Sunday, 13 March 2016

❤ காதல் ❤ பகுதி -7

📢  ⓂAKKAL ⓂEDIA 📢

💠பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்💠

            ❤ காதல் ❤

               பகுதி -7⃣  
                                                                                                                                                                                                                                                                                                                                                                 
        ✨இஸ்லாத்தின் பார்வையில்   காதல்   மற்றும்    காதலர் தினம்

                                                                                                                                                                                     ✨இஸ்லாத்தில் நேசிப்பதற்க்கும் அளவு இருக்கிறது
கோவப்படுவதற்க்கும் அளவு இருக்கிறது

✨நாம் எல்லா ஹதீஸ் கிதாபுகளிலும் நேசத்தின் பாடத்தை பார்த்தோம் என்று சொன்னால் நமக்கு முதலாவதாக சொல்லும் பாடம்

💖ألحب في الله وال بغض في الله

💖நேசிப்பது அல்லாஹ்விற்க்காக இருக்க வேண்டும்
கோபப்படுவதும் அல்லாஹ்விற்க்காக இருக்க வேண்டும்
இதை தாண்டி யாரை நேசிப்பதும் தவறு
கோவப்படுவதும் தவறு

✨கூடா நட்பு கேடாய் முடியும்
என்பதை போல தேவை இல்லாத அன்பும்
இஸ்லாத்தில் அனுமதி இல்லாத அன்பும் கேடில் தான் முடியும்😞

💖அன்னிய ஆணோ அல்லது அன்னிய பெண்னோ
யாருடன் அன்பு பாசம் காதல்
அது எந்த பெயரில் இருந்தாலும் கூடாது அதை இஸ்லாம் ஒரு போதும் அனுமதிக்காது



    💖இந்த காலத்தில் காதல் என்ற ஒரு வார்த்தை தவறானதாக ஆக்கப்பட்டுவிட்டது
அது ஆபாசங்கள் நிறைந்த ஒரு செயலுக்கு சொல்லப்படும் வார்த்தையாக ஆக்கப்பட்டு விட்டது
இது அன்னிய ஆண்களும் அன்னிய பெண்களும் ஒன்றாக கலப்பதினால் ஏற்படுகிறது

✨இஸ்லாம் வணக்கத்திற்கு
 கூட ஆண்களும் பெண்களும் ஒன்றாக சேரக்கூடாது என்பதை நமக்கு வலியுறுத்துகிறது

🔺ஆனால்

💖இன்றைய காலத்தில் ஆண்களும், பெண்களும் பொது இடங்களில் ஒன்றாக கலந்து விடும் கலாச்சாரம் பெருகிக் கொண்டே  வருகின்றன.

  💖பணி புரியும் இடங்களிலும், திருமண மண்டபங்களிலும், பிரயாணத்திலும் சர்வ சாதாரணமாக ஆண்களும், பெண்களும் சகஜமாக நடமாடுகிறார்கள்


     👆🏻இதனால் தவறான தொடர்பு ஏற்படுகிறது
இந்த தொடர்பே தவறாக இருக்கும் பொழுது இதற்காக கொண்டாடப்படும் நாள் எப்படி இருக்கும் என்பதை நாமே புரிந்து கொள்ளளாம்

💖இன்றைக்கு நம்முடைய இளைய சமுதாயம் எது எதுக்கோ விழா கொண்டாட ஆரம்பித்து விட்டது


👆🏻இந்த காதலர்தினம் இதனுடைய வரலாற்றை பார்த்தோம் என்றால் ரோம் நாட்டில் மூன்றாம் நுற்றாண்டில் வாழ்ந்த ஒரு அரசன் அந்நாட்டு ஆண்களை போருக்கு செல்லும் போது மனம் கலையக்கூடாது என்பதற்காக திருமணம் செய்வதை தடை செய்தான்
அங்கிருந்த ஒரு பாதிரி இரகசியமாக திருமணம் நடத்தி வந்தான்
இது அரசனுக்கு தெரிந்தவுடன் அந்த பாதிரியை கொன்று விட்டான்
அந்த பாதிரியின் பெயர் தான் வேலன்டைன்
அவனின் நினைவாக கொண்டாடும் நாள் தான் வேலன்டைன் டே (காதலர்தினம்)


✨ நபி அவர்கள் பயந்ததைப்போல நாம் இன்றைக்கு மாற்று மத கலாச்சாரத்தில் மூழ்கி இருக்கிறோம் யாரோ ஒருவன் இறந்த தினத்தை நாம் கொண்டாடுகிறோம்.

📗”தங்கள் பார்வைகளை தாழ்த்திக் கொள்ளுமாறும், தங்களது கற்பை பேணிக்கொள்ளுமாறும். நபியே! விசுவாசிகளான ஆண்களுக்கு நீர் கூறுவீராக!”

”தங்கள் பார்வைகளை தாழ்த்திக் கொள்ளுமாறும், தங்களது கற்பை பேணிக்கொள்ளுமாறும். நபியே! விசுவாசிகளான பெண்களுக்கும் நீர் கூறுவீராக! (அல்குர்ஆன் 24:30-31)

📗பெண்கள் இருக்கும் இடத்திற்கு நீங்கள் செல்வதை பற்றி உங்களுக்கு எச்சரிக்கிறேன் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்பொழுது ஒரு நபித்தோழர் கணவனின் நெருங்கிய உறவினர் அப்பெண்ணிடம் செல்லலாமா என்று கேட்டார். அதற்கு நபியவர்கள் கணவரின் நெருங்கிய உறவினர் மரணத்தைப் போன்றவர் என்று கூறினார்கள். அறிவிப்பவர் உக்பத் இப்னு ஹாமிர் (நூல்: புகாரி முஸ்லிம்)

📗உங்களில் ஒருவர் ஓர் அந்நியப் பெண்ணிடம் அவளுடைய (தந்தை, சகோதரன், மகன்) போன்ற மஹ்ரமான உறவினர்கள் உடன் இருந்தாலே அன்றி தனியே இருக்க வேண்டாம் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் இப்னு அப்பாஸ் (நூல்: புகாரி முஸ்லிம்.)

🚫சமூதாயக் கட்டுக்கோப்பை தகர்த் தெறியக் கூடிய அர்த்தமற்ற செயற்பாடுகளை இஸ்லாம் தடைசெய்கிறது.

🚫எச்சந்தர்ப்பத்திலும் அந்நிய ஆணும் அந்நிய பெண்ணும் தனிமையில் சந்திப்பது, பேசுவது, ஊர் சுற்றித் திரிவதைத் தடுக்கிறது.

💟பெண்ணின் நன்மை கருதியே இஸ்லாம் இந்த தடையுத்தரவை பிறப்பிக்கின்றது.

✅ஒரு பெண் தனக்கு விருப்பமான ஒரு கணவனையும், ஒரு ஆண் தனக்கு விருப்பமான மனைவியையும் தேர்ந்தெடுப்பதை இஸ்லாம் தடுக்கவில்லை.

✅பிள்ளைகளின் விருப்பப் படிதான் மணம் முடித்து வைக்க வேண்டுமென இஸ்லாம் கட்டளையிடுகிறது.

🚫அன்னியப் பெண்ணைப் பார்ப்பது, அவளைத் தொடுவது, அவளுடன் உட்காருவது விபச்சாரத்தின் பக்கம் கொண்டுப் போகக் கூடிய காரியமென கண்டிக்கிறது. விபரீதம் ஏற்பட முன்பு விளைவைப் பற்றி அறிவுறுத்துகிறது.

🚫அவசரத் தேவைகள் ஏற்பட்டாலும் ஆண் பெண் பேசக் கூடாது தங்கள் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ளக் கூடாது எனக் கூறவில்லை. அவ்வாறான சந்தர்ப்பங்களில் கற்புக்கு பங்கம் ஏற்படாதவாறு கண்ணியத்துடன் நடந்துகொள்ளுமாறு கட்டளையிடுகிறது.

👆🏻இதற்கு உதாரணமாக அல்குர்ஆன் அன்னை மர்யம் (அலை) அவர்களது வரலாற்றையும் மூஸா (அலை) அவர்களது வரலாற்றையும் சொல்லித்தருகிறது.

📗(மர்யம்) தன் ஜனங்களை விட்டும் ஒதுங்கி ஒரு திரையைப் போட்டு (மறைத்து) கொண்ட சமயத்தில் நம்முடைய தூதரை (ஜிப்ரீல் (அலை) அவரிடம் அனுப்பிவைத்தோம். அவர் சரியான மனிதருடைய தோற்றத்தில் காட்சியளித்தார்.

நீர் இறையச்சமுடையவராக இருந்தால் உம்மை விட்டும் அளவற்ற அருளாளனிடம் நான் பாதுகாவல் தேடுகிறேன் என்று (மர்யம் ஜிப்ரீலை நோக்கி) கூறினார். (19:17-18)

மூஸா நபி மத்யன் வாசிகளான இரு பெண்களுக்கு நீர் இறைத்துக் கொடுத்து உதவி புரிந்தார்.

”அது சமயம் அவ்விரு பெண்களில் ஒருத்தி மிக்க நாணத்தோடு அவர் முன் வந்து நீர் எங்களுக்கு தண்ணீர் புகட்டியதற்குரிய கூலியை உமக்கு கொடுக்கும் பொருட்டு என் தந்தை உம்மை அழைக்கிறார்” எனக் கூறினாள். (28:23-25)

♻♻♻எனவே இஸ்லாம் கூறும் ஆண் பெண் உறவு பற்றிய விளக்கம் மிகத் தெளிவானது, புனிதமானது.  
                                                                                                                      🚫அதனைத் தாண்டிப் போகும் செயலை இஸ்லாம் தடை செய்கிறது

 🚫ஆணும் பெண்ணும் தனிமையில் சந்திப்பது, ஊர் சுற்றுவது, உலா வருவது என்பதுதான் காதல் என்றால் அதற்காகத்தான் காதலர் தினம் என்றால் அப்படிப்பட
தினத்தை இஸ்லாம் வண்மையாக கண்டிக்கிறது

 🍃ஆகவே அன்பார்ந்தவர்களே இஸ்லாத்தை பற்றி தெரிந்து கொண்டு, இஸ்லாம் எதை எல்லாம் தடை செய்ததோ அதில் இருந்து விலகி வாழ அல்லாஹ் நமக்கு உதவி செய்வானாக

                    ஆமீன்

🔃🔃🔃🔃🔃🔃🔃🔃🔃🔃🔃
🔮 இஸ்லாமிய மார்க்க செய்திகளை அழகிய முறையில் அறிய

♻ வாட்ஸ்அப்பில் எங்கள் செய்தியை பெற 👇

📱 0091- 9994675186

📱 0091- 9629167027

பேஸ்புக்கில் எம்மை தொடர 👇
https://m.facebook.com/Makkalmedia-1684365771847561/?ref=wizard

📢 ⓂAKKAL ⓂEDIA 📢
📝 பதிவு நாள்:  14 FEB 2016

Part of👇🏼
📡ECHO DAWAH FOUNDATION 📡

No comments:

Post a Comment