Tuesday, 22 March 2016

கோபமும் ஷைத்தானும்

📢  ⓂAKKAL ⓂEDIA 📢

💠பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்💠


👹கோபமும் ஷைத்தானும்👹

☝🏻இறைவன் மனிதனுக்கு பல இயற்கை  குனங்களை வழங்கி உள்ளான்

👹அதிலே மிகவும் மோசமான குணம் தவிர்க்க  வேண்டிய குணம் கோபமே❗

👹கோபம் ஷைத்தானின்  மிகப்பெரும் ஆயுதம் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

👹உலகத்தில் நிகழும் பல தீமைகள் கோபத்தின் பின்னனியில் தான் நிகழ்கிறது.

😡ஒரு சிறந்த அறிவாளியை கூட கோபம் குருடனாக முட்டாளாக மாற்றிவிடும்.

😡கோபத்தில் ஒருவன் தன்னிலை மறந்துவிடுவான் இன்னும் சொல்லப்போனால் ஒருவகையில் கோபக்காரனும் பைத்தியக்காரனும் ஒன்றுதான்.

😡காரணம் அவன் கோபத்தில் எடுக்கும் பல முடிவுகள் தவறாகவே முடிகிறது.



😡பெரும்பாலும் தண்டனை கைதிகளிடம் கேட்டுப்பாருங்கள் என்ன ஏன் தண்டனை என கேட்டால் அவனின் பதில் கோபத்தில் பைத்தியகாரதனமாக செய்து விட்டேன் என பதில் கூறுவான்.


😡மனிதன் அதிகமாக ஷைத்தான் வலையில் மாட்டுவது இரு தருணங்கலில் தான்,

1.கோபத்தில்

2. ஆசையில்

📓ஒரு முறை ஒரு மனிதர் வந்து நபி (ஸல்) அவர்களிடம், 'எனக்கு உபதேசியுங்கள் என்று கேட்டார். கோபம் கொள்ளாதே என்று நபியவர்கள் பதில் சொன்னார்கள். அவர் மீண்டும், மீண்டும் பல முறை உபதேசியுங்கள் என்று கேட்டபோது அப்போதும் நபியவர்கள் கோபம் கொள்ளாதே என்றே பதில் சொன்னார்கள். (அபூஹுரைரா (ரலி) - புகாரி, திர்மிதீ, அஹ்மத்).


✨மனிதன் மிகவும் சாதாரணமாக ஆட்பட்டுவிடுகிற இந்த கோபத்தின் விளைவு பல ஆண்டுகள் நம்மை சங்கடத்தில் ஆழ்த்திவிடுகிறது.

😡அதனால் பல குடும்பங்கள் பல வருடங்களாக பிரிந்து வாழ்கிறது.

✨அதனால் தான் ஒரு சிறந்த அறிவாளிக்கான அடையாளத்தை குறிப்பிடும் நபி (ஸல்) அவர்கள் கோபத்தை கட்டுப்படுத்தும் தன்மையை கூறுகிறார்கள்.

😡இங்கே ஒரு விஷயத்தை அழுத்தமாக புரியவேண்டும்.

✨  கோபத்தை அடக்கவேண்டும் என்பது நம்மால் ஒன்றும் செய்யமுடியாது என்ற நிலையில் அடக்கிக்கொள்வதல்ல.

😡மாறாக தன்னால் கோபப்பட முடியும், அதற்கான எல்லா வழிமுறைகளும் உண்டு என்ற நிலையில் கோபத்தை அடக்கிக் கொள்ள வேண்டும் இதுவே கோபத்தை அடக்கும் முறை ஆகும்.

📓யூதர்களில் சிலர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, அபுல்காசிமே! அஸ்ஸாமு அலைக்க (உமக்கு மரணம் உண்டாகட்டும்!) என்று சற்றே மாற்றி ஸலாம் கூறினர். நபி (ஸல்) அவர்கள், வ அலைக்கும் (நீங்கள் சொன்னது உங்களுக்கும் உண்டாகட்டும்!) என்று (பதில்) சொன்னார்கள். அப்போது அருகில் இருந்த ஆயிஷா (ரலி) அவர்கள், அவர்களை கோபப்பட்டு சபிக்கும் விதமாக, அலைக்குமுஸ்ஸாமு வத்தாமு (உங்களுக்கு மரணமும், இழியும் உண்டாகட்டும்!) என்று (பதில்) சொன்னார்கள். இதைக் கேட்ட நபி (ஸல்) அவர்கள், ஆயிஷாவே! அருவருப்பாகப் பேசுபவளாக இருக்காதே! என்று கண்டித்தார்கள். அதற்கு ஆயிஷா (ரலி) அவர்கள், அவர்கள் சொன்னதை நீங்கள் செவியுறவில்லையா? என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், நான்தான் அவர்கள் சொன்னதற்கு, வ அலைக்கும் (நீங்கள் சொன்னது உங்களுக்கும் உண்டாகட்டும்!) என்று பதில் சொல்லிவிட்டேனே! (அதை நீ கவனிக்கவில்லையா?) என்று திருப்பிக் கேட்டார்கள். (ஆயிஷா (ரலி) - புகாரி, முஸ்லிம்).

👆🏻இங்கே எதிரிகள் கோபத்தை தூண்டும் வகையில் பேசினாலும் பதிலுக்கு நபி அவர்களும் கோபப்பட வில்லை, அதை அழகிய முறையில் மேற்கொண்டு நம் அனைவருக்கும் சிறந்த வழிகாட்டலை காட்டித்தந்துள்ளார்கள்.

😡கோபத்தை அடக்குபவரே இறையச்சமுடையவர் என்று அல்லாஹ் குறிப்பிடுகிறான்👇🏻

📓3:134. (பயபக்தியுடையோர் எத்தகையோர் என்றால்,) அவர்கள் இன்பமான (செல்வ) நிலையிலும், துன்பமான (ஏழ்மை) நிலையிலும் (இறைவனின் பாதையில்) செலவிடுவார்கள்; தவிர கோபத்தை அடக்கி கொள்வார்கள்; மனிதர்(கள் செய்யும் பிழை)களை மன்னிப்போராய் இருப்பார்கள்; (இவ்வாறு அழகாக) நன்மை செய்வோரையே அல்லாஹ் நேசிக்கின்றான்.

☝🏻இறைவனின் இக்கூற்று மிகவும் கவனிக்கதக்கது.

💥கோபத்தை அடக்கிக்கொள்வது இறையச்சத்தின் அடயாளமாய் அல்லாஹ் குறிப்பிட்டுள்ளான்.

💥நம்மில் எத்துனை பேர் இறையச்சமுடையவராய் உள்ளோம் என்பதை நாம் பரிசோதிக்க வேண்டும்.

🔸மேலும்

😡கோபத்தை அடக்கி பொறுமை மேற்கொள்பவர்களோடு இறைவனே அவர்களோடு இருப்பதாக குறிப்பிடுகிறான்.

📓இன்னும் அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் கீழ்படியுங்கள் - நீங்கள் கருத்து வேறுபாடு கொள்ளாதீர்கள்; (அவ்வாறு கொண்டால்) கோழைகளாகி விடுவீர்கள்; உங்கள் பலம் குன்றிவிடும்; (துன்பங்களைச் சகித்துக் கொண்டு) நீங்கள் பொறுமையாக இருங்கள் - நிச்சயமாக அல்லாஹ் பொறுமையுடையவர்களுடன் இருக்கின்றான்.

(அல்குர்ஆன் : 8:46)

👆🏻இப்பொழுது சிந்தியுங்கள் நம்மில் எத்துனை பேரோடு அல்லாஹ் இருக்கிறான்.????????


😡கோபத்தை அடக்கி ஆழ்வோம்.,
அல்லாஹ்வின் அன்பை பெறுவோம்👍🏻


🔃🔃🔃🔃🔃🔃🔃🔃🔃🔃🔃

🔮 இஸ்லாமிய மார்க்க செய்திகளை அழகிய முறையில் அறிய

♻ வாட்ஸ்அப்பில் எங்கள் செய்தியை பெற 👇

📱 0091- 9994675186

📱 0091- 9629167027

பேஸ்புக்கில் எம்மை தொடர 👇
https://m.facebook.com/Makkalmedia-1684365771847561/?ref=wizard

📢 ⓂAKKAL ⓂEDIA 📢

📮 பதிவு நாள்:  22 MAR 2016

Part of 👇
📡 ECHO DAWAH FOUNDATION 📡

No comments:

Post a Comment