Friday 25 March 2016

பொய் சத்தியம் பகுதி 2

📢  ⓂAKKAL ⓂEDIA 📢

💠பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்💠

      🚫பொய் சத்தியம்🚫
              🗯பகுதி 2

💠சத்தியம் செய்தல் ஆதி காலம் முதல் தொன்று தொட்டு வரும் பழக்கங்களில் உள்ளதாகும்.

👆🏻இது மனிதனின் இயற்கை குணாதிசயங்களில் ஒன்றாகவும் உள்ளது.

💥தான் கூறும் வார்த்தைகளை அம்மக்கள் நம்ப மறுக்கிறார்களே என்பதற்காக, இறுதியில் இதன் மீதாவது சத்தியம் செய்து நம்பச் செய்வோம் என்று கருதி, சத்தியம் செய்வதுண்டு.

💥அல்லது சில விஷயத்தை வலுப்படுத்துவதற்காக சத்தியம் செய்வதுண்டு.

☁சில அத்தியாவசிய தேவைகளுக்காக சத்தியம் செய்வதை இஸ்லாம் வலியுறுத்துகிறது.

💥உதாரணமாக ஒருவன் பொருளை மற்றொருவன் அபகரித்துக் கொண்டான்.

🗯பொருளைப் பறி கொடுத்தவனிடம் போதிய சான்று இல்லை. சாட்சிகள் இல்லையாயின் பொருளை தன் பொருள் தான் என உறுதிப்படுத்த சத்தியம் செய்யச் சொல்கிறது இஸ்லாம்.

🗯எமன் நாட்டில் உள்ள நிலத்தில் எனக்கும் இன்னொருவருக்கும் வழக்கு இருந்தது. நான் நபி (ஸல்) அவர்களிடம் இந்த வழக்கை கொண்டு சென்றேன்.

🗯உன்னுடையதுதான் என்பதற்கு உன்னிடம் ஆதாரம் உண்டா? எனக் கேட்டார்கள். நான் இல்லை என்றேன் அப்படியானால் உன்னுடைய எதிரி (யின் கைவசத்தில் அந்த நிலம் இருப்பதால்) அது தன்னுடையதே என்று சத்தியம் செய்யக் கோருவதே வழி என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்படியானால் அவர் சத்தியம் செய்யட்டும் என்று நான் கூறினேன்.
அறிவிப்பவர் :- அஷ்அஸ் (ரலி), நூல் :- முஸ்லிம்

👆🏻இதுபோன்ற மிக அவசியமான சந்தர்ப்பங்களில் சத்தியம் செய்வதை இஸ்லாம் அனுமதித்தாலும், சில ஒழுங்கு முறைகளை இதில் வலியுறுத்துகிறது.

💥சத்தியம் செய்யும் முறை👇🏻


💥சத்தியம் எந்தப் பொருள் மீது வேண்டுமானாலும் எவர் மீது வேண்டுமானாலும் செய்யலாம் என்ற நிலையை இஸ்லாம் வன்மையாகக் கண்டிக்கிறது.

☝🏻அல்லாஹ் மீது மட்டுமே சத்தியம் செய்யக் கட்டளையிடுகிறது.

📓ஒருவர் அல்லாஹ் அல்லாத (மற்ற)வை மீது சத்தியம் செய்தால் அவர் காஃபிராகி விட்டார் என்று நபி (ஸல்) கூறினார்கள்.
அறிவிப்பவர் :-  இப்னு உமர் (ரலி), நூல் :- அபூதாவூத், திர்மிதீ, ஹாகிம்

📓ஒருவர் சத்தியம் செய்தால், அல்லாஹ் மீது தவிர சத்தியம் செய்ய வேண்டாம் என்று நபி (ஸல்) கூறினார்கள்.


அறிவிப்பவர் :- இப்னு உமர் (ரலி) நூல்கள் :- புகாரி, முஸ்லிம்

📓அல்லாஹ்வைக் கொண்டே தவிர சத்தியம் செய்யாதீர்கள் என்று நபி (ஸல்) கூறினார்கள்.
அறிவிப்பவர் :- அபூஹ{ரைரா (ரலி) நூல்கள் :- அபூதாவூத், நஸயீ, இப்னுஹிப்பான், பைஹகீ

📓உமர் (ரலி) அவர்கள் தன் தந்தையைக் கொண்டு சத்தியம் செய்வதைக் கேட்ட நபி (ஸல்) அவர்கள், நிச்சயமாக அல்லாஹ் உங்கள் தந்தைகள் மீது சத்தியம் செய்வதைத் தடை செய்து விட்டான். ஒருவர் சத்தியம் செய்தால், அவர் அல்லாஹ்வைக் கொண்டே சத்தியம் செய்யட்டும். அல்லது மவுனமாய் இருக்கட்டும்| என்று கூறினார்கள்.

அறிவிப்பவர் இப்னு உமர் (ரலி) நூல்கள் :- முஸ்லிம், அஹ்மத், நஸயீ

📓ஒரு யூதப் பெண் நபி (ஸல்) அவர்களிடம் வந்து கஃபாவின் மீது சத்தியமாக|என்றும், அல்லாஹ்வும் நீங்களும் நாடினால்…. என்று உங்களை நோக்கி உங்கள் தோழர்கள் கூறுகிறார்கள். (இதன் மூலம்) நீங்கள் இணை வைக்கிறீர்கள் என்று கூறினார்கள். இதைக் கேட்ட நபி (ஸல்) அவர்கள் கஃபாவின் ரப்பின் மீது சத்தியமாக என்று கூறும்படியும் அல்லாஹ்வும் நாடி, அதன் பின் நீங்களும்  நாடினால்..|என்று தம்மை நோக்கி கூறும் படியும் அவர்களுக்கு (ஸஹாபாக்களுக்கு) கட்டளையிட்டார்கள்.
அறிவிப்பவர் :- குதைலத் பின்த் ஸைஃபீ (ரலி)

நூல்கள் :- அஹ்மத் நஸயீ, இப்னுமாஜா

🗯ஒருவர் தான் சத்தியம் செய்யும் போது, லாத் உஸ்ஸா||வை (மக்கா காஃபிர்களின் தெய்வங்களை) கொண்டு சத்தியம் செய்தால் அவர் (ஈமான் இழந்து விட்டார்.
எனவே) லாயிலாஹ இல்லல்லாஹ்| என்று கூறட்டும்! என்று நபி (ஸல்) கூறினார்கள்.
அறிவிப்பவர் :-  அபூஹ{ரைரா (ரலி) நூல் :- புகாரி

📓சிலைகள் மீதும், உங்கள் தந்தைகள் மீதும் சத்தியம் செய்யாதீர்கள் என்று நபி (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பவர் :- அப்துர் ரஹ்மான் இப்னு ஸமுரா (ரலி) நூல் :- முஸ்லிம்

👆🏻மேற்கொண்ட ஹதீஸ்கள் யாவும் இறைவன் பெயர் கொண்டு மட்டுமே சத்தியம் செய்ய அனுமதிக்கிறது.

🗯எனவே இன்று முஸ்லிம்கள், அந்த அவ்லியா மீது சத்தியமாக! இன்ன நாதா மீது சத்தியமாக! குழந்தை மீது சத்தியமாக! உணவு மீது சத்தியமாக! என்றெல்லாம் சத்தியம் செய்கின்றனர்.

☝🏻அல்லாஹ் அல்லாத எந்தப் பொருளின் மீது சத்தியம் செய்தாலும் அவை கூடாது.

❌அப்படிக்கூறி சத்தியம் செய்வது மாபெரும் குற்றம் என்பதையும் அறியலாம். எனவே அல்லாஹ்வின் பெயர் கூறி மட்டுமே சத்தியம் செய்ய வேண்டும்
   
            🗯தொடரும்...

🔃🔃🔃🔃🔃🔃🔃🔃

🔮 இஸ்லாமிய மார்க்க செய்திகளை அழகிய முறையில் அறிய

♻ வாட்ஸ்அப்பில் எங்கள் செய்தியை பெற 👇

📱 0091- 9994675186

📱 0091- 9629167027

பேஸ்புக்கில் எம்மை தொடர 👇
https://m.facebook.com/Makkalmedia-1684365771847561/?ref=wizard

📢 ⓂAKKAL ⓂEDIA 📢

📮 பதிவு நாள்: 25 MAR 2016

Part of 👇
📡 ECHO DAWAH FOUNDATION 📡

No comments:

Post a Comment