Sunday 13 March 2016

❇முஹம்மது நபியும் முன்னறிவிப்பும்❇ ⭕பகுதி-3

📢  ⓂAKKAL ⓂEDIA 📢

💠பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்💠

❇முஹம்மது நபியும் முன்னறிவிப்பும்❇

             ⭕பகுதி3⃣
🏮பிற மத வேதங்களில்
முஹம்மது நபி பற்றி



 ✳ மஹா சவுந்தர்யமுள்ளவர் யார்❓❓

🔴பழைய ஏற்பாட்டில் சங்கீதம் என்ற ஆகமம், இடம் பெற்றுள்ளது.

🔴இது தாவீது (தாவூது) ராஜாவின் வேதமாகும்.

♦இந்த வேதத்தில் தாவீது ராஜா எதிர்காலத்தில் தோன்றக் கூடிய ஒரு தீர்க்கதரிசியைக் குறித்து முன் அறிவிப்புச் செய்கிறார்.


🔴இது இயேசுவின் வருகை குறித்து தாவீது செய்த முன்னறிவிப்பு என்று கிறித்தவர்கள் உறுதியாக நம்புகின்றனர்.

🔴அந்த முன்னறிவிப்பில், வரக்கூடிய தீர்க்கதரிசிக்குரிய ஏராளமான பிரத்தியோகமான அடையாளங்களை தாவீது ராஜா கூறுகிறார்.


🔴இந்த அடையாளங்களில் ஒன்றிரண்டு அடையாளங்கள் மட்டுமே இயேசுவுக்குப் பொருந்துகின்றன.

✳சொல்லப்பட்ட அத்தனை அடையாளங்களும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கே சரியாகப் பொருந்துகின்றன.

✳அனைத்து அடையாளங்களும் யாருக்குப் பொருந்துகின்றனவோ அவரைப் பற்றிய முன்னறிவிப்பு என்று தான் அறிவுடையோர் முடிவுக்கு வருவார்கள்.



✳எதிர்காலத்தில் தோன்றக் கூடிய அந்த தீர்க்கதரிசியை மானசீகமாக நோக்கி தாவீது ராஜா நேரடியாகப் பேசுவது போல் அந்த முன்னறிவிப்பு அமைந்துள்ளது.

 🏮உண்மைப்படுத்தும் முன்னறிவிப்புகள்🏮
💈ஆட்சி அதிகாரம்💈

📖என் இருதயம் நல்ல விசேஷத்தினால் பொங்குகிறது. நான் ராஜாவைக் குறித்துப் பாடின கவிதையைச் சொல்லுகிறேன். என் நாவு விரைவாய் எழுதுகிறவனுடைய எழுத்தாணி.

(சங்கீதம் 45:1)



முன்னறிவிப்பில் எடுத்த எடுப்பிலேயே கிறிஸ்தவர்களின் தவறான நம்பிக்கையை தாவீது ராஜா நீக்குகிறார்.

🔴வரக்கூடியவர் ராஜாவாக அரசராக இருப்பார். என்று தாவீது ராஜா கூறுகிறார்.

❌ இயேசு ஒரு காலத்திலும் மக்களை ஆட்சி செய்யும் அரசராக இருந்ததில்லை.❌

✅நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அரசராக ஆட்சி புரிந்திருக்கறார்கள்.

💈அழகான தோற்றம்💈

📖எல்லா மனு புத்திரரிலும் நீர் மகா சௌந்தர்யமுள்ளவர். உம்முடைய உதடுகளில் அருள் பொழிகிறது. ஆகையால் தேவன் உம்மை என்றைக்கும் ஆசீர்வதிக்கின்றார்.

(சங்கீதம் 45:2)

♦வரக்கூடியவர் மிகவும் அழகுடையவராக இருப்பார் என்று தாவீது ராஜா கூறுகிறார்.

❎இயேசு அழகுடையவராக இருந்தார் என்று பைபிள் எந்த இடத்திலும் கூறவில்லை. மாறாக அழகற்றவராக இருந்தார் என்று கூறுகிறது.

🏮 இது பற்றி

அவருக்கு அழகுமில்லை, சௌந்தர்யமும் இல்லை. அவரைப் பார்க்கும் போது நாம் அவரை விரும்பத்தக்க ரூபம் அவருக்கு இல்லாதிருந்தது.

(ஏசாயா 53:2)

”அவருக்கு அழகுமில்லை” என்று ஏசாயா ஆகாமம் கூறுகிறது. இது இயேசுவைப் பற்றிய முன்னறிவிப்பு எனக் கிறித்தவ அறிஞர்கள் கூறுகின்றனர்.
💥 இது இயேசுவைக் குறித்த முன்னறிவிப்பு என்பதை ஏற்றுக் கொள்வோம்.
 ஆனால் தாவீது ராஜா கூறுவது நிச்சயம் இயேசுவைக் குறிக்காது என்பதை கிறித்தவர்கள் ஒப்புக் கொண்டாக வேண்டும்.



💥ஏனெனில் தாவீதின் முன்னறிவிப்பு அழகுள்ள ஒரு தீர்க்கதரிசியைப் பற்றிக் குறிப்பிடுகின்றது. அழகற்றவராக இருப்பார் என்பதும் மிகவும் அழகுடையவராக இருப்பார் என்பதும் இயேசுவுக்கு எப்படிப் பொருந்தும் என்று கிறித்தவர்கள் சிந்திக்க வேண்டும்.❓❓

✳தாவீது ராஜாவின் முன்னறிவிப்புக்கேற்ப நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மிகுந்த அழகுடையவராக இருந்தார் என்று ஏராளமான நபித்தோழர்கள் அறிவித்துள்ளனர்.

 💈போர்புரியும் திறன்💈

📖சவுரியவானே! உமது மகிமையும் உமது மகத்துவமுமாகிய உம்முடைய பட்டயத்தை நீர் உம்முடைய அரையிலே கட்டிக் கொண்டு….

(சங்கீதம் 45:3)



💥பட்டயத்தை… (அதாவது வாளை-) அரையிலே (அதாவது இடுப்பிலே) கட்டிக்கொண்டு என்பது எதிரிகளுடன் போர் புரிவதைக் குறிக்கின்றது.

❎இயேசு ஒரு போதும் இடுப்பில் வாளைத் தொங்க விட்டதில்லை.
❌எதிரிகளுடன் போர் புரிந்ததுமில்லை. ❌

✳✅ முஹம்மது நபி அவர்கள் வாளேந்திப் போர் புரிந்திருக்கிறார்கள் என்பது கிறித்தவர்கள் உள்ளிட்ட அனைவரும் அறிந்த ஒன்றாகும்.

💈 மகத்துவமான வெற்றிகள்💈

சத்தியத்தினிமித்தமும் நீதியுடன் கூடிய சாந்த்ததினிமித்தமும் உமது மகத்துவத்திலே ஜெயமாக ஏறி வாரும். உமது வலது கரம் பயங்கரமானவைகளை உமக்கு விளங்கப் பண்ணும்

(சங்கீதம் 45:4)

💥வரக்கூடியவர் மகத்துவத்துடன் வெற்றிபெறுவார் என்றும் அவரது வலது கரம் பயங்கரமான விளைவுகளை  ஏற்படுத்தும் என்றும் தாவீது ராஜா கூறுகிறார்.

❎இயேசு தம் வாழ்நாளில் மகத்துவத்துடன் வெற்றி பெறவில்லை.
சாதாரண வெற்றியும் பெறவில்லை. அவரது எதிரிகளே வென்றார்கள். பயங்கரமான முறையில் அவரைக் கொன்றார்கள். (கிறித்தவ நம்பிக்கைப்படி)

✳✅நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தம் வாழ்நாளிலேயே மகத்தான வெற்றி பெற்றார்கள். எதிரிகளை தம் கரத்தால் சங்காரம் செய்து பயங்கரமான விளைவுகளை ஏற்படுத்தினார்கள்.
💈அம்பெய்தும் திறன்💈

📖உம்முடைய அம்புகள் கூர்மையானவைகள். அவைகள் ராஜாவுடைய சத்ருக்களின் இருதயத்துக்குள் பாயும். ஜன சதளங்கள் உமக்கு கீழே விழுவார்கள்.



🏮இயேசு கூர்மையான அம்புகளைப் பயன்படுத்தியதுண்டா❓❓
🏮அவை எதிரிகளின் இதயத்தில் தைத்ததுண்டா❓❓
🏮அவரைச் சுற்றி இருந்த பல்வேறு கோத்திரங்களும் அவரது ஆளுகையின் கீழ் வந்ததுண்டா❓❓

❌❌நிச்சயமாக இல்லை.❌❌

✳அப்படியென்றால்  மேற்சொன்ன முன்னறிவிப்பு யாரைக்குறிக்கிறது❓❓
💥இன்ஷா அல்லாஹ்

💥 தொடரும் ...

🔃🔃🔃🔃🔃🔃🔃🔃🔃🔃🔃
🔮 இஸ்லாமிய மார்க்க செய்திகளை அழகிய முறையில் அறிய

♻ வாட்ஸ்அப்பில் எங்கள் செய்தியை பெற 👇

📱 0091- 9994675186

📱 0091- 9629167027

பேஸ்புக்கில் எம்மை தொடர 👇
https://m.facebook.com/Makkalmedia-1684365771847561/?ref=wizard

📢 ⓂAKKAL ⓂEDIA 📢
📝 பதிவு நாள்: 23  FEB 2016

Part of👇🏼
📡ECHO DAWAH FOUNDATION 📡

No comments:

Post a Comment