Thursday, 31 March 2016

முட்டாள் தினம் தேவையா பகுதி-2

📢  ⓂAKKAL ⓂEDIA 📢

💠பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்💠

❌முட்டாள் தினம் தேவையா❓


               🖲பகுதி-2

🏮முட்டாள் தினத்திற்கும் இஸ்லாத்திர்க்கும் சம்மந்தம் உண்டா❓

🏮பிறகு ஏன் நமது சகோதரர்களும் கொண்டாடுகிறார்கள்❓

💥இதற்கு காரணம் மார்க்கத்தை விளங்காததே ஆகும்.

💥மார்க்கத்தை விளங்கி இருந்தால் மார்க்கத்திற்கு சம்மதம் இல்லாத இந்த தினத்தை கொண்டாடுவார்களா❓

🏮அல்லது அவர்களுடைய பிள்ளைகளுக்கு இந்த தினைத்தை கற்று தான் கொடுப்பார்களா❓

💥சகோதரர்களே❗❗

💥இஸ்லாம் ஏமாற்றுவைதையும் ஏமாறுவதையும் வண்மையாக கண்டிக்கிறது என்பதை நாம் நினைவில் கொள்ள வேன்டும்.

💥ஒருவர் மற்றொருவரைக் கிண்டலடிப்பதை இஸ்லாம் வன்மையாகக் கண்டிக்கிறது.

💥மற்றவர்கள் பரிகாசம் செய்வதை இறைவன் எவ்வாறு கூறுகிறான் என பார்ப்போம்👇🏻📓“முஃமின்களே! ஒரு சமூகத்தார் பிறிதொரு சமூகத்தாரைப் பரிகாசம்செய்ய வேண்டாம் ஏனெனில் (பரிகசிக்கப்படுவோர்) அவர் களை விட மேலானவர்களாக இருக்கலாம், (அவ்வாறே) எந்தப் பெண்களும் மற்ற எந்த பெண்களையும் (பரிகாசம் செய்ய வேண்டாம்) – ஏனெனில் இவர்கள் அவர்களை விட மேலானவர்களாக இருக்கலாம்”.

📖அல்குர்ஆன் 49:11


💥ஒருவர் மற்றொருவரை ஏமாற்றுவதை இஸ்லாம் கடுமையாக எச்சரிக்கை செய்கிறது👇🏻

📓நபி(ஸல்)அவர்கள் கடைத்தெருவில் உள்ள ஓர் உணவுக் குவியலைக் கடந்து சென்றார்கள். அப்போது அதனுள் தமது கையை நுழைத்தார்கள். அவர்களது கையில் ஈரம் பட்டது. உணவுக்காரரே (கடைக்காரரே) என்ன இது? எனக்கேட்க, “அல்லாஹ்வின் தூதரே மழை பொழிந்து (நனைத்து) விட்டது” என்று கூறினார். அதற்கு நபி(ஸல்)அவர்கள் மக்கள் பார்க்கும் அளவிற்கு அதை நீ மேலே வைத்திருக்க வேண்டாமா? என்று கூறிவிட்டு “எவர் ஏமாற்றுகிறாரோ அவர் என்னைச் சார்ந்தவரல்லர்”என்று கூறினார்கள்.

📜(?(முஸ்லிம் 295)

⚙இத்தகைய விளக்கங்களை மார்க்கம் தந்த பிறகும் நம் சகோதரர்கள் விளங்காததன் காரணமாகவே இத்தகைய கொண்டாட்டங்கள் இஸ்லாம் சமுதாயம் பரவலாக கொண்டாடி வருகிறது.

❓சற்று சிந்தித்துப்பாருங்கள்

✅இஸ்லாம் கூறுவதை நாம் விளங்காதவர்களாக இருந்துவிட்டு இந்த கொண்டாட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கலாமா❓

⚙உங்கள் சிறுப்பிள்ளைகளுக்கு இஸ்லாம் பிறரை ஏமாற்றுவதை கண்டிக்கிறது என்று கூறி வளர்க்கப்போறீர்களா❓

இல்லையென்றால்....

⚙விளையாடுகிறோம் என்று நினைத்துக்கொண்டு குழந்தைகளின் மனதில் ஏமாற்றும் வித்தையை விதைக்கப்போகிறீர்களா❓

🏮இன்றைக்கு குழந்தைக்கு ஏமாற்றம் விளையாட்டாக தெரியலாம்.

🏮ஆனால் வளர்ந்த பிறகு அவர்களது வாழ்க்கை விபரீதத்தை சந்திக்க நேரிடும்.

❓சிந்தித்து செயல்படுங்கள்...


🔃🔃🔃🔃🔃🔃🔃🔃

🔮 இஸ்லாமிய மார்க்க செய்திகளை அழகிய முறையில் அறிய

♻ வாட்ஸ்அப்பில் எங்கள் செய்தியை பெற 👇

📱 0091- 9994675186

📱 0091- 9629167027

பேஸ்புக்கில் எம்மை தொடர 👇
https://m.facebook.com/Makkalmedia-1684365771847561/?ref=wizard

📢 ⓂAKKAL ⓂEDIA 📢

📮 பதிவு நாள்: 31 MAR 2016

Part of 👇
📡 ECHO DAWAH FOUNDATION 📡

Tuesday, 29 March 2016

❌முட்டாள் தினம் தேவையா?

📢  ⓂAKKAL ⓂEDIA 📢

💠பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்💠

❌முட்டாள் தினம் தேவையா❓

🖲இன்றைய காலக்கட்டத்தில் அனைத்து நிகழ்வுகளுக்கும் ஒவ்வொரு தினம் குறிப்பிட்டு கொண்டாடப்படுகிறது.

💥பலர் பாவம் என்று கருதாமலே பல பாவமான காரியங்களை செய்கிறார்கள்.

💥பிரர் அதை பாவம் என கூறினாலும் தான் செய்யும் தவறை ஒப்புக்கொள்வது கிடையாது.


💥அவர்கள் செய்யும் தவறை நியாயப்படுத்தவும் முயச்சி செய்வார்கள்.

💥அந்த தவறுகளுக்கு பல பெயர்களை வைத்து நன்மைபோல் சித்தரிக்க முயர்ச்சி செய்வார்கள்.


💥அதையும் பலர் நன்மை என நினைத்து கொண்டாட துவங்குவார்கள்.

👆🏻இந்த குறிப்பிட்ட நாட்களை வைத்து கொண்டாடுவது என்பது அடுத்தவர்களை கிண்டல் செய்வதிலும்,அடுத்தவர்களுக்கு எரிச்சலூட்டுவதிலும்  இருப்பது என்பது தான் மிகவும் கவலைக்குரிய விஷயம்.


🖲அடுத்தவர்களை ஏமாற்றம் அடைய செய்து அவர்களை வெறுப்பூட்டி அவர்களின் கவலைகளை பார்த்து நாம் மகிழ்ச்சி அடைந்து கொண்டாடுவதற்கு பெயர் தான்  முட்டாள்கள் தினம்.

🖲அடுத்தவனை முட்டாள் என்று முத்திரை குத்தும் நாள் தான் எப்ரல் 1.

👆🏻இந்த ஏப்ரல் ஃபூல்  என்ற கொண்டடத்தில் என்ன தவறு இருக்கிறது❓

🖲அது ஒரு ஜாலாக்காக தானே❓

🖲இதன் கொண்டாடத்திற்கும் இஸ்லாத்திற்கும் என்ன சம்மந்தம்❓

🖲இது பல நியாயவான்கள் கேட்கும் கேள்விகள்❗

🖲இன்றைக்கு இந்த கேள்விகள் கேட்கப்பட காரணம் இந்த கொண்டாட்டம் மற்ற மத மக்களிடம் இருந்து நாம் பெற்றுக்கொண்டு சிறப்பாக கொண்டாடுகிறோம்.

♦சிந்தித்துப்பாருங்கள்♦

🌎உலகில் இருக்கும் மனிதர்கள் பலவான கொள்கைகளை கொண்டுள்ளார்கள்.

🌎அவர்கள் பலவாறான கொண்டாட்டங்களை கொண்டாடுவார்கள்.

💥ஆனால் இஸ்லாம் மார்க்கமோ ஒரே விதமானதே ஆகும்👍

🖲எந்த மனிதனுடைய விருப்பத்திற்கு வேண்டியும் வளைந்துக்கொடுக்காத மார்க்கம்.

❌முட்டாள் தினத்திர்க்கும் இஸ்லாத்திற்க்கும் சம்மந்தம் உண்டா பிறகு ஏன் நமது சகோதரர்களும் கொண்டாடுகிறார்கள்❓


            🖲தொடரும்....

🔃🔃🔃🔃🔃🔃🔃🔃

🔮 இஸ்லாமிய மார்க்க செய்திகளை அழகிய முறையில் அறிய

♻ வாட்ஸ்அப்பில் எங்கள் செய்தியை பெற 👇

📱 0091- 9994675186

📱 0091- 9629167027

பேஸ்புக்கில் எம்மை தொடர 👇
https://m.facebook.com/Makkalmedia-1684365771847561/?ref=wizard

📢 ⓂAKKAL ⓂEDIA 📢

📮 பதிவு நாள்: 30 MAR 2016

Part of 👇
📡 ECHO DAWAH FOUNDATION 📡

Monday, 28 March 2016

இஸ்லாமும் தாடியும்-2

📢  ⓂAKKAL ⓂEDIA 📢

💠பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்💠

⚜இஸ்லாமும் தாடியும்⚜

🏮இன்றைய காலத்தில் தாடி வைப்பதில் முஸ்லீம்களின் நிலை என்ன என்பதை சிந்தித்துப்பாருங்கள்..


🚫தாடி வைத்து ஒரு முஸ்லீம் நடந்தால் அவனை இந்த உலகம் தீவிரவாதியாக சித்தரிக்கிறது.

💥இதனால் இன்றைய முஸ்லீம்  இளைஞர்களிடம் தனது உறவினர்கள் கூறிக்கொள்வது என்னவென்றால் இந்த இளைய வயதில் இப்படி தாடி வைத்துக்கொண்டு நடக்காதே என்றும், ஒழுங்கான முறையில் தாடியை எடுத்துக்கொண்டு நடக்கவும் அறிவுறுத்தப்படுகிறது.


🌐ஏனென்றால் இவன் தாடி வைத்துவிட்டு நடந்தால் இந்த சமூகம் தனது மகனை தவறான முறையில் சித்தரிப்பார்களோ என்ற பயம் தான் காரணம்.

🔰சில ஆண்கள் சிறிது காலம் தாடி வைத்திருப்பார்கள் ஆனால் காலம் செல்ல செல்ல அதன் நிலைகள் மாறிவிடும்.

✳ஒன்று அவருடன் இருப்பவர்கள் தாடியை மழித்துக்கொண்டு அவருடன் சுற்றுவார்கள்.இவருடைய தாடியைப்பார்த்து குறையும் கூறுவார்கள்.


✳உடனேஇவருடைய மனநிலமையும் எதற்கு நாம் இப்படி தாடி வைத்துக்கொண்டு நடக்கிறோம்.

✳நம்முடைய தாடியை அவர்கள் கேவலமாக எண்ணுகிறார்களே!! நமக்கும் அவர்களைப்போல தாடி இல்லாமல் அழகாக நடப்போம் என்ற சிந்தனை தோன்றும்.

🚫இதன் காரணமாகவே பல ஆண்கள் தாடியை மழித்துக்கொண்டு நடக்கிறார்கள்.

💥இன்றைக்கு உங்களுடன் கூத்தாடிகளைப்பார்த்து தாடிகளை மழித்துக்கொண்டு நடக்கும் அவர்களா மறுமையில் உங்களுக்கு சிபாரிசு செய்வார்கள்❓

♦சிந்தித்துப்பாருங்கள்

💥யார் என்ன சொன்னாலும் நாம் நம்முடைய நபி(ஸல்)அவர்கள்  காண்பித்து தந்த சிறந்த செயல்களை உதாசீனபடுத்தலாமா❓

🔰இன்னும் சில ஆண்கள் தனது இளமை வயதில் தாடியை பேணுவதில் மிகவும் ஆர்வம் காட்டுவார்கள்.


✳ஆனால் திருமண சமயத்தில் அல்லது திருமணம் முடிந்தபிறகு மனைவியின் வற்புறுத்தலால் தாடியை மழித்து விட்டு நடப்பார்கள்.

✅இதற்கான காரணம் ஆண்கள் தனது மனைவியுடன் நடக்கும் போது அவர்களுக்கு தனது கணவன் தாடி வைத்து நடப்பது இழிவானதாக கருதுவதே.

🚫இதற்கெல்லாம் காரணம் இன்றைய காலக்கட்டத்தின் வளர்ச்சியும்,சினிமா கூத்தாடிகளின் நடிப்பும் தான் காரணம்.

🚫தாடியை மழித்து நடிகன் மிக அழகாக டீவியின் முன் காட்டப்படுகிறான்.

🚫இதனைக்கண்ட இன்றைய இஸ்லாமிய பெண்களும் தங்கள் கணவனை அதே போல் அழகாக காண்பிக்க எண்ணுகிறார்கள்.

🗯சிந்தித்துப்பாருங்கள் பெண்களே❗

❎உங்களின் கணவன் சினிமா கூத்தாடிகளை போல மாற வேண்டுமென்றா எண்ணுகிறீர்கள்.

💥இந்த கூத்தாடிகள் உங்களுக்கு வேண்டி சிபாரிசு செய்வார்களா❓

✔நிச்சயமாக கூத்தாடிகளை பின்பற்றினால் நிச்சயமாக கேடு தான்.

💥நபி (ஸல்) அவர்கள் நமக்கு அறிமுகப்படுத்தி செய்ய சொன்ன தாடி உங்கள் கணவனுக்கு கேவலாமாக தெரிகிறதா❓

✅நிச்சயமாக இதில் ஒரு இழிவையும் காணமாட்டீர்கள்.

💥இது எப்படி உங்களுக்கு இழிவாக தோன்றும்❓

🔰மீசையை ஒட்டக்கத்தரித்து தாடியை வளர்ப்பது நபி (ஸல்) அவர்கள் காண்பித்து தந்த சிறந்த செயல் என்பதை மறந்து விட்டீர்களா..

💥எனவே சிந்தியுங்கள்❗

🌐ஏதோ ஒரு  கூத்தாடிக்கு வேண்டி கணவன் தாடியை மழித்து நடக்க சொல்லாதீர்கள்.

🔰தாடி தான் ஒரு ஆணுக்கு அழகானது என்பதை உணர்ந்துக்கொள்ளுங்கள்

📓ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு அவர்களிடம் இருந்தவற்றிலேயே நல்ல மணமுடைய வாசனைப் பொருளை நான் பூசி வந்தேன். எந்த அளவிற்கென்றால் அந்த நறுமணப் பொருளின் மினுமினுப்பை அவர்களுடைய தலையிலும் அவர்களுடைய தாடியிலும் என்னால் காண முடிந்தது.
📚ஆதாரம்: புஹாரி 5923


🌐நாம் தற்போது வாழ்ந்து கொண்டிருக்கும் காலப்பகுதியில் ஏராளமான பெண்கள் ஆண்களுக்க ஒப்பாகவே தம் உடைகளையும், தலை முடிகளையும் வைத்துக் கொள்கின்றனர்.

🌐 அதேபோல் இன்று பல ஆண்கள் மத்தியில் பெண்களைப் போல் தலை முடி வளர்ப்பதும் பிரபல்யம் ஆகி வருகின்றது.

🌐அநேக சந்தர்ப்பங்களில் அவர்களுக்கிடையில் ஆணா, பெண்ணா என்ற வித்தியாசமே தெரியாது. இத்தகைய நிலையில் ஆண்கள் தாடி வைப்பதாவது அவர்களுக்கு சிறப்பான தனித்துவத்தைக் காட்டுவது மட்டுமில்லாமல் ஆண்களைப் போல் தம் நடை, உடை, பாவனையை அமைத்துக் கொள்ள விரும்பும் பெண்களுக்கும் தாடி சாவு மணியாக அமையும்.

💥அன்பின் இஸ்லாமிய சகோதரர்களே தாடி வைத்தல் என்ற நபி வழியை நடை முறைப்படுத்தி இவ்வுலகிலும், மறுமையிலும் வெற்றி பெறுவோமாக!

ஆமீன்.


🔃🔃🔃🔃🔃🔃🔃🔃

🔮 இஸ்லாமிய மார்க்க செய்திகளை அழகிய முறையில் அறிய

♻ வாட்ஸ்அப்பில் எங்கள் செய்தியை பெற 👇

📱 0091- 9994675186

📱 0091- 9629167027

பேஸ்புக்கில் எம்மை தொடர 👇
https://m.facebook.com/Makkalmedia-1684365771847561/?ref=wizard

📢 ⓂAKKAL ⓂEDIA 📢

📮 பதிவு நாள்: 28 MAR 2016

Part of 👇
📡 ECHO DAWAH FOUNDATION 📡

Sunday, 27 March 2016

இஸ்லாமும் தாடியும்

📢  ⓂAKKAL ⓂEDIA 📢

💠பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்💠

⚜இஸ்லாமும் தாடியும்⚜

❄தாடி இஸ்லாத்தின் பேன வேண்டிய அங்கம் ஆகும்.

📜இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்👇🏻

 📓மீசையை நன்கு ஒட்டக் கத்தரியுங்கள். தாடியை வளர விடுங்கள்.
 அறிவிப்பவர்: இப்னு உமர்(ரலி)     ஸஹீஹுல் புஹாரி - 5893

❄இப்படி நமது  ரசூல் சொல்லியும் .!!!!

❄நாமோ அதை ஒரு அசிங்கமாகவே பார்க்கிறோம்.!!!அது ஏன்❓

❄மீசை கத்திரித்தால்

❄ஆம்பள மாதிரி இருக்க மாட்டோம் என்று என்னி கொண்டு நபி மொழிக்கு மாறு செய்கிறோம்.!!!

❄உங்கள் ஆண்மை மீசையில் தான்  வைத்துள்ளிர்களா.?

❄ தாடி வளருங்கள் என்று சொல்லியும் கூட

❄நாமோ தாடி வைத்தால் சன்னியாஸி போல இருக்கும் என்று கர்ப்பணை செய்து கொண்டு வாழ்கிறோம்.!!!

❄நபி சொல் முக்கியம் அல்ல

❄இந்த விபாசார உலகம் சொல்லும் விசயம் தான் உங்களுக்கு முக்கியமாக தெரிகிறதா.?

❄யார் மாற்று மத  கலாச்சாரத்துக்கு   ஒப்பாகநடகின்றரோ  அவர் அந்த  சமுதாயத்தை சார்ந்தவரே... முஹம்மது நபி - அபூதாவூத்

❄உன் முகம் கூட தெரியாமல்
நீங்கள் மறுமை வெல்ல வேண்டும் என்று ஒரே நோக்கத்துடன்.!!!

❄உனக்காக தன்னை(நபி) பின்பற்றும் சமுதாயத்திற்கு எந்த வகையிலும் ஒரு தவறான உதாரணமாகி விட கூடாது என்று வாழ்ந்து காட்டி விட்டு சென்றாரே.!!

❄உனக்காக தன் வாழ்நாள்  நாள் முழுவதும் முன்று வேலை வயிறு நிறை சாப்பாடு இல்லாமல் கஷ்ட பட்டார்களே.!!!

❄யாரால் நாம் சிறந்த சமுதாயமாக(குன் தும் கைரி உம்மத்) ஆக்க பட்டாயோ..!

❄அந்த உத்தம  நபியின் பேச்சை கேட்பது உனக்கு அசிங்கமாக இருக்கிறாதா.!!!

 ❄ஆனால் இந்த விபச்சார உலகம் தாடி வைப்பதை அழகு , பெண்களுக்கு பிடிக்கும், என்று சொன்னால் தாடி வைக்கிறாயே.!!!

❄உனக்கு முளை இருக்கா இல்லை அதையும் அடகு வைத்து  விட்டாயா.???

❄இஸ்லாம் என்ன உங்கள் விளையாட்டு பொருளா.?

❄தெரிந்து கொள் நீ முஸ்லிம் என்று வெறும் பெயரை மட்டுமே சுமக்கிறாய்.!!!

❄இஸ்லாம் சன்மார்க்கத்தை அல்ல.!!!

❄ஒரு சிலர் இருக்கிறார்கள் அவர்கள் வைக்கும் தாடி சுன்னா இருக்கிறதா என்றால்.!!!

❄அசிங்கம் தான் இருக்கிறது.!!

❄முழுமையான தாடி வைக்க சொன்னால் .!!!

❄அங்க கொஞ்சம் , இங்க கொஞ்ச  என்று தாடியை எடுத்து.!!

❄கோமாளி போல் ஒரு தாடியை வைத்து கொண்டு அலையும் கோமாளிகளே.!!!

📜5892.இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்“  இணை வைப்பாளர்களுக்கு மாறு செய்யுங்கள்: தாடிகளை வளரவிடுங்கள். மீசையை ஒட்ட நறுக்குங்கள்.  என இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.  (இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான நாஃபிஉ(ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:  இப்னு உமர்(ரலி) அவர்கள் ஹஜ் அல்லது உம்ராச் செய்தால் தம் தாடியைப் பிடிப்பதுப் பார்ப்பார்கள். (ஒரு பிடிக்கு) மேலதிகமாக உள்ளதை (கத்தரித்து) எடுத்து விடுவார்கள்.
ஷஹீஹ் புகாரி அத்தியாயம் : 77. ஆடை அணிகலன்கள்

🔱அன்பு கொண்ட இஸ்லாமிய சொந்தங்களே

🔱பலர் கிடைக்காத சத்திய மார்க்கம் உங்களுக்கு கிடைத்துள்ளது

🔱உங்களுக்கு இந்த மார்க்கம் கிடைக்க பல தடைகளை தகர்த்து தான் வந்து உள்ளது.!

🔱அல்லாஹ்வின் மார்க்கம் நமக்கு வர நமது நபி செய்த தியாகம் நீ நினைத்து பார் கனவிலும், யார் சொன்னாலும் உன் தாடியை நீ எடுக்க மாட்டாய் .?

🔱மறுமை ஒன்றே நிரந்தரம் ஆனது.!!!

🔱நினைவில் வைத்து கொள்🔱

🔃🔃🔃🔃🔃🔃🔃🔃

🔮 இஸ்லாமிய மார்க்க செய்திகளை அழகிய முறையில் அறிய

♻ வாட்ஸ்அப்பில் எங்கள் செய்தியை பெற 👇

📱 0091- 9994675186

📱 0091- 9629167027

பேஸ்புக்கில் எம்மை தொடர 👇
https://m.facebook.com/Makkalmedia-1684365771847561/?ref=wizard

📢 ⓂAKKAL ⓂEDIA 📢

📮 பதிவு நாள்: 27  MAR 2016

Part of 👇
📡 ECHO DAWAH FOUNDATION 📡

Saturday, 26 March 2016

பொய் சத்தியம் பகுதி 5

📢  ⓂAKKAL ⓂEDIA 📢

💠பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்💠

      🚫பொய் சத்தியம்🚫
              🗯பகுதி 5

💥முறையான சத்தியம்
அடுத்து, முறையான சத்தியத்தை நாம் விளக்கவே தேவை இல்லை.

💥முறையான சத்தியம் செய்ய தடை இல்லை என்பதற்கு போதிய சான்றுகளாக நாம் மேலே குறிப்பிட்ட வசனங்கள், ஹதீஸ்களே அமைந்துள்ளன.

✅எனவே, ஒருவர் பொய் சத்தியம் செய்யக்கூடாது. எதற்கெடுத்தாலும் சத்திய வார்த்தைகளை கூறவும் கூடாது. பயன்படுத்தினால் அவை வீண் சத்தியங்களாகத் தான் கருதப்படும்

🏮சத்தியத்தை முறிக்கலாமா?

💥அவசியமான சந்தர்ப்பங்களில் சத்தியம் செய்யும் நிலை ஏற்பட்டால் சத்தியத்தில் உறுதியாக இருக்க வேண்டும்.

✳ சத்தியத்தை இடையில் முறிந்திட தடை வந்துள்ளது.

மேலும் இதுப்பற்றி 📗அல்குர்ஆன்

இன்னும் நீங்கள் அல்லாஹ்வின் பெயரால் செய்யும் உடன்படிக்கையை நிறைவேற்றுங்கள். அல்லாஹ்வை சாட்சியாக வைத்து சத்தியம் செய்து, அதனை உறுதிப்படுத்திய பின்னர் அச்சத்தியத்தை முறிக்காதீர்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்வதை நன்கறிவான். நீங்கள் (சத்தியத்தை முறிக்கும் விசயத்தில் நூலை நூற்று நன்கு முறுக்கேறிய பின் அதை துண்டு துண்டாக்கிவிடும் (மதிகெட்ட) பெண்ணுக்கு ஒப்பாகி விடாதீர்கள்.
(அல்குர்ஆன்:16:91,92)

🔰ஒரு முறை நபி (ஸல்) அவர்கள் தங்கள் மனைவியரை ஒரு மாதத்திற்கு நெருங்க மாட்டேன் என்று சத்தியம் செய்து விட்டு பின்பு 29வது நாளிலேயே மனைவியாரிடம் செல்கிறார்கள். அருகிலிருந்தோர், இறைத்தூதர் அவர்களே! ஒரு மாதம் முடியவில்லையே! என்று கூற இம்மாதம் 29 நாள் மட்டும் தான் என்று நபி (ஸல்) கூறினார்கள் என்ற கருத்தில் அனஸ், உம்முசலமா, இப்னு அப்பாஸ் (ரலியல்லாஹ{ அன்ஹ{ம்) அவர்களால் அறிவிக்கப்பட்டு புகாரி, முஸ்லிம், அஹ்மதில் பதிவு செய்யப்பட்டுள்ளன.

💥ஹதீஸ்படி சத்தியத்தை நிறை வேற்றுவதில் நபி (ஸல்) அவர்களுக்கும், அவர்களின் தோழர்களுக்கும் இருந்த ஆர்வத்தை நம்மால் விளங்க முடிகிறது.

🚫இருப்பினும் சில வேளைகளில் சத்தியத்தை முறித்திட இஸ்லாம் அனுமதிக்கிறது.

✳அதாவது ஒருவன், நான் இதைத் தவிர வேறு எதையும் வாங்க மாட்டேன் என்று அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்து கூறி விடுகிறான்.

✳ஆனால் அதை விட சிறந்த ஒரு பொருள் அவன் வசம் கிடைக்கிறது. என்றால், தான் செய்த சத்தியத்தை முறித்து விட்டு, அதற்கான பரிகாரம் செய்துவிட்டு, சிறந்த பொருளை வாங்கிக் கொள்ளலாம்.

💠அனைத்து விஷயங்களுக்கும் சத்தியத்தை முறிப்பதில் நாம் கூறிய இந்த உதாரணம் பொருந்தும்.

💥இன்னும் நீங்கள் அல்லாஹ்வைக் கொண்டு சத்தியம் செய்வதனால் நீங்கள் நற்கருமங்கள் செய்தல் இறைபக்தியுடன் நடத்தல், மனிதர்களிடையே சமாதானம் செய்து வைத்தல் போன்றவற்றில் அவனை ஒரு தடையாக செய்து விடாதீர்கள். அல்லாஹ் (அனைத்தையும்) கேட்பவனாகவும், அறிபவனாகவும் இருக்கிறான்.(அல்குர்ஆன்:2:224)

அல்லாஹ் உங்களுடைய சத்தியங்களை (சிலபோது தக்க பரிகாரங்களுடன்) முறித்து விடுவதை உங்களுக்கு ஏற்படுத்தியிருக்கிறான். மேலும், அல்லாஹ் உங்கள் எஜமானன், மேலும் அவன் நன்கறிந்தவன், ஞானம் மிக்கவன். (அல்குர்ஆன்:66:2)

🔰நீ (ஒரு விஷயத்தில்) சத்தியம் செய்து அதைவிட சிறந்ததாக மற்றொன்றை நீ அறிந்தால், அந்த சிறந்ததை செய், உன் (முறித்த) சத்தியத்திற்கு பரிகாரம் செய்! என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

📚அறிவிப்பவர் :- அப்துர்ரஹ்மான் இப்னு ஸமுரா (ரலி) நூல் :- புகாரி, முஸ்லிம், நஸயீ, அபுதாவூத்

🔰உங்களில் ஒருவர் சத்தியம் செய்து, அதைவிட சிறந்ததாக மற்றொன்றை கண்டால் அவர் சத்தியத்திற்கு பரிகாரம் செய்து விட்டு, அந்த சிறந்த செயலை செய்யட்டும் என்று நபி (ஸல்) கூறினார்கள்.

📚அறிவிப்பவர் :-அதீ இப்னு ஹாதிம் (ரலி), அபூஹ{ரைரா (ரலி) நூல் :- முஸ்லிம், அஹ்மத், திர்மிதீ

💠எனவே, சத்தியம் செய்தால் அதில் உறுதியாக இருக்க வேண்டும்.

💠சில நேரங்களில் அவசியம் என்ற நிலை இருப்பின் முறித்துவிடுவதில் தவறில்லை.

🏮சத்தியத்தை முறித்தால்….!

🔰ஒருவர் தான் செய்த சத்தியத்தை முறித்திட வேண்டியது ஏற்பட்டால், அவர் தான் செய்த சத்தியத்திற்கு பரிகாரமாக, பத்து ஏழைகளுக்கு உணவளித்தல் வேண்டும். அல்லது அவர்களுக்கு ஆடைதர வேண்டும். அல்லது ஒரு அடிமையை விடுதலை செய்ய வேண்டும்.

✅இம்மூன்றுக்கும் இயலாது எனில்மூன்று நாட்கள் நோன்பு நோற்க வேண்டும்.

📗அல்குர்ஆன்
சத்தியத்தின் பரிகாரமாவது, நீங்கள் உங்கள் குடும்பத்தினருக்கு கொடுத்து வரும் ஆகாரத்தில் நடுத்தரமானதை – பத்து ஏழைகளுக்கு அளிக்க வேண்டும். அல்லது (அவ்வாறே) அவர்களுக்கு ஆடையளிக்க வேண்டும். அல்லது ஓர் அடிமையை விடுதலை செய்ய வேண்டும். (இதற்கான வசதியை ஒருவன் பெற்றிருக்காவிட்டால், மூன்று நாட்கள் நோன்பு நோற்க வேண்டும். நீங்கள் சத்தியம் செய்யும் பொழுது@ இதுவே உங்கள் சத்தியங்களின் பரிகாரமாகும். உங்கள் சத்தியங்களை (முறித்து விடாமல்) பேணிக்காத்துக் கொள்ளுங்கள். நீங்கள் அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்தும் பொருட்டு அவன் தன் அத்தாட்சிகளை – ஆயத்களை உங்களுக்கு இவ்வாறு விளக்குகின்றான். (அல்குர்ஆன்:5:89)

✳சத்தியம் செய்யும் எண்ணத்துடன், அத்தியாவசிய சந்தர்ப்பங்களில் செய்யப்படும் முறையான சத்தியங்களை முறித்தால் தான் பரிகாரம் காண வேண்டும்.

❎அது அல்லாத மற்ற வீணான சத்தியங்களை செய்தால் பரிகாரம் தேவை இல்லை.

💥இருப்பினும் பொய் சத்தியம் செய்தால் இறைவனிடம் தவ்பா செய்வதைத் தவிர வேறு வழி இல்லை. காரணம் அது மிகப் பெரும் பாவமாகும்.

📗அல் குர்ஆன்

(யோசனையின்றி) நீங்கள் செய்யும் வீணான சத்தியங்களுக்காக அல்லாஹ் உங்களைக் குற்றம் பிடிக்க மாட்டான். ஆனால், உங்களுடைய இதயங்கள் (வேண்டுமென்றே) சம்பாதித்துக் கொண்டதைப் பற்றி உங்களைக் குற்றம் பிடிப்பான். இன்னும் அல்லாஹ் மன்னிப்பவனாக பொறுமையுடையவனாக இருக்கிறான். (அல்குர்ஆன்:2:25)

சத்தியங்களில் வீணானவற்றிற்காக அல்லாஹ் உங்களைக் குற்றம் பிடிக்கமாட்டான். எனினும் (ஏதாவது ஒன்றை) உறுதிப்படுத்தச் செய்யும் சத்தியங்களுக்காக (அவற்றில் தவறினால்) உங்களைப் பிடிப்பான்.(அல்குர்ஆன்:5:99)

💥பொய் சத்தியம் செய்தல் பெரும் பாவமாகும் என்று நபி (ஸல்) கூறியதாக இப்னு உமர் (ரலி) கூறுகிறார்கள்.
📚(புகாரியில் உள்ளதின் சுருக்கம்)

🔰இன்ஷா அல்லாஹ் கூறினால்….!
சத்தியம் செய்யும் போது ஒருவர், அல்லாஹ்வின் மீது சத்தியமாக! இன்ஷா அல்லாஹ் இதைச் செய்வேன் என்று இன்ஷா அல்லாஹ் (அல்லாஹ் நாடினால்) என்ற வார்த்தையை சேர்த்துக் கூறினால் அவர், தான் செய்த சத்தியத்திற்கு மாற்றமாக நடந்து கொண்டாலும் தவறில்லை.

✳அவர் சத்தியம் செய்தாலும் கூட இன்ஷா அல்லாஹ் கூறியதால், அல்லாஹ் நாடவில்லை அதனால் தான் அதைச் செய்யவில்லை என்று கூறிவிட வாய்ப்புண்டு.

🔰நிச்சயமாக என் மனைவியிடம், ஒரே இரவில் (உடலுறவுக்காக) சுற்றி வருவேன். அவர்கள் ஒவ்வொருவரும் இறைவழியில் பாடுபடும் குழந்தையை பெற்றெடுப்பர் என்று அல்லாஹ்வின் நபி சுலைமான் (அலை) அவர்கள் கூறினார்கள். (அருகிலிருந்த) அவரது தோழர் அல்லது மலக்கு, இன்ஷா அல்லாஹ் என்றும் கூறுங்கள் என்று கூறினார். ஆனால் சொல்ல மறந்துவிட்டார்கள். இருப்பினும் அந்த பெண்களில் ஒருவரைத் தவிர மற்ற எவரும் குழந்தை பெறவில்லை. (அந்த ஒரு பெண்ணும்) ஊனமுற்ற குழந்தையைப் பெற்றார் என்று நபி (ஸல்) அவர்கள் கூறிவிட்டு, சுலைமான் (அலை) அவர்கள் மட்டும் இன்ஷா அல்லாஹ் கூறி இருந்தால் சத்தியத்தை முறித்தவராக ஆகமாட்டார்கள். அவருக்கு அவரது தேவையில் ஒரு வழி இருந்திருக்கும் என்று கூறினார்கள்.  

📚அறிவிப்பவர் :- அபூஹுரைரா (ரலி) நூல் :- முஸ்லிம்


💥இஸ்லாம் கூறும் முறை அறிந்து சத்தியம் செய்வோம்.

💠அல்லாஹ்வின் அருளை பெறுவோம்.


🔃🔃🔃🔃🔃🔃🔃🔃

🔮 இஸ்லாமிய மார்க்க செய்திகளை அழகிய முறையில் அறிய

♻ வாட்ஸ்அப்பில் எங்கள் செய்தியை பெற 👇

📱 0091- 9994675186

📱 0091- 9629167027

பேஸ்புக்கில் எம்மை தொடர 👇
https://m.facebook.com/Makkalmedia-1684365771847561/?ref=wizard

📢 ⓂAKKAL ⓂEDIA 📢

📮 பதிவு நாள்: 26 MAR 2016

Part of 👇
📡 ECHO DAWAH FOUNDATION 📡

Friday, 25 March 2016

பொய் சத்தியம் பகுதி 4

📢  ⓂAKKAL ⓂEDIA 📢

💠பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்💠

      🚫பொய் சத்தியம்🚫
              🗯பகுதி 4

  💠வீண் சத்தியம்💠

🔰அடிக்கடி சிலர், அல்லாஹ்வின் மீது சத்தியமாக நான் இதைத் தருகிறேன், செய்கிறேன் என்று வார்த்தைக்கு வார்த்தை சத்தியம் செய்ய வேண்டும் என்ற எண்ணமின்றி அல்லது கோப நிலையில் சத்தியத்திற்கு பயன்படும் வார்த்தைகளை கூறுவர்.

✳சத்தியம் என்பது இதைச் செய்தால் ஒழிய நம்ப மாட்டார்கள் என்ற நிலையில் மட்டுமே செய்யப்பட வேண்டிய ஒன்றாகும்.

✅ எனவே சத்தியம் செய்வதற்கு நிய்யத்|அவசியமாகும்.

💥நிச்சயமாக! செயல்கள் அனைத்தும் எண்ணங்கள் கொண்டே (கவனிக்கப்படும்) என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
📚அறிவிப்பவர் :- உமர் (ரலி) நூல் :- புகாரி

💥எனவே சத்தியம் செய்யும் எண்ணம் (நிய்யத்) இன்றி செய்யப்படும் சத்தியம் அனைத்தும் வீண் சத்தியங்களாகும்.

❌இவைகள் சத்தியம் என்ற கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட மாட்டாது.❌
📗அல் குர்ஆன்

(யோசனையின்றி எண்ணமின்றி) நீங்கள் செய்யும் வீணான சத்தியங்களுக்காக அல்லாஹ் உங்களை குற்றம் பிடிக்கமாட்டான். (அல்குர்ஆன்: 2:22,5:89)

🔰பொய் சத்தியம்
தவறான செயல்களை செய்து, அதை உறுதிப்படுத்த சத்தியத்தை பயன்படுத்துவதும்,

✳பொய்யான ஒரு செய்தியைக் கூறி அது உண்மையானதுதான் என கூற சத்தியத்தை பயன்படுத்துவதும்,

✳ பிறர் பொருளை அபகரிக்க, ஒருவன் மீது அவதூறு கூற, பொய்க்குற்றச் சாட்டுசுமத்த, இப்படி தவறான காரியங்களை நிறைவேற்ற சத்தியத்தை பயன்படுத்துவதும் கூடாது.

✅இது போன்ற நிலைகளில் பயன்படுத்தப்படும் சத்தியமே பொய் சத்தியம் எனக்கூறப்படும்.

💥அல்லாஹ்வினாலும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களாலும் கடுமையாக கண்டிக்கப்பட்ட செயல்பாடுகளில் இதுவும் ஒன்றாகும்.

📗மேலும் அல் குர்ஆன்

“ஒரு சமூகத்தார் மற்றொரு சமூகத்தாரை விட அதிகமானவர்களாக இருக்கிறார்கள் என்றால், நீங்கள் உங்கள் சத்தியங்களை உங்களுக்கிடையில் ஏமாற்றுவதற்கு சாதங்களாக்கிக் கொள்ளாதீர்கள். நிச்சயமாக அல்லாஹ் உங்களை சோதிப்பது எல்லாம் இதன் மூலமாகத்தான்…” (அல்குர்ஆன்:16:92)

நீங்கள் உங்களுக்கிடயில் (சதி, துரோகம்) ஆகியவற்றுக்கு காரணமாக ஆக்கிக் கொள்ளாதீர்கள். (அவ்வாறு செய்தால்) நிறைபெற்ற உங்களுடைய பாதம் சறுகி விடும். (அல்குர்ஆன்:16:94)

🚫யார் அல்லாஹ்விடத்தில் செய்த வாக்குறுதியையும், தம் சத்தியப்பிரமாணங்களையும் அற்ப விலைக்கு விற்கிறார்களோ, அவர்களுக்கு நிச்சயமாக மறுமையில் (யாதொரு) நற்பாக்கியமும் இல்லை. அன்றியும், அல்லாஹ் அவர்களுடன் பேசமாட்டான்.
இன்னும் மறுமையில் அவர்கள் (கருணையுடன் பார்க்கவும் மாட்டான், அவர்களை (பாவத்தை விட்டும் பரிசுத்தமாக்கவும் மாட்டான், மேலும் அவர்களுக்கு நோவினை மிக்க வேதனையும் உண்டு.
(அல்குர்ஆன்:3:77)

🔰(பொய்) சத்தியம் செய்து ஒரு முஸ்லிமுடைய உரிமையை யார் பறிக்கிறானோ, அவனுக்கு அல்லாஹ் நரகத்தை விதியாக்கி விடுவான். மேலும் சுவர்க்கத்தை அவனுக்கு ஹராமாக்கி விடுவான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

📚அறிவிப்பவர் :- அபூஉமாமா (ரலி) நூல்கள் :- முஸ்லிம், அல்முஅத்தா (மாலிக்)

🔰ஒரு முஸ்லிமுடைய பொருளைப் பறித்துக் கொள்வதற்காக யார் பொய்யான சத்தியம் செய்கிறாரோ, அவர் மீது அல்லாஹ் கோபமடைந்த நிலையில் தான் அவர் அல்லாஹ்வை சந்திப்பார் என்று நபி (ஸல்) கூறினார்கள்.

📚அறிவிப்பவர் :- அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊது (ரலி) நூல் :- முஸ்லிம்

🔰அல்லாஹ்விற்கு இணை வைத்தல், பெற்றோரை நோவினை செய்தல், (அநீதமாக) கொலை செய்தல், பொய் சத்தியம் செய்தல் ஆகியவை பெரும் பாவங்களாகும் என்று நபி (ஸல்) கூறினார்கள்.
📚அறிவிப்பவர் :- அப்துல்லா இப்னு உமர் (ரலி) நூல் :- புகாரி

💠வீண் சத்தியம் பற்றி இஸ்லாம் கூறும் விளக்கத்தை பார்த்தோம்.

♦அல்ஹம்துலில்லாஹ்.

💥நாம் சத்தியம் செய்வதின் முக்கியத்துவம் அறிந்து வீண் சத்தியங்களை தவிர்போம்.

 🗯தொடரும்

🔃🔃🔃🔃🔃🔃🔃🔃

🔮 இஸ்லாமிய மார்க்க செய்திகளை அழகிய முறையில் அறிய

♻ வாட்ஸ்அப்பில் எங்கள் செய்தியை பெற 👇

📱 0091- 9994675186

📱 0091- 9629167027

பேஸ்புக்கில் எம்மை தொடர 👇
https://m.facebook.com/Makkalmedia-1684365771847561/?ref=wizard

📢 ⓂAKKAL ⓂEDIA 📢

📮 பதிவு நாள்: 26 MAR 2016

Part of 👇
📡 ECHO DAWAH FOUNDATION 📡

பொய் சத்தியம் பகுதி 3

📢  ⓂAKKAL ⓂEDIA 📢

💠பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்💠

      🚫பொய் சத்தியம்🚫
              🗯பகுதி 3

🏮குர்ஆன் மீது சத்தியம் செய்தல்❌

✳குர்ஆன் என்பது இறைவன் இறக்கிய திருமறை தானே அதில் சத்தியம் செய்தால் தவறா? என்ற எண்ணம் தவறாகும்.

இன்றும் கூட நீதிமன்றங்களில் முஸ்லிம்கள் விசாரிக்கப்படும் போது, அதற்கு முன்பாக குர்ஆன் மீது சத்தியம் செய்யச் சொல்லி கேட்கிறார்கள்.

❎ இவ்வாறு குர்ஆன் மீது சத்தியம் செய்வது கூடாததாகும்.

✅ஆனால் குர்ஆனை இறக்கியருளிய ரப்பின் மீது சத்தியமாக!என சத்தியம் செய்வது தவறில்லை.

📚இதை மேற்கண்ட குதைலத் பின்த் ஸைஃபீ (ரலி) அவர்கள் அறிவிக்கும் ஹதீஸ் மூலம் நாம் விளங்கிக் கொள்ளலாம்.

🏮நபி (ஸல்) அவர்களின் சத்தியம்!

💠நபி (ஸல்) அவர்கள் எவ்வாறு சத்தியம் செய்துள்ளார்கள் என்பதை பின்வரும் ஹதீஸ்கள் தெளிவு படுத்துகின்றன.

🔰நபி (ஸல்) அவர்கள் இதயங்களை புரட்டுபவன் மீது சத்தியமாக! என்ற வார்த்தையை சத்தியம் செய்யும் போது அதிகம் குறிப்பிடுவார்கள்.

📚அறிவிப்பவர் :- இப்னு உமர் (ரலி) நூல்கள் :- இப்னுமாஜா, புகாரி, திர்மிதீ, அபூதாவூத் நஸயீ

🔰முஹமமத் (ஸல்)
சமுதாயமே! அல்லாஹ்வின் மீது சத்தியமாக நீங்கள் (மட்டும்) நான் அறிந்தவற்றை அறிந்தால் அதிகம் அழுவீர்கள். குறைவாக சிரிப்பீர்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
📚அறிவிப்பவர் :- ஆயிஷா (ரலி) நூல் :- புகாரி

🔰நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் இருந்தோம். உமர் (ரலி) அவர்கள் கையை, அவர்கள் பிடித்திருந்தார்கள். அப்போது உமர் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் இறைத்தூதர் அவர்களே! என்னை நான் விரும்புவது தவிர, மற்ற எல்லா விஷயங்களையும் விட, நீங்கள் எனக்கு மிக விருப்பமானவர்கள்! என்று கூறினார்கள். அப்படி அல்ல! என் உயிர் எவன் கையில் இருக்கிறதோ அவன் மீது சத்தியமாக! உம்மையும் விட நான் உமக்கு மிக விருப்பம் உள்ளவராக இருக்க வேண்டும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதும், அல்லாஹ்வின் மீது சத்தியமாக! நீங்களே எனக்கு என்னை விட மிக விருப்பமானவர்கள்! என்று உமர் (ரலி) கூறினார்கள். உமரே! இப்போது தான் (நீர் சரியாகக் கூறினீர்) என்று நபி (ஸல்) கூறினார்கள்.
அறிவிப்பவர் :- அப்துல்லா இப்னுஹிஷாம் (ரலி) நூல் :- புகாரி

💥நபி (ஸல்) அவர்கள் சத்தியம் செய்துள்ளபடி அல்லாஹ்வின் மீதும் அல்லது அல்லாஹ்வின் தன்மைகள் மீதும் சத்தியம் செய்யலாம் என்பதை அறிய முடிகிறது.

🔰நபி (ஸல்) அவர்களிடம் ஒரு கிராமவாசி வந்து இஸ்லாத்தை பற்றி சில கேள்விகள் கேட்டனர். நபி (ஸல்) அவர்கள் அதற்கு விளக்கம் தந்தார்கள். அதன் பின் அந்த கிராமவாசி இதைவிட நான் எதனையும் அதிக மாக்கவும் மாட்டேன் குறைக்கவும் மாட்டேன்|என்று சொன்னார். இதைக் கேட்ட நபி (ஸல்) அவர்கள் இவருடைய தந்தையின் மீது சத்தியமாக! இவர் உண்மை கூறினால் வெற்றியடைந்து விட்டார் என்று குறிப்பிட்டார்கள். (ஹதீஸ் சுருக்கம்)

📚அறிவிப்பவர் :- தல்ஹா இப்னு உபைதுல்லா (ரலி) நூல் :- முஸ்லிம்

💥இந்த ஹதீஸ்படி நபி (ஸல்) அவர்கள் தந்தை மீது சத்தியம் செய்து உள்ளார்களே? என்ற கேள்வி எழலாம்.

💥அல்லாஹ்வை தவிர வேறு எதன் மீது சத்தியம் செய்தல் கூடாது என்று ஹதீஸ்கள் உள்ளதாலும்

✳பின்வரும் ஹதீஸை கவனிக்கும் போது மேற்கூறிய சம்பவம் தடை செய்யப்படுமுன் நடந்தது என்பது தெளிவாகிறது.

📓ஒரு யஹூதி நபி (ஸல்) அவர்களிடம் வந்து நீங்களும் அல்லாஹ்வுக்கு இணை வைக்கிறீர்கள் (எவ்வாறெனில்) கஃபாவின் மீது ஆணையாக! என்றெல்லாம் குறிப்பிடுகிறீர்களே? என்று கேட்டார். அதன்பின் நபி (ஸல்) அவர்கள் (கஃபாவின் மீது ஆணையாக! என்று சொல்லாமல்) கஃபாவின் இறைவன் மீது ஆணையாக! என்று கூறும்படி தோழர்களுக்கு கட்டளை யிட்டனர். (ஹதீஸின் சுருக்கம்)
📚அறிவிப்பவர் :- குதைலா (ரலி) நூல்கள் :- அஹ்மத், நஸயீ, இப்னுமாஜா.

💥ஆரம்ப காலங்களில் அல்லாஹ் அல்லாதவை மீது சத்தியம் செய்யும் பழக்கம் இருந்து பின்பு அது மாற்றப்பட்டது என்பதற்கு இந்த ஹதீஸ் சான்றாகும்.

✅அல்லாஹ்வின் சத்தியம்
அல்லாஹ்வின் மீதும் அவனது தன்மைகள் மீதும் தான், மனிதர்கள் சத்தியம் செய்ய வேண்டும்.

💠நபி (ஸல்) அவர்களும் அப்படித்தான் சத்தியம் செய்துள்ளனர் என்பதை மேலே குறிப்பிட்டோம்.

💥ஆனால் அல்லாஹ்வோ, காலம், குதிரை, அத்தி, ஸைத்தூன், ஸினாய்மலை, மக்கா, முற்பகல், இரவு, சூரியன், சந்திரன், வானம், பூமி, ஆத்மா, நட்சத்திரம், மறுமை நாள் இவைகள் மீது சத்தியம் செய்து 85, 86, 91, 93, 95, 100, 103 ஆகிய அத்தியாயங்கள் மற்றும் பல வசனங்களில் பல்வேறு செய்திகளை கூறுகிறான்.

✳திருமறை நாள்வழிகாட்டி என்பது அனைத்து முஸ்லிம்களும் ஒப்புக் கொண்ட உண்மையாகும்.

✳ திருமறையில் அல்லாஹ் செய்து காட்டியபடி நாம் ஏன் அல்லாஹ் அல்லாத மற்றவைகள் மீது சத்தியம் செய்யக்கூடாது  என சிலர் கேட்கின்றனர்.

☑இதற்குரிய பதிலை அறியும் முன், ஒரு முக்கிய விஷயத்தை விளங்கிக் கொண்டோமானால், பதில் தெளிவாக தெரிந்து விடும்.

🚫சத்தியம் செய்தல் என்பது நம்மை விட உயர்வான ஒன்றைக் காட்டி அதன் மீது சத்தியமாக என்று கூறுவதாகும்.

💥இதன்படி நம்மை விட உயர்ந்த வல்ல அல்லாஹ்வின் மீது தான் நாம் சத்தியம் செய்ய வேண்டும்.

✳ஆனால், அல்லாஹ்வை விட வேறு சிறந்த பொருள் இல்லை. எனவே அல்லாஹ்வே சூரியன், சந்திரன் போன்ற தன் படைப்புகள் மீது சத்தியம் செய்கிறான் என்றால் சத்தியம் செய்தபின் கூறப்படும் சட்டத்தின் முக்கியத்துவத்தை உணர்த்தவே, இந்த அபூர்வ படைப்பின் மீது சத்தியம் செய்து கூறுகிறேன். கியாமத் நாள் உண்மை என நம்புங்கள் என்று குறிப்பிடுகிறான்.

📗இருப்பினும் இறைவன் கூறும் பின்வரும் வசனமே இதற்கு பதிலாகவும் அமையும்.

அவன் செய்பவைபற்றி எவரும் அவனைக் கேட்க முடியாது. ஆனால், அவர்கள் தாம் (அவர்கள் செய்யும் செயல்கள் பற்றி) கேட்கப்படுவார்கள். (அல்குர்ஆன்:21:23)

💥எல்லா வல்லமையும் நிறைந்த அல்லாஹ்வின் செயல் பற்றி அவனது அடிமைகளான நாம் கேள்வி எழுப்ப இயலாது.

✳எனவே, அவனது தூதர் நபி (ஸல்) அவர்கள் இறைவனல்லாத எந்த பொருள் மீதும் சத்தியம் செய்ய அனுமதிக்காததால் நாமும், அல்லாஹ்வின் மீதும் அவனது தன்மைகள் மீதும் மட்டும் சத்தியம் செய்ய வேண்டும்.

🔰சத்தியத்தின் பலவகை
சத்தியம் செய்வது என்பது செய்யத் தகுதியுள்ள செயல் முறைதான், என்றாலும் கூட எதற்கெடுத்தாலும் சத்தியம், எதைப் பேசினாலும் சத்தியம் என்ற நிலை இருக்கக்கூடாது.

💥இவ்வாறு அடிக்கடி சத்தியம் செய்யும் பழக்கம் பொய்யனிடம் மட்டும் இருக்கும் என்பது மறுக்க முடியாத உண்மையாகும்.

🔰இதுபற்றி அல்லாஹ்வும் கூறுகிறான்👇🏻

📓மேலும் இழிவு உள்ளவனான, அதிகம் சத்தியம் செய்யும் ஒவ்வொருவனுக்கும், வழிபடாதீர். (அத்தகையவன்) குறை கூறித்திரிபவன் – கோள் சொல்லிக் கொண்டு நடப்பவன். (அல்குர்ஆன்: 68:10,11)

❌எனவே, எந்த செயல் செய்தாலும், எந்தப் பேச்சு பேசினாலும் சத்தியம் செய்தல் என்பது கூடாது.

✔சத்தியத்தின் வகைகளை பற்றி தெரிந்து கொண்டு விட்டால் சத்தியத்தை அடிக்கடி பயன்படுத்தும் செயல் குறைய வாய்ப்புண்டு.

💥 வீண் சத்தியம், பொய் சத்தியம், முறையான சத்தியம் என்று மூன்று நிலைகளாக சத்தியத்தை பிரிக்கலாம்.

💥இன்ஷா அல்லாஹ் அதைப்பற்றி விரிவாகப் பார்ப்போம்.


            🗯தொடரும்...

🔃🔃🔃🔃🔃🔃🔃🔃

🔮 இஸ்லாமிய மார்க்க செய்திகளை அழகிய முறையில் அறிய

♻ வாட்ஸ்அப்பில் எங்கள் செய்தியை பெற 👇

📱 0091- 9994675186

📱 0091- 9629167027

பேஸ்புக்கில் எம்மை தொடர 👇
https://m.facebook.com/Makkalmedia-1684365771847561/?ref=wizard


📮 பதிவு நாள்: 26 MAR 2016

📢 ⓂAKKAL ⓂEDIA 📢

Part of 👇
📡 ECHO DAWAH FOUNDATION 📡

பொய் சத்தியம் பகுதி 2

📢  ⓂAKKAL ⓂEDIA 📢

💠பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்💠

      🚫பொய் சத்தியம்🚫
              🗯பகுதி 2

💠சத்தியம் செய்தல் ஆதி காலம் முதல் தொன்று தொட்டு வரும் பழக்கங்களில் உள்ளதாகும்.

👆🏻இது மனிதனின் இயற்கை குணாதிசயங்களில் ஒன்றாகவும் உள்ளது.

💥தான் கூறும் வார்த்தைகளை அம்மக்கள் நம்ப மறுக்கிறார்களே என்பதற்காக, இறுதியில் இதன் மீதாவது சத்தியம் செய்து நம்பச் செய்வோம் என்று கருதி, சத்தியம் செய்வதுண்டு.

💥அல்லது சில விஷயத்தை வலுப்படுத்துவதற்காக சத்தியம் செய்வதுண்டு.

☁சில அத்தியாவசிய தேவைகளுக்காக சத்தியம் செய்வதை இஸ்லாம் வலியுறுத்துகிறது.

💥உதாரணமாக ஒருவன் பொருளை மற்றொருவன் அபகரித்துக் கொண்டான்.

🗯பொருளைப் பறி கொடுத்தவனிடம் போதிய சான்று இல்லை. சாட்சிகள் இல்லையாயின் பொருளை தன் பொருள் தான் என உறுதிப்படுத்த சத்தியம் செய்யச் சொல்கிறது இஸ்லாம்.

🗯எமன் நாட்டில் உள்ள நிலத்தில் எனக்கும் இன்னொருவருக்கும் வழக்கு இருந்தது. நான் நபி (ஸல்) அவர்களிடம் இந்த வழக்கை கொண்டு சென்றேன்.

🗯உன்னுடையதுதான் என்பதற்கு உன்னிடம் ஆதாரம் உண்டா? எனக் கேட்டார்கள். நான் இல்லை என்றேன் அப்படியானால் உன்னுடைய எதிரி (யின் கைவசத்தில் அந்த நிலம் இருப்பதால்) அது தன்னுடையதே என்று சத்தியம் செய்யக் கோருவதே வழி என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்படியானால் அவர் சத்தியம் செய்யட்டும் என்று நான் கூறினேன்.
அறிவிப்பவர் :- அஷ்அஸ் (ரலி), நூல் :- முஸ்லிம்

👆🏻இதுபோன்ற மிக அவசியமான சந்தர்ப்பங்களில் சத்தியம் செய்வதை இஸ்லாம் அனுமதித்தாலும், சில ஒழுங்கு முறைகளை இதில் வலியுறுத்துகிறது.

💥சத்தியம் செய்யும் முறை👇🏻


💥சத்தியம் எந்தப் பொருள் மீது வேண்டுமானாலும் எவர் மீது வேண்டுமானாலும் செய்யலாம் என்ற நிலையை இஸ்லாம் வன்மையாகக் கண்டிக்கிறது.

☝🏻அல்லாஹ் மீது மட்டுமே சத்தியம் செய்யக் கட்டளையிடுகிறது.

📓ஒருவர் அல்லாஹ் அல்லாத (மற்ற)வை மீது சத்தியம் செய்தால் அவர் காஃபிராகி விட்டார் என்று நபி (ஸல்) கூறினார்கள்.
அறிவிப்பவர் :-  இப்னு உமர் (ரலி), நூல் :- அபூதாவூத், திர்மிதீ, ஹாகிம்

📓ஒருவர் சத்தியம் செய்தால், அல்லாஹ் மீது தவிர சத்தியம் செய்ய வேண்டாம் என்று நபி (ஸல்) கூறினார்கள்.


அறிவிப்பவர் :- இப்னு உமர் (ரலி) நூல்கள் :- புகாரி, முஸ்லிம்

📓அல்லாஹ்வைக் கொண்டே தவிர சத்தியம் செய்யாதீர்கள் என்று நபி (ஸல்) கூறினார்கள்.
அறிவிப்பவர் :- அபூஹ{ரைரா (ரலி) நூல்கள் :- அபூதாவூத், நஸயீ, இப்னுஹிப்பான், பைஹகீ

📓உமர் (ரலி) அவர்கள் தன் தந்தையைக் கொண்டு சத்தியம் செய்வதைக் கேட்ட நபி (ஸல்) அவர்கள், நிச்சயமாக அல்லாஹ் உங்கள் தந்தைகள் மீது சத்தியம் செய்வதைத் தடை செய்து விட்டான். ஒருவர் சத்தியம் செய்தால், அவர் அல்லாஹ்வைக் கொண்டே சத்தியம் செய்யட்டும். அல்லது மவுனமாய் இருக்கட்டும்| என்று கூறினார்கள்.

அறிவிப்பவர் இப்னு உமர் (ரலி) நூல்கள் :- முஸ்லிம், அஹ்மத், நஸயீ

📓ஒரு யூதப் பெண் நபி (ஸல்) அவர்களிடம் வந்து கஃபாவின் மீது சத்தியமாக|என்றும், அல்லாஹ்வும் நீங்களும் நாடினால்…. என்று உங்களை நோக்கி உங்கள் தோழர்கள் கூறுகிறார்கள். (இதன் மூலம்) நீங்கள் இணை வைக்கிறீர்கள் என்று கூறினார்கள். இதைக் கேட்ட நபி (ஸல்) அவர்கள் கஃபாவின் ரப்பின் மீது சத்தியமாக என்று கூறும்படியும் அல்லாஹ்வும் நாடி, அதன் பின் நீங்களும்  நாடினால்..|என்று தம்மை நோக்கி கூறும் படியும் அவர்களுக்கு (ஸஹாபாக்களுக்கு) கட்டளையிட்டார்கள்.
அறிவிப்பவர் :- குதைலத் பின்த் ஸைஃபீ (ரலி)

நூல்கள் :- அஹ்மத் நஸயீ, இப்னுமாஜா

🗯ஒருவர் தான் சத்தியம் செய்யும் போது, லாத் உஸ்ஸா||வை (மக்கா காஃபிர்களின் தெய்வங்களை) கொண்டு சத்தியம் செய்தால் அவர் (ஈமான் இழந்து விட்டார்.
எனவே) லாயிலாஹ இல்லல்லாஹ்| என்று கூறட்டும்! என்று நபி (ஸல்) கூறினார்கள்.
அறிவிப்பவர் :-  அபூஹ{ரைரா (ரலி) நூல் :- புகாரி

📓சிலைகள் மீதும், உங்கள் தந்தைகள் மீதும் சத்தியம் செய்யாதீர்கள் என்று நபி (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பவர் :- அப்துர் ரஹ்மான் இப்னு ஸமுரா (ரலி) நூல் :- முஸ்லிம்

👆🏻மேற்கொண்ட ஹதீஸ்கள் யாவும் இறைவன் பெயர் கொண்டு மட்டுமே சத்தியம் செய்ய அனுமதிக்கிறது.

🗯எனவே இன்று முஸ்லிம்கள், அந்த அவ்லியா மீது சத்தியமாக! இன்ன நாதா மீது சத்தியமாக! குழந்தை மீது சத்தியமாக! உணவு மீது சத்தியமாக! என்றெல்லாம் சத்தியம் செய்கின்றனர்.

☝🏻அல்லாஹ் அல்லாத எந்தப் பொருளின் மீது சத்தியம் செய்தாலும் அவை கூடாது.

❌அப்படிக்கூறி சத்தியம் செய்வது மாபெரும் குற்றம் என்பதையும் அறியலாம். எனவே அல்லாஹ்வின் பெயர் கூறி மட்டுமே சத்தியம் செய்ய வேண்டும்
   
            🗯தொடரும்...

🔃🔃🔃🔃🔃🔃🔃🔃

🔮 இஸ்லாமிய மார்க்க செய்திகளை அழகிய முறையில் அறிய

♻ வாட்ஸ்அப்பில் எங்கள் செய்தியை பெற 👇

📱 0091- 9994675186

📱 0091- 9629167027

பேஸ்புக்கில் எம்மை தொடர 👇
https://m.facebook.com/Makkalmedia-1684365771847561/?ref=wizard

📢 ⓂAKKAL ⓂEDIA 📢

📮 பதிவு நாள்: 25 MAR 2016

Part of 👇
📡 ECHO DAWAH FOUNDATION 📡

பொய் சத்தியம்

📢  ⓂAKKAL ⓂEDIA 📢

💠பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்💠

         🚫பொய் சத்தியம்🚫

🗯அல்ஹம்துலில்லாஹ்🗯

🏮இன்று நம்மில் பலர் அவர்களின் வாழ்விலே பொய் சத்தியம் செய்வதை வாடிக்கையாக கொண்டுள்ளனர்.

✳குடும்ப வாழ்க்கை, வியாபாரம், நட்பு வட்டாரம், அரசியல், போன்ற அனைத்து நிலைகளிலும் பொய் சத்தியம் செய்கின்றனர்.

👆🏻இதற்கு முக்கிய காரணம் என்னவென்றால் பொய் சத்தியத்தின் பின் விளைவுகளையும், அதற்கு மறுமையில் கிடைக்கும் தண்டனைகளை நாம் உணராமல் இருப்பதுதான்.

💠இஸ்லாம் மார்க்கம் சத்தியத்திற்கு அதிகமாகவே கண்ணியம் வழங்கியுள்ளது.

🔰குர்ஆனில் அல்லாஹ் சத்தியமிட்டு கூறும் இறைவசனங்களும், நபி (ஸல்) அவர்களின் ஏராளமான நபி மொழிகளும் இதற்கு சான்றுகளாக உள்ளன.

♦காலத்தின் மீது சத்தியமாக.

(அல்குர்ஆன் : 103:1)

♦மூச்சுத்திணற விரைந்து ஓடுபவற்றின் (குதிரைகள்) மீது சத்தியமாக-

(அல்குர்ஆன் : 100:1)

♦அத்தியின் மீதும், ஒலிவத்தின் (ஜைத்தூன்) மீதும் சத்தியமாக-

(அல்குர்ஆன் : 95:1)👆🏻இதுபோன்ற இறைவசனங்களை குர்ஆனில் பரவலாக நாம் பார்க்கலாம்.

💥அதேபோல் ஹதீஸ்களையும் நாம் பார்க்க முடியும்.

🔰1894.   என் உயிர் எவன் கைவசம் இருக்கிறதோ அ(ந்த இறை)வன் மேல் ஆணையாக! நோன்பாளியின் வாயிலிருந்து வீசும் வாடை, அல்லாஹ்விடம் கஸ்தூரியின் வாடையை விடச் சிறந்ததாகும்!

அறிவிப்பாளர்:

 அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

📚ஷஹீஹ் புகாரி

✳இதுபோல பரவலாக நபி (ஸல்)அவர்கள் அல்லாஹ்வின் சத்தியமிட்டு கூறுவதை பல ஹதீஸ்களில் நாம் பார்க்கலாம்.

✳அல்லாஹ்வும், ரஸூலும், சத்தியம் செய்வதின்மூலமாகவே சத்தியத்தின் சிறப்பை நாம் புரிந்து கொள்ள முடியும்.

🚫ஆனால் இவ்வளவு மேன்மையான சத்தியத்தை நம் வாழ்வில் தேவையில்லாத காரியங்களுக்கும், பொய்யை நம்ப வைப்பதற்காகவும் நாம் பயன்படுத்துகிறோம்.

🗯நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்👇🏻


🔰2357. அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார்.  ”ஒரு முஸ்லிமின் செல்வத்தை அபகரித்துக் கொள்வதற்காகப் பொய் சத்தியம் செய்பவன் (மறுமையில்) தன் மீது இறைவன் கோபம் கொண்டிருக்கும் நிலையில் அவனைச் சந்திப்பான்“ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். உடனே, “அல்லாஹ்வுடன் செய்த உடன்படிக்கையையும் தம் சத்தியங்களையும் அற்ப விலைக்கு விற்றுவிடுகிறவர்களுக்கு மறுமையில் எந்த நற்பேறுமில்லை. இறுதித் தீர்ப்பு நாளில் அல்லாஹ் அவர்களிடம் பேசவும் மாட்டான்; அவர்களைப் பார்க்கவும் மாட்டான். மாறாக, அவர்களுக்குத் துன்புறுத்தும் தண்டனைதான் இருக்கிறது“

📚ஷஹீஹ் புகாரி.


📗மேலும் அல் குர்ஆன்


📓எந்த சமூகத்தார் மீது அல்லாஹ் கோபம் கொண்டானோ, அவர்களுடன் சிநேகிக்கிறவர்களை (நபியே!) நீர் கவனித்தீரா? அவர்கள் உங்களில் உள்ளவர்களும் அல்லர்; அவர்களில் உள்ளவர்களும் அல்லர். அவர்கள் அறிந்து கொண்டே (உங்களுடன் இருப்பதாகப்) பொய்ச் சத்தியம் செய்கின்றனர்.
(அல்குர்ஆன் : 58:14)

✳பொய் சத்தியம் செய்பவனுக்காக நாளை மறுமையில் கிடைக்கும் தண்டனைகளை தான் மேற்கண்ட, குர்ஆன் வசனமும்,  ஹதீஸூம் எடுத்துரைக்கிரது.

💥மேலும் நாம் செய்யும் மற்றொரு தவறு என்னவெனில்,
ஏதேனும் நிர்பந்தங்களில் சத்தியம் செய்ய நேர்ந்தால்

🔹குர்ஆன் மீதும்

🔹 தாயின் மீதும்

🔹தந்தையின் மீதும்

🔹அவரவர் வாழ்வில் யார் முக்கியமான நபரோ அவர்களின் மீது சத்தியமிடுகிறோம்.

👆🏻இது முற்றிலும் தவறாகும்❌


👆🏻இவ்வாறு செய்வது சத்தியமாகாது. மேலும் பெறும் பாவமாகும். ❌


🔰அனைத்து மக்களிடமும் நேர்ச்சை செய்தல் எப்படி வழக்கமாக உள்ளதோ,
♦அது போல் சத்தியம் செய்தலும் உள்ளது.
♦தன்னை, தான் கூறும் வார்த்தைகளில், செய்யும் செயல்கள் உண்மையானவன் தான் எனக் காட்டிட இறைவன் மீது சத்தியமாக! என் தாயின் மீது சத்தியமாக! என் கண் மீது சத்தியமாக! இந்த வேதத்தின் மீது சத்தியமாக! என் குழந்தை மீது சத்தியமாக! என்று பல்வேறு முறைகளில், பலர் சத்தியம் செய்வர். சிலர் குழந்தைகளை தரையில் போட்டு அதை தாண்டி சத்தியம் செய்வர்.

💠இது போன்ற சத்தியம் செய்யும் பழக்கத்தில் முஸ்லிம்களும் விதிவிலக்கல்ல.

 💥குர்ஆன் மீதும், அன்னத்தின் (உணவின்) மீதும், அல்லாஹ் ரசூலுக்கு பொதுவில் என்றும், சத்தியம் செய்தல் இப்படி பலவிதமாக முஸ்லிம்களிடம் உள்ளன.

👆🏻இந்த சத்தியம் செய்யும் விஷயமாக இஸ்லாம் என்ன சொல்கிறது? என்பதை குர்ஆன் ஹதீஸ் ஒளியில் காண்போம்.

    இன்ஷா அல்லாஹ்

       
          🗯தொடரும்...


🔃🔃🔃🔃🔃🔃🔃🔃🔃🔃🔃

🔮 இஸ்லாமிய மார்க்க செய்திகளை அழகிய முறையில் அறிய

♻ வாட்ஸ்அப்பில் எங்கள் செய்தியை பெற 👇

📱 0091- 9994675186

📱 0091- 9629167027

பேஸ்புக்கில் எம்மை தொடர 👇
https://m.facebook.com/Makkalmedia-1684365771847561/?ref=wizard

📢 ⓂAKKAL ⓂEDIA 📢

📮 பதிவு நாள்:  25 MAR 2016

Part of 👇
📡 ECHO DAWAH FOUNDATION 📡

Thursday, 24 March 2016

இஸ்லாத்தின் பார்வையில் பொய்

📢  ⓂAKKAL ⓂEDIA 📢

💠பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்💠

🚫இஸ்லாத்தின் பார்வையில் பொய்🚫

               🗯பகுதி 2


❌பொய் பேசுவதினால் ஏற்படும்   கேடுகள்👇🏻

📔 'யாரசூலல்லாஹ்  ஒரு முஃமின் விபச்சாரம் செய்வானா? என்று சஹாபாக்களில் ஒருவர் கேட்ட போது, 'செய்ய மாட்டான்' என்று சொல்லிய நபிகளார், 'ஒருவேளை ஷைத்தானுடைய கலைப்பினால் செய்து விடுவான்' என்று கூறினார்கள். பின்பு ஒரு முஃமின் மது அருந்துவானா? என்று கேட்ட போது, 'அருந்த மாட்டான்' என்று சொல்லி விட்டு, ஷைத்தானுடைய ஊசாட்டத்தினால் அருந்திடுவான் என்றார்கள். பின்பு ஒரு முஃமின் திருடுவானா? என்று கேட்டதற்கும் அவ்விதமே பதில் சொன்னார்கள். அதன் பிறகு ஒரு முஃமின் பொய் சொல்வானா? என்று கேட்டபோது, சொல்ல மாட்டான், சொல்ல மாட்டான், சொல்ல மாட்டான் என்று கூறி,📓'நிச்சயமாக பொய்யை இட்டுக் கட்டுவதெல்லாம் அல்லாஹ்வின் வசனங்களை நம்பாதவர்கள் தாம்; இன்னும் (உண்மையில்)அவர்கள் தாம் பொய்யர்கள்(நபியே! நீர் பொய்யரல்ல).' (அல்-குர்ஆன் 16:105) என்ற ஆயத்தை ஓதிக் காட்டினார்கள்.

🔰 நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள்: -

✳முனாபிஃக்கின் அடையாளம் மூன்று:

♦பேசினால் பொய் பேசுவான்,

♦வாக்குறுதியளித்தால் நிறைவேற்ற மாட்டான்

♦நம்பினால் மோசம் செய்வான்.

📚அறிவிப்பவர்:அபூஹுரைரா(ரழியல்லாஹு அன்ஹு), ஆதாரம் புகாரி,முஸ்லிம்.

🔰   நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்)அவர்கள் கூறினார்கள்: -

💥'என் மீது பொய் கூறாதீர்கள்! யாராவது என் மீது பொய்கூறினால் அவர் நரகத்தில் நுழையட்டும்'

📚அறிவிப்பவர் : அலி (ரழியல்லாஹு அன்ஹு), ஆதாரம்:புகாரி.

💥'என்மீது யாராவது பொய் கூறினால்,அவர் நரகத்தை தனது இருப்பிடமாக ஆக்கிக் கொள்ளட்டும்' அறிவிப்பவர்: அபு{ஹரைரா (ரழியல்லாஹு அன்ஹு), ஆதாரம்:புகாரி,முஸ்லிம்.

  ✳'மறுமையில் அல்லாஹ் மூவரை ஏறெடுத்தும் பார்க்க மாட்டான்; அவர்களை கண்ணியப்படுத்தவும் மாட்டான்;. அவர்களுக்கு வேதனை மிக்க தண்டனையுண்டு' நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் இதனை மூன்று முறை திருப்பிக் கூறினார்கள்.

🔰அபூதர் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் கூறினார்கள் :

💥'அவர்கள் அழிந்து நாசமாகட்டும்! யாரஸுல்லுல்லாஹ்' யார் அவர்கள்? நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள்: 'தனது கனுக்காலுக்கு கிழே தனது ஆடையை தொங்க விடுபவனும்,
செய்த உபகாரத்தை பிறருக்கு சொல்லிக் காட்டுபவனும், பொய் சத்தியம் செய்து தனது பொருள்களை விற்பனை செய்பவனும் ஆவான்' என்று நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறியதாக அபூதர் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் அறிவிக்கிறார்கள். -📚ஆதாரம்: முஸ்லிம்.

🔰  நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள்: -

✳'ஒருவர் தாம் காணாத கனவைக் கண்டதாக திட்டமிட்டு சொன்னால், அவர் (மறுமையில்) இரண்டு வாற் கோதுமைகளை (ஒன்றுடன் ஒன்றைச் சேர்த்து) முடிச்சுப் போடும் படி நிர்ப்பந்திக்கப்படுவார்.ஆனால், அவரால் ஒருபோதும் (அப்படிச்) செய்ய முடியாது. (அவருக்கு அளிக்கப்படும் வேதனையும் நிற்காது.)

💥 'தாம் கேட்பதை மக்கள் விரும்பாத நிலையில்' அல்லது 'தம்மைக் கண்டு மக்கள் வெருண்டோடும் நிலையில் 'அவர்களின் உரையாடைலைக் காது தாழ்த்தி (ஒட்டு)க் கேட்கிறவரின் காதில் மறுமை நாளில் ஈயம் உருக்கி ஊற்றப்படும்.

💥(உயிரினத்தின்) உருவப் படத்தை வரைகிறவர் அதற்கு உயிர் கொடுக்கும்படி நிர்ப்பந்திக்கப்பட்டு வேதனை செய்யப்படுவார். ஆனால், அவரால் உயிர் கொடுக்க முடியாது' என்று இறைத்தூதர்( ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள்' என இப்னு அப்பாஸ் (ரழியல்லாஹு அன்ஹு) அறிவித்தார்.

🔰அபூ ஹுரைரா (ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் வாயிலாக அறிவிக்கப்பட்டுள்ள மற்றோர் அறிவிப்பில்
♦'தம் கனவு குறித்து பொய் சொல்கிறவர்…' என்று வந்துள்ளது.

🔰    நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்)அவர்கள் கூறினார்கள்

💥'கேட்பதையெல்லாம் பேசுவதே ஒருவன் பொய் பேசுவதற்கு போதுமானதாகும்'.

📚அறிவிப்பவர்: ஹாஃபிஸ் இப்னு ஆஸிம்( ரழியல்லாஹு அன்ஹு) ஆதாரம்:முஸ்லிம்.

🔰 சமுரா இப்னு ஜுன்தப்( ரழியல்லாஹு அன்ஹு) அறிவிக்கிறார்கள்:-

🏮இறைத்தூதர்( ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் பெரும்பாலும் தம் தோழர்களிடம் 'உங்களில் யாரும் (இன்றிரவு) கனவு கண்டீர்களா?' என்று கேட்பது வழக்கம். அப்போதெல்லாம், அல்லாஹ் யாரை நாடினானோ அவர் (தாம் கண்ட கனவை) அல்லாஹ்வின் தூதரிடம் எடுத்துரைப்பார். (அதற்கு அல்லாஹ்வின் தூதரும் விளக்கமளிப்பார்கள்.

✳ ஒரு(நாள்) அதிகாலை நேரம் (ஃபஜ்ருத் தொழுகைக்குப் பின்) நபி(ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம) அவர்கள் எங்களிடம் (பின்வருமாறு) கூறினார்கள்:

💥இன்றிரவு (கனவில்) இரண்டு (வான)வர் என்னிடம் வந்து என்னை எழுப்பி, 'நடங்கள்' என்றனர். நான் அவர்கள் இருவருடன் நடக்கலானேன். நாங்கள் ஒருக்களித்துப் படுத்துக் கொண்டிருந்த ஒரு மனிதரிடம் சென்றோம். அங்கு அவரின் தலைமாட்டில் இரும்பாலான கொக்கியுடன் ஒருவர் நின்றிருந்தார். அவர் (படுத்திருந்தவருடைய) முகத்தின் ஒருபக்கமாகச் சென்று கொக்கியால் அவரின் முகவாயைப் பிடரி வரை கிழித்தார்; (அவ்வாறே) அவரின் மூக்குத் துவராத்தையும் கண்ணையும் பிடரி வரை கிழித்தார். – அல்லது பிளந்தார் – பிறகு அவர் (படுத்திருந்தவரின்) மற்றொரு பக்கம் சென்று முதல் பக்கத்தில் செய்ததைப் போன்றே செய்தார். இந்தப் பக்கத்தில் செய்து முடிப்பதற்குள் அந்தப் பக்கம் பழையபடி ஒழுங்காக ஆம்விடுகிறது. பிறகு அந்தப் பக்கத்திற்குச் செல்கிறார். ஆரம்பத்தில் செய்ததைப் போன்றே (திரும்பத் திரும்பச்) செய்கிறார். நான், 'அல்லாஹ் தூயவன்! இவர்கள் இருவரும் யார்?' என்று கேட்டேன். அவ்விரு(வான)வரும் என்னிடம், செல்லுங்கள், செல்லுங்கள்' என்றனர்.

♦நான் அவ்விருவரிடமும், 'நேற்றிரவு முதல் நான் பல விந்தைகளைக் கண்டுள்ளேன். நான் கண்ட இவைதாம் என்ன?' என்றேன். அதற்கு அவர்கள் என்னிடம், '(நீங்கள் கண்ட காட்சிகளின் விவரங்களை) உங்களுக்கு நாங்கள் தெரிவிக்கிறோம்.

♦தன்னுடைய முகவாய், மூக்குத் துவாரம், கண் ஆகியவற்றை பிடரிவரை கிழிக்கப்பட்டுக்கொண்டிருந்த மனிதனுக்கு அருகில் நீங்கள் சென்றீர்களே! அந்த மனிதன் அதிகாலையில் தம் வீட்டிலிருந்து புறப்பட்டு ஒரு பொய்யைச் சொல்ல அது (பல்வேறு வழிகளில்) உலகம் முழுவதும் போய்ச் சேரும்.

📚அறிவிப்பவர் : சமுரா இப்னு ஜுன்தப்( ரழியல்லாஹு அன்ஹு, ஆதாரம் : புகாரி (நீண்ட ஹதீஸின் சுருக்கம்)

🔰   அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்( ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் அறிவிக்கிறார்கள்: -

💥'முனாபிஃக்கை நீங்கள் மூன்று வழிகளில் அறியலாம், ♦அவன் பேசினால் பொய் பேசுவான்,
♦ அவன் வாக்குறுதி அளித்தால், அதை நிறைவேற்ற மாட்டான்,
♦அவனை நம்மினால் மோசம் செய்வான்,

📗 மேலும்
அவர்கள் (பின்வரும்) இந்த ஆயத்தை ஓதுங்கள், என்று கூறினார்கள்.📓அவர்களில் சிலர், 'அல்லாஹ் தன் அருட்கொடையிலிருந்து நமக்கு(ச் செல்வத்தை) அளித்ததால் மெய்யாகவே நாம் (தாராளமான தான) தர்மங்கள் செய்து, நல்லடியார்களாகவும் ஆகிவிடுவோம்' என்று அல்லாஹ்விடம் வாக்குறுதி செய்தார்கள். (அல்-குர்ஆன் 9:75)📓எனவே, அவர்கள் அல்லாஹ்விடம் செய்த வாக்குறுதிக்கு மாறு செய்ததாலும் அவர்கள் பொய் சொல்லிக் கொண்டே இருந்ததினாலும் அல்லாஹ், அவர்களுடைய உள்ளங்களில் தன்னைச் சந்திக்கும் (இறுதி) நாள் வரையில் நயவஞ்சகத்தைப் போட்டுவிட்டான். (அல்-குர்ஆன் 9:77)
   📚 ஆதாரம்: முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா.

✳  மூவரிடம் கியாமத் நாளையில் அல்லாஹ் பேசமாட்டான்
♦அவர்களின் பக்கம் கிருபையோடு பார்க்கவும் மாட்டான்.
♦அவர்களை பரிசுத்தப் படுத்தவும் மாட்டான்.
♦மேலும் அவர்களுக்கு துன்புறுத்தும் வேதனையுமுண்டு என்று நபி(ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள்.
 அப்போது அபூதர்(ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் (அப்படியாயின்) நாசமடைந்து மோசம் போய் விடுவார்கள் என்று கூறிவிட்டு,
அல்லாஹ்வின் தூதரே! அவர்கள் யாவர்? என்று கேட்டார்கள்.
♦இடுப்பில் அணியும் வேஷ்டி, கால்சட்டை முதலியவற்றை பெருமை என்ற அடிப்படையில் கரண்டை மொழிக்கும் கீழ் பூமியில் இழுபடும் வகையில் அணிந்து கொண்டிருப்பவர்.

♦ தாம் கொடுத்த தானத்தைப் பிறரிடம்சொல்லிக் காட்டுவர்,

♦பொய் சத்தியம் செய்து தமது வியாபாரப் பொருள்களை விநியோகிப்பவர் என்று கூறினார்கள். (அபூதர் ரழியல்லாஹு அன்ஹு, முஸ்லிம்)

🔰 இப்னு மஸ்ஊத் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் அறிவிக்கிறார்கள்: -

💥நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் அருளினார்கள்: நிச்சயமாக உண்மை என்பது புண்ணியச் செயலுக்கு வழி காட்டுகிறது. புண்ணியச் செயல் சுவனம் செல்ல வழிகாட்டுகிறது. திண்ணமாக ஒரு மனிதன் உண்மையே பேசிக்கொண்டிருகிறான்., இறுதியில் அல்லாஹ்விடத்தில் உண்மையாளன் என்று எழுதப்படுகிறான்!

  💥 மேலும் திண்ணமாக பொய் என்பது தீமை செய்ய வழிகாட்டுகிறது. தீமை செய்வது நரகத்திற்கு வழிகாட்டுகிறது. திண்ணமாக ஒருமனிதன் பொய் பேசிக்கொண்டிருக்கிறான்., இறுதியில் அல்லாஹ்விடத்தில் மகாப் பொய்யன் என்று எழுதப்படுகிறான்!
📚(ஆதாரம் : புகாரி, முஸ்லிம்)
 
📓அன்றியும் அல்லாஹ்வின் மீது பொய்யுரைத்தார்களே (அவர்களுடைய) முகங்கள் கியாம நாளில் கறுத்துப் போயிருப்பதை நீர் காண்பீர். பெருமையடித்துக் கொண்டிருந்த இவர்களின் தங்குமிடம் நரகத்தில் இருக்கிறதல்லவா? (அல்-குர்ஆன் 39:60)

💠அனுமதிக்கப்பட்ட பொய்கள்: -

🔰எந்த மனிதனுக்கும் ஏதாவது ஒருவகையில் நஷ்டமோ அல்லது குழப்பமோ அல்லது தீமையோ ஏற்படாது என்றிருந்தால்,

🔰நபி(ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்)அவர்கள் கூறியதாக அஸ்மா பின்த் யஜித் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் அறிவிக்கிறர்கள்: -

💥மூன்று விஷயங்களைத் தவிர மற்ற விஷயங்களில் பொய் பேசுவது தடை செய்யப்பட்டுள்ளது. (அவைகள்)

♦ஒருவன் தன்  மகிழ்விப்பதற்காக பேசுவது,

♦யுத்தத்தின் போது,

♦மக்களிடையே சமாதானம் ஏற்படுத்துவதற்காக.

📚 (ஆதாரம் திர்மிதி, ஸஹீஹ் அல் ஜாமிவு)

💥இஹ்யாவில் கூறப்பட்டுள்ளது ஒரு நல்ல காரியம் நிறைவேறுவது பொய்யைக் கொண்டும் ஆகலாம்ளூ உண்மையைக் கொண்டும் ஆகலாம் என்றிருந்தால், அந்த இடத்தில் பொய் சொல்வது ஹராமாகும்.

💥பொய் சொல்வது கொண்டு மட்டுமே அதனை நல்லதாக்க முடியும் என்றிருந்து அந்தக் கருமமும் நன்மையானதாக இருந்தால் அப்பொழுது பொய் சொல்வது ஆகும்.

💥பொய் சொல்வது ஹராம்தான். ஆனால் சிலசமயங்களில் பொய் சொல்வது வாஜிபாகவும் ஆகிவிடும்.

💥நம்மிடமுள்ள அமானிதப் பொருளை அநியாயக்காரன் ஒருவன் அபகரிப்பதற்காகக் கேட்கிறான். அப்பொழுது அதை வைத்துக் கொண்டு இல்லையென்று பொய் சொல்வது வாஜிபாகும். அதற்காக சத்தியம் செய்வதும் வாஜிப்.

🏮அல்லாஹ்வும் அவனது ரசூலும் தடுத்துள்ள மறுமையில் வெற்றியைத் தராத பொய்யை விட்டும் நாம் தவிர்த்திருப்போம்.

💠 அல்லாஹ் தௌபீக் செய்வானாக! ஆமீன்


🔃🔃🔃🔃🔃🔃🔃🔃🔃🔃🔃

🔮 இஸ்லாமிய மார்க்க செய்திகளை அழகிய முறையில் அறிய

♻ வாட்ஸ்அப்பில் எங்கள் செய்தியை பெற 👇

📱 0091- 9994675186

📱 0091- 9629167027

பேஸ்புக்கில் எம்மை தொடர 👇
https://m.facebook.com/Makkalmedia-1684365771847561/?ref=wizard

📢 ⓂAKKAL ⓂEDIA 📢

📮 பதிவு நாள்:  24 MAR 2016

Part of 👇
📡 ECHO DAWAH FOUNDATION 📡

Wednesday, 23 March 2016

இஸ்லாத்தின் பார்வையில் பொய்

📢  ⓂAKKAL ⓂEDIA 📢

💠பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்💠

🚫இஸ்லாத்தின் பார்வையில் பொய்🚫

Tuesday, 22 March 2016

கோபமும் ஷைத்தானும்

📢  ⓂAKKAL ⓂEDIA 📢

💠பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்💠


👹கோபமும் ஷைத்தானும்👹

☝🏻இறைவன் மனிதனுக்கு பல இயற்கை  குனங்களை வழங்கி உள்ளான்

👹அதிலே மிகவும் மோசமான குணம் தவிர்க்க  வேண்டிய குணம் கோபமே❗

👹கோபம் ஷைத்தானின்  மிகப்பெரும் ஆயுதம் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

👹உலகத்தில் நிகழும் பல தீமைகள் கோபத்தின் பின்னனியில் தான் நிகழ்கிறது.

😡ஒரு சிறந்த அறிவாளியை கூட கோபம் குருடனாக முட்டாளாக மாற்றிவிடும்.

😡கோபத்தில் ஒருவன் தன்னிலை மறந்துவிடுவான் இன்னும் சொல்லப்போனால் ஒருவகையில் கோபக்காரனும் பைத்தியக்காரனும் ஒன்றுதான்.

😡காரணம் அவன் கோபத்தில் எடுக்கும் பல முடிவுகள் தவறாகவே முடிகிறது.😡பெரும்பாலும் தண்டனை கைதிகளிடம் கேட்டுப்பாருங்கள் என்ன ஏன் தண்டனை என கேட்டால் அவனின் பதில் கோபத்தில் பைத்தியகாரதனமாக செய்து விட்டேன் என பதில் கூறுவான்.


😡மனிதன் அதிகமாக ஷைத்தான் வலையில் மாட்டுவது இரு தருணங்கலில் தான்,

1.கோபத்தில்

2. ஆசையில்

📓ஒரு முறை ஒரு மனிதர் வந்து நபி (ஸல்) அவர்களிடம், 'எனக்கு உபதேசியுங்கள் என்று கேட்டார். கோபம் கொள்ளாதே என்று நபியவர்கள் பதில் சொன்னார்கள். அவர் மீண்டும், மீண்டும் பல முறை உபதேசியுங்கள் என்று கேட்டபோது அப்போதும் நபியவர்கள் கோபம் கொள்ளாதே என்றே பதில் சொன்னார்கள். (அபூஹுரைரா (ரலி) - புகாரி, திர்மிதீ, அஹ்மத்).


✨மனிதன் மிகவும் சாதாரணமாக ஆட்பட்டுவிடுகிற இந்த கோபத்தின் விளைவு பல ஆண்டுகள் நம்மை சங்கடத்தில் ஆழ்த்திவிடுகிறது.

😡அதனால் பல குடும்பங்கள் பல வருடங்களாக பிரிந்து வாழ்கிறது.

✨அதனால் தான் ஒரு சிறந்த அறிவாளிக்கான அடையாளத்தை குறிப்பிடும் நபி (ஸல்) அவர்கள் கோபத்தை கட்டுப்படுத்தும் தன்மையை கூறுகிறார்கள்.

😡இங்கே ஒரு விஷயத்தை அழுத்தமாக புரியவேண்டும்.

✨  கோபத்தை அடக்கவேண்டும் என்பது நம்மால் ஒன்றும் செய்யமுடியாது என்ற நிலையில் அடக்கிக்கொள்வதல்ல.

😡மாறாக தன்னால் கோபப்பட முடியும், அதற்கான எல்லா வழிமுறைகளும் உண்டு என்ற நிலையில் கோபத்தை அடக்கிக் கொள்ள வேண்டும் இதுவே கோபத்தை அடக்கும் முறை ஆகும்.

📓யூதர்களில் சிலர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, அபுல்காசிமே! அஸ்ஸாமு அலைக்க (உமக்கு மரணம் உண்டாகட்டும்!) என்று சற்றே மாற்றி ஸலாம் கூறினர். நபி (ஸல்) அவர்கள், வ அலைக்கும் (நீங்கள் சொன்னது உங்களுக்கும் உண்டாகட்டும்!) என்று (பதில்) சொன்னார்கள். அப்போது அருகில் இருந்த ஆயிஷா (ரலி) அவர்கள், அவர்களை கோபப்பட்டு சபிக்கும் விதமாக, அலைக்குமுஸ்ஸாமு வத்தாமு (உங்களுக்கு மரணமும், இழியும் உண்டாகட்டும்!) என்று (பதில்) சொன்னார்கள். இதைக் கேட்ட நபி (ஸல்) அவர்கள், ஆயிஷாவே! அருவருப்பாகப் பேசுபவளாக இருக்காதே! என்று கண்டித்தார்கள். அதற்கு ஆயிஷா (ரலி) அவர்கள், அவர்கள் சொன்னதை நீங்கள் செவியுறவில்லையா? என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், நான்தான் அவர்கள் சொன்னதற்கு, வ அலைக்கும் (நீங்கள் சொன்னது உங்களுக்கும் உண்டாகட்டும்!) என்று பதில் சொல்லிவிட்டேனே! (அதை நீ கவனிக்கவில்லையா?) என்று திருப்பிக் கேட்டார்கள். (ஆயிஷா (ரலி) - புகாரி, முஸ்லிம்).

👆🏻இங்கே எதிரிகள் கோபத்தை தூண்டும் வகையில் பேசினாலும் பதிலுக்கு நபி அவர்களும் கோபப்பட வில்லை, அதை அழகிய முறையில் மேற்கொண்டு நம் அனைவருக்கும் சிறந்த வழிகாட்டலை காட்டித்தந்துள்ளார்கள்.

😡கோபத்தை அடக்குபவரே இறையச்சமுடையவர் என்று அல்லாஹ் குறிப்பிடுகிறான்👇🏻

📓3:134. (பயபக்தியுடையோர் எத்தகையோர் என்றால்,) அவர்கள் இன்பமான (செல்வ) நிலையிலும், துன்பமான (ஏழ்மை) நிலையிலும் (இறைவனின் பாதையில்) செலவிடுவார்கள்; தவிர கோபத்தை அடக்கி கொள்வார்கள்; மனிதர்(கள் செய்யும் பிழை)களை மன்னிப்போராய் இருப்பார்கள்; (இவ்வாறு அழகாக) நன்மை செய்வோரையே அல்லாஹ் நேசிக்கின்றான்.

☝🏻இறைவனின் இக்கூற்று மிகவும் கவனிக்கதக்கது.

💥கோபத்தை அடக்கிக்கொள்வது இறையச்சத்தின் அடயாளமாய் அல்லாஹ் குறிப்பிட்டுள்ளான்.

💥நம்மில் எத்துனை பேர் இறையச்சமுடையவராய் உள்ளோம் என்பதை நாம் பரிசோதிக்க வேண்டும்.

🔸மேலும்

😡கோபத்தை அடக்கி பொறுமை மேற்கொள்பவர்களோடு இறைவனே அவர்களோடு இருப்பதாக குறிப்பிடுகிறான்.

📓இன்னும் அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் கீழ்படியுங்கள் - நீங்கள் கருத்து வேறுபாடு கொள்ளாதீர்கள்; (அவ்வாறு கொண்டால்) கோழைகளாகி விடுவீர்கள்; உங்கள் பலம் குன்றிவிடும்; (துன்பங்களைச் சகித்துக் கொண்டு) நீங்கள் பொறுமையாக இருங்கள் - நிச்சயமாக அல்லாஹ் பொறுமையுடையவர்களுடன் இருக்கின்றான்.

(அல்குர்ஆன் : 8:46)

👆🏻இப்பொழுது சிந்தியுங்கள் நம்மில் எத்துனை பேரோடு அல்லாஹ் இருக்கிறான்.????????


😡கோபத்தை அடக்கி ஆழ்வோம்.,
அல்லாஹ்வின் அன்பை பெறுவோம்👍🏻


🔃🔃🔃🔃🔃🔃🔃🔃🔃🔃🔃

🔮 இஸ்லாமிய மார்க்க செய்திகளை அழகிய முறையில் அறிய

♻ வாட்ஸ்அப்பில் எங்கள் செய்தியை பெற 👇

📱 0091- 9994675186

📱 0091- 9629167027

பேஸ்புக்கில் எம்மை தொடர 👇
https://m.facebook.com/Makkalmedia-1684365771847561/?ref=wizard

📢 ⓂAKKAL ⓂEDIA 📢

📮 பதிவு நாள்:  22 MAR 2016

Part of 👇
📡 ECHO DAWAH FOUNDATION 📡

Monday, 21 March 2016

வரதட்சனை ஒரு வன்கொடுமை

📢  ⓂAKKAL ⓂEDIA 📢

💠பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்💠

❌வரதட்சனை ஒரு வன்கொடுமை❌

🌍உலகத்தை படைத்த இறைவன் எல்லா உயிரினங்களையும் படைத்து அவற்றை ஒவ்வொன்றையும் ஜோடியாக வாழவைத்துள்ளான்.

✨விலங்குகளாக இருந்தாலும் பறவைகளாக இருந்தாலும் மற்றுள்ள எந்த உயிரினங்களாக இருந்தாலும் அவை தமக்கென்று ஜோடிகளை தேர்ந்தெடுக்கின்றன.

✨இந்த உயிரினங்கள் ஜோடிகளை தேர்ந்தெடுப்பதில் எந்த வித ஒப்பந்தங்கள் இல்லாமல் இயற்கையாக தனது துணையை ஆக்கி கொண்டு சந்தோஷமாக வாழ்கின்றன.

☝🏻இறைவன் படைத்த படைப்புகளில் சிறந்தாக , சிந்தனை ஆற்றலையும் கொடுத்து படைக்கப்பட்ட படைப்பு மனித இனம் மட்டுமே!!

✨இத்தகைய மனிதனும் இவ்வுலகில் வாழ துணையை தேடுகிறான்.

❌எந்த ஒரு மனிதனும் துணையில்லாமல் வாழ முடியாது❌

✨அப்படி அவர்கள் வாழ்ந்தாலும் அவர்களுடைய வாழ்க்கை முழுமை அடையவில்லை என்றே கூறலாம்.

💥இப்படி ஒரு ஆணும் பெண்ணும் வாழ வேண்டி ஏற்படுத்தப்பட்ட பந்தமே திருமணம் என்ன மணவாழ்க்கை.!

👆🏻இந்த திருமணப்பந்தத்தை சரியான முறையில் கற்று தந்த மார்க்கம் இஸ்லாம் என்பதில் எவ்வித மாற்றுக்கருத்தும் இல்லை.

❗ஆனால் இன்றைய காலக்கட்டத்தில்  இந்த திருமணப்பந்தங்கள் ஏதோ வியாபாரம் போல ஆகி விட்டது.

❌இன்னும் சொல்லப்போனால் மாட்டு வியாபாரத்தை விட கேவலமான வியாபாரமாக மாறிவிட்டது.

💥ஒவ்வொரு ஆண்மகனும் ஒவ்வொரு விலைக்கு பேசுக்கின்றன.!!

💥இத்தகைய விலைபேசுவதை தான் இஸ்லாம் நமக்கு கற்று தந்ததா❓

💥இத்தகைய சீர்கேடுகளை உருவாக்கியது யார்❓

💥இன்றைய காலத்தில் குறிப்பாக முஸ்லீம் சமூகத்தில் தான் இந்த வரதட்சனைக் கொடுமை அதிகரித்து வருகிறது.!!!!

💥இஸ்லாமியத் திருமணத்தில் மணப்பெண்ணுக்கு மணமகன் மஹர் கொடுத்துத்தான் திருமணம் முடிக்க வேண்டும் என இஸ்லாம் கூறுகிறது.!

📜நீங்கள் (மணம் செய்து கொண்ட) பெண்களுக்கு அவர்களுடைய மஹர் (திருமணக்கொடை)களை மகிழ்வோடு (கொடையாக) கொடுத்துவிடுங்கள் - அதிலிருந்து ஏதேனும் ஒன்றை மனமொப்பி அவர்கள் உங்களுக்கு கொடுத்தால் அதைத் தாராளமாக, மகிழ்வுடன் புசியுங்கள்.
(அல்குர்ஆன் : 4:4)

👊ஆனால் நாம்  கொடுப்பதற்குப் பதிலாக

🔺நம் உடன் வாழ எல்லாத்தையும் தியாகங்களையும் செய்து

❄திருமணத்திற்கு பிறகு
உங்கள் குழந்தையை சுமக்கிறால்(பிறசவ நேரத்தில் மரணத்தின் எல்லைக்கு சென்று வரும் அளவுக்கு வலி தாங்கி கொள்கிறாள்)

❄எல்லா நேரங்களிலும் உனக்கும் தாயாக இருக்கிறாள்.!!

❄உனக்கும் , உன் குழந்தைக்கும் சம்பளம் இல்லாத வேளைகாரியாக இருக்கிறாள்.!!

❄உனக்காக பல வருடமாக கூட இருந்த சொந்தங்களை விட்டு விட்டு.!!!

❄இதற்கு எல்லாம் நீ கொடுக்கும் பரிசு தான் வரதட்சணை யா??

❄இறைவனுக்கு அடுத்த படியா உன்னை மட்டும் நம்பி வந்த பெண்ணிடம் வரதட்சணை என்று பிச்சைக் கேக்கிறாயே அசிங்கமாக இல்லையா.?

🔶நீ சிந்திக்க வேண்டாமா.?

🔶பணம் மட்டும் உன் குறிகோள் என்றால் அல்லாஹ் சொன்ன வேறு வழி சம்மாதிக்க வேண்டிய தானே.!!!

♻இதை போல் உங்கள் விட்டு பெண்களை பணத்திற்காக விற்பாயா.?

👆🏻இந்த அவல நிலையை  காணும்போது சமுதாயமே வெட்கித் தலைக்குனிய வேண்டியதிருக்கிறது.

♻நீ வரதட்சணை வாங்கி சந்தோசமாக வாழ்கிறாய் என்று நினைக்காதே.!!!

♻வரதட்சணை கொடுமையால் நடக்கும் தற்கொலையின் ஒரு பங்கு உன் மேல் எழுத படுகிறது நினைவு வைத்து கொள்.!!!

💥இஸ்லாம் வரதட்சணையை வன்மையாகக் கண்டிக்கிறது.

💥அதை வாங்குவோரும். கொடுப்போரும் கடும் தண்டனைக்கு ஆளாகின்றனர் என்பதை குர்ஆன் எச்சரிக்கை செய்கிறது.

📓மேலும், அநியாயக்காரர்களுக்கு துன்புறுத்தும் வேதனையை நாம் தயாராக வைத்துள்ளோம். அல்குர்ஆன் (25:37)

💥தனக்கும் பிற குடும்பத்தாருக்கும் நஷ்டத்தை ஏற்படுத்தியவர்களைப் பற்றி அல்குர்ஆன் பின்வருமாறு குறிப்பிடுகிறது.

📓நிச்சயமாக அநியாயக்காரர்கள் நிலையான வேதனையில் இருப்பார்கள் என கூறுகிறது. அல்குர்ஆன் (42:45)

👆🏻வரதட்சணை வாங்குவதின் மூலம் பெண் வீட்டார் எந்த அளவு வேதனை அடைவார்கள் என்பதை நினைவில் வைக்க வேண்டும்.!!!

💥எதிர்கால மணமகன்களே❗❗

💥மனைவியாலும் மனைவியின் குடும்பத்தாராலும் உளமார நீங்கள்  மதிக்கவும் நேசிக்கவும்பட வேண்டுமாயின்.!!

💥இஸ்லாம் வெறுக்கும் வரதட்சணையை ஒவ்வொரு மணமகனும் வெறுத்து மறுத்து விடுவதுதான் ஒரே வழியாகும்.

❌எனவே இலட்சத்திற்காக பேரம் பேசாமல் இலட்சிய வாழ்வுக்காக போராட வேண்டும்👍🏻

👍🏻ஒவ்வொரு முஸ்லிமும் மஹர் கொடுத்து தன்மானத்தோடு தலை நிமிர்ந்து வாழ வேண்டும்👍🏻

☝🏻வல்ல ரஹ்மான் அதற்கு உதவி புரிவானாக❗❗❗

🔃🔃🔃🔃🔃🔃🔃🔃🔃🔃🔃

🔮 இஸ்லாமிய மார்க்க செய்திகளை அழகிய முறையில் அறிய

♻ வாட்ஸ்அப்பில் எங்கள் செய்தியை பெற 👇

📱 0091- 9994675186

📱 0091- 9629167027

பேஸ்புக்கில் எம்மை தொடர 👇
https://m.facebook.com/Makkalmedia-1684365771847561/?ref=wizard

📢 ⓂAKKAL ⓂEDIA 📢

📮 பதிவு நாள்:  21 MAR 2016

Part of 👇
📡 ECHO DAWAH FOUNDATION 📡

Sunday, 20 March 2016

பெருகி வரும் விபசாரம்

📢  ⓂAKKAL ⓂEDIA 📢

💠பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்💠

💢பெருகி வரும் விபசாரம் 💢

📜நீங்கள் விபச்சாரத்தை நெருங்காதீர்கள்; நிச்சயமாக அது மானக்கேடானதாகும். மேலும், (வேறு கேடுகளின் பக்கம் இழுத்துச் செல்லும்) தீய வழியாகவும் இருக்கின்றது.
(அல்குர்ஆன் : 17:32)

♻இன்றைய காலம் விஞ்ஞான காலம் என்று சொல்லுவதை விட.!!!

♻விபச்சார காலம் என. சொல்லுவது பொருத்தமாக இருக்கும்.

♻காலம் மாற மாற விஞ்ஞானம் வளர்ச்சி என்று அடைவதாக சொல்லி கொண்டு

🔹ஆடை அனாச்சாரம்
🔹அசிங்கம்
🔹ஆபாசம்

❇இவைகள் தான் வளர்ச்சி அடைகிறது என்பது மறுக்கமுடியாத உண்மை.!!!!

❇ஒரு சிறந்த சமுதாயமாக ஆக்கபட்ட சமுதாயம் (குன் தும் கைர  உம்மத்)
போல் என்றாவது இந்த சமுகம் வாழ்ந்தது உண்டா.?

🔶பெற்றோர்கள்
 முஸ்லிம் என்ற பெயரில் இருந்ததால்,

🔶 தானும் அதை போல் பெயர் தாங்கிமுஸ்லீம்களாக வாழ்ந்து  கொண்டு இருக்கிறோம்.!!!

💠ஒரு இஸ்லாமிய குடும்பத்தில்.!!!

🔶ஒரு அன்னிய ஆணை தன் மனைவியை ரசிக்க வைத்து வேடிக்கை பார்க்க வைத்து கண்ணால் விபச்சாரம் செய்யவைக்கிறோம்.!!!

🔶தன் சகோதரியை ஒரு ஆணை ரசிக்கவைத்து  அனு பொழுதும் அவன் பற்றி  பேச வைத்து மனத்தில் விபச்சாரம் செய்யவைக்கிறோம்.!!!

🔶தன் பிள்ளைகளுக்கு ஆபாசம் , விபச்சாரம் எது என்பதை கூட சொல்லி கொடுக்காமல்.

🔶விபச்சாரம் நிறைந்த படத்திற்கு முதல் நாளே பால் அபிஷேகம், தோரனம் கட்டி கொண்டாடிகிறார்கள்.!!

🔶இதை கண்டு மகிழ்ச்சி வேறு.!!!

👆🏻இப்படி கண்களால் , மனதால் , கை, கால்கள் முலம் விபச்சாரம் செய்ய நாமே பணம் கொடுத்து அனுப்பி வைப்பது வேதனையான விசயம்.


🗯நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்👇🏻

📓விபசாரத்தில் ஆதமின் மக(ன் மனித)னுக்குள்ள பங்கை இறைவன்
எழுதியுள்ளான்.
அதை அவன் அடைந்தே தீருவான். (மனிதனின் கண்ணும் நாவும்கூட விபச்சாரம் செய்கின்றன.)
கண்ணின் விபச்சாரம் (தவறான) பார்வையாகும்.
 நாவின் விபச்சாரம் (ஆபாசமான) பேச்சாகும். மனம் ஏங்குகிறது; இச்சை கொள்கிறது.
மர்ம உறுப்பு இவை அனைத்தையும் உண்மையாக்குகிறது; அல்லது பொய்யாக்குகிறது.
ஸஹீஹ் முஸ்லிம் அத்தியாயம் : 46.

♻பிற சமூகத்திர்கு  முன் உதாரணமாக இருக்க வேண்டிய நாமே.!!!

👆🏻இந்த கேவளமான விசயத்தை அரங்கேற்றுவது வேதனையாக உள்ளது.

 ♻பெரும்பலான வீடுகளில் மொத்த குடும்பமே  உட்கார்ந்து இந்த ஆபாசத்தை பார்கிறோமே.!!!

❌நம் குடும்பத்திர்க்கு நாமே விபச்சாரத்தை கற்று கொடுக்கிறோமே இது அசிங்கமாக இல்லையா❓

♻இவையேல்லாம் "ஹராமாக" ஏன் தெரியவில்லை.!!!

♻ஏன் என்றால் இதன் பெயர் சுதந்திரம், பொழுது போக்கு என்று  நினைத்து கொண்டதே காரணம்.

 ♻இதை விட பெரிய முட்டாள் தனம் வேறு இருக்கமுடியாது.!!!

🔶பிறகு எப்படி நம் குடும்பத்தினருக்கு மார்க்கப் பற்று வரும்❓

🔶அல்லாஹ் பாதுகாக்க வேண்டும் விபச்சார பற்று தான்
வரும்.!!!!

💠சிந்தியுங்கள்💠

❇எத்தனை பெண்கள் ஹிஜாப் அதன்  நோக்கம் அறிந்து அணிகிறார்கள்❓

❇கண்ணியமாக தன் அழகை தன் கணவன் மட்டும் காட்டவேண்டும் என்று சொல்லி கொடுக்க வேண்டிய கடமை உள்ளவர்களோ.!!

❇அழகு , ஆபாசம், நிறைந்த ஹிஜாபை வாங்கி கொடுத்து

❇அழகை மறைப்பது கூட  அழகாக இருக்க வேண்டும் என்று சொல்லி தன் வீட்டு பெண்களை விபச்சாரம் செய்ய வைப்பதை விட
கேவலம் வேறு இருக்க முடியுமா.?

📜நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

 🔶இரண்டு சாராரை (இன்னும்) நான் கண்டதில்லை. ஒரு சாரார், அவர்களிடம் மாட்டு வால்களைப் போன்ற சாட்டைகள் இருக்கும். அவற்றைக் கொண்டு மக்களை அடித்துக் கொண்டிருப்பர்.

📓இன்னொரு சாரார் பெண்கள் ஆவர்.இவர்கள் ஆடை அணிந்தும் நிர்வாணமாக இருப்பார்கள். தளுக்கு நடை போட்டு ஆண்களை வளைத்துப்போடுவார்கள். அவர்களின் தலைகள் ஒட்டகத்தின் திமில்களைப் போன்று (கொண்டை போடப்பட்டு) இருக்கும். எவ்வளவோ தொலைவுக்கு சொர்க்கத்தின் நறுமணம் வீசும். ஆனால் இவர்கள் அதன் வாடையைக் கூட நுகர மாட்டார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி),
நூல்: முஸ்லிம் 3971

❇கணவன்  , மஹரமான ஆண்களை தவிர பிறருக்கு எந்த வகையிலும் வெளிபடுத்த கூடாது . என்று கட்டளை இடப்பட்ட மார்க்கம்.

📓ஒவ்வொரு கண்ணும் விபச்சாரம் செய்கிறது. ஒரு பெண் நறுமணம் பூசிக் கொண்டு (ஆண்களின்) சபைக்குச் சென்றால் அவள் விபச்சாரம் செய்பவள் என்று நபிகள்நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். நூல் : திர்மிதி 2710

💠"நம்மை ஏவி தீயதை தடுக்கும்" 💠

❇நமது சமுகம் இன்று  விபச்சார நடிகர்கள் பின்னால் சென்று கொண்டு இருப்பது தான் மன வேதனை.

📓இன்னும், ஒர் ஆத்மா மற்றோர் ஆத்மாவிற்கு சிறிதும் பயன்பட முடியாதே (அந்த) ஒரு நாளை நீங்கள் அஞ்சி நடப்பீர்களாக! (அந்த நாளில்) எந்தப் பரிந்துரையும் அதற்காக ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது; அதற்காக எந்தப் பதிலீடும் பெற்றுக் கொள்ளப்பட மாட்டாது; அன்றியும் (பாவம் செய்த) அவர்கள் உதவி செய்யப்படவும் மாட்டார்கள்.
(அல்குர்ஆன் : 2:48)

🔴எந்தவொரு சிபாரிசு ஏற்றுக்கொள்ளபடாத மறுமை நாளை அஞ்சுங்கள்.!!!

🔶இறைவனால் தடை செய்யப்பட்ட  பிறகும் ஒரு தவறை  செய்து விட்டு.!!!

🔶இறைவன் மன்னித்துவிடுவான் என்று சிந்திக்கும் மக்களே .!!

🔶எந்தஒரு தவறையும் செய்யாதீர்கள் என்று கூறும் இறைவன்.!!!

🔶விபச்சாரத்தை மட்டும் நெருங்காதீர்கள் என்று ஏன் கூறினான்❓

♻இதில் இருந்து அறிந்து கொள்ளுங்கள் விபாச்சரத்தை இறைவன் எந்த அளவு "ஹராம்" ஆக்கியுள்ளான் என்று சிந்தியுங்கள்.!!

☝🏻இறைவன் சொல்லுகிறான்👇🏻

📓இன்னும், கியாம நாளில் மிகத் துல்லியமான தராசுகளையே நாம் வைப்போம். எனவே எந்த ஓர் ஆத்மாவும் ஒரு சிறிதும் அநியாயம் செய்யப்படமாட்டாது; மேலும் (நன்மை, தீமையில்) ஒரு கடுகு அளவு எடையிருப்பினும், அதனையும் நாம் (கணக்கில்) கொண்டு வருவோம். அவ்வாறே கணக்கெடுக்க நாமே போதும்.
(அல்குர்ஆன் : 21:47)

💠இன்ஷா அல்லாஹ்💠

❇இனி வரும் காலங்களில் அல்லாஹ்வை அஞ்சி

❇நம் சமூகம் இறை அச்சம் (தக்குவா) உள்ள சமூகமாக மாற வல்ல ரஹ்மான் கிருபை செய்வானாக.!!


🔃🔃🔃🔃🔃🔃🔃🔃

🔮 இஸ்லாமிய மார்க்க செய்திகளை அழகிய முறையில் அறிய

♻ வாட்ஸ்அப்பில் எங்கள் செய்தியை பெற 👇

📱 0091- 9994675186

📱 0091- 9629167027

பேஸ்புக்கில் எம்மை தொடர 👇
https://m.facebook.com/Makkalmedia-1684365771847561/?ref=wizard

📢 ⓂAKKAL ⓂEDIA 📢

📮 பதிவு நாள்: 20 MAR 2016

Part of 👇
📡 ECHO DAWAH FOUNDATION 📡

Saturday, 19 March 2016

பெருகும் கொலைகள்

📢  ⓂAKKAL ⓂEDIA 📢

💠பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்💠

     🏮 பெருகும் கொலைகள் 🏮

🗯அன்பார்ந்த சொந்தங்களே
 இன்று இந்த உலகில் வாழக் கூடிய எந்த நாட்டை சேர்ந்த மக்களாக இருந்தாலும் சரி
 எந்த மதத்தை சார்ந்தவராக இருந்தாலும் சரியே  மனிதாபிமானம் என்பதை  வெளிப்படுத்துபவர்களும் இருக்கின்றார்கள் .

🔘மனிதாபிமானம் என்பது கையாளாகாதவன் செயல்,  அது இந்த காலத்திற்கு ஏற்றது அல்ல என்று அதை வெறுக்க கூடியவர்களும் இதே உலகில் தான் இருக்கிறார்கள்.

🔘இன்று இந்த உலகில் கொலைகள் என்பது நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே போகிறது, பணத்திற்காகவும்,  விளையாட்டிற்காவும் கூட சிலர் கொலை  செய்கிறார்கள்.

🔘சிறியவர் முதல் பெரியவர் வரை  கொலை செய்ய தயங்குவதில்லை.

🔘ஒவ்வொரு நாளும் சின்ன சின்ன விஷயங்களில் ஆரம்பித்து எதற்கு கொலை செய்கிறோம் என்று கூட தெரியாமலேயே கொலை செய்கின்றனர்.

🔹கள்ளக்காதலிற்காக கொலை

🔹பணத்திற்காக கொலை

🔹பாசதிற்காக கொலை

🔹நேசத்திர்க்காக கொலை

🔹மதிப்பிற்காக கொலை

🔹மரியாதைக்காக கொலை

👆🏻இது போன்று காரணங்கள் நீண்டுகொண்டே  போகிறது

🔘தமிழ் நாட்டை எடுத்து கொண்டாலே முன் இருந்ததற்கு இப்பொழுது கொலைகள் அதிகமாகி இருப்பதை நாம் தெளிவாக  அறியலாம்.

🔘தினசரி நாம் இதை பார்த்து கொண்டு இருக்கிறோம் ஆனால் அல்லாஹ்வுடைய தூதர் எச்சரித்த மறுமை நாளின் அடையாளங்களில் ஒன்று தான் இந்த கொலைகள் பெருகி விடும் என்பதை நாம் நினைவு கூற்வது  கிடையாது.

 ☝🏻அல்லாஹ் நம்மை பாதுகாக்க வேண்டும் .

🗯எதற்க்காக  இந்த உலகிற்கு நாம் வந்தோம் என்பதை மறந்துவிட்டோமா❓

🗯அல்லது மறுமை நாளை மறந்து விட்டோமா❓


🔘எம் தூதர் கூறினார்களே கொலை பெருகி விடும்,  கொலை செய்தவருக்கு அவனை ஏன் கொலை செய்தோம் என்று தெரியாது,கொலை செய்யப்பட்டவர்க்கும் தெரியாது

👆🏻இன்று பார்க்கிறோமா இல்லையா❓

🗯முஸ்லிம் சமுகமே❕

🔘இன்று மறுமை நாள் வராது நாளை வராது என்று எண்ணி கொண்டு இருந்தால் கேடு தான்

☝🏻அல்லாஹ் தன் திருமறையில் கூறுவதை பாருங்கள்👇🏻

📓எனினும் மனிதன் தன் எதிரே வர விருப்பதை (கியாம நாள்) பொய்ப்பிக்கவே நாடுகிறான்.
(அல்குர்ஆன் : 75:5)

📓கியாம நாள் எப்போழுது வரும்?” என்று (ஏளனமாகக்) கேட்கிறான்.
(அல்குர்ஆன் : 75:6)

❌வேண்டாம் மனிதா வேண்டாம்❌

☝🏻அல்லாஹ் கொடுத்த அருளை நினைத்து பாருங்கள் யாரும் தப்ப முடியாத அந்த நாளில் அல்லாஹ்விடம் சென்றடைவோம் என்பதை மறவாதீர்கள்.

📓4:93. எவனேனும் ஒருவன், ஒரு முஃமினை வேண்டுமென்றே கொலை செய்வானாயின் அவனுக்கு உரிய தண்டனை நரகமே ஆகும். என்றென்றும் அங்கேயே தங்குவான். அல்லாஹ் அவன் மீது கோபம் கொள்கிறான்; இன்னும் அவனைச் சபிக்கிறான். அவனுக்கு மகத்தான வேதனையையும் (அல்லாஹ்) தயாரித்திருக்கிறான்.

🗯அநீதி இழைக்கப்பட்ட மக்களுக்கு கொலை செய்வது சரியான தீர்வாகாது.

👍🏻பொறுமை காக்கவேண்டும்.

🗯கொலையைவிட அல்லாஹ் பெரிய ஆயுதத்தை கையில் கொடுத்துள்ளான்.

🔘அந்த ஆயுதம் வேறெதுவுமில்லை அநீதம் இழைக்கப்பட்டவரின் துஆ ஒப்புக் கொள்ளபடுவதுதான்.

🗯இங்கே நபி அவர்களின் அழகிய முன்மாதிரியாக ஒரு நபிமொழி தொகுப்பை காணலாம்.

📓6394. அனஸ்(ரலி) அறிவித்தார்.  நபி(ஸல்) அவர்கள் ஒரு படைப் பிரிவை (நஜ்தை நோக்கி மார்க்கப் பிரசாரத்திற்காக) அனுப்பி வைத்தார்கள். அவர்களுக்கு “குர்ரா“ (குர்ஆன் அறிஞர்கள்) என்று கூறப்படும். அவர்கள் அனைவரும் கொல்லப்பட்டனர். இவர்களுக்காக நபி(ஸல்) அவர்கள் கவலைப் பட்டதைப் போன்று வேறெதற்காகவும் அவர்கள் கவலைப்பட்டதை நான் பார்த்ததில்லை. எனவே, ஒரு மாதம் ஃபஜ்ர் தொழுகையில் “குன}த்“ (எனும் சிறப்பு துஆ) ஓதிப் பிரார்த்தித்தார்கள். மேலும், “உஸய்யா குலத்தினர் அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் மாறு செய்துவிட்டனர்“ என்றும் சொன்னார்கள்.
ஷஹீஹ் புகாரி.

👆🏻இந்த நேரத்தில் நபி (ஸல்) அவர்கள் கோபத்தின் உச்சநிலைக்கு சென்றாலும் பொறுமைகாத்து பஜர் தொழுகையின் போது துஆ செய்தார்கள்.

🔹காரணம் என்னவெனில்❕❕

📓2448. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.  அநீதியிழைக்கப்பட்டவரின் சாபத்திற்கு (உங்களால் அநீதிக்கு ஆளானவர் இறைவனிடம் உங்கள் அநீதியைக் குறித்து முறையிட்டு உங்களுக்குக் கேடாகப் பிரார்த்தனை புரிபவதைப் பற்றி) அஞ்சுங்கள். ஏனெனில், அதற்கும் அல்லாஹ்வுக்கும் இடையே எந்தத் திரையும் இல்லை” என்று நபி(ஸல்) அவர்கள் முஆத்(ரலி) யமன் நாட்டுக்கு (ஆளுநராக) அனுப்பி வைத்தபோது கூறினார்கள்.
ஷஹீஹ் புகாரி.

👍🏻நபி (ஸல்) அவர்கள் எவ்வாறு துஆவின் மூலம் வெற்றிகண்டார்களோ அதேபோல் நாமும் வெற்றிகண்டால் உலகிலே கொலைகள் இல்லாமல் எங்கும் அமைதி நிலவும் .


➖♻➖♻➖♻➖♻➖♻➖


🔮 இஸ்லாமிய மார்க்க செய்திகளை அழகிய முறையில் அறிய

♻ வாட்ஸ்அப்பில் எங்கள் செய்தியை பெற 👇

📱 0091- 9994675186

📱 0091- 9629167027

பேஸ்புக்கில் எம்மை தொடர 👇
https://m.facebook.com/Makkalmedia-1684365771847561/?ref=wizard

📮 பதிவு நாள்:  19 MAR 2016

📢 ⓂAKKAL ⓂEDIA 📢

Part of 👇
📡 ECHO DAWAH FOUNDATION 📡

Friday, 18 March 2016

மகளிர் தினம் ஓர் பார்வை பகுதி- 15

📢  ⓂAKKAL ⓂEDIA 📢

💠பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்💠

🍀மகளிர் தினம் ஓர் பார்வை🍀

          பகுதி- 1⃣5⃣

   
👩🏻 பெண்ணுரிமை 👩🏻


🌪1400 வருடங்களுக்கு முன்பே நமது முஹம்மது நபி (ஸல்)அவர்கள் பெண்களுக்கு முழு உரிமைகளை வழங்கிய மார்க்கம் இஸ்லாம் என்பதில் ஐய்யமில்லை.

✨அன்று முதல் இன்று வரை அனைத்திலும் பெண்களுக்கு இஸ்லாம் முழுமையாக சுதந்திரத்தை வழங்கி உள்ளது.

💢இதுவரை இஸ்லாத்தின் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளையும், அதற்கான விளக்கங்களையும், சுருக்கமாக பார்த்தோம்.

💢இஸ்லாம் மார்கம் ஒவ்வொரு நூற்றாண்டுகளிலும் சுமத்தப்பட்டுள்ள பல குற்றச்சாட்டுகளை வென்றுள்ளது.

🍃இதுவே இஸ்லாம் உண்மையான மார்க்கம் என்பதற்க்கு தெளிவான சான்றாகும்.

🍃நம் மார்க்கம் குறைகளற்ற நிறைவான மார்க்கமாகும்.

🎁உலக இறுதி நாள் வரை யாராலும் இதில் குறைகான முடியாது என்பதை நாம் ஈமான் கொள்ள வேண்டும்.

⚡நம் சகோதர, சகோதரிகள் அனைவரும் எச்சரிக்கையாக குற்றச்சாட்டுகளை உற்றுநோக்கவேண்டும்.

⚡இல்லையென்றால் நம் ஈமான் பறிபோகும் என்பதில் துளியும் சந்தேகமில்லை.

💠இன்று நடைமுறையில் பெரியோர்கள், வாலிபர்கள், குடும்ப பெண்கள், வயது வந்த பெண்கள், அனைவருமே எளிதில் ஏமாறுவதை பார்க்கிறோம்.

💠குற்றச்சாட்டுகள் ஷைத்தான் நம் ஈமானுக்காக விரிக்கும் வலை, ஏமாந்துவிட்டால் ஈமானை இழந்து கைசேதப்படுவோம், அல்லாஹ் அத்தகைய நிலையைவிட்டு நம்மை பாதுகாக்க வேண்டும்.


📓மேலும் அவர்கள் இந்தக் குர்ஆனை ஆராய்ந்து பார்க்க வேண்டாமா?

📖(அல்குர்ஆன் : 47:24)

⚠குற்றச்சாட்டுகளை கூறும்போது குர்ஆனை ஆராய்ந்து பாருங்கள்.

⚠குற்றச்சாட்டுகளை கூறும் எங்கள் மாற்றுமத சகோதரர்களே வதந்திகளை பரப்பாமல் குர்ஆனை ஆய்வு செய்யுமாறு இத்தொடர் பதிவின் மூலம் கேட்டுக்கொள்கிறோம்.

🍃அல்லாஹ் நம் அனைவரையும் நேர்வழியில் நிலைபெறச் செய்வானாக.

 💠தொடரும்💠


➖♻➖♻➖♻➖♻➖♻➖


🔮 இஸ்லாமிய மார்க்க செய்திகளை அழகிய முறையில் அறிய

♻ வாட்ஸ்அப்பில் எங்கள் செய்தியை பெற 👇

📱 0091- 9994675186

📱 0091- 9629167027

பேஸ்புக்கில் எம்மை தொடர 👇
https://m.facebook.com/Makkalmedia-1684365771847561/?ref=wizard

📮 பதிவு நாள்:  18 MAR 2016

📢 ⓂAKKAL ⓂEDIA 📢

Part of 👇
📡 ECHO DAWAH FOUNDATION 📡

Thursday, 17 March 2016

மகளிர் தினம் ஓர் பார்வை பகுதி- 14

📢  ⓂAKKAL ⓂEDIA 📢

💠பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்💠

🍀மகளிர் தினம் ஓர் பார்வை🍀

          பகுதி- 1⃣4⃣

   
👩🏻 பெண்ணுரிமை 👩🏻


🏮இன்று ஹிஜாப் என்பதை அணிந்ததன் காரணமாகத்தான் பெண்களின் கல்விக்கு தடையாக உள்ளதாகக் கூறப்படுகிறது.

❎இந்தக்கூற்றை ஒரு போதும் ஏற்றுக்கொள்ள முடியாது.

♦சற்று சிந்தித்துப்பாருங்கள்♦

ஆடைக்கும் பெண்களின் முன்னேற்றத்திற்கும் ஏதாவது சம்மந்தம் உண்டா❓

✳வேதியல் துறையில் முகம் வரை மறைத்து ஆராய்ச்சி செய்து வெற்றிப்பெறும்  போது

✳சீக்கியர்கள் தலை முழுவதையும் மறைத்து செயல்களில் ஈடுபடும்போது,

✳கிறிஸ்துவ பாதிரிய பெண்கள் தலையில் அங்கி அணிந்து செயல்பட்டு முன்னேறும் போது

✔முஸ்லீம் பெண்களின் ஹிஜாப் மட்டும் எப்படி முன்னேற்றத்தை தடுக்கும்❓
சிந்தித்துப்பாருங்கள்

 🔰மேலே சொன்ன எடுத்துக்காட்டுகள் தெளிவுப்படுத்துவது ஆடைக்கும் பெண்களின் முன்னேற்றத்திற்கும் சம்மந்தம் இல்லை என்பதே

💈இயற்கையில் ஆண்கள் பெண்களை ரசிக்கக் கூடியவர்களாகவும், பெண்கள் ஆண்களை ரசிக்கக் கூடியவர்களாகவும் படைக்கப் பட்டுள்ளதை நாம் அனைவரும் அறிந்ததே.

💈இருப்பினும் இரு பாலரின் ரசனைகளும் வித்தியாசமானவை என்பதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.

👩🏻பெண்களின் ரசனை  ஆண்களின் உடலுறுப்புக்களின் கவர்ச்சியில் அவர்களின் ரசனை செல்வது கிடையாது.

👆🏻இதன் காரணமாகத் தான் ஆண்கள் எவ்வளவு குறைந்த அளவு ஆடையுடன் காணப்பட்டாலும் பெண்கள் பார்த்து ரசிப்பதில்லை.

💈திரும்பப் பார்க்க வேண்டும் என்று அவர்கள் விரும்புவதில்லை.

🔸ஆனால்🔸

👤ஆண்களுக்கு இயற்கையில் அவ்வாறு கிடையாது பெண்களின் அழகை ரசிக்கும் தன்மை இயற்கையிலே உள்ளது என்பதை எவரும் மறுக்க முடியாது.

💈அடுத்தவர் பார்த்து ரசிக்க வேண்டும் என்ற வக்கிர எண்ணத்திற்கு சுதந்திரம் எனப் பெயர் சூட்டுவதை ஒப்புக்கொள்ள முடியாது.

👤ஆண்கள் குறைவான அளவு மறைத்தாலும் கேடுகள் ஏற்படாது👍🏻

👍🏻அவ்வாறு இருந்தும் ஆண்கள் நிறைவாக ஆடை அணிந்து முன்னேறுகிறார்கள்👍🏻

❌குறைவான அளவு ஆடையால் அடுத்தவரைப் பாதிக்கும் உடலமைப்புக் கொண்ட பெண்கள் நேர் மாறாக நடப்பது தான் நமக்கு வியப்பாகவுள்ளது.

♦இன்னொன்றையும் இங்கே நாம் குறிப்பிட வேண்டும்.

✳ஹிஜாப் என்பது குறிப்பிட்ட நிறம், மற்றும் வடிவத்திலானது அல்ல. எந்த நிறத்திலும், உடலை இறுக்கி காட்டும் நிலை தவிர மற்ற வடிவத்தில்  இருக்கலாம். முகம், முன் கை தவிர மற்ற பகுதிகளை அது மறைக்கும் வகையில் இருக்க வேண்டும் என்பதே விதியாகும்.

✳கீழ்த்தரமான எண்ணம் கொண்ட ஆண்களிடமிருந்து பெண்களைப் பாதுகாத்திடவும், சமூகத்தில் ஒழுக்கம் நிலை பெறவும் தான் ஹிஜாப் என்பது இஸ்லாத்தில் வலியுறுத்தப் பட்டுள்ளது.


✳மேலை நாடுகளில் வழங்கப்பட்ட ஆடை சுதந்திரம் ஏற்படுத்திய விளைவுகளைக் கண்ட பிறகும் எவரும் ஹிஜாபைக் குறை கூற முடியாது

🔰எனவே நம் இஸ்லாத்தின் வளர்ச்சிக்கு களங்கம் ஏற்படுத்தவும்,
இஸ்லாத்தின் மீது குறைகளை காண வேண்டும் என்ற நோக்கத்துடனனும் இத்தகைய குற்றச்சாட்டுகள் கூறப்டுகிறது.

✔இஸ்லாமிய பெண்கள் ஹிஜாப் ஒரு போதும் முன்னேற்றத்தை தடுக்காது என்பதை புரிந்துக்கொள்ள வேண்டும்.

🎁இன்ஷா அல்லாஹ்


        💈தொடரும்💈
➖♻➖♻➖♻➖♻➖♻➖


🔮 இஸ்லாமிய மார்க்க செய்திகளை அழகிய முறையில் அறிய

♻ வாட்ஸ்அப்பில் எங்கள் செய்தியை பெற 👇

📱 0091- 9994675186

📱 0091- 9629167027

பேஸ்புக்கில் எம்மை தொடர 👇
https://m.facebook.com/Makkalmedia-1684365771847561/?ref=wizard

📮 பதிவு நாள்:  17 MAR 2016

📢 ⓂAKKAL ⓂEDIA 📢
Part of 👇
📡 ECHO DAWAH FOUNDATION 📡

மகளிர் தினம் ஓர் பார்வைபகுதி- 13

📢  ⓂAKKAL ⓂEDIA 📢

💠பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்💠

🍀மகளிர் தினம் ஓர் பார்வை🍀

          பகுதி- 13

   
👩🏻 பெண்ணுரிமை 👩🏻

🔹இஸ்லாம் பெண்களை கருப்பு அங்கி அணியும் படி கட்டாயப்படுத்தி பெண் சுதந்திரத்தை பறிக்கிறது என இஸ்லாத்தை விளங்காத பலர் குற்றச்சாட்டை கூறுகிறார்கள்.


💈ஹிஜாப் என்பது பெண்களுக்குக் கூடுதல் சுமையாகவும், அவர்களது உரிமையைப் பறிப்பதாகவும், அவர்களது தனிப்பட்ட சுதந்திரத்தில் தலையிடுவதாகவும் அமைந்துள்ளது இஸ்லாத்தை விளங்காதவர்கள்  கூறுகிறார்கள்.

❌எப்படியும் வாழலாம் என்று கருதும் பெண்களும் இந்தப் போலித் தனமான சுதந்திரத்தில் மயங்கி விடுகின்றனர்.

🔸ஹிஜாப் 🔸

💈என்பது உண்மையில் பெண்களைக் கௌரவிப்பதற்காகவும், அவர்களின் பாதுகாப்புக்காகவும் ஏற்படுத்தப்பட்டதே தவிர அவர்களது உரிமையைப் பறிப்பதற்காக ஏற்படுத்தப்பட்டது இல்லை என்பதை நாம் விளங்க வேண்டும்.

👆🏻இது பற்றி விளக்குவதற்கு முன்னால் இவர்களின் போலித்தனத்தையும் இவர்கள் தங்களின் கூற்றுக்குத் தாங்களே முரண்படுவதையும் இனம் காட்ட வேண்டியுள்ளது.

💈ஹிஜாப் பெண்களின் சுதந்திரத்தில் தலையிடுவது என்றும் கூடுதல் சுமை எனவும் கூறுவோர் தங்கள் கூற்றில் உண்மையாளர்களாக இருந்தால் என்ன செய்ய வேண்டும்❓

👔ஆடை விஷயத்தில் ஆண்களுக்கு வழங்கப்பட்டிருக்கும் அதே சுதந்திரத்தை அவர்கள் பெண்களுக்கும் அளிக்க வேண்டும் அல்லவா  ஆனால் அவ்வாறு அளிக்கப்படுகிறதா என்றால் இல்லை என்று தான் கூற முடியும்.


👤 ஒரு ஆண் சட்டை பனியன் போன்ற மேலாடை எதுவுமின்றி வெறும் அரை நிக்கர் மட்டும் அணிந்து தனது வேலைகளைப் பார்க்கிறான் பலர் முன்னிலையில் இந்தக் கோலத்தில் இருக்கிறான்.

 💈அதே உழைக்கும் வர்க்கத்தைச் சேர்ந்த பெண் ஒருத்தி மேலாடை ஏதுமின்றி பணிபுரியவோ, பலருக்கும் காட்சி தரவோ அனுமதிக்கப்படுவதில்லை.

💈அன்னிய ஆண்கள்  முன்னிலையில் மட்டுமின்றிக் குடும்பத்து ஆண்கள் முன்னிலையில் கூட இந்த நிலையில் பெண்கள் காட்சி தருவது கிடையாது.

💈ஏன் குடும்பத்துப் பெண்கள் முன்னிலையில் கூட அவ்வாறு காட்சி தர அனுமதிக்கப்படுவது கிடையாது.

💈முற்போக்குவாதிகள் உட்பட எவருமே இதை அனுமதிக்க மாட்டார்கள்.

👤ஆண்களை விடப் பெண்களிடம் மறைக்கப்பட வேண்டிய பகுதிகள் கூடுதலாக உள்ளன என்பதை அப்பெண்களும் உணர்ந்துள்ளனர்

👤 ஆண்களும் உணர்ந்து உள்ளனர் என்பதற்கு இந்தப் போக்கு ஆதாரமாக அமைந்துள்ளது.

💈ஹிஜாபை விமர்சனம் செய்பவர்களிடம் நாம் கேட்கிறோம்; ஆணுக்குப் பெண் சரி நிகர் சமானம் என்பது இப்போது எங்கே போயிற்று❓

👩🏻பெண்களின் சுதந்திரம் இப்போது என்னவாயிற்று❓

👍🏻முழு அளவுக்கு இல்லையானாலும் ஓரளவுக்கு இவர்களும் ஹிஜாபை வற்புறுத்தவே செய்கின்றனர் என்பது இதன் மூலம் தெளிவாகின்றது.

👩🏻பெண்கள் ஆண்களை விடக் கூடுதலான பாகங்களை மறைக்க வேண்டும் என்பதை தங்களது நடவடிக்கையின் மூலம் இவர்கள் ஒப்புக் கொள்கிறார்கள் என்பது நிதர்சனம்.


💈மறைக்கும் அளவு எது என்பதில் தான் நமக்கும் அவர்களுக்குமிடையே கருத்து வேறுபாடு சரி நிகர் சமானம் என்பதிலோ, பெண்களின் சுதந்திரம் என்பதிலோ அல்ல.

💈ஏனெனில் அவர்களும் கூட ஆண்களுக்கு இருக்கும் அதே அளவு சுதந்திரத்தை இந்த விஷயத்தில் பெண்களுக்கு வழங்கி விடவில்லை.

💈இனி ஹிஜாப் எவ்வாறு பெண்களுக்குப் பாதுகாப்பாகவும், அவர்களைக் கவுரவிப்பதாகவும் அமைந்துள்ளது என்பதை அடுத்த தொடரிலே காண்போம்

இன்ஷா அல்லாஹ்.. 💠தொடரும்💠


➖♻➖♻➖♻➖♻➖♻➖


🔮 இஸ்லாமிய மார்க்க செய்திகளை அழகிய முறையில் அறிய

♻ வாட்ஸ்அப்பில் எங்கள் செய்தியை பெற 👇

📱 0091- 9994675186

📱 0091- 9629167027

பேஸ்புக்கில் எம்மை தொடர 👇
https://m.facebook.com/Makkalmedia-1684365771847561/?ref=wizard

📮 பதிவு நாள்:  17 MAR 2016

📢 ⓂAKKAL ⓂEDIA 📢
Part of 👇
📡 ECHO DAWAH FOUNDATION 📡

Wednesday, 16 March 2016

🍀மகளிர் தினம் ஓர் பார்வை🍀 பகுதி- 12

📢  ⓂAKKAL ⓂEDIA 📢

💠பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்💠

🍀மகளிர் தினம் ஓர் பார்வை🍀

          பகுதி- 12

   
👩🏻 பெண்ணுரிமை 👩🏻


🌀✨இஸ்லாமிய வாரிசுரிமைச் சட்டத்தில் ஆண்களுக்கு இரு பங்குகளும் பெண்களுக்கு ஒரு பங்கும் என்று கூறப்பட்டுள்ளது.

👆🏻இந்தச் சட்டம் பெண்களுக்கு அநீதி இழைக்கின்றது என்பதும் இஸ்லாத்தை சரியாக விளங்காத சிலர் கூறும் குற்றச் சாட்டுகளில் ஒன்றாகும்

💈அதை நாம் தெளிவாக ஆராய்ந்தால் ஏன் அவ்வாறு உள்ளது என நாம் விளங்கி கொள்ளலாம்.

💈அவை சம்மந்தமாக சிறிய விளக்கம் 👇🏻

💈இஸ்லாம் கூறி இருக்கும் அனைத்திலும் ஒரு காரணம் இருக்கும் இவை சம்மந்தமாகவும் பல காரணங்கள் உள்ளன.

🌀அவற்றில் சில👇🏻

1.ஒரு ஆண் தன் குழந்தைகளின் பராமரிப்புச் செலவையும் சுமக்கக் கடமைப்பட்டுள்ளான்.

💈குழந்தையின் உற்பத்தியிலும் வளர்ச்சியிலும் கூடுதலாகப் பங்கெடுத்துக் கொண்ட பெண் தன் குழந்தைகளின் பராமரிப்புச் செலவுக்குக் கூடப் பொறுப்பாளியாக மாட்டாள்.

2.தாய், தந்தை, அண்ணன், தம்பி, அக்கா, தங்கை மற்றும் அனைத்து உறவினர்கள் சிரமத்தில் இருக்கும்  போது அவர்களையும் பராமரிக்கும் கடமை ஆண்களுக்கு இருக்கின்றது.

👩🏻பெண்களைப் பொறுத்த வரை இது போன்ற கடமைகள் எதுவும் அவர்களுக்குக் கிடையாது.

💈இஸ்லாமிய சமூக அமைப்பில் மட்டுமில்லை பல  சமூகங்களிலும் கூட இந்த நிலையை நாம் கண்கூடாக காணலாம்.

👆🏻இந்த அடிப்படையான விஷயத்தை மறந்து விடுபவர்கள் தாம் இஸ்லாமிய வாரிசுரிமைச் சட்டத்தை  குறை சொல்பவர்கள்
என்பதை விளங்கி கொள்ளலாம்.


💈நாம் சிந்திக்க வேண்டும் யாருக்குத் தேவைகள் அதிக அளவு இருக்கின்றதோ அவர்களுக்குக் கூடுதலாகவும், யாருக்குத் தேவைகள் குறைந்த அளவு இருக்கின்றதோ அவர்களுக்குக் குறைவாகவும், வழங்குவது இயற்க்கை நியதி தானே❓

🌀 அதை எந்த விதத்தில் குறை கூற முடியும்❓

✨என்பதை குறை கூறுபவர்கள்  சிந்திக்க வேண்டும்❓

💈மேலும் ஒரு ஆண் சொத்துரிமை  மூலம் பெண்ணை விட இரு மடங்குகள் பெற்றாலும் அவை போதாது என்ற அளவுக்கு அவன் மீது இஸ்லாம் பொறுப்புகள் தந்து உள்ளன என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.


💈ஆனால் ஒரு பெண் ஒரு மடங்கைப் பெற்றாலும் அவளுக்கு அது தேவையில்லை என்ற அளவுக்குப் பொறுப்புகளிலிருந்து இஸ்லாம் அவளுக்கு விலக்களிக்கப்படுகின்றது என்பதையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

💈காரணம் இஸ்லாம் பெண்களுக்கு எந்த செலவினங்களையும் கடமை ஆக்கவில்லை.

👩🏻பெண் தனக்காகக் கூட இன்னொரு ஆண் செலவு செய்ய வேண்டும் என்ற அளவுக்கு அவளது சொத்துக்களுக்குப் பாதுகாப்பு அளிக்கப்படுகின்றது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.


✨எனவே ஆண்களுக்கு இரு பங்குகளும் பெண்களுக்கு ஒரு பங்கும் என்ற இஸ்லாமிய பாகப் பிரிவினைச் சட்டம் அறிவுக்குப் பொருத்தமான நியாயமான சட்டமாகும் என்பதை நாம் தெளிவாக விளங்கி கொள்ள முடியும்.!


🔑இன்ஷாஅல்லாஹ் அடுத்த குற்றச்சாட்டு என்ன என்பதை ஆராய்ந்து தெளிவு பெறுவோம்🔑


 💠தொடரும்💠


➖♻➖♻➖♻➖♻➖♻➖


🔮 இஸ்லாமிய மார்க்க செய்திகளை அழகிய முறையில் அறிய

♻ வாட்ஸ்அப்பில் எங்கள் செய்தியை பெற 👇

📱 0091- 9994675186

📱 0091- 9629167027

பேஸ்புக்கில் எம்மை தொடர 👇
https://m.facebook.com/Makkalmedia-1684365771847561/?ref=wizard

📮 பதிவு நாள்:  16 MAR 2016

📢 ⓂAKKAL ⓂEDIA 📢
Part of 👇
📡 ECHO DAWAH FOUNDATION 📡

Tuesday, 15 March 2016

மகளிர் தினம் ஓர் பார்வை பகுதி- 11

📢  ⓂAKKAL ⓂEDIA 📢

💠பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்💠

🍀மகளிர் தினம் ஓர் பார்வை🍀

          பகுதி- 11

 
👩🏻 பெண்ணுரிமை 👩🏻


✨பிறகு ஏன் ❓❓


👉 இன்றய கால கட்டத்தில் பெண்கள் வணக்கஸ்தலங்களுக்கு செல்ல கூடாது என்று மறுக்கப்படுகிறது

👉 அதனால் ஏற்படும் குழப்பம் என்ன

👉 விளைவுகள் என்ன


🔰இன்றைய காலக்கட்டத்தில் ஏன் பெண்கள் வணக்கஸ்தலங்களுக்கு வருதில்லை.

🔰வருவதையும் சிலர் ஏன் தடுக்கிறார்கள் என்பதை நாம் பார்த்தால் அதர்க்கு காரணம் மார்கம் கூறி இருக்கும் பேணுதலே என்பதை விளங்கி கொள்ளளாம்.

🌪அன்று எம்தூதர் வாழ்ந்த காலத்தில் பெண்களிடம் ஹிஜாப் ஒழுங்காக இருந்தது,எந்த அளவிற்கு என்றால் ஒரு பெண்ணை பார்த்தால் அது கிழவி ஆ குமரி ஆ என்று கூட அறிந்து கொள்ள முடியாத அளவில் அவர்களின் ஆடை இருந்தது.


🌪இன்று நம் பெண்களின் ஹிஜாபை பார்த்தால்
அத்தகைய ஒரு பாதுகாப்பை பெற்றுள்ளதா❓

இல்லை என்றே கூறமுடியும்.

🍂அல்லாஹ் பாதுகாக்க வேண்டும் .

🎁 பெண்களின் பாதுகாப்பிற்கு இஸ்லாம் காண்பித்து தந்த ஆடை இன்றைய காலக்கட்டத்தில் எந்த நிலையில் உள்ளது.

🏮சாதாரண ஆடைகளை விட மெல்லியதாகவும்

🏮வண்ணங்களால் வடிவமைக்கப்பட்டு கண்கவர் ஆடையாகவும்,

🏮தன் உடல் அங்கங்களை வெளிக்காட்டி பார்ப்பவர்களை கவரும் வண்ணமாகவும்
இருக்கிறது.

🏮இதற்கு காரணம் என்ன என்று சிந்தித்தால்
பெண்கள் தங்களை அழகாக காண்பிக்க வேண்டும் எண்ணமே என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.

🏮ஆனால் இன்றைய காலத்தில் அந்த ஆடையின் கண்ணியத்தை  உணர்ந்த பெண்கள் அந்த ஆடையின் கண்ணியத்தை பாதுகாக்கிறார்கள்.

🎁அல்ஹம்துலில்லாஹ்


✨பெண்கள் பள்ளிகளுக்கு வரும் நோக்கம் தன் ஈமானை வலுப்படுத்துவதற்காக தான். ஆனால் இன்றைய காலகட்டத்தில் அந்த ஈமானின் நிலை❓❓❓

கேள்விக்குறியாகவே உள்ளது.

✨அந்த ஈமானுக்கே பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை அதான் காரணமாகவே பள்ளிக்கு வருவதை தடுக்கிறார்கள்.

🔰ஆயிஷா (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்

 📓பெண்கள் ஏற்படுத்திய புதுமையை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கண்டிருந்தால் பனூ இஸ்ராயீலின் பெண்கள்பள்ளிக்கு வருவதை விட்டும் தடுக்கப்பட்டதை போன்று நபி (ஸல்) அவர்களும் பெண்களை பள்ளிக்கு வருவதை விட்டும் தடுத்திருப்பார்கள் என்று ஆயிஷா (ரளி) அவர்கள் கூறினார்கள்.

👤அறிவிப்பாளர் :
அம்ரா (ரஹ்),

📝நூல் : புகாரி 822


🌀இன்றைய காலத்தில் தம்முடைய ஈமானை பாதுகாப்பது என்பதே கடினமான ஒன்றாக இருக்கும் வேளையில்

🌀எந்த தூதர் எந்த பெண்களினால் பின்னால் வரும் காலத்தில் ஃபித்னா வரும் என்றார்களோ அத்துடன் தன் ஈமானை உரசி பார்க்கிறது எந்த அளவிற்கு ஒரு முட்டாள் தனம்..


🔸அல்ஹம்துலில்லாஹ் 🔸

👩🏻பெண்கள் பள்ளிகளுக்கு  வருகிறார்கள் என்றால் அதற்கான ஏற்பாடுகள் நாம் செய்ய வேண்டும்.

🌪 எந்த அளவிற்கு அந்த ஏற்பாடு இருக்க வேண்டும் என்றால்❔

🌀அந்த பெண் எந்தவொரு ஆணின் கண்ணில் படாதவாரு வர வேண்டும்,தொழ வேண்டும்,திரும்பி போக வேண்டும்.

👆🏼இந்த மாதிரியான ஏற்பாடுகள் ஷரீஅத் அல்லாஹ்வின் சட்டம் ஏற்றப்பட்ட நாட்டில் வேனால் நடக்கலாம்

🌀தாகூத் சட்டம் ஏற்றப்பட்ட இங்கே வாய்ப்பே இல்லை ஆதலால் எந்தவொரு ஃபித்னாவும் ஏற்படாமல் இருக்க பெண்கள் தங்கள் வீடுகளில் தொழுவதே சிறந்தது


👆🏻இது மாதிரி  காரணத்திற்காக தான் இன்று பெண்கள் பள்ளிகளுக்கு வருவதை இறை அச்சத்திர்கு முக்கித்துவம் கொடுத்து அனுமதிப்பதில்லை.


 💠தொடரும்💠


➖♻➖♻➖♻➖♻➖♻➖


🔮 இஸ்லாமிய மார்க்க செய்திகளை அழகிய முறையில் அறிய

♻ வாட்ஸ்அப்பில் எங்கள் செய்தியை பெற 👇

📱 0091- 9994675186

📱 0091- 9629167027

பேஸ்புக்கில் எம்மை தொடர 👇
https://m.facebook.com/Makkalmedia-1684365771847561/?ref=wizard

📮 பதிவு நாள்:  15 MAR 2016

📢 ⓂAKKAL ⓂEDIA 📢
Part of 👇
📡 ECHO DAWAH FOUNDATION 📡

🍀மகளிர் தினம் ஓர் பார்வை🍀 பகுதி- 10

📢  ⓂAKKAL ⓂEDIA 📢

💠பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்💠

🍀மகளிர் தினம் ஓர் பார்வை🍀

          பகுதி- 10
   
👩🏻பெண்ணுரிமை👩🏻


☀இஸ்லாத்தை விளங்காத
சிலர் இஸ்லாத்தில் பெண்களின் உரிமைகள் பறிக்கப்பட்டுள்ளது என்றும்

☀இஸ்லாம் பெண்களை அடிமைத்தனம் செய்கிறது என்றும்  வீண்பழி சுமத்துகின்றனர் .

🔆அவற்றை நாம் தொடராக பார்த்து கொண்டு இருக்கிறோம்

❌அதன் அடிப்படையில் அவர்கள் கூறும் குற்றச்சாட்டு❌

👩🏻பெண்கள் இறைவனை வணங்க வணக்கஸ்தலங்களுக்கு செல்ல இஸ்லாம் அனுமதிப்பதில்லை என ஒரு தவறான குற்றச்சாட்டை பரப்புகிறார்கள்.

👍🏻இஸ்லாம் ஒரு போதும் அதுமாதிரி சொல்லவில்லை என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

👩🏻பெண்கள் வணக்கஸ்தலங்களுக்கு போகலாமா வேண்டாமா என நாம் தெரிந்து கொள்ள கீழே உள்ள சில ஹதீகளே போதுமானது.

📓அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "உங்கள் துணைவியர் பள்ளிவாசல்களுக்குச் செல்ல உங்களிடம் அனுமதி கோரினால் அவர்களுக்கு அனுமதி அளியுங்கள்'' என்று கூறியதை நான் கேட்டுள்ளேன்.

📝நூல் : முஸ்லிம் (754)


✨நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்👇🏻

📓உங்களில் ஒருவரிடம் அவருடைய மனைவி பள்ளிவாசலுக்குச் செல்ல அனுமதி கோரினால் அவளை அவர் தடுக்க வேண்டாம்.

👤அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் உமர் (ரலி)

📝நூல் : முஸ்லிம் (751)

✨அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்👇🏻

📓பெண்கள் பள்ளிவாசல்களுக்குச் செல்வதற்காக உங்களிடம் அனுமதி கேட்டால் பள்ளிவாசலில் அவர்களுக்குரிய உரிமையைத் தடுக்காதீர்கள்.

👤அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் உமர் (ரலி)

📝நூல் : முஸ்லிம் (757)📓அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சலாம் கொடுத்து முடித்ததும் பெண்கள் எழுந்து (சென்று) விடுவார்கள். நபி (ஸல்) அவர்கள் எழுவதற்கு முன் சற்று நேரம் (தொழுத இடத்திலேயே) வீற்றிருப்பார்கள். (இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) இப்னு ஷிஹாப் அஸ்ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள் கூறுகையில், "அல்லாஹ் நன்கறிந்தவன்! தொழுகை முடித்து திரும்பும் ஆண்கள் பெண்களிடம் வருவதற்கு முன் பெண்கள் (அங்கிருந்து) புறப்பட்டுச் சென்றுவிடவேண்டும் என்பதற்காகவே நபி (ஸல்) அவ்வாறு வீற்றிருந்தார்கள் என்றே நான் கருதுகிறேன்'' என்றார்கள்.

👤அறிவிப்பவர் : உம்மு ஸலமா (ரலி)

📝நூல் : புகாரி (837)


👆🏻இது போன்று இன்னும் பல ஹதீஸ்கள் உள்ளது பெண்கள் மஸ்ஜித் அதாவது (வணக்கஸ்தலங்களுக்கு) செல்லலாம் என


✨பிறகு ஏன் ❓❓


👉 இன்றய கால கட்டத்தில் பெண்கள் வணக்கஸ்தலங்களுக்கு செல்ல கூடாது என்று மறுக்கப்படுகிறது

👉 அதனால் ஏற்படும் குழப்பம் என்ன

👉 விளைவுகள் என்ன


👍என்பதை இன்ஷா அல்லாஹ்

வரும் தொடர் களில் பார்க்கலாம்


 💠தொடரும்💠


🔃🔃🔃🔃🔃🔃🔃🔃🔃🔃🔃

🔮 இஸ்லாமிய மார்க்க செய்திகளை அழகிய முறையில் அறிய

♻ வாட்ஸ்அப்பில் எங்கள் செய்தியை பெற 👇

📱 0091- 9994675186

📱 0091- 9629167027

பேஸ்புக்கில் எம்மை தொடர 👇
https://m.facebook.com/Makkalmedia-1684365771847561/?ref=wizard

📮 பதிவு நாள்: 14 MAR 2016

📢 ⓂAKKAL ⓂEDIA 📢
Part of 👇
📡 ECHO DAWAH FOUNDATION 📡

🍀மகளிர் தினம் ஓர் பார்வை🍀 பகுதி- 9

📢  ⓂAKKAL ⓂEDIA 📢

💠பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்💠

🍀மகளிர் தினம் ஓர் பார்வை🍀

          பகுதி- 9
   
👩🏻பெண்ணுரிமை👩🏻


☀இஸ்லாத்தை விளங்காத
சிலர் இஸ்லாத்தில் பெண்களின் உரிமைகள் பறிக்கப்பட்டுள்ளது என்றும்

☀இஸ்லாம் பெண்களை அடிமைத்தனம் செய்கிறது என்றும்  வீண்பழி சுமத்துகின்றனர் .

🔆அவற்றை நாம் தொடராக பார்த்து கொண்டு இருக்கிறோம்

❌அதன் அடிப்படையில் அவர்கள் கூறும் குற்றச்சாட்டு❌

👩🏻பெண்கள் ஆட்சித் தலைமை வகிக்கக் கூடாது எனக் கூறி பெண்களின் அரசியல் அதிகாரத்தை பறிக்கிறது என்று குற்றம்சாட்டப்படுகிறது .

🌐ஆனால் உண்மையாதெனில்

✨இங்கே தலைமை பதவி பெண்கள் வகிக்க கூடாது என்று இஸ்லாம் கூறவில்லை .

👩🏻பெண்களுக்கு ஷரீஅத் அவசியமாக்கிய  சில கட்டளைகள் அவர்களுக்கு தலைமை பதவியை தானாகவே பறித்துக்கொள்கிறது .


❌ஆணுக்குப் பெண் சரிசமம் என்ற வாதத்தை இஸ்லாம் ஒப்புக் கொள்ளவில்லை❌

👆🏻இந்த வாதம் கேட்க இனிமையாக அழகாக இருந்தாலும் அறிவுக்குப் பொருந்தாததால் இதனை இஸ்லாம் அடியோடு மறுக்கிறது.

👳🏻ஆண் வேறு!

👩🏻பெண் வேறு!

✨இரு பாலரின் உடற்கூறுகளும், அவர்களின் இயல்புகளும், குண நலன்களும் வெவ்வேறு!

👆🏻இப்படி வேறுபட்டிருப்பதால் தான் ஆண், ஆணாகவும் பெண், பெண்ணாகவும் இருக்க முடிகின்றது.


✔ஒரு ஆணால் செய்யும் பனியை பெண்ணால் செய்ய முடியாது

👩🏻பெண்களுக்கு ஷரீஅத் அவசியமாக்கிய  சில கட்டளைகள் அவர்களுக்கு தலைமை பதவியை தானாகவே பறித்துக்கொள்கிறது .

🍀தலைமை பதவி வகிப்பவர்கள்

🔹ஆலோசனை கூட்டங்கள் நடத்தவேண்டும்

🔹வெளியூர்களுக்கு செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்படும்

🔹பல நாட்டின் தலைவர்களை சந்திக்கும் சூழல் உருவாகும்

👆🏻இது போன்ற அனைத்து நிலைகளிலும் தங்களின் முழு பங்களிப்பை அதற்குண்டான காலகட்டங்களில் கொடுத்தே ஆகவேண்டும் .

❌இப்படிபட்ட சூழலில் பெண்களுக்கு ஆட்சி பொறுப்பு கொடுக்கப்பட்டால் மேலகூறப்பட்ட அனைத்து சூழலுக்கும் அவளால் ஒத்துழைப்பு தரமுடியாது .

         💠காரணம் 👇🏻

☀ஒரு பக்கம் இயற்கையாகவே அவர்களோடு ஒட்டியிருக்கும்

🔹மாதவிடாய்

🔹குழந்தை பிரசவிக்கும் நிலை

🔹கனவன் அழைக்கும் நேரங்களில் பதலளிக்கும் சூழல்

🔹குழந்தை பிறந்த இரண்டு ஆண்டுகள் பாலூட்டும் நிலை

🔹அக்குழந்தையை சரியான பக்குவம் அடையும் வரை ஒழுங்குபடுத்துவது.


 👆🏻இதுபோன்று அடுக்கடுக்காக ஆண்களால் செய்ய முடியாத பல காரியங்களை பெண்கள் சாதிக்கிறார்கள் .

✔இப்பொழுது கூறுங்கள் எப்படி ஒரு பெண்ணால் இவ்வளவு பொருப்பை கவனித்துக் கொண்டு தலைமை பதவியை சீராக நிர்வகிக்க முடியும்.

👆🏻இதன் காரணமாகவே பெண்களை நபியாக எந்த உம்மத்தினருக்கும் அல்லாஹ் அனுப்பவில்லை .

👩🏻பெண்களின் இயற்கை படைப்போடு இஸ்லாம் அழகிய முறையில் அவர்களை வாழவைக்கிறது .

☝🏻எனவே தான் அல்லாஹ் குர்ஆனில் தெளிவாக கூறியுள்ளான்👇🏻

📓اَلرِّجَالُ قَوَّامُوْنَ عَلَى النِّسَآءِ

ஆண்கள் பெண்களை நிர்வகிப்போர் ஆவர்.

فَالصّٰلِحٰتُ قٰنِتٰتٌ

எனவே ஒழுக்கமான பெண்கள் கீழ்ப்படிந்தே நடப்பார்கள்.

அல்குர்ஆன்: 4:34

👆🏻இதை புரிந்துகொள்ளும் சிந்தனையற்ற மடையர்களின் குற்றச்சாட்டை நாம் ஏன் கண்டுகொண்டு ஏமாற வேண்டும்.❓

🔆நம் சோகதரிகள் அனைவரும் விழிப்புணர்ச்சியோடு செயல்பட்டு குற்றச்சாட்டுகளை ஆராயுமாறு இப்பதிவின் மூலம் கேட்டுக்கொள்கிறோம் .

🔴இன்ஷா அல்லாஹ் அடுத்த பதிவில் அடுத்த குற்றச்சாட்டு என்ன ?அதன் விளக்கம் என்ன ?என்பதை பார்க்கலாம் .

 💠தொடரும்💠


🔃🔃🔃🔃🔃🔃🔃🔃🔃🔃🔃

🔮 இஸ்லாமிய மார்க்க செய்திகளை அழகிய முறையில் அறிய

♻ வாட்ஸ்அப்பில் எங்கள் செய்தியை பெற 👇

📱 0091- 9994675186

📱 0091- 9629167027

பேஸ்புக்கில் எம்மை தொடர 👇
https://m.facebook.com/Makkalmedia-1684365771847561/?ref=wizard

📮 பதிவு நாள்: 13 MAR 2016

📢 ⓂAKKAL ⓂEDIA 📢
Part of 👇
📡 ECHO DAWAH FOUNDATION 📡

🍀மகளிர் தினம் ஓர் பார்வை🍀 பகுதி- 8

📢  ⓂAKKAL ⓂEDIA 📢

💠பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்💠

🍀மகளிர் தினம் ஓர் பார்வை🍀

          பகுதி- 8
   
👩🏻பெண்ணுரிமை👩🏻


🏮இஸ்லாத்தை விளங்காத
சிலர் இஸ்லாத்தில் பெண்களின் உரிமைகள் பறிக்கப்பட்டுள்ளது என்றும் அடிமைத்தனம் செய்கிறது என்றும்  வீண்பழி சுமத்துகின்றனர் .

💥அவற்றை நாம் தொடராக பார்த்து கொண்டு இருக்கிறோம்

💥அதில் ஒன்று தான் இத்தா சம்மந்தமாக நாம் சென்ற தொடரிலே பார்த்தோம்.


✅இந்த தொடரிலே ஏன் இஸ்லாம் இத்தாவை  வலியுறுத்த வேண்டும் இஸ்லாம் ஏன் கட்டாயப்படுத்துகிறது என பார்க்கலாம்.

🏮தொலைநோக்கு சிந்தனையோடு பார்க்கும் அனைவருக்கும் இஸ்லாம் பெண்களுக்கு அவசியமாக்கிய "இத்தா "
மிகவும் ,
பாதுகாப்பானதே என்பதை விளங்கிக்கொள்ள முடியும் .

✅நம்மை படைத்த இறைவவன் அவன் படைத்த மனிதர்களுக்கு என்ன தேவையோ அதனை மிக சிறப்பாக செய்துக்கொடுப்பதில் வல்லமை படைத்தவன்.

✅அது ஆணாக இருந்தாலும் சரி,
பெண்ணாக இருந்தாலும் சரி,
பிறக்கும் குழந்தையாக இருந்தாலும் சரி,
அவர்களுக்கு தேவையான அனைத்தையும் செய்து கொடுப்பபவனாக இருக்கிறான்.

✳இறைவன் ஏற்படுத்தும் எந்த கட்டளையும் அவனது படைப்புகளுக்கு தேவையற்றதாக ஆக முடியாது .

✳வாருங்கள் இதே கண்ணோட்டத்தோடு "இத்தா"வின் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டிற்கு அழகிய விளக்கங்களை பார்க்கலாம் .

✳"இத்தா "என்பது அல்லாஹ்வினால் உயரிய நோக்கத்துடன் முன்வைக்கப்பட்டுள்ளது என்பதில் எவ்வித மாற்றுக்கருத்தும் இல்லை.


📗அல் குர்ஆன்

நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் நம்பிக்கை கொண்ட பெண்களை மணந்து அவர்களைத் தீண்டுவதற்கு முன் விவாகரத்துச் செய்து விட்டால் உங்களுக்காக அவர்கள் அனுசரிக்கும் இத்தா ஏதுமில்லை.

(அல்குர்ஆன் 33:49)

💥மேற்கண்ட வசனத்தின் வாயிலாக ஒரு பெண் திருமணம் செய்த பிறகு அவளிடம் உடலுறவு கொள்வதற்கு முன் விவாகரத்து வாங்கினால் அந்த பெண்ணிற்கு இத்தா தேவை இல்லை என்பதை அறிய முடிகிறது.

✅மேலும் இதிலிருந்து உடலுறவு கொண்டு இருந்தால் மாத்திரமே அந்த பெண் இத்தா இருக்க வேண்டும்
என்பதை நம்மால் விளங்கி கொள்ள வேண்டும் .

ஏன் தாம்பத்ய உறவில் ஈடுபட்டு  இருந்தால் அந்த பெண் இத்தா இருக்க வேண்டும்❓

♦சிந்தித்துப்பாருங்கள்.♦

💥ஒரு பெண்ணின் கணவன் இறப்பதற்கு முன் அந்த பெண் உடலுறவு கொண்டு இருந்தால் அந்த ஆணின் டீ.என்.ஏ ரேகை அந்த பெண்ணின் உடலில் மூன்று மாதவிடாய் வரை அழியாமல் இருக்கும் .

💥இப்படி இருக்கும்பட்சத்தில் அந்த பெண் மறுமணம் செய்து ,குழந்தை பெற்றுக்கொள்ளும்போது அந்த குழந்தையின் தோற்றம் முன்னால் கணவனின் தோற்றத்தில் பிறக்கும் வாய்ப்பும் சாத்தியமானது என்று அறிவியல் ரீதியாக உண்மைப்படுத்தப்பட்டுள்ளது .

♦இதானால் வரும் பிரச்சனைகளால் சீரழிவது யாரென்று சிந்தித்ததுண்டா❓

🔶குழந்தையின் எதிர்காலம் சீரழியும்.
🔶பெற்ற தாய் நினைத்து வருத்தப்படுவாள்.
🔶மறுமணம் செய்தவனும்,அவன் குடும்பமும் வெட்கமும் துக்கமும்படுவார்கள்.

♦இதை சற்று சிந்தித்து பாருங்கள்..

♦இத்தா என்ற விஷயத்தை இஸ்லாம் வற்புறுத்தும் காரணத்தை புரிந்து கொள்ளுவோம்.

✅இறைவன் இத்தா வை முன் வைக்கவில்லை என்றால் பாதிக்கப்படுவது தனிநபர் அல்ல சமூகமே பாதிக்கப்படுகிறது.

✔எனவே தான் இத்தாவை இஸ்லாம் கட்டாயமாக்கியுள்ளது .

✳அதனால்   குறிப்பிட்ட அந்த பெண் தன் மூன்று மாதவிடாய் காலம் வரை காத்திருந்து அந்த டீ.என்.ஏ ரேகை அழிந்த பிறகு திருமணம் முடித்து கொள்ளலாம்.

🏮ஆனாலும் இன்றைய விஞ்ஞான வளர்ச்சியில் வயிற்றில் இருக்கும் குழந்தை யாருடையது என்று அறியக்கூடிய அளவில் கருவிகள் இருந்தாலும் ' பணம் பத்தும் செய்யும்' என்ற பழமொழியை போல் பணத்தை வைத்து அந்த மருத்துவ அறிக்கைகளை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்கின்றனர்.

✳இந்த மாதிரி எந்த ஒரு நிலையும் ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக தான் அன்றே இந்த "இத்தா "வை  மூன்று மாதவிடாய் காலம் வரை காத்திருந்து மறுமணம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினர்

✅இஸ்லாம் எப்போதும் ஒழுக்கத்திற்கு முன்னுரிமை கொடுக்கும் மார்க்கம்

❎இந்த இத்தாவின் மூலம் இஸ்லாம் பெண்களை அடிமை படுத்தவில்லை

❎பெண்களை இழிவு படுத்தவில்லை

💠பெண்களை ஒருபடி மேலே போய் பெண்ணிண் மானத்தையும் கண்ணியத்தையும் காக்கிறது என்பதை நாம் அனைவரும் தெளிவாக விளங்கி கொள்ளளாம்

💠இதன் மூலம் இஸ்லாம் இத்தாவில் பெண்களுக்கு கொடுத்த சலுகைகளை தெளிவாக புரிந்து கொள்ளலாம்.

💥நம் சகோதரிகள் அனைவரும் விழிப்புணர்ச்சியோடு செயல்பட்டு குற்றச்சாட்டுகளை ஆராயுமாறு இப்பதிவின் மூலம் கேட்டுக்கொள்கிறோம் .

💥அடுத்த பதிவில் அடுத்த குற்றச்சாட்டு என்ன ?அதன் விளக்கம் என்ன ?என்பதை பார்க்கலாம் .

  💠தொடரும்💠


🔃🔃🔃🔃🔃🔃🔃🔃🔃🔃🔃

🔮 இஸ்லாமிய மார்க்க செய்திகளை அழகிய முறையில் அறிய

♻ வாட்ஸ்அப்பில் எங்கள் செய்தியை பெற 👇

📱 0091- 9994675186

📱 0091- 9629167027

பேஸ்புக்கில் எம்மை தொடர 👇
https://m.facebook.com/Makkalmedia-1684365771847561/?ref=wizard

📮 பதிவு நாள்: 12 MAR 2016

📢 ⓂAKKAL ⓂEDIA 📢
Part of 👇
📡 ECHO DAWAH FOUNDATION 📡