Sunday, 13 March 2016

🌺திருமணம் ஓர் அலசல்🌺 🍀பகுதி-9⃣

📢  ⓂAKKAL ⓂEDIA 📢

🍥அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)🍥

🌺திருமணம் ஓர் அலசல்🌺

            🍀பகுதி-9⃣

🚫குறைந்த செலவில் திருமணத்திலே பர்கத் உள்ளது

🔘அன்பார்ந்த சகோதர சகோதரிகளே இதுவரை திருமணத்தில் நடக்கும் அணாச்சாரத்தை பற்றி பார்த்தோம் .

🌐இப்பொழுது எம்முடைய தூதர் காட்டி தந்த வழியை பார்ப்போம்

♻திருமணம் செய்து கொள்ளுங்கள்

♻ திருமணம் செய்யாதவர்களுக்கு சொக்கம்  கிடையாதுஎன்றும்,

♻கிறிஸ்துவப் பாதிரிகளைப் போன்று (பிரம்மசாரிகளாக) இருந்து விடாதீர்கள்" என்றும் நபிகள் நாயகம் ஸல் அவர்கள் அருளியுள்ளார்கள்.

♻திருமணம் என்(நபி) சுன்னத்தான வழிமுறை, அதனை புறக்கணிப்பவர் என்னைச் சார்ந்தவர் அல்ல’ என்றும்,

♻வறுமையைப் பயந்து திருமணத்தை விட்டவர் எம்மைச்(நபி)சார்ந்தவர் அல்ல’ என்றும்


🌐நமது நபி(ஸல்)அவர்கள் கூறி உள்ளார்கள்


♻மஸ்ஜிதில் வைத்து திருமணம் செய்வதே சிறந்தது காரணம்  மஸ்ஜிதில் செய்வதையே எளிமையாக இருக்கும் என்பதால் தான் .?

🌐திருமத்தில்
வீடியோ கேமரா எடுக்க
எவரும்  அனுமதிக்க கூடாது. இதனால் ஏற்படும் விபரீதத்தை நாம் சென்ற தொடரிலே பார்த்தோம்


🌐குறைந்த செலவில் திருமணம் முடிப்பதையே நபிஅவர்கள் வலியுரித்தினார்கள்


📓குறைந்த செலவில் நடத்தப்படும் திருமணமே அதிகம் பரகத் நிறைந்ததாகும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
நூல்: அஹ்மத் 23388

♻வலிமா விருந்து கொடுப்பதை நமது நபிஅவர்கள் விரும்பினார்கள் மேலும் வலிமா விருந்தில் ஏழைகளும் அழைக்கப்பட வேண்டும்

📓ஸைனபைத்(ரலி)திருமணம் செய்த போது விருந்தளித்த அளவுக்கு வேறு எவரைத் திருமணம் செய்த போதும் நபிகள் நாயகம் (ஸல்) விருந்தளித்ததில்லை. ஸைனபை மணந்த போது ஒரு ஆட்டை திருமண விருந்தாக அளித்தார்கள்.
அறிவிப்பவர்: அனஸ் (ரலி)
நூல்: புகாரி 5168, 5171, 7421

📓செல்வந்தர்கள் மட்டும் அழைக்கப்பட்டு ஏழைகள் புறக்கணிக்கப்படும் வலீமா உணவு, உணவுகளில் மிகவும் கெட்டதாகும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: புகாரி 5177

♻யாரேனும் முன் வந்து திருமணத்தில் அன்பளிப்பு கொடுத்தால் மறுப்பு சொல்லாமல் வாங்கி கொள்ளளாம்

📓ஒருவருக்கு அவரது சகோதரர்களிடமிருந்து நல்ல பொருள் ஏதேனும் அவர் கேட்காமலும், எதிர்பார்க்காமலும் கிடைக்குமேயானால் அதை மறுக்காமல் ஏற்றுக் கொள்ளவும். ஏனெனில் அது அல்லாஹ் அவருக்கு வழங்கிய பாக்கியமாகும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: காலித் பின் அதீ (ரலி)
நூல்: புகாரி 1380, 6630


♻மனமக்களை வாழ்த்தி ஓதும் துஆ

📓நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் திருமணத்தில் மணமக்களை வாழ்த்தும் போது பாரக்கல்லாஹு லக வபாரக்க அலைக வஜமஅ பைனகுமா ஃபீ கைர் என்று கூறுவார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: திர்மிதீ 1011, அபூதாவூத் 1819, அஹ்மத் 8599


✳இன்ஷா அல்லாஹ் இனி வரக்கூடிய காலங்களில் நமதுநபி வழியை பின்பற்றி நமதுநபி வழியில் திருமணம் முடிக்க அல்லாஹ் நமக்கு அருள் புரிவானாக

✳ஆமீன்

➖➖➖➖➖

🔮 இஸ்லாமிய மார்க்க செய்திகளை அழகிய முறையில் அறிய

♻ வாட்ஸ்அப்பில் எங்கள் செய்தியை பெற 👇

📱 0091- 9629167027

📱 0091- 9994675186

பேஸ்புக்கில் எம்மை தொடர 👇
https://m.facebook.com/Makkalmedia-1684365771847561/?ref=wizard

📢 ⓂAKKAL ⓂEDIA 📢

📝 பதிவு நாள்: 20 JAN 2016

No comments:

Post a Comment