Thursday, 18 October 2018

அல்லாஹ்வை படைத்தது யார்?

அல்லாஹ்வை படைத்தது யார் என்பது அறிவு பூர்வமான கேள்வியா

இஸ்லாம் இறைவன் ஒருவன் இருக்கின்றான் என்று கூறுவதுடன் பல தெய்வ நம்பிக்கையைப் பலமாக எதிர்க்கின்றது. அத்துடன், மனிதன் கடவுளாகவும் முடியாது. கடவுள் மனித அவதாரம் எடுப்பதும் இல்லை எனக் கூறி கடவுளின் பெயரால் அரங்கேற்றப்படும் அத்தனை மூடநம்பிக்கைகளையும் அடியோடு மறுக்கின்றது.

கடவுள் இல்லை என்று கூறுபவர்கள் அதைப் பகுத்தறிவு வாதம் என்று கூறுகின்றனர்.



இந்த பிரபஞ்சம் அனைத்தும் தானாகவோ, தற்செயலாகவோ உருவானது என்பது எப்படி பகுத்தறிவாகும்

படைப்பினங்கள் இருப்பதே படைப்பாளன் ஒருவன் இருக்கின்றான் என்பதற்கான பலமான ஆதாரமாகும்.


மக்கள் இதைப் படைத்தவர் யார்? அதைப் படைத்தவர் யார்? என்று ஒவ்வொன்றாகக் கேட்டுக் கொண்டே வந்து, இறுதியில் ‘அல்லாஹ் படைப்பினங்களைப் படைத்தான், அல்லாஹ்வைப் படைத்தவன் யார்? என்று கேட்கும் நிலைக்கு உள்ளாவார்கள். இத்தகைய எண்ணம் ஒருவருக்கு ஏற்பட்டால் அவர் உடனே, ‘அல்லாஹ்வை நான் நம்பிக்கை கொண்டேன்’ (ஆமன்து பில்லாஹ்) என்று சொல்லட்டும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: முஸ்லிம் 212

அல்லாஹ்வை யார் படைத்தார்? என்ற கேள்வி அறிவுப்பூர்வமானதாக தோன்றினாலும் அதனால் இறைவனை நிராகரிக்கும் நிலைக்கு ஒருவன் தள்ளப்படுகின்றான். அதனால் தான் ஆமன்து பில்லாஹ் – அல்லாஹ்வை நான் நம்பினேன் என்று சொல்லி அப்படிப்பட்ட எண்ணத்திலிருந்து மீள வேண்டும்.

இரண்டாவதாக, அதே அறிவுப்பூர்வமாகவே மேலும் சிந்தித்தாலும் அதற்கான விடையை தெரிந்து கொள்ள முடியும். அது என்ன?

அல்லாஹ்வை படைத்தவர் யார்? என்ற கேள்விக்கு ஒருவர் இன்னார் படைத்தார் என்று ஒருவரைச் சொல்கிறார் என்று வைத்துக் கொள்வோம். இப்போதும் அந்த கேள்வி மீண்டும் பிறக்கத்தான் செய்யும். அவரைப் படைத்தவர் யார்? என்று மறுபடியும் அவர் கேட்பார்.

இந்தக் கேள்விக்கு ஒரு பதிலைச் இறுதியாக சொல்லிவிட முடியாது என்பதினாலும் இது அறிவப்பூர்வமான கேள்வியே அல்ல.

அல்லாஹ்வைப் படைத்தவர் இவர் தான் என்று சொன்னால், இங்கே படைப்பாளி படைக்கப்பட்டவராக ஆகிவிடுகிறார். படைக்கப்பட்டவர் இறைவனாக இருக்க முடியாது. படைப்பாளி படைக்கப்பட்டவராக ஆவதே இந்த கேள்வி அறிவுப்பூர்வமானது அல்ல என்பதற்கான சான்றாகும்.

நுணுக்கமான இந்தப் பிரபஞ்ச ஒழுங்குகளும் அற்புதமான மனித படைப்பும் உயிரினங்களின் அற்புதமான வடிவமைப்பும் மிகப்பெரும் ஆற்றல்மிக்க படைப்பாளன் ஒருவன் இருக்கின்றான் என்பதற்கான எடுத்துக்காட்டுக்களேயாகும்.

இந்த உண்மையை உணர்த்தும் விதத்தில் அல்குர்ஆன் பல இடங்களில் கேள்விகளை அடுக்குகின்றது.

எப்பொருளுமின்றி அவர்கள் படைக்கப்பட்டனரா? அல்லது அவர்கள் படைக்கின்றவர்களா?’ ‘அல்லது அவர்கள் வானங்கள் மற்றும் பூமியை படைத்தனரா? மாறாக, அவர்கள் உறுதியாக நம்பிக்கை கொள்ளமாட்டார்கள்.’ (52:35-36)

நீங்கள் செலுத்தும் இந்திரியத்தைக் கவனித்தீர்களா?’ ‘அதை நீங்கள் படைக்கின்றீர்களா? அல்லது நாம் படைக்கின்றோமா?’ (56:58-59)

நீங்கள் பயிரிடுவதைப் பார்த்தீர்களா?’ ‘அதை நீங்கள் முளைப்பிக்கின்றீர்களா? அல்லது நாம் முளைப்பிக்கின்றோமா?’ (56:63-64)

இறைவன் ஒருவன் இருக்கின்றான் என்பதை மறுப்பவர்களைப் பார்த்து குர்ஆன் இப்படி கேள்வி எழுப்புகின்றது.

நிச்சயமாக வானங்களும், பூமியும் இணைந்தே இருந்தன. நாமே அவ்விரண்டையும் பிரித்தோம் என்பதையும் உயிருள்ள ஒவ்வொன்றையும் நீரில் இருந்து நாமே உருவாக்கினோம் என்பதையும் நிராகரித்தோர் அறியவில்லையா? அவர்கள் நம்பிக்கை கொள்ள வேண்டாமா?’ (21:30)

மேலும் மிக அதிகமான விளங்கங்களுக்கு வீடியோவில்


இஸ்லாம் அல்லாதோர் கேட்ட கேள்விகளுக்கு பதில்கள்


மேலும் மற்ற வேதங்கள் அனைத்திலும் முஹமது நபி பற்றியும் இஸ்லாம் பற்றியும் முன்னறிவிப்புகளை காண


குர்ஆன் கூறும் அறிவியல் உண்மைகளை வீடியோவில் காண 

No comments:

Post a Comment