Sunday, 13 March 2016

📝கல்வி இல்லாமையால் ஏற்படும் விபரீதம் பகுதி-16

📢  ⓂAKKAL ⓂEDIA 📢

🍥அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)🍥

📝கல்வி இல்லாமையால் ஏற்படும் விபரீதம்

📚இன்று பொதுவாக ஒருவரிடம் கல்வி இல்லை என்றால் அவரை யாரும் மதிக்க மாட்டார்கள்.அத்தகையோருக்கு பெண் தருவதற்கும் தயங்குவார்கள்.

💈அதைப்போல் அந்த நபரும்  சுயமாக சில விசியங்கள் செய்ய முடியாது

கல்வி இல்லை என்றால் நம்மை படைத்தவன் யார் என்று தெரியாமல் போய்விடும் அவ்வாறு யார் என்று தெரியாமலே இறந்து விட்டால் நாளை மறுமை நாளில் நாம் இந்த உலகத்தில் வாழ்ந்த வாழ்க்கை பற்றி கேட்கும் போது ஒன்றும் பதில் சொல்ல இயலாது .நாம் மிகப்பெரிய நஷ்டவாலியாக ஆகி விடுவோம்


❄கல்வி கற்காவிட்டால் ஏற்படும் விபரீதங்கள்

1⃣ எளிதில் ஏமாற்றப்படுவோம்.

🔺நமக்கு போதிய கல்வி ஞானம் இல்லை என்றால் எளிதில் நம்மிடம் வந்து ஏதேனும் பொய்யை சொல்லி நம்மை ஏமாற்றக்கூடும். அதற்கு பழியாக நம் பணம் போன்றவற்றை கூட இழக்க நேரிடலாம்.

2⃣ அவமானம் ஏற்படும்

🔺சின்ன சின்ன விஷயங்கள் கூட தெரியாமல் அவமானம் பட்டு தலைக்குனிய வேண்டிய நிலை ஏற்படும் . அந்த அவமானம் என்றும் அழியாமல் உருத்திக்கொண்டே இருக்கும்.


3⃣முக்கியமாகஏதேனும் தமக்கு செய்ய வேண்டும் என்றால் பிறரை நாட வேண்டியது இருக்கும். நம்மிடம் போதிய கல்வி இல்லாமையால் ஒரு செயலை செய்ய வேண்டும் என்றால் யாராவது உதவ மாட்டார்களா❓ என்று உள்ளம் ஏங்கும்.எ.கா: வங்கி,அரசு அலுவலங்களான கலெக்டர் ஆபிஸ்,காவல் நிலையம்,தாலுக்க ஆபிஸ் போன்றவை.


4⃣இன்னும் அந்த கல்வி இல்லாமையால் தான் நன்மை எது❓ தீமை எது ❓ என்று அறியாமல் பாவத்தை சம்பாதித்து கொண்டு இருக்கிறோம் இதன் விளைவு தான் விபச்சாரம்,கொலை,கொள்ளை,சூதாட்டம், வட்டி போன்றவைகள்.

👆🏼இந்த பாவத்திற்கு இந்த உலகில் தண்டனையும், கேவலமும்  கிடைக்கலாம். ஆனால் மறுமையில் இத்தீமைகளுக்கு அல்லாஹ்விடம் கடுமையான வேதனை  உண்டு.

✒அதைப்போல மிக முக்கியமான ஒன்று

✅நாம் யார்? நாம் எங்கு செல்ல இருக்கிறோம்? நாம் படைக்க பட்ட நோக்கம் என்ன ? என்ற கேள்விகளுக்கு பதில் தெரியாமலே இறந்து விடுவது மிக பெரிய கைசேதமாகும்.

✅இவ்வளவு துல்லியமாக படைக்கப்பட்ட உடம்பு எதற்கு? இவ்வளவு நேர்த்தியாக இயங்கக்கூடிய உலகம் எதற்கு? என்று சிந்திக்க கடமைப்பட்டு இருக்கிறோம் சகோதர சகோதரிகளே❗

❄இதை அறியாமல் மரணித்து விட்டால்  நரகமே மிஞ்சும்.அதில் இருந்து மீளவும் முடியாது.

✒கற்க வேண்டிய கல்வியை கற்றால் தான் மேலே உள்ள கேள்விகளுக்கு பதில் தெரியும் அன்பார்ந்தவர்களே❗

✅வாழக் கூடிய இந்த அற்ப நாட்களில் இந்த கல்வியை பெறாமல் முடிவில் கைசேதப்பட்டு ஒரு பலனும் இல்லை.

 
           ................தொடரும்.

🔃🔃🔃🔃🔃🔃🔃🔃🔃🔃🔃
🔮 இஸ்லாமிய மார்க்க செய்திகளை அழகிய முறையில் அறிய

♻ வாட்ஸ்அப்பில் எங்கள் செய்தியை பெற 👇

📱 0091- 9994675186

📱 0091- 9629167027

பேஸ்புக்கில் எம்மை தொடர 👇
https://m.facebook.com/Makkalmedia-1684365771847561/?ref=wizard

📢 ⓂAKKAL ⓂEDIA 📢

📝 பதிவு நாள்: 07 FEB 2016

No comments:

Post a Comment