Tuesday 15 March 2016

🍀மகளிர் தினம் ஓர் பார்வை🍀 பகுதி- 8

📢  ⓂAKKAL ⓂEDIA 📢

💠பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்💠

🍀மகளிர் தினம் ஓர் பார்வை🍀

          பகுதி- 8
   
👩🏻பெண்ணுரிமை👩🏻


🏮இஸ்லாத்தை விளங்காத
சிலர் இஸ்லாத்தில் பெண்களின் உரிமைகள் பறிக்கப்பட்டுள்ளது என்றும் அடிமைத்தனம் செய்கிறது என்றும்  வீண்பழி சுமத்துகின்றனர் .

💥அவற்றை நாம் தொடராக பார்த்து கொண்டு இருக்கிறோம்

💥அதில் ஒன்று தான் இத்தா சம்மந்தமாக நாம் சென்ற தொடரிலே பார்த்தோம்.


✅இந்த தொடரிலே ஏன் இஸ்லாம் இத்தாவை  வலியுறுத்த வேண்டும் இஸ்லாம் ஏன் கட்டாயப்படுத்துகிறது என பார்க்கலாம்.

🏮தொலைநோக்கு சிந்தனையோடு பார்க்கும் அனைவருக்கும் இஸ்லாம் பெண்களுக்கு அவசியமாக்கிய "இத்தா "
மிகவும் ,
பாதுகாப்பானதே என்பதை விளங்கிக்கொள்ள முடியும் .

✅நம்மை படைத்த இறைவவன் அவன் படைத்த மனிதர்களுக்கு என்ன தேவையோ அதனை மிக சிறப்பாக செய்துக்கொடுப்பதில் வல்லமை படைத்தவன்.

✅அது ஆணாக இருந்தாலும் சரி,
பெண்ணாக இருந்தாலும் சரி,
பிறக்கும் குழந்தையாக இருந்தாலும் சரி,
அவர்களுக்கு தேவையான அனைத்தையும் செய்து கொடுப்பபவனாக இருக்கிறான்.

✳இறைவன் ஏற்படுத்தும் எந்த கட்டளையும் அவனது படைப்புகளுக்கு தேவையற்றதாக ஆக முடியாது .

✳வாருங்கள் இதே கண்ணோட்டத்தோடு "இத்தா"வின் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டிற்கு அழகிய விளக்கங்களை பார்க்கலாம் .

✳"இத்தா "என்பது அல்லாஹ்வினால் உயரிய நோக்கத்துடன் முன்வைக்கப்பட்டுள்ளது என்பதில் எவ்வித மாற்றுக்கருத்தும் இல்லை.


📗அல் குர்ஆன்

நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் நம்பிக்கை கொண்ட பெண்களை மணந்து அவர்களைத் தீண்டுவதற்கு முன் விவாகரத்துச் செய்து விட்டால் உங்களுக்காக அவர்கள் அனுசரிக்கும் இத்தா ஏதுமில்லை.

(அல்குர்ஆன் 33:49)

💥மேற்கண்ட வசனத்தின் வாயிலாக ஒரு பெண் திருமணம் செய்த பிறகு அவளிடம் உடலுறவு கொள்வதற்கு முன் விவாகரத்து வாங்கினால் அந்த பெண்ணிற்கு இத்தா தேவை இல்லை என்பதை அறிய முடிகிறது.

✅மேலும் இதிலிருந்து உடலுறவு கொண்டு இருந்தால் மாத்திரமே அந்த பெண் இத்தா இருக்க வேண்டும்
என்பதை நம்மால் விளங்கி கொள்ள வேண்டும் .

ஏன் தாம்பத்ய உறவில் ஈடுபட்டு  இருந்தால் அந்த பெண் இத்தா இருக்க வேண்டும்❓

♦சிந்தித்துப்பாருங்கள்.♦

💥ஒரு பெண்ணின் கணவன் இறப்பதற்கு முன் அந்த பெண் உடலுறவு கொண்டு இருந்தால் அந்த ஆணின் டீ.என்.ஏ ரேகை அந்த பெண்ணின் உடலில் மூன்று மாதவிடாய் வரை அழியாமல் இருக்கும் .

💥இப்படி இருக்கும்பட்சத்தில் அந்த பெண் மறுமணம் செய்து ,குழந்தை பெற்றுக்கொள்ளும்போது அந்த குழந்தையின் தோற்றம் முன்னால் கணவனின் தோற்றத்தில் பிறக்கும் வாய்ப்பும் சாத்தியமானது என்று அறிவியல் ரீதியாக உண்மைப்படுத்தப்பட்டுள்ளது .

♦இதானால் வரும் பிரச்சனைகளால் சீரழிவது யாரென்று சிந்தித்ததுண்டா❓

🔶குழந்தையின் எதிர்காலம் சீரழியும்.
🔶பெற்ற தாய் நினைத்து வருத்தப்படுவாள்.
🔶மறுமணம் செய்தவனும்,அவன் குடும்பமும் வெட்கமும் துக்கமும்படுவார்கள்.

♦இதை சற்று சிந்தித்து பாருங்கள்..

♦இத்தா என்ற விஷயத்தை இஸ்லாம் வற்புறுத்தும் காரணத்தை புரிந்து கொள்ளுவோம்.

✅இறைவன் இத்தா வை முன் வைக்கவில்லை என்றால் பாதிக்கப்படுவது தனிநபர் அல்ல சமூகமே பாதிக்கப்படுகிறது.

✔எனவே தான் இத்தாவை இஸ்லாம் கட்டாயமாக்கியுள்ளது .

✳அதனால்   குறிப்பிட்ட அந்த பெண் தன் மூன்று மாதவிடாய் காலம் வரை காத்திருந்து அந்த டீ.என்.ஏ ரேகை அழிந்த பிறகு திருமணம் முடித்து கொள்ளலாம்.

🏮ஆனாலும் இன்றைய விஞ்ஞான வளர்ச்சியில் வயிற்றில் இருக்கும் குழந்தை யாருடையது என்று அறியக்கூடிய அளவில் கருவிகள் இருந்தாலும் ' பணம் பத்தும் செய்யும்' என்ற பழமொழியை போல் பணத்தை வைத்து அந்த மருத்துவ அறிக்கைகளை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்கின்றனர்.

✳இந்த மாதிரி எந்த ஒரு நிலையும் ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக தான் அன்றே இந்த "இத்தா "வை  மூன்று மாதவிடாய் காலம் வரை காத்திருந்து மறுமணம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினர்

✅இஸ்லாம் எப்போதும் ஒழுக்கத்திற்கு முன்னுரிமை கொடுக்கும் மார்க்கம்

❎இந்த இத்தாவின் மூலம் இஸ்லாம் பெண்களை அடிமை படுத்தவில்லை

❎பெண்களை இழிவு படுத்தவில்லை

💠பெண்களை ஒருபடி மேலே போய் பெண்ணிண் மானத்தையும் கண்ணியத்தையும் காக்கிறது என்பதை நாம் அனைவரும் தெளிவாக விளங்கி கொள்ளளாம்

💠இதன் மூலம் இஸ்லாம் இத்தாவில் பெண்களுக்கு கொடுத்த சலுகைகளை தெளிவாக புரிந்து கொள்ளலாம்.

💥நம் சகோதரிகள் அனைவரும் விழிப்புணர்ச்சியோடு செயல்பட்டு குற்றச்சாட்டுகளை ஆராயுமாறு இப்பதிவின் மூலம் கேட்டுக்கொள்கிறோம் .

💥அடுத்த பதிவில் அடுத்த குற்றச்சாட்டு என்ன ?அதன் விளக்கம் என்ன ?என்பதை பார்க்கலாம் .

  💠தொடரும்💠


🔃🔃🔃🔃🔃🔃🔃🔃🔃🔃🔃

🔮 இஸ்லாமிய மார்க்க செய்திகளை அழகிய முறையில் அறிய

♻ வாட்ஸ்அப்பில் எங்கள் செய்தியை பெற 👇

📱 0091- 9994675186

📱 0091- 9629167027

பேஸ்புக்கில் எம்மை தொடர 👇
https://m.facebook.com/Makkalmedia-1684365771847561/?ref=wizard

📮 பதிவு நாள்: 12 MAR 2016

📢 ⓂAKKAL ⓂEDIA 📢
Part of 👇
📡 ECHO DAWAH FOUNDATION 📡

No comments:

Post a Comment