Monday 28 March 2016

இஸ்லாமும் தாடியும்-2

📢  ⓂAKKAL ⓂEDIA 📢

💠பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்💠

⚜இஸ்லாமும் தாடியும்⚜

🏮இன்றைய காலத்தில் தாடி வைப்பதில் முஸ்லீம்களின் நிலை என்ன என்பதை சிந்தித்துப்பாருங்கள்..


🚫தாடி வைத்து ஒரு முஸ்லீம் நடந்தால் அவனை இந்த உலகம் தீவிரவாதியாக சித்தரிக்கிறது.

💥இதனால் இன்றைய முஸ்லீம்  இளைஞர்களிடம் தனது உறவினர்கள் கூறிக்கொள்வது என்னவென்றால் இந்த இளைய வயதில் இப்படி தாடி வைத்துக்கொண்டு நடக்காதே என்றும், ஒழுங்கான முறையில் தாடியை எடுத்துக்கொண்டு நடக்கவும் அறிவுறுத்தப்படுகிறது.


🌐ஏனென்றால் இவன் தாடி வைத்துவிட்டு நடந்தால் இந்த சமூகம் தனது மகனை தவறான முறையில் சித்தரிப்பார்களோ என்ற பயம் தான் காரணம்.

🔰சில ஆண்கள் சிறிது காலம் தாடி வைத்திருப்பார்கள் ஆனால் காலம் செல்ல செல்ல அதன் நிலைகள் மாறிவிடும்.

✳ஒன்று அவருடன் இருப்பவர்கள் தாடியை மழித்துக்கொண்டு அவருடன் சுற்றுவார்கள்.இவருடைய தாடியைப்பார்த்து குறையும் கூறுவார்கள்.


✳உடனேஇவருடைய மனநிலமையும் எதற்கு நாம் இப்படி தாடி வைத்துக்கொண்டு நடக்கிறோம்.

✳நம்முடைய தாடியை அவர்கள் கேவலமாக எண்ணுகிறார்களே!! நமக்கும் அவர்களைப்போல தாடி இல்லாமல் அழகாக நடப்போம் என்ற சிந்தனை தோன்றும்.

🚫இதன் காரணமாகவே பல ஆண்கள் தாடியை மழித்துக்கொண்டு நடக்கிறார்கள்.

💥இன்றைக்கு உங்களுடன் கூத்தாடிகளைப்பார்த்து தாடிகளை மழித்துக்கொண்டு நடக்கும் அவர்களா மறுமையில் உங்களுக்கு சிபாரிசு செய்வார்கள்❓

♦சிந்தித்துப்பாருங்கள்

💥யார் என்ன சொன்னாலும் நாம் நம்முடைய நபி(ஸல்)அவர்கள்  காண்பித்து தந்த சிறந்த செயல்களை உதாசீனபடுத்தலாமா❓

🔰இன்னும் சில ஆண்கள் தனது இளமை வயதில் தாடியை பேணுவதில் மிகவும் ஆர்வம் காட்டுவார்கள்.


✳ஆனால் திருமண சமயத்தில் அல்லது திருமணம் முடிந்தபிறகு மனைவியின் வற்புறுத்தலால் தாடியை மழித்து விட்டு நடப்பார்கள்.

✅இதற்கான காரணம் ஆண்கள் தனது மனைவியுடன் நடக்கும் போது அவர்களுக்கு தனது கணவன் தாடி வைத்து நடப்பது இழிவானதாக கருதுவதே.

🚫இதற்கெல்லாம் காரணம் இன்றைய காலக்கட்டத்தின் வளர்ச்சியும்,சினிமா கூத்தாடிகளின் நடிப்பும் தான் காரணம்.

🚫தாடியை மழித்து நடிகன் மிக அழகாக டீவியின் முன் காட்டப்படுகிறான்.

🚫இதனைக்கண்ட இன்றைய இஸ்லாமிய பெண்களும் தங்கள் கணவனை அதே போல் அழகாக காண்பிக்க எண்ணுகிறார்கள்.

🗯சிந்தித்துப்பாருங்கள் பெண்களே❗

❎உங்களின் கணவன் சினிமா கூத்தாடிகளை போல மாற வேண்டுமென்றா எண்ணுகிறீர்கள்.

💥இந்த கூத்தாடிகள் உங்களுக்கு வேண்டி சிபாரிசு செய்வார்களா❓

✔நிச்சயமாக கூத்தாடிகளை பின்பற்றினால் நிச்சயமாக கேடு தான்.

💥நபி (ஸல்) அவர்கள் நமக்கு அறிமுகப்படுத்தி செய்ய சொன்ன தாடி உங்கள் கணவனுக்கு கேவலாமாக தெரிகிறதா❓

✅நிச்சயமாக இதில் ஒரு இழிவையும் காணமாட்டீர்கள்.

💥இது எப்படி உங்களுக்கு இழிவாக தோன்றும்❓

🔰மீசையை ஒட்டக்கத்தரித்து தாடியை வளர்ப்பது நபி (ஸல்) அவர்கள் காண்பித்து தந்த சிறந்த செயல் என்பதை மறந்து விட்டீர்களா..

💥எனவே சிந்தியுங்கள்❗

🌐ஏதோ ஒரு  கூத்தாடிக்கு வேண்டி கணவன் தாடியை மழித்து நடக்க சொல்லாதீர்கள்.

🔰தாடி தான் ஒரு ஆணுக்கு அழகானது என்பதை உணர்ந்துக்கொள்ளுங்கள்

📓ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு அவர்களிடம் இருந்தவற்றிலேயே நல்ல மணமுடைய வாசனைப் பொருளை நான் பூசி வந்தேன். எந்த அளவிற்கென்றால் அந்த நறுமணப் பொருளின் மினுமினுப்பை அவர்களுடைய தலையிலும் அவர்களுடைய தாடியிலும் என்னால் காண முடிந்தது.
📚ஆதாரம்: புஹாரி 5923


🌐நாம் தற்போது வாழ்ந்து கொண்டிருக்கும் காலப்பகுதியில் ஏராளமான பெண்கள் ஆண்களுக்க ஒப்பாகவே தம் உடைகளையும், தலை முடிகளையும் வைத்துக் கொள்கின்றனர்.

🌐 அதேபோல் இன்று பல ஆண்கள் மத்தியில் பெண்களைப் போல் தலை முடி வளர்ப்பதும் பிரபல்யம் ஆகி வருகின்றது.

🌐அநேக சந்தர்ப்பங்களில் அவர்களுக்கிடையில் ஆணா, பெண்ணா என்ற வித்தியாசமே தெரியாது. இத்தகைய நிலையில் ஆண்கள் தாடி வைப்பதாவது அவர்களுக்கு சிறப்பான தனித்துவத்தைக் காட்டுவது மட்டுமில்லாமல் ஆண்களைப் போல் தம் நடை, உடை, பாவனையை அமைத்துக் கொள்ள விரும்பும் பெண்களுக்கும் தாடி சாவு மணியாக அமையும்.

💥அன்பின் இஸ்லாமிய சகோதரர்களே தாடி வைத்தல் என்ற நபி வழியை நடை முறைப்படுத்தி இவ்வுலகிலும், மறுமையிலும் வெற்றி பெறுவோமாக!

ஆமீன்.


🔃🔃🔃🔃🔃🔃🔃🔃

🔮 இஸ்லாமிய மார்க்க செய்திகளை அழகிய முறையில் அறிய

♻ வாட்ஸ்அப்பில் எங்கள் செய்தியை பெற 👇

📱 0091- 9994675186

📱 0091- 9629167027

பேஸ்புக்கில் எம்மை தொடர 👇
https://m.facebook.com/Makkalmedia-1684365771847561/?ref=wizard

📢 ⓂAKKAL ⓂEDIA 📢

📮 பதிவு நாள்: 28 MAR 2016

Part of 👇
📡 ECHO DAWAH FOUNDATION 📡

No comments:

Post a Comment