Sunday 13 March 2016

👫.கோ எஜிகேஷன்.👫 🍀பகுதி5⃣

📢  ⓂAKKAL ⓂEDIA 📢

🍥அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)🍥
 
       🍁கல்வி🍁


   👫.கோ எஜிகேஷன்.👫
           🍀பகுதி5⃣

🔵இன்றைய காலக்கட்டத்தில்  நம் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகள் கல்வி கற்க வேண்டும் .

🔵தங்கள் பிள்ளைகளையும் நாளை நாலு பேர் மதிக்க வேண்டும்.

🔵தங்கள் பிள்ளைகள் நாளை நல்ல நிலையில் இருக்க வேண்டும் என்பதற்காக நம் பெற்றோர்கள்
கோ எஜுகேசன் (co education)
எனப்படும் கல்வி முறையை ஏற்றுக் கொண்டு தங்கள் பிள்ளைகளை படிக்க வைக்கின்றனர் .

👫கோ எஜுகேசன் ( co education) என்றால் ஒரு வகுப்பில் ஒரு பக்கம் ஆண்களும் மற்றொரு பக்கம் பெண்களும் இருப்பார்கள் இன்னும் ஓர் சில இடங்களில் ஆண்களும் பெண்களும் கலந்தும் இருப்பார்கள்.

🔵பெற்றோர்களே இந்த கோ எஜுகேசன் லினால் ஏற்படும் ஒரு சில விளைவுகளே சற்று பார்ப்போம்

🔵 நம் சகோதரனும் சகோதரியும் எந்தவித கெட்ட எண்ணமும் இல்லாமல் தான் அந்த கல்வியை கற்க செல்கிறார்கள் ஆனால் நாள் ஆக ஆக கண்ணால் பார்க்க கூடிய அசிங்கமும்,காதில் கேட்பது நாளுக்கு நாள் நம் உள்ளங்களில் நோய்களாக மாறிவிடும் அல்லாஹ் பாதுகாத்தவரை தவிர

🔵இந்த நோய் ஏற்பட்டதற்கு பிறகு காதல் வரும் அதை தொடர்ந்து என்னவெல்லாம் நடக்கும் என்பதை இன்றைய  தொலைக்காட்சியின்  மூலமாகவும் செய்தியாகவும் ஏன் கண்ணாலும் பார்த்து கொண்டு தான் இருக்கிறோம்

🔵ஆகவே  நம் மார்க்கம் நமக்கு கற்று தந்ததை பாருங்கள்


❌கோ எஜிகேஷன் பாடத்திட்டத்திற்கு மார்க்கத்தில் துளியும் அனுமதி கிடையாது ..❌

🔵கல்விக்கு மிக முக்கியமானது ஒழுக்கமும் ,
மனக்கட்டுப்பாடும்தான் .

👆🏻இவ்விரண்டும் இல்லாதவரிடத்தில் கல்வி&கலை எதுவும் நிலைக்காது ..

❌கோ எஜிகேஷன் மூலம் ஆண்,பெண் ஒழுக்கவியலும்.மனக்கட்டுப்பாடும் சீரழிகிறது ...

✔நபி ஸல் அவர்கள் ஒழுக்கத்துடன் கூடிய கல்வி முறைக்கு அடித்தளமிட்டு ,அதை செயல்படுத்தியும் காட்டினார்கள் ..

🔵பின் வரும் ஹதீஸ் அதற்கான ஆதாரம்

📓(நாங்கள் உங்களை அணுகி மார்க்க விளக்கங்களை கேட்க முடியாதவாறு) தங்களிடம் (எப்போதும்) ஆண்களே எங்களை மிகைத்து நிற்கிறார்கள் ,எனவே, தாங்களாகவே எங்களுக்கென்று ஒரு நாளை ஏற்பாடு செய்யுங்கள்' என்று பெண்கள் நபி(ஸல்) அவர்களிடம் கேட்டுக் கொண்டார்கள். அவர்களும் அப்பெண்களுக்கென ஒரு நாளை வாக்களித்து, அந்நாளில் அவர்களைச் சந்தித்து அவர்களுக்கு அறிவுரை பகர்ந்தார்கள். (மார்க்கக் கட்டளைகளை) ஏவினார்கள். அவர்கள் தங்களின் அறிவுரையில் 'உங்களில் ஒரு பெண் தன் குழந்தைகளில் மூவரை (மரணத்தின் மூலம்) இழந்துவிட்டாள் என்றால் அந்தக் குழந்தைகள் அப்பெண்ணை நரகத்துக்குச் செல்லாமல் தடுத்துவிடக் கூடியவர்களாக இருப்பார்கள்' என்று கூறினார்கள். அப்போது ஒரு பெண், 'இரண்டு குழந்தைகளை ஒருத்தி இழந்துவிட்டால்?' என்று கேட்டதற்கு நபி(ஸல்) அவர்கள், 'இரண்டு, குழந்தைகளை ஒருத்தி இழந்துவிட்டாலும் தான்' என்று கூறினார்கள்" அபூ ஸயீதுல் குத்ரி(ரலி) அறிவித்தார்.

(ஸஹீஹுல் புகாரி: 101 )

✔ஆண்களுக்கான கல்விக்காக தனி நேரத்தையும் ,
பெண்களுக்கான கல்விக்காக தனி நேரத்தையும்,
நபி அவர்கள் ஒதுக்கியதன் மூலமே நாம் கோ எஜிகேஷன் பாடத்திற்கு அனுமதியில்லை என்பதை  விளங்கமுடிகிறது ..

👫அதுமட்டுமின்றி கோ எஜிகேஷன் மூலம்
நடைமுறையில்  ஏற்படும் அசிங்கங்களை நாம் மேலே பார்த்தோம்..

1.சுருக்கமாக கூற வேண்டுமென்றால் நமது தமிழகத்திலேயே பல கல்வி கூடம்&கல்லூரிகளில் படிக்கும்போதே கர்ப்பமுற்று கேவலப்படுவதை செய்திகளில் படிக்கிறோம்..

2.கல்லூரிகளை புறக்கணித்துவிட்டு
கடற்கரை ,பூங்கா ,சினிமா  ,என்று டேட்டிங் என்கிற கேவலம் அறங்கேறுவதை பார்க்கிறோம்.

👆🏻இதுபோன்று ஆயிரக்கணக்கான நிகழ்வுகள் இருக்கின்றன ..

🔆ஆனால் பதிவின் நோக்கம் தவறுகளை வரிசைப்படுத்துவது கிடையாது ..

👫கோ எஜிகேஷன் மூலம் நாம் இழந்து வரும் நம் இஸ்லாமிய நாகரீகத்தையும் ,நம் ஷரீஅத்தின் சட்ட திட்டங்களையும் நம் சிந்தனைக்கு கொண்டுவருவதே நம் பதிவின் நோக்கம் ..

🔵நம் பிள்ளைகளை இஸ்லாமிய கொள்கைகளுக்குட்பட்ட கல்வி முறையில் நடைமுறை படுத்த வேண்டும் ..

அல்ஹம்துலில்லாஹ்..


................தொடரும்.

🔃🔃🔃🔃🔃🔃🔃🔃🔃🔃🔃
🔮 இஸ்லாமிய மார்க்க செய்திகளை அழகிய முறையில் அறிய

♻ வாட்ஸ்அப்பில் எங்கள் செய்தியை பெற 👇

📱 0091- 9629167027

📱 0091- 9994675186

பேஸ்புக்கில் எம்மை தொடர 👇
https://m.facebook.com/Makkalmedia-1684365771847561/?ref=wizard

📢 ⓂAKKAL ⓂEDIA 📢

📝 பதிவு நாள்: 26 JAN 2016

No comments:

Post a Comment