Sunday, 13 March 2016

🏮நாம் அனைவரும் கல்வி கற்போம்🏮 பகுதி-17

📢  ⓂAKKAL ⓂEDIA 📢

💠பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்💠

       ♨கல்வி♨

🏮நாம் அனைவரும் கல்வி கற்போம்🏮

        பகுதி1⃣7⃣


👍🏼நாம் அனைவரும் கல்வி கற்போம் 👍🏼

💐அல்ஹம்துலில்லாஹ்💐

🏮கடந்த சில தினங்களாக கல்வி என்ற தலைப்பில் சில செய்திகளை படித்திருப்போம் ...

🏮கல்வியின் முக்கியத்துவத்தை உணர்ந்த இத்தருணம் நாம் என்ன முடிவெடுக்கப் போகிறோம் ..???

🏮கல்வியறிவு இல்லாமல் கடைசிவரை இப்படியே நீடிக்கப்போகிறோமா?

🔺அல்லது

🏮கல்வியறிவு இருந்தும் பிறருக்கு கற்றுத்தராமல் இப்படியே நீடிக்கப்போகிறோமா ?

🏮நமது மனசாட்சியை பரிசோதிக்கும் தருணம் இதுவே ...!!

🏮பணம் மட்டுமே குறிக்கோள் என்றால் அதை சம்பாதிக்க ஹராமான ஆயிரம் வழியுண்டு ..!!

🏮ஆனால் அதை ஹலாலாக சம்பாதிக்க நமக்கு உதவுவது ஒரே வழி மார்க்க கல்வியை நாம் கற்பதில் மட்டுமே !!

🏮நம் பிள்ளைகள் உலகில் சாதிக்க ஹராமான ஆயிரம் வழியுண்டு ..!!

🏮ஆனால் ஈருலகிலும் சாதிக்க ஒரேவழி மார்க்க கல்வி மட்டுமே

🏮நம் வாழ்வில்

🔺திருமணத்திற்கென்று

🔺விளையாட்டிற்கென்று

🔺வியாபாரத்திற்கென்று

👆🏻குறிப்பிட்ட வயதுண்டு,அவ்வயதை தாண்டிய பிறகு நம்மால் அவற்றை திரும்ப பெற முடியாது ..

🏮ஆனால் கல்வியை அறியாமல் நாம் ஏதோ ஒரு நேரத்தில் தொலைத்திருந்தாலும்,

மீண்டும் அதை நாம் பெற்றுக்கொள்ள முடியும்
அதுவே கல்வியின் சிறப்பு அம்சம் ஆகும்...

🏮நபி (ஸல்) அவர்களுக்கு 40 வயதில் நபி பட்டம் கொடுக்கப்பட்டுள்ளது என்பதை சிந்திக்க வேண்டும் ..

🏮இதோ இறைவனின் எச்சரிக்கை வாசகம் ..

📓இன்னும்; உங்களைப்படைத்தவன் அல்லாஹ் தான், பின்னர் அவனே உங்களை மரிக்கச் செய்கிறான்; கல்வியறிவு பெற்றிருந்தும் (பின்) எதுவுமே அறியாதவர்களைப்போல் ஆகிவிடக் கூடிய மிகத் தளர்ந்த வயோதிகப் பருவம் வரையில் வாழ்ந்திருப்பவர்களும் உங்களில் உண்டு - நிச்சயமாக அல்லாஹ் நன்கறிந்தவனாகவும், பேராற்றல் உடையவனாகவும் இருக்கின்றான்.

(அல்குர்ஆன்: 16:70)

🏮கல்வியை தொலைத்தவன்..
மறுமையை தொலைத்தவன் என்பது இவ்வசனத்தின் எச்சரிக்கை ..

🏮40 நாட்கள் ,6 மாதங்கள் பயணம் செய்து ஒரு ஹதீஸிர்காக சிரமம் எடுத்த நம் முன்னோர்களின் வாழ்வை நாம் சிந்திக்க  வேண்டும்.

🏮நாம் உடல் சுகத்தை கவனித்து,
இந்த வயதில் ஏன் கல்வி என்று நினைத்தால்...
 அவர்களுக்கு நபியின் அறிவிப்பு இதோ ..

📓அப்துல்லாஹ் பின் யஹ்யா பின் அபீகஸீர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: என் தந்தை யஹ்யா பின் அபீகஸீர் (ரஹ்) அவர்கள், "உடல் சுகத்(தைத் தேடுவ)தினால் கல்வியை அடைய முடியாது"என்று கூறினார்கள். -முஸ்லிம்: 1077

🏮யுகமுடிவு நாள் வெகு தொலைவில் இல்லை இதோ நெருங்கிவிட்டோம் ..

🏮மார்க்க கல்வி கற்பவர் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருகிறது ..

🏮மதரஸாக்கள் வெறிச்சோடி கிடைக்கிறது ...

🏮இவைகள் அனைத்தும் யுகமுடிவு நாளின் எச்சரிக்கையே என்பதை நாம் மறக்க கூடாது ..

🏮இதோ நபி (ஸல்) அவர்களின் எச்சரிக்கை ..

📓அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: கல்வி அகற்றப்படுவதும் அறியாமை நிலைத்துவிடுவதும் மது (அதிகமாக) அருந்தப் படுவதும் விபசாரம் பகிரங்கமாக நடைபெறுவதும் (யுக)முடிவு நாளின் அடையாளங்களில் உள்ளவையாகும். இதை அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(ஸஹீஹ் முஸ்லிம்: 5186)


🔺கல்விக்கான நேரத்தை ஒதுக்குவோம்

🔺நம் வாழ்வில் கல்வியை அவசியமாக்குவோம்

🔺வாழ்வை வளமாக்குவோம்

🔺மறுமை வாழ்வை வெற்றியாக்குவோம் ..

🔺நாம் அனைவரும் கல்வி கற்போம்..

💐அல்ஹம்துலில்லாஹ் 💐

☝🏻அல்லாஹ் மிக அறிந்தவன் ..

🌹நாளை வேறொரு தலைப்புடன் சந்திப்போம் ..

இன்ஷா அல்லாஹ்..


🔃🔃🔃🔃🔃🔃🔃🔃🔃🔃🔃
🔮 இஸ்லாமிய மார்க்க செய்திகளை அழகிய முறையில் அறிய

♻ வாட்ஸ்அப்பில் எங்கள் செய்தியை பெற 👇

📱 0091- 9994675186

📱 0091- 9629167027

பேஸ்புக்கில் எம்மை தொடர 👇
https://m.facebook.com/Makkalmedia-1684365771847561/?ref=wizard

📢 ⓂAKKAL ⓂEDIA 📢
📝 பதிவு நாள்:  07 FEB 2016

Part of👇🏼
📡ECHO DAWAH FONUDATION📡

No comments:

Post a Comment