Sunday 13 March 2016

✔இஸ்லாமும் நட்பும்✔ பகுதி-4

📢  ⓂAKKAL ⓂEDIA 📢

💠பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்💠


✔இஸ்லாமும் நட்பும்✔

             பகுதி4⃣


   ♻இஸ்லாமும் நட்பும்♻


🚫நட்பைபற்றிய இந்த தொடரிலே நட்பின் வரையறை என்ன என்பதை அறிந்து கொள்வோம்


🚫நமது நண்பன் எத்தனை நம்பிக்கை உள்ளவனாக
இருந்தாலும் அவர்களுக்கு ஒரு எல்லை உண்டு என்பதை மனதில் கொண்டு நாம் நமது நண்பரிடம் பழகுவது


🚫நமது நண்பர்களிடம் நாம் கடைப்பிடிக்க வேண்டிய விஷயங்கள் சில👇🏻

🔺நமது வீட்டிற்குள் நாம் இல்லாத போது நமது நண்பனை அனுமதிக்க கூடாது

🔺நமது வீட்டில் உள்ள பருவம் அடைந்த நமது
பெண்பிள்ளைகளை சகஜமாக பேசவிடுவதை தவிர்ப்பது

🔺நமது
மனைவியை சகஜமாக பேசும்போது எல்லைதாண்டாமல் இருப்பது.

👆🏻இது போன்ற இஸ்லாம்
தடை விதித்து வரம்புக்குள் நமது நட்பை தொடர்ந்தால் தான் அந்த நட்பின் மகத்துவத்தை உணர முடியும்.


🚫இதுவரை நாம் பார்த்ததில் இஸ்லாம் நட்பிர்க்கு எந்த அளவு முக்கியத்துவம் கொடுக்கிறது நண்பனிடம் எவ்வாறு பழகவேண்டும் என பார்த்தோம்

🚫ஆனால் நாம் நமது தோழனிடத்தில் மார்கத்திற்கு புறம்பான
செயல்கள் காணும்போது அதை நம்மால் முடிந்தவரை
தடுக்க வேண்டும்


🚫இஸ்லாம் காட்டிதந்த விஷயங்களை பேணாததால் தான் இன்று பல குடும்பங்கள் சீரழிந்து போகின்றது.
குடும்பங்களின் சீரழிவுக்கு முக்கிய காரணம் கெட்ட நட்புகள் தான்.

🚫இந்த கெட்ட நட்பால் வரும் விளைவுகளை பார்ப்போம்.

❌குடிப்பழக்கத்துக்கு அடிமையாகி வியாபரங்களில் நஷ்டம் ஏற்பட்டு குடும்பம் சீரழிதல்.

❌ சில தகாத ஆண் பெண் நட்புகளால் தவறான ஒரு உறவை ஏற்படுத்திக் கொண்டு அது வெளியே தெரிய வரும் சமயத்தில் கொலையில் முடிதல்.

❌கல்லூரியில் ஏற்படும் தவறான நட்பால் தன் கற்பை இழந்து
வாழ்க்கையை தொலைத்து தற்கொலை செய்தல்.

🚫 இத்தகைய சீரழிவுகளால் இன்றைய காலத்தில் நட்பு என்பது தவறான கண்ணோட்டத்தை சமூகத்தில் ஏற்படுத்தியுள்ளது.
📗அல் குர்ஆன்
وَمَا نُرْسِلُ الْمُرْسَلِيْنَ اِلَّا مُبَشِّرِيْنَ وَمُنْذِرِيْنَ‌ فَمَنْ اٰمَنَ وَاَصْلَحَ فَلَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُوْنَ‏ 
 நன்மாராயம் கூறுவோராகவும்,  எச்சரிக்கை செய்வோராகவுமேயன்றி நாம் தூதர்களை அனுப்பவில்லை; எனவே எவர் நம்பி, சீர்திருந்தி நடந்தார்களோ, அவர்களுக்கு அச்சமுமில்லை; அவர்கள் துக்கப்படவும் மாட்டார்கள்.
(அல்குர்ஆன் : 6:48)
அல்லாஹ் குர்ஆனில் நமக்கு எடுத்துரைக்கிறான்.

✅எனவே நாம் நண்பர்களிடம் நல்லதை  எடுத்துரைப்பவர்களாகவும்,கெட்ட செயல்களிலிருந்து தடுப்பவர்களாகவும் இருக்க வேண்டும்.

✅இத்தகைய தவறுகள் ஏற்படாமல் இருக்க நம் ஒவ்வொருவரும் ஒழுக்கம்,கட்டுப்பாடு போன்ற பண்புகளை வளர்த்துக்கொள்ள வேண்டும்.

✅இத்தகைய தவறுகளை தடுத்தும் திருந்தாத பட்சத்தில் அவனது
தோழமையை முறித்து விடுவதே நல்லது.

📗அல்லாஹ்வின்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

யார் அல்லாஹ்விற்காக நேசிக்கிறாரோஅல்லாஹ்விற்காக
வெறுக்கிறாரோ அல்லாஹ்விற்காக கொடுக்கிறாரோ அல்லாஹ்விற்காகமறுக்கிறாரோ அவர் ஈமானை
பூரணப்படுத்திக்கொண்டார்.

                     அறிவிப்பவர்: அபூஉமாமா (ரலி)  நூல்: அபூதாவூத் (4061)





🔃🔃🔃🔃🔃🔃🔃🔃🔃🔃🔃
🔮 இஸ்லாமிய மார்க்க செய்திகளை அழகிய முறையில் அறிய

♻ வாட்ஸ்அப்பில் எங்கள் செய்தியை பெற 👇

📱 0091- 9994675186

📱 0091- 9629167027

பேஸ்புக்கில் எம்மை தொடர 👇
https://m.facebook.com/Makkalmedia-1684365771847561/?ref=wizard

📢 ⓂAKKAL ⓂEDIA 📢
📝 பதிவு நாள்: 21  FEB 2016

Part of👇🏼
📡ECHO DAWAH FOUNDATION 📡

No comments:

Post a Comment