Sunday 13 March 2016

பகுதி 1⃣ 🔮யார் இவர்❓

📢  ⓂAKKAL ⓂEDIA 📢

💠பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்💠

         
🌎 உலகம் போற்றும் மாமனிதர்🌎


           🌎பகுதி 1⃣

        🔮யார் இவர்❓


🔮சில தினங்களுக்கு  முன்பு திருச்சி மணபாறையில் பிரபல கட்சி ஒன்றின் மூலமாக ஒரு விளம்பர பேனர் வைக்கபட்டது

🔮அதில் அக்கட்சி தலைவரை இஸ்லாமிய மக்கள் தன் உயிருக்கு மேலாக மதிக்கக்கூடிய நபிகள் நாயகத்தை போன்று என்ற வாசகம் இடம் பெற்று இருந்தது


🔮அப்பேனர் வைக்க பட்ட சிறிது நேரத்தில் இஸ்லாமிய கட்சிகள் மட்டும் இல்லாமல் அனைத்து இஸ்லாமிய அமைப்புகளும்  தம் கண்டனத்தை தெரிவித்தார்கள்.

👆🏻இதை அடுத்து அந்த பேனரில் அந்த வாக்கியம் விளக்கப்பட்டது.

🔮இதற்கு முன்பு கூட முஹம்மது நபி (ஸல்) அவர்கள் பற்றிய அவதூறு பரப்பியதற்காக உலக அளவில் எதிர்ப்பு எழுந்தது.

🔮ஏன் இப்படி எதிர்ப்பு தெரிவிக்க காரணம்.

💠யார் அவர்?  அவரையோ-  அவரின் பெயரை கொண்டு அவதூறு சொன்னாலே ஏன் இவ்வளவு எதிர்ப்புகள்.?

❇அப்படி பட்ட நபர் யார்.?


🔮அவர் எங்கு பிறந்தவர் எதற்கு அவருக்கு இந்த மரியாதை.?

💠பெயர்:-முஹம்மது

💠புனை பெயர்:- அல் அமீன்(நம்பிக்கை குரியவன்)

💠தந்தை: அப்துல்லாஹ்

💠தாய்: ஆமீனா

💠கிபி 570 இல் சவூதி அரேபியாவில்
மக்கா நகரில்
பிறந்தார்

💠பிறக்கும் முன் தந்தையை  இழந்தார் பிறந்து சிறிது காலத்தில் தாயையும் இழந்தார்.

♻பெற்றொர் இறப்பிற்கு பின் சிறிய தந்தை அபூ தாலிபிடம் வளர்ந்து வந்தார்.

♻சிறு வயதில் இருந்தே வியாபாரம் செய்ததால் அவருக்கு எழுத படிக்க தெரியாது.

✅ஆனால் நல்ல ஒழுக்கம் உடன் வாழ்ந்து வந்தார்.

♻ பாடசாலையில் மட்டும் கற்ப்பது கல்வி அல்ல

💠தன் சுய சிந்தனையில் கொண்டு ஆரம்பம் முதலில் மது , மாது, சூது போன்ற தீய பழக்கத்தை விட்டு விலகி இருந்தார்.

♻அவர் வாழ்ந்த காலத்தில் மது அருந்துவது கன்னியமாகவும் கவுரவமாகவும் கருதப்பட்டது

💠ஆனாலும் அந்த சூழலிலும் அவர் மதுவின் பக்கம் செல்லாமல் இருந்தார்.

💠வியாபாரிகள் தன் வியாபாரத்திற்கு செல்லும் போது தங்களிடம் இருக்கும் விலை மதிப்புமிக்க பொருள்களை இவர்களிடம் தான் கொடுத்து விட்டு செல்வார்கள்.

💠அவர்கள் திரும்பி வரும் வரை அப்பொருளை பொறுப்போடு பார்த்து கொள்வார்.

♻அனைவரிடமும் கண்ணியத்துடன் நடந்து கொள்ளுவார் .

❇இந்த நல்ல செயல்களால் அவரை அனைவரும் அல் அமீன்( நம்பிக்கையாளர்) என்று செல்லமாக அழைப்பார்கள்.

♻தொடரும்.....

🔃🔃🔃🔃🔃🔃🔃🔃🔃🔃🔃

🔮 இஸ்லாமிய மார்க்க செய்திகளை அழகிய முறையில் அறிய

♻ வாட்ஸ்அப்பில் எங்கள் செய்தியை பெற 👇

📱 0091- 9994675186

📱 0091- 9629167027

பேஸ்புக்கில் எம்மை தொடர 👇
https://m.facebook.com/Makkalmedia-1684365771847561/?ref=wizard

📢 ⓂAKKAL ⓂEDIA 📢
📝 பதிவு நாள்:  15  FEB 2016

Part of👇🏼
📡ECHO DAWAH FOUNDATION 📡

No comments:

Post a Comment