Thursday, 18 October 2018

அல்லாஹ்வை படைத்தது யார்?

அல்லாஹ்வை படைத்தது யார் என்பது அறிவு பூர்வமான கேள்வியா

இஸ்லாம் இறைவன் ஒருவன் இருக்கின்றான் என்று கூறுவதுடன் பல தெய்வ நம்பிக்கையைப் பலமாக எதிர்க்கின்றது. அத்துடன், மனிதன் கடவுளாகவும் முடியாது. கடவுள் மனித அவதாரம் எடுப்பதும் இல்லை எனக் கூறி கடவுளின் பெயரால் அரங்கேற்றப்படும் அத்தனை மூடநம்பிக்கைகளையும் அடியோடு மறுக்கின்றது.

கடவுள் இல்லை என்று கூறுபவர்கள் அதைப் பகுத்தறிவு வாதம் என்று கூறுகின்றனர்.



இந்த பிரபஞ்சம் அனைத்தும் தானாகவோ, தற்செயலாகவோ உருவானது என்பது எப்படி பகுத்தறிவாகும்

படைப்பினங்கள் இருப்பதே படைப்பாளன் ஒருவன் இருக்கின்றான் என்பதற்கான பலமான ஆதாரமாகும்.


மக்கள் இதைப் படைத்தவர் யார்? அதைப் படைத்தவர் யார்? என்று ஒவ்வொன்றாகக் கேட்டுக் கொண்டே வந்து, இறுதியில் ‘அல்லாஹ் படைப்பினங்களைப் படைத்தான், அல்லாஹ்வைப் படைத்தவன் யார்? என்று கேட்கும் நிலைக்கு உள்ளாவார்கள். இத்தகைய எண்ணம் ஒருவருக்கு ஏற்பட்டால் அவர் உடனே, ‘அல்லாஹ்வை நான் நம்பிக்கை கொண்டேன்’ (ஆமன்து பில்லாஹ்) என்று சொல்லட்டும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: முஸ்லிம் 212

அல்லாஹ்வை யார் படைத்தார்? என்ற கேள்வி அறிவுப்பூர்வமானதாக தோன்றினாலும் அதனால் இறைவனை நிராகரிக்கும் நிலைக்கு ஒருவன் தள்ளப்படுகின்றான். அதனால் தான் ஆமன்து பில்லாஹ் – அல்லாஹ்வை நான் நம்பினேன் என்று சொல்லி அப்படிப்பட்ட எண்ணத்திலிருந்து மீள வேண்டும்.

இரண்டாவதாக, அதே அறிவுப்பூர்வமாகவே மேலும் சிந்தித்தாலும் அதற்கான விடையை தெரிந்து கொள்ள முடியும். அது என்ன?

அல்லாஹ்வை படைத்தவர் யார்? என்ற கேள்விக்கு ஒருவர் இன்னார் படைத்தார் என்று ஒருவரைச் சொல்கிறார் என்று வைத்துக் கொள்வோம். இப்போதும் அந்த கேள்வி மீண்டும் பிறக்கத்தான் செய்யும். அவரைப் படைத்தவர் யார்? என்று மறுபடியும் அவர் கேட்பார்.

இந்தக் கேள்விக்கு ஒரு பதிலைச் இறுதியாக சொல்லிவிட முடியாது என்பதினாலும் இது அறிவப்பூர்வமான கேள்வியே அல்ல.

அல்லாஹ்வைப் படைத்தவர் இவர் தான் என்று சொன்னால், இங்கே படைப்பாளி படைக்கப்பட்டவராக ஆகிவிடுகிறார். படைக்கப்பட்டவர் இறைவனாக இருக்க முடியாது. படைப்பாளி படைக்கப்பட்டவராக ஆவதே இந்த கேள்வி அறிவுப்பூர்வமானது அல்ல என்பதற்கான சான்றாகும்.

நுணுக்கமான இந்தப் பிரபஞ்ச ஒழுங்குகளும் அற்புதமான மனித படைப்பும் உயிரினங்களின் அற்புதமான வடிவமைப்பும் மிகப்பெரும் ஆற்றல்மிக்க படைப்பாளன் ஒருவன் இருக்கின்றான் என்பதற்கான எடுத்துக்காட்டுக்களேயாகும்.

இந்த உண்மையை உணர்த்தும் விதத்தில் அல்குர்ஆன் பல இடங்களில் கேள்விகளை அடுக்குகின்றது.

எப்பொருளுமின்றி அவர்கள் படைக்கப்பட்டனரா? அல்லது அவர்கள் படைக்கின்றவர்களா?’ ‘அல்லது அவர்கள் வானங்கள் மற்றும் பூமியை படைத்தனரா? மாறாக, அவர்கள் உறுதியாக நம்பிக்கை கொள்ளமாட்டார்கள்.’ (52:35-36)

நீங்கள் செலுத்தும் இந்திரியத்தைக் கவனித்தீர்களா?’ ‘அதை நீங்கள் படைக்கின்றீர்களா? அல்லது நாம் படைக்கின்றோமா?’ (56:58-59)

நீங்கள் பயிரிடுவதைப் பார்த்தீர்களா?’ ‘அதை நீங்கள் முளைப்பிக்கின்றீர்களா? அல்லது நாம் முளைப்பிக்கின்றோமா?’ (56:63-64)

இறைவன் ஒருவன் இருக்கின்றான் என்பதை மறுப்பவர்களைப் பார்த்து குர்ஆன் இப்படி கேள்வி எழுப்புகின்றது.

நிச்சயமாக வானங்களும், பூமியும் இணைந்தே இருந்தன. நாமே அவ்விரண்டையும் பிரித்தோம் என்பதையும் உயிருள்ள ஒவ்வொன்றையும் நீரில் இருந்து நாமே உருவாக்கினோம் என்பதையும் நிராகரித்தோர் அறியவில்லையா? அவர்கள் நம்பிக்கை கொள்ள வேண்டாமா?’ (21:30)

மேலும் மிக அதிகமான விளங்கங்களுக்கு வீடியோவில்


இஸ்லாம் அல்லாதோர் கேட்ட கேள்விகளுக்கு பதில்கள்


மேலும் மற்ற வேதங்கள் அனைத்திலும் முஹமது நபி பற்றியும் இஸ்லாம் பற்றியும் முன்னறிவிப்புகளை காண


குர்ஆன் கூறும் அறிவியல் உண்மைகளை வீடியோவில் காண 

Saturday, 13 October 2018

காதலின் பெயரால் எல்லை மீறுதல்

😱  *காதலின் பெயரால் எல்லை மீறுதல்* 😱

*ⓂAKKAL ⓂEDIA*

😱 *காதலித்து ஏமாற்றுபவர்களின் செய்திகள் பல்லாயிரக்கணக்கில் வந்துகொண்டிருந்தாலும் கண்ணைத் திறந்து கொண்டு கிணற்றில் விழும் காரியத்தை  பெண்கள் செய்துகொண்டுதான் இருக்கிறார்கள்.*

💯 *என் காதலன் நல்லவன் என்று அவனுடன் தனித்திருக்க துணிகிறார்கள். இவர்கள் தெரிந்துகொள்ள வேண்டியது, ஏமாற்றப்பட்ட எல்லா காதலிகளும் தங்கள் காதலர்களை இப்படித்தான் நல்லவர்கள் என்று நம்பியிருந்தார்கள்.*

✅ *உண்மையில் நல்லவனாக இருந்தால் அன்னியப் பெண்ணுடன் காதல் என்ற பெயரை பயன்படுத்தி வெளியில் சுற்றவும் தனிமையில் இருக்கவும்,டேட்டிங் செய்யவோ மாட்டான்.*

🚫ஆணும் பெண்ணும் தனிமையில் சந்திப்பது, ஊர் சுற்றுவது, டேட்டிங் செய்வது தான் காதல் என்றால் அந்த காதலை இஸ்லாம் கண்டிக்கிறது.

✅உலகம் தோன்றிய காலம் முதல் இன்று வரை பெண்களின் கண்ணியத்தை பற்றித் தான் இச்சமூகம் கூடுதல் கவனம் செலுத்தி வருகிறது.

💯கற்புக்கு அவமரியாதையை ஏற்படுத்தும் ஏதாவது செயற்பாடுகள், அல்லது பேச்சுக்கள் இருந்தால் அது பெண்ணின் வாழ்க்கையே கேள்விக்குறியாக்கிவிடும்.

🔘உங்கள் காதலன் ஏமாற்றிவிட்ட பின்பு நீங்கள் வேறு ஒருவரை திருமணம் செய்து கொண்ட பின்பு நாளை உங்கள் காதல் கணவருக்கு தெரிய வந்தால்  ”திருமணத்திற்கு முன்பு நீ ஒருவனுடன் ஊர் சுத்தியவள்தானே” என்று கணவன் மனைவியைப் பார்த்து கேட்டாலே போதும் அவளுடைய கற்பு கேள்விக்குரியாகி விடும் வாழ்க்கை அஸ்தமனமாகிவிடும்.

🔘கற்பு என்பது புனிதமானது. அது ஆணுக்கும் பெண்ணுக்கும் பொது வானது.

🔘இருவரும் தங்கள் கற்பை பாதுகாக்க வேண்டும் என இஸ்லாம் உத்தரவிடுகிறது.

⚠ஒரு ஆண் அன்னியப் பெண்ணை பார்த்து ரசிக்கக் கூடாது என்பது மார்க்கத்தின் தடை உத்தரவு. இதை மீறுவதற்கு யாருக்கும் அனுமதி இல்லை, அல்லாஹ் கூறுகிறான்👇🏼

📖 இறைநம்பிக்கைக் கொண்ட ஆண்களுக்கு நீர் கூறுவீராக! அவர்கள் தங்கள் பார்வைகளைத் தாழ்த்திக்கொள்ளவும், தங்கள் மறைவிடங்களையும் பாதுகாத்துக்கொள்ளவும். இது அவர்களுக்கு மிகப் பரிசுத்தமானதாகும். நிச்சயமாக அல்லாஹ் அவர்கள் செய்பவற்றை நன்குணர்பவன்.

📖மேலும் இறைநம்பிக்கைக் கொண்ட பெண்களுக்கு நீர் கூறுவீராக! அவர்கள் தங்களின் பார்வைகளைத் தாழ்த்திக்கொள்ளவும், தங்களது மறைவிடங்களை பாதுகாத்துக் கொள்ளவும். [அல்குர்ஆன் 24:30,31]

👉🏻இந்த வசனங்களில் ஆண், பெண் இருதரப்பினருக்கும் பார்வையைத் தாழ்த்திக்கொள்ளவும், கற்பைப் பேணிக்கொள்ளவும் அல்லாஹ் கட்டளையிடுகின்றான்.

⚠இது எல்லோருக்கும் பொதுவான கட்டளைதான், ஒருவர் ஒரு பெண்ணை விரும்புகிறார் என்பதற்காக இதை மீறக் கூடாது. ஏனென்றால் அவள் இவரது மனைவியல்ல, இவர் அவளைத் திருமணம் செய்ய இயலாமல் கூடப் போகலாம்.

உங்களுக்கு சில கேள்விகள்❓

🔹அன்பு மட்டும் தான் காதல் என்றால்

டேட்டிங் கலாச்சாரம் காதலா❓

😱திருமணத்திற்கு பின் சேரலாம் என்று இருக்கும் போது ஏன் இந்த உடலுறவு  வற்புறுத்தலாக முன்னரே நடக்கிறது❓

திருமணத்திற்கு முன்னே கற்பை இழந்தவர்களை  கெடுத்தவனே திருமணம் செய்ய மறுக்கிறானே. ஏன்❓

🔹அதுவும் காதல் என்றால் உங்கள் சகோதரிகளை அவ்வாறு அனுமதிப்பீற்களா❓

🔹வீட்டை விட்டு வெளியேறி பெற்றோர்களுக்கு கேவலத்தை கொடுப்பது தான் காதலா❓

🔹தற்கொலை செய்வது, காதலுக்கு மறுத்தால்  ஆசிட் ஊற்றுவது எல்லாம் காதலா❓

🔹காதலின் பெயரால் கற்பழித்து அவளின் வாழ்வை சீரழிப்பது தான் காதலா❓

🔹இவை எல்லாம் காதலின் பெயரால் நடைபெறவில்லையா❓

📖 *நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: “ஒரு பார்வையை இன்னொரு பார்வையால் தொடராதே! முதலாவது (எதார்த்தப் பார்வை) உனக்கு ஆகுமானது, பிந்தையது உனக்கு ஆகுமானதல்ல.* நூல்கள்: அபூதாவூத் 2151, திர்மிதி 2777.

🔥 *தவறான பார்வை மட்டுமின்றி தான் விரும்பும் பெண்ணுடன் கூடாத அசிங்கப் பேச்சுக்களைப் பேசுவதும், தவறான எண்ணத்துடன் தொடுவதும் சிறு விபச்சாரம் என்ற அடிப்படையில் இறைவனிடம் தீமையாக பதியப்படும். அதற்குத் தகுந்தாற்போல் மறுமையில் தண்டனையும் கிடைக்கும்.*

😱 ஆனால் இந்த செயல்களெல்லாம் காதல் என்ற பெயரால் நடந்தால் தவறில்லை என்று ஒழுக்கங்கெட்ட சமூக விரோதிகளால் சினிமாக்கள் மூலமும், கதைகள் மூலமும் சித்தரிக்கப்படுகிறது.

🚫 *வழிகேட்டு ஒழுக்கங்கெட்டுப் போனவர்கள் இந்த சித்தரிப்புகளை நடைமுறைப் படுத்தலாம் ஆனால் நல்வழியில் ஒழுக்கத்துடன் நடக்க விரும்பும் இறைநம்பிக்கையாளன் இதை எதிர்ப்பவனாகத் தான் இருப்பான்.*

⚠ *காதலிப்பவர்கள் கூடாத காரியங்களை செய்ய அனுமதி பெற்றவர்கள் அல்ல*

✅ *ஒழுக்கத்தையும் கவுரவத்தையும் விரும்பும் ஒருவன் இது போன்ற தீமைகளைத் தூண்டுகிற சூழ்நிலைகளை விட்டும் தூரமாக இருக்க வேண்டும்.*

🎙 *நமக்கு வரக்கூடிய கணவனை, மனைவியை ஒழுக்கமாக எதிர்பார்க்கும் நாம் மற்ற ஆண் ,பெண்களிடமும் ஒழுக்கத்தை பேண வேண்டும்.*

📖 *நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: “உங்களில் ஒருவர் பெண்ணுடன் தனியாக இருக்க வேண்டாம், அப்படியிருந்தால் அவர்களிருவருடன் மூன்றாவதாக ஷைத்தான் இருபான். [நூல்: அஹ்மத் 114, திர்மிதி 2165]*

⚠ *இது எல்லோருக்கும் பொதுவான எச்சரிக்கை என்றாலும் காதலிப்பதாக சொல்லிக் கொள்பவர்கள் அவசியம் பேண வேண்டியது. ஏனென்றால் அவர்களை ஷைத்தான் இலகுவாக வழிகெடுத்து விட வாய்ப்பு இவர்களுக்கு தான் அதிகம்.*

〰⚜〰⚜〰⚜〰⚜
⚜ *மக்கள் மீடியா Facebook பக்கத்தை like செய்து கொள்ளுங்கள்​*

https://m.facebook.com/Makkalmedia-1684365771847561/?ref=wizard

*குழுமத்தில் இணை*👇🏻👇🏻
https://chat.whatsapp.com/8SnREh4Lh0CFBJo9xjL8O6

*ⓂAKKAL ⓂEDIA*
Part of....👇🏽👇🏽
*ECHO DAWA FOUNDATION*

Sunday, 7 October 2018

பெண்கள் பள்ளிவாசலுக்கு செல்லலாமா

🧕 *பெண்கள் பள்ளிவாயிலுக்கு வரலாமா*❓🧕

🎤உரை🎤

*அல்ஹாபிழ்.அ.சதாம் உசேன் ஹஸனி தொண்டி*

வீடியோவை காண இங்கு க்ளிக் செய்யவும்
👇👇👇👇👇👇👇👇

https://youtu.be/nBZYZOP7pVo

🎥🎥🎥🎥🎥🎥🎥🎥

〰⚜〰⚜〰⚜〰⚜
🔮 *மார்க்கத்தை தெளிவான முறையிலும் ஆதாரத்துடனும் கற்றுக்கொள்ள  #_மக்கள்_மீடியா_Facebook_பக்கத்தை_like_செய்து_கொள்ளுங்கள்​*

*https://m.facebook.com/Makkalmedia-1684365771847561/?ref=wizard*

*குழுமத்தில் இணைய விரும்பும் சகோதரர்கள் கீழ் உள்ள link மூலமாக இணைந்து கொள்ளவும்*👇🏻👇🏻

https://chat.whatsapp.com/8SnREh4Lh0CFBJo9xjL8O6

*ⓂAKKAL ⓂEDIA*
Part of....👇🏽👇🏽
*ECHO DAWA FOUNDATION*

Thursday, 4 October 2018

மார்கத்தை சிறுமை படுத்தும் அறியாமை மக்கள்

🤑 *மார்க்கத்தை பெருமை படுவத்துவதாக நினைத்து சிறுமை படுத்தும் அறியாமை மக்கள்*

*ⓂAKKAL ⓂEDIA*

🎥 *இன்றைய நவீன யுகத்தில் கிராஃபிக்ஸ் முக்கிய அங்கம் வகிக்கிறது. இந்த நவீன யுத்திகள் ஒருசில தவறான மனிதர்களின் கைகளில் தவழ்கிறது.அவர்கள்  அதன் மூலம் சில மக்களை மூடர்களாக ஆக்குகின்றனர்*

🎥 *கிராஃபிக்ஸ் என்ற யுத்தியின் மூலமாக மக்கள் அதிகமாக வழிகெடுவது சினிமா துறையில்தான் இதற்கு ஆதாரம் காட்ட தேவையில்லை அந்த அளவுக்கு பெயரை சம்பாதித்துவிட்டது.*

📽 *ஆனால் இந்த கிராபிக்ஸ் மற்றும் வீடியோ எடிட்டிங் உதவியுடன் மதங்கள், மார்க்க விஷயங்கள் பரப்பப்படுகின்றன. உதாரணமாக அமெரிக்கர்கள் பரப்பும் பறக்கும் தட்டுக்கள், மற்றும் நேபாள நாட்டில் மசூதியின் பறக்கும் மேற்கூறை,கப்ர் வேதனை கிராபிக்ஸ்,வெள்ளை உருவம் கொண்ட பிசாசு நடமாட்டம் கிராபிக்ஸ் ,   இன்னும் பல.*

😱 *இவைகளை கண்டதும் பரப்பிவிடுகிறீர்கள் அப்படியானல் பொய்களை பறப்புவதில் நீங்கள் வல்லவர்தானே. இதைவிட கொடூரமான பொய் நம் இஸ்லாமியர்களில் பலவீனர்கள் பரப்பும் பொய்கள்தான்.அவைகளுள் சில*

😱 *கப்ருவேதனை தலைப்பில் பரப்பப்படும் அகோர காட்சகள்*

💯 *கப்ருகளில் வேதனை செய்யப்படுவது உண்மைதான் இதை மெய்ப்படுத்தும் விதமாக ஏராளமான குர்ஆன் மற்றும் ஹதீஸ்கள் உள்ளன. இதோ ஆதாரம்*

📖இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.”
ஜனாஸா (பெட்டியில்) வைக்கப்பட்டு அதை ஆண்கள் தங்கள் தோள்களில் தூக்கிச் செல்லும்போது, அந்த ஜனாஸா நல்லறங்கள் புரிந்தாக இருக்குமானால், என்னை விரைந்து செல்லுங்கள் என்று கூறும். அது நல்லறங்கள் புரியததாக இருக்குமானால், கைசேதமே! என்னை எங்கே கொண்டு செல்கிறீர்கள் என்று கூறும். இவ்வாறு கூறும் சப்தத்தை மனிதனைத் தவிர அனைத்தும் செவியுறும் மனிதன் அதைச் செவியுற்றால் மயங்கி விழுந்து விடுவான்.” 
அபூ ஸயீதுல் குத்ரி(ரலி) அறிவித்தார். (புகாரி 1314)

🤔 *மனிதன் பலவீனமானவன் என்று அல்லாஹ் குர்ஆனில் அடிக்கடி கூறுகிறான் எனவே இப்படிப்பட்ட பலவீனமான மனிதனுக்கு முன்னால் கப்ரு வேதனைகளை அல்லாஹ் காட்டுவானா? இதை உணர வேண்டாமா?*

🤔 மூஸா நபியின் காலத்தில் பிர்அவ்ன் நீரில் மூழ்கடிக்கப்பட்டு இறந்தான்.அவனுடைய உடல் இன்றளவும் அழியாமல் உள்ளது. இதை அருள்மறை குர்ஆன் உறுதிபடுத்துகிறது. எனவே பிர்அவ்னுடைய உடல் இன்றளவும் அழுகாமல் உள்ளதால் அவனுக்கு கப்ரு வேதனை இருக்காது என்று கூறுவீர்களா❓

💯 *கப்ரில் அடக்கம் செய்யப்பட்டாலும் சரி, எரித்து சாம்பலாக்கப்பட்டாலும் சரி, கடலில் அல்லது காட்டில் மரணித்து மீன்களுக்கு அல்லது விலங்குகளுக்கு உணவாக மாறினாலும் சரி மனிதனுக்கு பர்ஸகுடைய வாழ்க்கை என்று ஒரு வாழ்வு உண்டு. அதில் அவன் இன்பத்தையோ, துன்பத்தையோ அடைவது உறுதி! எனவே, கப்ரில் அடக்கப்படாதவர்களின் கப்ர் வாழ்க்கையின் நிலை என்ன என்ற கேள்விக்கு இடமில்லை என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.*

💯 *கப்ருவேதனை எங்கு நடைபெறும் என்பதற்கான ஞானம் அல்லாஹ்விடம் மட்டுமே உள்ளது நம்மிடம் இல்லை.*

🤔 *மூஸா (அலை) அவர்களுக்கும் அவர்களது சமுதாயத்திற்கும் கடலை இரண்டாக பிளந்து வாழவழிவகை செய்தவன் போயும் போயும் தக்காளியில் தன் பெயரை பதிப்பானா? உங்கள் பெயர் தக்காளியில் உள்ளது என்று நான் கூறினால் உங்களுக்கு கோபம் வராதா?*

🤔 *அல்லாஹ்வின் பெயரை ஆடு மாடுகளின் ரோமங்களில் கண்டவுடன் உடல் சிலிர்க்கிறதே அதே மிருகங்கள் கண்ட இடங்களில் படுக்குமே இதை உங்களால் உணர முடிய வில்லையா❓*

🤔அல்லாஹ்வின் பெயர் தக்காளியில் உள்ளது தான் அதிசயமா❓இதுவல்ல அதிசயம்.

👉🏻இலவசமாக காற்று ,சூரியன், சந்திரன்,மழை,வானம்,இயற்கை மற்றும் கோடான கோடி படைப்புகள் தோன்றி வாழ்ந்து வருவதெல்லாம் மனிதன் கட்டுபாட்டில் இல்லை.

👉🏻இவைகள் அல்லாஹ்வின் கட்டுப்பாட்டில் இயங்குவதே மறுக்க முடியாத உலக அதிசயங்கள்.

💯அல்லாஹ் நிகழ்த்தும் அதிசயங்களை எழுத்தால் கூறஇயலாது அந்த அளவுக்கு எல்லாமே அதிசயம்தான்.

✅💯 *எனவே அல்லாஹ்வை எவ்வாறு கண்ணியப்படுத்த வேண்டுமோ அவ்வாறு கண்ணியப்படுத்துங்கள்! பொய்களையும் தவறான வதந்திகளையும் பரப்புவதை நிறுத்திக்கொள்ளுங்கள்.*

✍🏼 தக்காளி,கப்ர் வேதனை, மசூதியின் பறக்கும் மேற்கூரை ஆகியவற்றை பார்த்துத்தான் இறைநம்பிக்கையை வளர்த்துக்கொள்ள முடியும் எனில் இது இறைநம்பிக்கையல்ல! குர்ஆனை பார்த்து, படித்துத்தான் ஒருவன் இறைநம்பிக்கையை  முறையாக வளர்த்துக்கொள்ள இயலும் ஏனெனில் அல்குர்ஆன் ஒரு வாழும் அற்புதம்! இதை நபிகளார் (ஸல்) அவர்களின் வாயிலாக அறிந்துக்கொள்ளுங்கள்.

📖 *ஒவ்வொரு தூதர்களும் அற்புதங்களுடன் அனுப்பப்பட்டனர்; எனக்கு வழங்கப்பட்ட அற்புதம் திருக்குர்ஆன்”* நூற்கள்: புஹாரி, முஸ்லிம்

https://www.youtube.com/playlist?list=PL5ZQur38WTNlfMzPMfvh46KfhBayChwDv

〰⚜〰⚜〰⚜〰⚜
⚜ *மக்கள் மீடியா Facebook பக்கத்தை like செய்து கொள்ளுங்கள்​*

https://m.facebook.com/Makkalmedia-1684365771847561/?ref=wizard

*குழுமத்தில் இணை*👇🏻👇🏻
https://chat.whatsapp.com/8SnREh4Lh0CFBJo9xjL8O6

*ⓂAKKAL ⓂEDIA*
Part of....👇🏽👇🏽
*ECHO DAWA FOUNDATION*

Wednesday, 3 October 2018

இஸ்லாமியர்கள் ஜோதிடம் பார்க்கலாமா

நோய் தாக்குதல்கள், உடல் நல குறைவுகளுக்கு,பைத்தியம் பிடித்தவர்களுக்கு சிறந்த மருத்துவரிடம் செல்ல வேண்டும்.அதாவது, உட்பிரிவு நோய்களிலும் அறுவைச் சிகிச்சையிலும், நரம்பு நோய்கள் ஆகியவற்றிலும் திறமை பெற்ற மருத்துவரிடம் சென்று மருத்துவம் பார்க்க வேண்டும். அவர்களுக்கு என்ன நோய் என்பதை அவர் உறுதிப் படுத்திக்கொண்டு, பொருத்தமான ஷரீஅத்தில் அனுமதியுள்ள மருந்துகளின் மூலம் அவர்களுக்கு சிகிச்சை அளிப்பார். அவர் கற்றுத் தேரிய மருத்துவத் திறமைக்கு ஏற்ப மருத்துவம் செய்வார்.



இதற்கு அனுமதி உண்டு. ஏனெனில், இது சாதாரணமாக நடைமுறையிலுள்ள, காரண காரியங்களுக்குட்பட்ட ஒன்று தான். மேலும் தவக்குல் (இறைவனையே முழுவதும் சார்ந்திருத்தல்) எனும் பண்புக்கு இது முரணானதல்ல

மேலும் அல்லாஹ், இவ்வுலக வாழ்வில் சில நோய்களைக் கொடுத்துள்ளான். அவற்றிற்கான மருந்தையும் வழங்கியே இருக்கிறான்.

நோயாளிகள்,வாழ்வில் பிரச்சனைகள் உள்ளோர்  ஜோசியக்காரர்களிடம் செல்வது கூடாது., மறைவானவற்றை அறிவதாக வாதிடக்கூடிய இத்தகையவர்களிடம் தங்களுடைய நோய்களைத் தெரிந்து கொள்ளலாமெனச் செல்வது கூடாது. மேலும் அவர்கள் சொல்லக்கூடிய விஷயங்களை உண்மையென ஏற்றுக் கொள்வதும் கூடாது!

ஏனெனில் அவர்கள் விஷயங்களை இட்டுக் கட்டி யூகத்தின் அடிப்படையில் சொல்கிறார்களே தவிர வேறில்லை! மேலும் தங்களது நோக்கம் நிறைவேறுவதற்காக உதவி வேண்டி ஜின்களை அழைக்கிறார்கள் எனில் இவர்கள், இல்முல் ஃகைப் எனும் மறைவான உண்மைகளை அறிவதாக வாதிடுகிறார்கள்.

எனவே ஜோதிடர்கள் குஃப்ர் எனும் இறை நிராகரிப்பிலும் வழிகேட்டிலும் இருக்கிறார்கள்

அல்லாஹ் கூறுவது என்ன

ஒருவர் நட்சத்திரம் பார்த்து குறி சொல்பவரிடம் சென்று ஏதேனும் விஷயமாக விசாரித்தால் அவருடைய நாற்பது நாட்களின் தொழுகைகள் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது” நூல் : முஸ்லிம் பாகம்: 4 பக்கம் : 1751 ஹதீஸ் எண்: 2230

யாரேனும் (மறைவான விஷயங்களைச் சொல்வதாக வாதிடும்) சோதிடர்களிடம் சென்று அவர்கள் சொல்வதை நம்பினால், முஹம்மத் நபி அவர்களின் மீது இறக்கியருளப்பட்ட ஷரீஅத்தை அவர் நிராகரித்து விட்டார்

நூல் : அபூதாவூத் பாகம்: 4 பக்கம்: 225 ஹதீஸ் எண்: 3904

நட்சத்திரம் பார்த்துக் குறி சொல்பவரிடமோ ஜோசியரிடமோ ஒருவர் சென்று அவர்கள் சொல்வதை நம்பினால் அவர், முஹம்மத் நபி அவர்களின் மீது இறக்கியருளப்பட்ட ஷரீஅத்தை நிராகரித்து விட்டார்.

நூல்: ஹாகிம், பாகம்1-8

இந்த நபிமொழிகளில் குறி சொல்பவர்கள், ஜோசியம் பார்ப்பவர்கள், சூனியக்காரர்கள் ஆகியோரிடம் செல்வதும் அவர்களிடம் விளக்கம் கேட்பதும் அவர்கள் சொல்வதை நம்புவதும் கூடாது என்று தடையும் எச்சரிக்கையும் உள்ளது.

மந்திரவாதிகள்,மாந்தீரீகம் செய்யும் மவ்லவிகள் சொல்கிற சிகிச்சை முறையை நம்புவது முஸ்லிம்கள் செய்ய கூடாது.



இவர்களது மந்திர முனங்கலையும், மந்திரித்துக் கோடுகள் கிழிப்பது, தகடு எழுதுவது, அதனை தாயத்தில் கட்டிக் கொடுப்பது போன்ற இவர்களது வீணான செயல்களையும் நம்புவதும் அதன்படி செயல்படுவதும் முஸ்லிம்களுக்குக் கூடாது. ஏனெனில் இவை எல்லாம் ஜோசியம் பார்ப்பது போன்றது தான்.

மேலும் வான சாஸ்திரம்,ஜோதிட கணிப்புகள் அனைத்தும் பொய் என்கிற ஆதாரங்கள்



ஜோதிடம்-பொய்-என்பதற்கு வீடியோ ஆதாரம் 



மேலும் எந்த முஸ்லிமும் எந்த  மந்திரவாதிகளிடமோ,அஜ்ரத்களிடமோ சென்று தன் மகனுக்கு அல்லது உறவினருக்கு எப்பொழுது திருமணம் நடைபெறும்❓ என்று கேட்பதோ கணவன் – மனைவிக்கு மத்தியில் அன்பும் நட்பும் தோன்றுமா❓அல்லது பிரிவும் பகைமையும் ஏற்படுமா❓என்று கேட்பதோ கூடாது. ஏனெனில் இவையாவும் ஃகைப் எனும் மறைவான காரியங்களாகும்., இவற்றை அறிவது அல்லாஹ்வைத் தவிர வேறு யாராலும் முடியாது.

எனவே நம்மை குஃப்ர் என்னும் கொடீய பாவத்தில் தள்ளும் இந்த மாந்தீரிகம்,பால் கிதாபு  ஜாதக,ஜோதிடங்கள் நம்பி நிம்மதியை பணத்தை மற்றும் ஈமானை இழக்க வைக்கும் இவைகளை விட்டு விடுவதே அறிவுடைமை ஆகும்.

Monday, 1 October 2018

வதந்தி பரப்புவது மிகப்பெரிய பாவம்

*வதந்தி பரப்புவது மிகப்பெரிய பாவம்*

     🗣இன்றைய நவீன காலத்தில் தகவல் பரப்பும் சாதனங்களால் உண்மையை விட உண்மைக்கு புறம்பான வதந்திகள்தான் அதிகம் பரப்புரை செய்யப்படுகிறது *வதந்திகளை நம்பாமலும் பரப்பாமலும் வாழ்வதே அண்ணலாரின் அறிவுரையாகும்.*

*_வதந்தி பரப்புவது மிகப்பெரிய பாவம்_*

🗣 “முமின் களே! (சந்தேகமான) பல எண்ணங்களிலிருந்து விலகிக்கொள்ளுங்கள். ஏனெனில், நிச்சயமாக எண்ணங்களில் சில பாவங்களாக இருக்கும்; (பிறர் குறைகளை) நீங்கள் துருவித்துருவி ஆராய்ந்து கொண்டிராதீர்கள்; அன்றியும் உங்களில் சிலர் சிலரைப் பற்றி புறம் பேச வேண்டாம்” (49:12) என்பது திருக்குர்ஆன் வசனமாகும்.

👆 இறைவன் இங்கே மூன்று விதமான அம்சங்களை பட்டியல் போடுகிறான்.
1) ஊகம்
2) துருவித்துருவி ஆராய்வது
3) புறம்.

👆 *இம்மூன்று  அம்சங்களிலும் நன்மையைவிட பாவமே மிகைத்து நிற்கும் இம்மூன்றுமே ஒன்று மற்றொன்றுடன் தொடர்புடையவையாகும்.*

🗣 *ஊகம் என்பது உறுதிப்படுத்தாத வதந்தியாகும்* வதந்தியை துருவித்துருவி ஆராயும்போது பிறர் மீது புறம் பேசக்கூடிய நிலைக்கு தள்ளிவிடும் வதந்தியால் பரவக்கூடிய செய்தியால் நன்மையை விட தீங்குகளே அதிகம்.

🗣எனவே, வதந்தியை பாவங்களின் பட்டியலில் சேர்த்துவிட்டு அதிலிருந்து முஸ்லிம்கள் முற்றாக விலகி நிற்க வேண்டும் என இஸ்லாம் உத்தரவு பிறப்பிக்கிறது.

🗣 “முமின்களே! தீயவன் எவனும் உங்களிடம் ஒரு செய்தியைக் கொண்டு வந்தால் அதைத் தீர்க்க விசாரித்துக் கொள்ளுங்கள். (இல்லையேல்) அறியாமையினால் (குற்றமற்ற) ஒரு சமூகத்தாருக்கு நீங்கள் தீங்கு செய்து விடலாம்; பின்னர் நீங்கள் செய்தவை பற்றி நீங்களே கைசேதப்படுபவர்களாக (கவலைப்படுபவர்களாக) ஆவீர்கள்” (திருக்குர்ஆன் 49:6).

👆 மேற்கூறப்பட்ட இறைவசனம் இறங்கியதன் பின்னணியை அறிந்துகொள்வோம்.

🗣 ஒரு தடவை நபி (ஸல்) அவர்கள் ஜகாத் நிதியை வசூலிப்பதற்கு ஹசரத் வலீத் பின் உக்பா (ரலி) அவர்களை பனீமுஸ்தலிக் எனும் கோத்திரத்தாரிடம் அனுப்பி வைத்தார்கள்.

👆இவருக்கும் அந்த கோத்திரத்தாருக்கும் இஸ்லாத்திற்கு வரும் முன் ஒரு கொலை சம்பந்தமான பகை உணர்வு இருந்து வந்தது இஸ்லாத்திற்கு வந்தபின் அந்த பகை மறைந்து போனது.

🗣ஹசரத் வலீத் பின் உக்பா (ரலி) அவர்கள் வருகை புரியும் செய்தியறிந்து, அந்த கோத்திரத்தார் அவரை வரவேற்பதற்காக பெரும் படையை திரட்டி புடைசூழ ஊரின் எல்லையில் குழுமியிருந்தார்கள்.

👆இதை கண்ட ஹசரத் வலீத் பின் உக்பா (ரலி) அவர்கள் உண்மை என்னவென்று உறுதிப்படுத்தாமல் பழைய பகை உணர்வை மனதில் வைத்து நம்மை தீர்த்து கட்ட இவர்கள் ஒன்று குழுமியிருக்கிறார்கள் என மனதில் நினைத்துக் கொண்டு, வந்த வழியை நோக்கி நபி (ஸல்) அவர்களிடம் திரும்பிவிட்டார்கள்.

🗣மேலும் அந்த கோத்திரத்தார் குறித்து தம் எண்ண அடிப்படையில் பின்வரும் சில வதந்திகளை பரப்பி விடுகிறார்கள்.
1) அவர்கள் இஸ்லாத்திலிருந்து வெளியேறி விட்டார்கள்
2) ஜகாத் நிதியை தர மறுக்கிறார்கள் 3) என்னை கொலை செய்யவும் தயாராகி விட்டார்கள்.

👆இந்த வதந்திகளை நபி (ஸல்) அவர்கள் கேட்டதும் நம்பவில்லை. *நடந்தது உண்மையா? அல்லது வதந்தியா?* என்பதை ஆய்வு செய்வதற்காக ஹசரத் காலித் பின் வலீத் (ரலி) அவர்களின் தலைமையில் ஒரு சிறிய படையை அனுப்பி வைத்து, அவர்களுக்கு தெரியாமல் இரவு நேரத்தில் அந்த ஊருக்குள் நுழையும்படி ஆலோசனை வழங்கினார்கள்.

🗣அந்த ஊரின் எல்லை அருகே படை வந்ததும், ஹசரத் காலித் (ரலி) அவர்கள் சில ஒற்றர்களை உளவு பார்க்க அனுப்பி வைத்தார்கள் அந்த நேரம் மக்ரிப் தொழுகை நேரமாகும்.

🗣 ஒற்றர்கள் சென்றபோது அந்த கோத்திரத்தார் தொழுகையில் ஆர்வமாக ஈடுபட்டதை கண்டார்கள்.

இந்த செய்தியை அறிந்து கொண்ட காலித் (ரலி) அடுத்த நாள் காலையில் அவர்களிடம் சென்று ஜகாத் நிதியை வசூலித்துக் கொண்டு, நபி (ஸல்) அவர்களிடம் திரும்பிச் சென்று நடந்த உண்மை நிலவரத்தை எடுத்துச் சொன்னார்கள். அப்போது தான் மேற்கூறப்பட்ட (49:6) இறைவசனம் இறங்கியது.

🗣 *உடனே நபி (ஸல்) அவர்கள் “நிதானம் இறைவனின் செயல் அவசரம் ஷைத்தானின் செயல்” என்று கூறினார்கள்.*

👆மேற்கூறப்பட்ட சம்பவத்தில் நபி (ஸல்) அவர்கள் அவசரப்படாமல் நிதானமாக சமயோசிதமாக நடந்து கொண்டதினால் ஒரு பெரும் போர் தவிர்க்கப்பட்டது அந்த நபித் தோழரின் வதந்தியை நம்பி, நபி (ஸல்) அவர்கள் செயல்பட்டால் அநியாயமாக ஒரு சமூகத்தாருக்கு அநீதி இழைத்தவர்களாக ஆகியிருப்பார்கள்.

🗣 *கண்டதை எல்லாம் பேசுவது வதந்தியின் ஆரம்ப நிலையாக அமைந்து விடுகிறது.*

🗣 நாம் பேசக்கூடிய ஒவ்வொன்றுக்கும் நாமே பொறுப்பு வதந்தியால் ஏற்படக்கூடிய அனைத்து விதமான அசம்பாவிதங்களுக்கும் அதனை பரப்பியவர் மீதே சாரும்.

🗣“எதைப் பற்றி உமக்கு (த்தீர்க்க) ஞானமில்லையோ அதை(ச் செய்யத்) தொடர வேண்டாம்; நிச்சயமாக (மறுமையில்) செவிப்புலனும், பார்வையும், இருதயமும் இவையாவுமே (அதனதன் செயல் பற்றி) கேள்வி கேட்கப்படும்” (திருக்குர்ஆன் 17:36)

🗣 தான் கேட்பதையெல்லாம் ஒருவன் பரப்புரை செய்வது அவன் பொய்யன் என்பதற்கு இதுவே போதுமானது” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர் : ஹசரத் ஹப்இபின் ஆஸிம் (ரலி) அவர்கள், (நூல்:முஸ்லிம்).

🗣“தான் கேட்பதையெல்லாம் பரப்புரை செய்பவன் பரிபூரண முஸ்லிமாக முடியாது; மேலும் அவன் ஒரு போதும் தலைமைத்துவத்திற்கு தகுதியும் பெற முடியாது” (பைஹகீ)

🗣 *ஹஜ்ரத் உமர் (ரலி) அவர்கள் கூறும்போது “உங்களையும், குழப்பத்தையும் நான் எச்சரிக்கை செய்கின்றேன். ஏனெனில், வாளால் ஏற்படும் அதே பாதிப்பு நாவினாலும் ஏற்படும்” என்றார்கள்.*

🗣வதந்தியால் பலரின் வாழ்க்கை பாழாகி போயிருக்கிறது

🗣 *இன்றைய நவீன காலத்தில் தகவல் பரப்பும் சாதனங்களால் உண்மையை விட உண்மைக்கு புறம்பான வதந்திகள்தான் அதிகம் பரப்புரை செய்யப்படுகிறது பகிரவும் செய்யப்படுகிறது.*

👆 இதனால் கலவரம் கூட ஏற்படுகிறது வதந்திகளை நம்பாமலும் பரப்பாமலும் வாழ்வதே அண்ணலாரின் அறிவுரையாகும்.

〰⚜〰⚜〰⚜〰⚜
🔮 *மார்க்கத்தை தெளிவான முறையிலும் ஆதாரத்துடனும் கற்றுக்கொள்ள  #_மக்கள்_மீடியா_Facebook_பக்கத்தை_like_செய்து_கொள்ளுங்கள்​*

*https://m.facebook.com/Makkalmedia-1684365771847561/?ref=wizard*

*குழுமத்தில் இணைய விரும்பும் சகோதரர்கள் கீழ் உள்ள link மூலமாக இணைந்து கொள்ளவும்*👇🏻👇🏻

https://chat.whatsapp.com/8SnREh4Lh0CFBJo9xjL8O6

*ⓂAKKAL ⓂEDIA*
Part of....👇🏽👇🏽
*ECHO DAWA FOUNDATION*