Wednesday 3 October 2018

இஸ்லாமியர்கள் ஜோதிடம் பார்க்கலாமா

நோய் தாக்குதல்கள், உடல் நல குறைவுகளுக்கு,பைத்தியம் பிடித்தவர்களுக்கு சிறந்த மருத்துவரிடம் செல்ல வேண்டும்.அதாவது, உட்பிரிவு நோய்களிலும் அறுவைச் சிகிச்சையிலும், நரம்பு நோய்கள் ஆகியவற்றிலும் திறமை பெற்ற மருத்துவரிடம் சென்று மருத்துவம் பார்க்க வேண்டும். அவர்களுக்கு என்ன நோய் என்பதை அவர் உறுதிப் படுத்திக்கொண்டு, பொருத்தமான ஷரீஅத்தில் அனுமதியுள்ள மருந்துகளின் மூலம் அவர்களுக்கு சிகிச்சை அளிப்பார். அவர் கற்றுத் தேரிய மருத்துவத் திறமைக்கு ஏற்ப மருத்துவம் செய்வார்.



இதற்கு அனுமதி உண்டு. ஏனெனில், இது சாதாரணமாக நடைமுறையிலுள்ள, காரண காரியங்களுக்குட்பட்ட ஒன்று தான். மேலும் தவக்குல் (இறைவனையே முழுவதும் சார்ந்திருத்தல்) எனும் பண்புக்கு இது முரணானதல்ல

மேலும் அல்லாஹ், இவ்வுலக வாழ்வில் சில நோய்களைக் கொடுத்துள்ளான். அவற்றிற்கான மருந்தையும் வழங்கியே இருக்கிறான்.

நோயாளிகள்,வாழ்வில் பிரச்சனைகள் உள்ளோர்  ஜோசியக்காரர்களிடம் செல்வது கூடாது., மறைவானவற்றை அறிவதாக வாதிடக்கூடிய இத்தகையவர்களிடம் தங்களுடைய நோய்களைத் தெரிந்து கொள்ளலாமெனச் செல்வது கூடாது. மேலும் அவர்கள் சொல்லக்கூடிய விஷயங்களை உண்மையென ஏற்றுக் கொள்வதும் கூடாது!

ஏனெனில் அவர்கள் விஷயங்களை இட்டுக் கட்டி யூகத்தின் அடிப்படையில் சொல்கிறார்களே தவிர வேறில்லை! மேலும் தங்களது நோக்கம் நிறைவேறுவதற்காக உதவி வேண்டி ஜின்களை அழைக்கிறார்கள் எனில் இவர்கள், இல்முல் ஃகைப் எனும் மறைவான உண்மைகளை அறிவதாக வாதிடுகிறார்கள்.

எனவே ஜோதிடர்கள் குஃப்ர் எனும் இறை நிராகரிப்பிலும் வழிகேட்டிலும் இருக்கிறார்கள்

அல்லாஹ் கூறுவது என்ன

ஒருவர் நட்சத்திரம் பார்த்து குறி சொல்பவரிடம் சென்று ஏதேனும் விஷயமாக விசாரித்தால் அவருடைய நாற்பது நாட்களின் தொழுகைகள் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது” நூல் : முஸ்லிம் பாகம்: 4 பக்கம் : 1751 ஹதீஸ் எண்: 2230

யாரேனும் (மறைவான விஷயங்களைச் சொல்வதாக வாதிடும்) சோதிடர்களிடம் சென்று அவர்கள் சொல்வதை நம்பினால், முஹம்மத் நபி அவர்களின் மீது இறக்கியருளப்பட்ட ஷரீஅத்தை அவர் நிராகரித்து விட்டார்

நூல் : அபூதாவூத் பாகம்: 4 பக்கம்: 225 ஹதீஸ் எண்: 3904

நட்சத்திரம் பார்த்துக் குறி சொல்பவரிடமோ ஜோசியரிடமோ ஒருவர் சென்று அவர்கள் சொல்வதை நம்பினால் அவர், முஹம்மத் நபி அவர்களின் மீது இறக்கியருளப்பட்ட ஷரீஅத்தை நிராகரித்து விட்டார்.

நூல்: ஹாகிம், பாகம்1-8

இந்த நபிமொழிகளில் குறி சொல்பவர்கள், ஜோசியம் பார்ப்பவர்கள், சூனியக்காரர்கள் ஆகியோரிடம் செல்வதும் அவர்களிடம் விளக்கம் கேட்பதும் அவர்கள் சொல்வதை நம்புவதும் கூடாது என்று தடையும் எச்சரிக்கையும் உள்ளது.

மந்திரவாதிகள்,மாந்தீரீகம் செய்யும் மவ்லவிகள் சொல்கிற சிகிச்சை முறையை நம்புவது முஸ்லிம்கள் செய்ய கூடாது.



இவர்களது மந்திர முனங்கலையும், மந்திரித்துக் கோடுகள் கிழிப்பது, தகடு எழுதுவது, அதனை தாயத்தில் கட்டிக் கொடுப்பது போன்ற இவர்களது வீணான செயல்களையும் நம்புவதும் அதன்படி செயல்படுவதும் முஸ்லிம்களுக்குக் கூடாது. ஏனெனில் இவை எல்லாம் ஜோசியம் பார்ப்பது போன்றது தான்.

மேலும் வான சாஸ்திரம்,ஜோதிட கணிப்புகள் அனைத்தும் பொய் என்கிற ஆதாரங்கள்



ஜோதிடம்-பொய்-என்பதற்கு வீடியோ ஆதாரம் 



மேலும் எந்த முஸ்லிமும் எந்த  மந்திரவாதிகளிடமோ,அஜ்ரத்களிடமோ சென்று தன் மகனுக்கு அல்லது உறவினருக்கு எப்பொழுது திருமணம் நடைபெறும்❓ என்று கேட்பதோ கணவன் – மனைவிக்கு மத்தியில் அன்பும் நட்பும் தோன்றுமா❓அல்லது பிரிவும் பகைமையும் ஏற்படுமா❓என்று கேட்பதோ கூடாது. ஏனெனில் இவையாவும் ஃகைப் எனும் மறைவான காரியங்களாகும்., இவற்றை அறிவது அல்லாஹ்வைத் தவிர வேறு யாராலும் முடியாது.

எனவே நம்மை குஃப்ர் என்னும் கொடீய பாவத்தில் தள்ளும் இந்த மாந்தீரிகம்,பால் கிதாபு  ஜாதக,ஜோதிடங்கள் நம்பி நிம்மதியை பணத்தை மற்றும் ஈமானை இழக்க வைக்கும் இவைகளை விட்டு விடுவதே அறிவுடைமை ஆகும்.

No comments:

Post a Comment