Sunday 13 March 2016

🌺திருமணம் ஓர் அலசல்🌺 பகுதி-3⃣

📢  ⓂAKKAL ⓂEDIA 📢


🍥அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)🍥

🌺திருமணம் ஓர் அலசல்🌺

            பகுதி-3⃣

     ♨வரதட்சணை♨

✳இன்று நம்மிடம் பெருகி கிடக்கும் ஒரு பெரிய நோயாக இந்த வரதட்சணை இருந்து வருகிறது.

✳இந்த நாட்டில் ஒரு பெண் குழந்தை பிறந்தால் சோகம் மட்டும் தான் சந்தோஷம் இல்லை.ஓரிரு இடங்களில் சந்தோஷம் இருந்தாலும் அது ஆண் குழந்தை பிறந்தது போல் இல்லை.

🔻எதற்கு இந்த சோகம் என்று பார்த்தால் அதில் இந்த வரதட்சணை முக்கிய பங்கு வகிக்கிறது.இந்த நாட்டிலே ஏன் நம் ஊரில் கூட வரதட்சணை கொடுக்க முடியாமல் எத்தனை பெண்களுக்கு திருமணம் ஆகாமல் இருக்கிறது.

🌴இந்த நாட்டின் கலாச்சாரம் தான் இந்த வரதட்சணை ஆனால் நம்முடைய ( இஸ்லாமிய) கலாச்சாரமோ மஹர் கொடுத்து திருமணம் முடிப்பது தான்.

✳இன்று கொடுக்க கூடிய மஹர் பிச்சைக்காரன் தட்டில் பத்து போட்டுவிட்டு ஐம்பது எடுகிற கதைதான்.அன்பார்ந்தவர்களே இதற்கு காரணம் யார்❓

 🌴 பெற்றோர்களே ! தன் மகனுக்கு வரக்கூடிய மனைவிக்காக கணவன் தான் அவளுக்கு பகரமாக எதாவது கொடுக்க வேண்டும் இது தான் நபி வழி .

✳ வரதட்சணை கேட்ககூடிய பெற்றோர்கள் தன் வீட்டில் பெண் பிள்ளைகள் இருந்தால் அவர்கள் மனநிலை எப்படி இருக்கும்?


🌴இன்று திருமணம் என்கிற பெயரில் வியாபாரம் செய்ய கற்றுக்கொண்டார்கள்.குறிப்பாக நம்மவர்கள்.

✳அவர்கள் சொல்லும் காரணங்கள்

 🔻வரதட்சணை வாங்குவது தவறுதான்.ஆனால் அப்படி சொன்னால் மாப்பிள்ளைக்கு ஏதாவது குறை இருக்குமோ என்று நினைபார்களாம். அதற்கு தான் கேட்கிறார்களாம்.

🔻தங்கள் மகனை நிறைய செலவு செய்து நல்ல நிலைக்கு கொண்டு வந்தார்களாம்.

🔻தகுந்த அந்தஸ்தில் பெண் எடுத்தால் தான் கவுரவம் , மரியாதை எல்லாம் கிடைக்குமாம்.

🔻இத்தகையோருக்கான கேள்விகள்❓

👊🏻வீரமிக்க உத்தம ஹஜ்ரத் அலி ரலி, ஹஜ்ரத் உமர் ரலி, ஹஜ்ரத் உஸ்மான் ரலி, மற்றும் அனைத்து ஸஹாபாக்களும் வரதட்சணை இல்லாமலே திருமணம் செய்து கொண்டவர்கள். இவர்கள் குறை உடையோர்களா❓

🌴பிள்ளைக்கு நல்ல பெயர்,கல்வி, திருமணம் செய்து வைப்பது பெற்றோரின் கடமை ஆகும். அதற்காக பெண் விட்டாரிம் வரதட்சணை வியாபாரம் செய்வதா❓

✳கடமையை அல்லாஹ் விற்கு செய்கிறீர்களா❓ இல்லை வியாபாரத்திற்கா❓ செய்யும் கடமையை அல்லாஹ் விடம் எதிர்பார்பதே மூஃமீனின் குணம்.


🔻உண்மையில் பெரிய இடத்து பெண் பிள்ளைகளிடம் அனுசரனை, விட்டு கொடுக்கும் மனப்பான்மை, பொதுநலம் காண்பது அறிது. ஆயினும் உங்கள் கவுரத்திற்கு மகனின் எதிர்காலம் சீர்கெட்டாலும் சரிதானா❓

✅பார்க்க வேண்டிய தகுதி மார்க்கபற்று.அதனால் குடும்பத்தில் பரக்கத், தீன் உண்டாகும்.

✅நாம் இஸ்லாமிய மார்கபடி வாழ்ந்தால் மட்டுமே இவ்வுலகிலும் நிம்மதி மறுமையிலும் சுவனத்தை அடைய முடியும்.

🔻இல்லையேல் இவ்வுலகில் கேவலமும் மறுமையில் அல்லாஹ்விடம் கடுமையான நரக தண்டனை என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

🌴வரதட்சணை வாங்குவதையும் கொடுப்பதையும் நிறுத்துங்கள்.அல்லாஹ்விடம் துஆ செய்யுங்கள்.

🌴அல்லாஹ்வின் உதவி சமீபத்தில் இருக்கிறது.

📓மேலும், அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் ஒரு காரியத்தைப்பற்றிக் கட்டளையிட்டு விட்டால், அவர்களுடைய அக்காரியத்தில் வேறு அபிப்பிராயம் கொள்வதற்கு ஈமான் கொண்டுள்ள எந்த ஆணுக்கோ பெண்ணுக்கோ உரிமையில்லை; ஆகவே, அல்லாஹ்வுக்கும் அவனுடைய ரஸூலுக்கும் எவரேனும் மாறு செய்தால் நிச்சயமாக அவர்கள் பகிரங்கமான வழிகேட்டிலேயே இருக்கிறார்கள்.
(அல்குர்ஆன் : 33:36)

✳ அன்பார்ந்த தாய்மார்களே இளைஞர்களே நம்முடைய தூதர் நமக்கு எப்படி வாழ வேண்டும்? எப்படி எதை செய்ய வேண்டும் என்று ஒவ்வொன்றையும் கற்று தந்துள்ளார்கள் ஆகவே நம் தூதர் காட்டி வழியை பின் பற்றி நடக்க கூடிய நன்மக்களாக அல்லாஹ் நம்மை மாற்றுவானாக

       🌿 ஆமீன்🌿


🔗🔗🔗🔗🔗🔗🔗🔗🔗🔗🔗
            தொடரும்
🔗🔗🔗🔗🔗🔗🔗🔗🔗🔗🔗

🔮 இஸ்லாமிய மார்க்க செய்திகளை அழகிய முறையில் அறிய


♻ வாட்ஸ்அப்பில் எங்கள் செய்தியை பெற 👇

📱 0091- 9629167027

📱 0091- 9994675186


பேஸ்புக்கில் எம்மை தொடர 👇

https://m.facebook.com/Makkalmedia-1684365771847561/?ref=wizard

📢 ⓂAKKAL ⓂEDIA 📢

📝 பதிவு நாள்:13 JAN 2016

No comments:

Post a Comment