Sunday, 13 March 2016

🚫 கல்வியின் அவசியம்🚫 🍀பகுதி1⃣

📢  ⓂAKKAL ⓂEDIA 📢

🍥அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)🍥
   
            🚫 கல்வியின்             அவசியம்🚫

           🍀பகுதி1⃣


📒கல்வி கற்பது ஒவ்வொரு முஸ்லீம் மீதும் கடமையாகும் என நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள்


📒நாம் முதலில் கல்வி என்றால் என்ன என்பதை விளங்கிகொள்ள வேண்டும்.


📒நாம் இப்பொழுது கற்றுக்கொண்டு இருக்கிறோமே அது கல்வியா❓

🔺என்றால் இல்லை என்று தான் கூறமுடியும்.

📒நாம் இப்பொழுது கற்பது கலை என்பதை நாம் விளங்கிகொள்ள வேண்டும் காரணம் அந்த கல்வியை கொண்டு ஒரு துறையில் மட்டுமே செயல் பட முடியும் என்பதை நாம் விளங்கி கொள்ளவேண்டும்.

📒கல்வி என்பது மனித வாழ்க்கைக்கு முக்கியமான ஒன்றாகும்.

📒மனிதனை மற்ற உயிரினங்களிலிருந்துபிரித்துக் காட்டும் பல அம்சங்களில் இந்த கல்வியும் முக்கியமான ஒன்று.

📒நாம் சிந்திக்கவும் செயல்படவும் தேவையானது அறிவுதான்.

📒அந்த அறிவைப் பெற்றிட அல்லாஹ்வின் அருளால் கிடைத்தது கல்வியாகும்.


📒இஸ்லாம் சொல்லும் நேரான பாதையை கற்றுக்கொள்ளும் போது மனிதன் அது தரும் அறிவைக் கொண்டு தனக்கென ஒருதனி அந்தஸ்தைப் பெறுகிறான்.


📒பயனுள்ள கல்வியை தனக்கும் பிறருக்கும் பயன் தரும் வகையில் நாம் செயல்படுத்தும் போது நமது வாழ்க்கைத்தரம் இறையருளால் உயர்ந்த கட்டமைப்பை நோக்கி நகர்கிறது.


📒பாலைவனத்தில் ஒருவன் ஒட்டகத்தை தொலைத்து விட்டு எவ்வாறு தேடுவானோ அவ்வாறு கல்வியை தேடுங்கள் என்பது நபி மொழி.

✳இவ்வுலக கல்வியை கொண்டு படைத்ததவனை அறிய முடியுமா❓
முடியாது. மாறாக படைப்பினங்களையும் வரலாறுகளையும் மட்டுமே அறிய முடியும்.

✳சிலருக்கு  இவ்வுலக கல்வி இல்லாமல் கூட இவ்வுலகில்  வென்றும் வாழ்ந்தும் இருக்கிறார்கள்.  ஆனால் படைத்தவனை அறியும் மார்க்க கல்வியில்லாமல் மறுமையில் சொர்க்கம் செல்ல முடியாது.

📓அல்லாஹ் அல்குர்ஆனில் கூறுகின்றான்.
"அறிந்தோரும் அறியாதோரும் சமமாவார்களா? என்று கேட்பீராக! அறிவுடையோர் தான் நல்லறிவு பெறுவார்கள்".(அல்குர்ஆன்: 39:9)


📓குருடனும் பார்வையுடையவனும் சமமாவார்களா? சிந்திக்க மாட்டிர்களா? என்று கேட்பீராக!"( அல்குர்ஆன்: 6:50)

      ..................தொடரும்.


🔮 இஸ்லாமிய மார்க்க செய்திகளை அழகிய முறையில் அறிய

♻ வாட்ஸ்அப்பில் எங்கள் செய்தியை பெற 👇

📱 0091- 9629167027

📱 0091- 9994675186

பேஸ்புக்கில் எம்மை தொடர 👇
https://m.facebook.com/Makkalmedia-1684365771847561/?ref=wizard

📢 ⓂAKKAL ⓂEDIA 📢

📝 பதிவு நாள்: 22 JAN 2016

No comments:

Post a Comment