Monday, 14 March 2016

💥 முஹம்மது நபி பற்றி பிற மத வேதங்களில்💥 ⭕ பகுதி 1⃣8⃣

📢  ⓂAKKAL ⓂEDIA 📢

💠பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்💠

💥 முஹம்மது நபி பற்றி பிற மத வேதங்களில்💥

⭕ பகுதி 1⃣8⃣


 ⌛தலைக் கல்லானது எது?

📓பைபிளின் புதிய ஏற்பாட்டில் மத்தேயு சுவிஷேசம் உள்ளது. அதில் இயேசு அவர்கள் அறிவித்துச் சென்ற ஒரு முன்னறிவிப்பு இடம் பெற்றுள்ளது.

📓பழைய ஏற்பாட்டில் கூறப்பட்ட முன்னறிவிப்புகள் இயேசுவுக்குப் பொருந்தாவிட்டாலும் அவை இயேசுவைக் குறிப்பதாக கிறித்தவ அறிஞர்கள் சாதிப்பது வழக்கம்.

💡ஆனால் இயேசுவே கூறிய முன்னறிவிப்பு குறித்து இத்தகைய சமாதானம் எதையும் அவர்களால் கூற இயலாது.

🔮இதோ இயேசு கூறுவதைக் கேளுங்கள்.

📖இன்னும் ஒரு உவமையைக் கேளுங்கள். வீட்டெஜமானாகிய ஒரு மனுஷன் இருந்தான். அவன் திராட்சைத் தோட்டம் உண்டாக்கி, அதைச் சுற்றி வேலியடைத்து, அதில் ஆலை கட்டி, கோபுரத்தையும் கட்டி, குடியானவர்களுக்கு அதைக் குத்தகைக்காக விட்டுப் புறதேசத்துக்குப் போயிருந்தான்.

📖கனிகாலம் சமீபித்த போது, கனிகளை வாங்கி வரும்படி தன் ஊழியக்காரரைக் குடியானவர்களிடம் அனுப்பினான். அவர்களோ அந்த ஊழியக்காரரைப் பிடித்து, ஒருவனை அடித்தார்கள், ஒருவனைக் கொலை செய்தார்கள், ஒருவனைக் கல்லெறிந்தார்கள் பின்னும் அவன் முந்தினவர்களிலும் அதிகமாக வேறே ஊழியக்காரரை அனுப்பினான், அவர்களையும் அப்படியே செய்தார்கள்.

🔻கடைசியிலே அவன், என் குமாரனை மதிப்பார்கள் என்று சொல்லி, தன் குமாரனை அவர்களிடத்தில் அனுப்பினான். குடியானவர்களோ தன் குமாரனைக் கண்ட போது, அவன் சுதந்தரவாளி, இவனைக் கொன்று இவன் சுதந்திரத்தை எடுத்துக் கொள்வோம் வாருங்கள் என்று ஒருவரோடொருவர் சொல்லிக்கொண்டு, அவனைப் பிடித்து திராட்சைத் தோடடத்திற்குப் புறம்பே தள்ளிக் கொலை செய்தார்கள்.

🔻 அப்படியிருக்க, திராட்சைத் தோட்டத்து எஜமான் வரும் போது, குடியானவர்களை என்ன செய்வான் என்று கேட்க, அவர்கள் : அந்தக் கொடியோரைக் கொடுமையாய் அழித்துவிட்டு, ஏற்ற காலங்களில் தனக்குக் கனிகளைக் கொடுக்கும் வேறே குடியானவர்களிடம் தோட்டத்தை விடுவான் என்றார்கள்.

💡இயேசு அவர்களிடம்:

💢வீடுகட்டுகிறவர்கள் ஆகாதென்று தள்ளின கல்லே

💢கோடிக்குத் தலைக்கல்லாயிற்று

💢அது கர்த்தராலே ஆயிற்று

💢அது நமது கண்களுக்கு ஆச்சரியம்

💢என்று நீங்கள் வேதத்தில் ஒருக்காலும் வாசிக்கவில்லையா❓

💢 ஆகையால், நான் உங்களுக்குச் சொல்லுகிறேன். கேளுங்கள் கடவுள் ராஜ்யம் உங்களிடத்திலிருந்து நீக்கப்பட்டு அதன் கனிகளைத் தரும் ஜனத்திற்குக் கொடுக்கப்படும். இந்தக் கல்லின் மேல் விழுகிறவன் நொறுங்கிப் போவான் இது எவன் மேல விழுமோ அவனை இது நசுக்கிப் போடும் என்றார்

📖(மத்தேயு 21:33 முதல் 21:44)📖

⏳என்னே அற்புதமான முன்னறிவிப்பு! நபிகள் நாயகத்தின் வருகையை இரண்டாவது கருத்துக்கு இடமின்றி எவ்வளவு தெளிவாக இயேசு கூறியுள்ளார். என்பதைக் கிறித்தவ நண்பர்களே சிந்தியுங்கள்.

💡இந்த உவமையில் கூறப்படுவது என்ன❓ இவ்வுலகம் திராட்சை தோட்டத்துக்கு ஒப்பிடப்படுகிறது. அதன் உரிமையாளனாக கர்த்தர் குறிப்பிடப்படுகிறார்.

⭕மனித சமுதாயத்தினர் திராட்சைத் தோட்டத்தைக் குத்தகைக்கு எடுத்திருப்பவர்களுக்கு ஒப்பிடப்படுகிறார்கள். அதாவது இந்த உலகத்தை தங்களின் உடமையாக கருதி அவரது கட்டளைப்படியே இவ்வுலகப் பொருட்களைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என உணர்த்தப்படுகிறது.

💥இன்ஷா அல்லாஹ்

💥  தொடரும் ...

🔃🔃🔃🔃🔃🔃🔃🔃🔃🔃🔃
🔮 இஸ்லாமிய மார்க்க செய்திகளை அழகிய முறையில் அறிய

♻ வாட்ஸ்அப்பில் எங்கள் செய்தியை பெற 👇

📱 0091- 9994675186

📱 0091- 9629167027

பேஸ்புக்கில் எம்மை தொடர 👇
https://m.facebook.com/Makkalmedia-1684365771847561/?ref=wizard

📢 ⓂAKKAL ⓂEDIA 📢

📮 பதிவு நாள்: 02 MAR 2016

Part of 👇
📡 ECHO DAWAH FOUNDATION 📡

No comments:

Post a Comment