📢 ⓂAKKAL ⓂEDIA 📢
💠பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்💠
🚫இஸ்லாத்தின் பார்வையில் பொய்🚫
⚫பொய் மனித இனத்தால் மிக மிகச் சாதாரணமாக செய்யப்படும் தீமை.
⚫பொய் சொல்வது வாழ்க்கையில் இன்றியமையாதது என்ற அளவிற்கு போய்விட்டது. வியாபாரத்தில், அமானிதத்தைப் பேணுவதில், வாக்குறுதியை காப்பாற்றுவதில், தன்னை மிகைப்படுத்திக் கொள்வதில், ஆற்ற வேண்டிய காரியத்தில் பொய்கள் தாராளமாக பேசப்பட்டு வருகின்றன
⚫ ஆனால் நாம் பேசுவது பொய் இதனால் என்ன தன்டனை என தெரியாமலே பலர் பேசுகின்றனர்.
👆🏻இதுபற்றி இஸ்லாம் என்ன சொல்கிறது என்பதை பார்க்கும்போது, அல்குர்னிலும், ஹதீதுகளிலும் ஏராளமான ஆதாரங்கள் பொய் பேசுவது பற்றி வந்துள்ளன. அவற்றிலிருந்து சில👇🏻
🚫பொய் பற்றி அல்குர்ஆன்👇🏻
📓 சத்தியம் வந்தது
َஅசத்தியம் அழிந்தது- நிச்சயமாக அசத்தியம் அழிந்தே போகும்.(17:81)
📓நீங்கள் அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள் இன்னும் நீங்கள் உண்மை பேசக் கூடியவர்களாக ஆகிவிடுங்கள்.(அல்குர்ஆன் 9:119)
📓 நீங்கள் உண்மையை பொய்யுடன் கலக்காதீர்கள். உண்மையை மறைக்கவும் செய்யாதீர்கள்.(2:42)
📓அல்லாஹ்வின் மீது (இவ்வாறு) பொய்யை இட்டுக் கட்டுபவர்கள் நிச்சயமாக வெற்றி பெற மாட்டார்கள்' என்று (நபியே!) கூறிவிடும். (அல்-குர்ஆன் 10:69)
📓அன்றைய தினம் (மறுமையில்) பொய்யர்களுக்கு கேடுதான்(52:11)
🚫பொய் பற்றி ஹதீதுகள்👇🏻
📓 நெருப்பு விறகைத் திண்பது போல பொய் ஈமானை தின்று விடும் என்று நபிகளார் எச்சரிக்கை செய்துள்ளார்கள்.
📓 'ஒரு முஃமினிடம் எல்லாத்தீமைகளும் இருக்கலாம். ஆனால் அவனிடம் பொய்யும், நேர்மையின்மையையும் இருக்கக் கூடாது. (நூல்: அஹ்மத்)
📓ஒருவர் உணவுப் பொருள் விற்றுக் கொண்டிருக்கும்போது நபி(ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் அவரிடம் சென்று நீர் எப்படி விற்கிறீர் என்று கேட்க அதற்கு அவர்(சரியாக) விற்கிறேன் என்று பதில் கூறினார்.அப்போது அவர் உணவுப் பொருளுக்குள் கையை ஓட்டிப் பார்க்கும்படி நபி(ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களுக்கு வஹீ மூலம் அறிவிக்கப்பட்டது. உடனே தமது கையை அதில் ஓட்டிப்பார்த்தபோது , உள்ளே ஈரமாக இருந்தது. அப்போது நபி(ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம) அவர்கள் பிறருக்கு மோசடி செய்பவர் நம்மைச் சார்ந்தவர் அல்லர் என்றார்கள். (அபூஹுரைரா ரழி ரழியல்லாஹு அன்ஹு) அபூதாவூத்)
📓இறைத் தூதர்( ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள்' 'விற்பவரும் வாங்குபவரும் பிரியாமலிருக்கும் வரை வியாபாரத்தை முறித்துக் கொள்ளும் உரிமை இருவருக்கும் உண்டு! அவ்விருவரும் உண்மை பேசிக் குறைகளைத் தெளிவுபடுத்தியிருந்தால் அவர்களின் வியாபாரத்தில் பரக்கத் (அருள் வளம்) அளிக்கப்படும்! குறைகளை மறைத்துப் பொய் சொல்லியிருந்தால் அவர்களின் வியாபாரத்தில் உள்ள பரக்கத் நீக்கப்படும்!' (நூல் : புஹாரி).
📓ஒரு நாள் நபி(ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் ஒரு வீட்டிற்கு விருந்துக்குச் சென்றிருந்தார்கள். அந்த வீட்டு அம்மையார் வெளியில் உள்ள தனது குழந்தையை வா உனக்கு ஒன்று தருகிறேன் என்று அழைத்தார்கள். அப்பொழுது நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் அவரிடம் உமது குழந்தைக்கு என்ன கொடுக்கப் போகின்றீர் என்று வினவ, அவர் பேரித்தம் பழம் கொடுக்கப் போகிறேன் என்றார். அதற்கு நபி(ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் அப்படி செய்யாவிட்டால் உம்மீது ஒரு பொய் பதிவு செய்யப்படும் என்றார்கள். (அப்துல்லாஹ் பின் ஆமிர ரழியல்லாஹு அன்ஹு அபூதாவூத், பைஹகீ)
🗯அப்துல்லாஹ் இப்னு ஆமிர்( ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் அறிவிக்கிறார்கள்👇🏻
📓ஒருநாள் நபி(ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் எங்கள் வீட்டில் அமர்திருக்கும் போது என் அன்னை இங்கே வா' நான் உனக்கு ஒன்று தருகிறேன், என்று என்னை அழைத்தார்கள். அப்போது நபி(ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள், அவருக்கு என்ன தரப்போகிறாய் என்று (என் தாயிடம்) வினவினார்கள். (அதற்கு என் தாய்) நான் அவருக்கு ஒரு பேரிச்சம் பழம் கொடுப்பேன், என்று கூறினார்கள். (அதற்கு) நபி(ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் நீங்கள் அவருக்கு ஒன்றும் தராமல் இருந்தால் நீங்கள் பொய் கூறியவராகியிருப்பீர்கள், என்று கூறினார்கள்.
📓அபூஹுரைரா (ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் அறிவிக்கிறார்கள்: -யாரேனும் ஒரு குழந்தையிடம் இங்கே வந்து இதை எடுத்துக்கொள் என்று கூறிவிட்டு அந்தக் குழந்தைக்கு ஒன்றும் தராவிட்டால், அது பொய் பேசியதாக கணக்கிடப் படும், என்று நபி(ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள். ஆதாரம்: அபூதாவூத்,மற்றும் ஸஹீஹ் அல் ஜாமிவு
சம்பிரதாயத்திற்காக பொய் சொல்வதும், சம்பிரதாயத்திற்காக ஒருவரை விருந்துக்கு அழைப்பதும் , சம்பிரதாயத்திற்காக அழைக்கப்பட்டவர் மறுப்பதும் பொய் தான்.
📓ஒரு முறை நபி(ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களுக்கு பால் கொண்டு வரப்பட்டது. அப்போது அவர்கள் எங்களிடம் சாப்பிடும்படி கூறினார்கள்.அதற்கு நாங்கள் எங்களுக்கு விருப்பமில்லை என்றோம்.அதற்கு அவர்கள் நீங்கள் பசியையும், பொய்யையும் சேர்த்துக் கூறாதீர்கள் என்றார்கள். (அஸ்மா பின்து யஜீத்(ரழியல்லாஹு அன்ஹு) இப்னு மாஜா)
📓நபி(ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்)அவர்கள் கூறினார்கள்: – 'நான் நகைச்சுவையாக பேசுகிறேன், ஆனால் உண்மையைத் தவிர வேறென்றும் பேசுவதில்லை' என்று நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: உமர் (ரழியல்லாஹு அன்ஹு) ஆதாரம்: தபரானி அவர்களின் அல்-முஜம் அல் கபீர்)
📓அபூ ஹுரைரா(ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களிடம் 'அல்லாஹ்வின் தூதர் அவர்களே! நீங்கள் எங்களுடன் நகைச்சுவையாக பேசுகிறீர்களே' (என்று கூறினார்கள்) அதற்கு நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் 'ஆனால் நான் உண்மையை மட்டும் தான் பேசுகிறேன்' என்று கூறினார்கள். ஆதாரம்: திர்மிதி;.
🗯நபி(ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள்👇
📓மக்களை சிரிக்க வைப்பதற்காக பேசி, பொய் சொல்பவனுக்கு கேடு உண்டாகட்டும், கேடு உண்டாகட்டும், கேடு உண்டாகட்டும், என்று நபி(ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள்கூறினார்கள். அறிவிப்பவர்: முஆவியா ரழியல்லாஹு அன்ஹு , ஆதாரம் (திர்மிதி, அபூதாவூத்)
📓அடுத்தவனை மகிழ்விப்பற்காக பொய் சொல்பவன் அழிந்து போகட்டும் என்றார்கள் நபி(ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்)அவர்கள். -( திர்மிதீ, அபூதாவூத், அஹ்மத்)
📓உமர் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் கூறினார்கள், விளையாட்டுக்காக பொய் பேசுவதை நிறுத்தும் வரையில் உண்மையான ஈமான் (இறை நம்மிக்கை) ஏற்படாது. ஆதாரம்: முஸன்னஃப் இப்னு அபீஷைபா.
🗯பொய்பேசுவதினால் ஏற்படும் கேடுகள் அடுத்த தொடரிலே இன்ஷா அல்லாஹ் பார்ப்போம்
🗯தொடரும்....
🔃🔃🔃🔃🔃🔃🔃🔃🔃🔃🔃
🔮 இஸ்லாமிய மார்க்க செய்திகளை அழகிய முறையில் அறிய
♻ வாட்ஸ்அப்பில் எங்கள் செய்தியை பெற 👇
📱 0091- 9994675186
📱 0091- 9629167027
பேஸ்புக்கில் எம்மை தொடர 👇
https://m.facebook.com/Makkalmedia-1684365771847561/?ref=wizard
📢 ⓂAKKAL ⓂEDIA 📢
📮 பதிவு நாள்: 24 MAR 2016
Part of 👇
📡 ECHO DAWAH FOUNDATION 📡

அல்ஹம்துலிலாஹ்
ReplyDelete