று அடையாளப்படுத்தியதாகும்.

ஆனால் இத்திட்டதை சரியாக அடையாளம் கண்டு கொண்ட சர்வதேச முஸ்லிம் சமுதாயமும் இவர்களை தனி மதமாக அறிவித்தனர். இவர்களுக்கும் இஸ்லாத்திற்க்கும் எந்தசம்மந்தம் இல்லை என்றும் காதியானி என்பது தனி மதம் என அறிவித்தார்கள் இதற்க்கு காரணம் முஹம்மது நபி ஸல் அவர்களே இறுதி இறைத்தூதர் என குரானில் உள்ள வசனம் தான்

இறுதி நபி முஹம்மது நபி ஸல் அவர்கள் மட்டுமே

உங்களுக்காக இன்று உங்களுடைய மார்க்கத்தை பூர்த்தியாக்கி விட்டேன். மேலும் உங்களின் மீது என்னுடைய அருட்கொடையை நிறைவு செய்துவிட்டேன். உங்களுக்காக இஸ்லாத்தை மார்க்க வழிமுறையாக அங்கீகரித்துவிட்டேன்.  (அல்குர்ஆன் 5:3)

முஹம்மது (ஸல் அவர்கள்) உங்களுடைய ஆண்களில் யாருக்கும் தந்தையாகமாட்டார். எனினும் அல்லாஹ்வின் தூதராகவும் நபிமார்களில் இறுதியானவராகவும் இருக்கிறார். அல்லாஹ் யாவற்றையும் அறிந்தவனாக இருக்கிறான். (அல்குர்ஆன் 33: 40)

இந்த வசனமும் நபியவர்கள் இறுதி நபி என்பதை தெளிவுபடுத்துகிறது. மேலும் குர்ஆனில் பல இடங்களில் உமக்கு முன்னர் இறக்கி வைக்கப்பட்ட வேதம் என்று கூறப்பட்டுள்ளது. ஆனால் எந்த இடத்திலும் உமக்குப் பின்னர் வரும் நபி என்றோ வேதம் என்றோ கூறப்படவில்லை. 

நபி (ஸல்) அவர்களுக்குப் பிறகும் வேறு நபி வருவார்கள் என்று நம்புவது மார்க்கத்திற்க்கு முரணாணது ஆகும்


உலமாக்களின் ஃபத்வாக்கள்:-

கி.பி. 1974 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் (ஹிஜ்ரி - 1394) புனித மக்காவின் ராபிததுல் ஆலமில் இஸ்லாமி - இஸ்லாமிய் உலக கூட்டமைப்பு அஹ்மதிய்யா எனும் காதியானிகள் காஃபிர்களே, என்றும் இஸ்லாமிய வட்டத்தை விட்டும வெளியேறியவர்கள் என்றும் தீர்வு செய்து, நிச்சயமாக காதியானி என்ற மதம் தனது அருவருப்பான நோக்கங்களை மறைத்து இஸ்லாமிய பெயரிலேயே இஸ்லாத்தை அழித்தொழிக்க உருவான மதமாகும், என்று தீர்மானம் நிறைவேற்றியது. 

1978 ஆம் ஆண்டு ஜூலை மாதம் கராச்சியில் நடைபெற்ற ஆசிய இஸ்லாமிய மாநாட்டில் காதியானிகள் காஃபிர்கள் என்று தீர்வு செய்யப்பட்டது. 

1985 ஆம் ஆண்டு ஜித்தாவின் மஜ்மவுல் ஃபிக்ஹில் இஸ்லாமி எனும் ஃபிக்ஹ் இஸ்லாமியின் கூட்டமைப்பு காதியானிகள் காஃபிர் என்று தீர்ப்பளித்தது.

மேலும் எல்லா நபிமார்களும் மக்காவில் உள்ள காபத்துல்லாவுக்கு வந்து இருக்கின்றார்கள் ஆனால் இந்த பொய்யன் வாழ்நாள் முழுவது ஒரு முறை கூட சென்றது இல்லை இதுவே மிக பெரிய பொய்யன் என்பதை நிரூபனம் ஆகின்றது


மரணம்:-

1908ம் ஆண்டு  காலரா நோய்வாய்ப்பட்டு வயிற்றுப்போக்கு 26.05.1908 ம் தேதி மரணமடைந்தார்.

அவருடைய மரணத்துடன் இந்த இயக்கம் முடிவுறவில்லை. அதன்பின்னும் கலீபாக்கள் என்ற தொடருடன் தொடர்ந்து கொண்டிருப்பதே இது பொய்யான மதம் என்பதற்கு மிகப் பெரிய சான்றாகும்

No comments:

Post a Comment