Sunday 13 March 2016

❤ காதல் ❤ பகுதி - 4

📢  ⓂAKKAL ⓂEDIA 📢

💠பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்💠

            ❤ காதல் ❤

               பகுதி - 4⃣

💝அல்ஹம்துலில்லாஹ்

💟காதல் பற்றிய சில பகுதிகள் சில முடிந்த நிலையில் அடுத்த தலைப்பாகிய காதல் ஏற்படுத்தும் விளைவுகள் பற்றி பார்ப்போம்

💟இன்று நம் சகோதர சகோதரிகள் காதல் எனப்படும் கொடிய நோயில் சிக்கி சின்னா பின்னமாவது நாம் அனைவரும் அறிந்த ஒன்றே.

💟இந்த காதலின் காரணத்தால் நம் சகோதர சகோதரிகள் தற்கொலை செய்து கொள்கின்றனர்

🎀காதலி தம் காதலை ஒத்துக் கொள்ளாவிட்டால் அவளை பழிவாங்கும் எண்ணத்தில் அவள் முகத்தில் ஆசிட் ஊற்றுவதும் இன்னும் அவளை அசிங்கப்படுத்துவது இந்த தலைமுறையில் பெருகி வருகிறது

🎀இன்னும் ஓர் சிலர் அந்த பெண் தம் காதலை ஒத்துக் கொள்ளாவிட்டால் இவன் தற்கொலை செய்துகொள்ளும் காட்சியும் தினம்தோறும் செய்திகள் மூலமாகவும், கண்கூடாகவும் பார்த்து கொண்டு தான் இருக்கிறோம்

🎀ஒன்று இரண்டு பேருக்கும் காதலித்து சிறிது காலம் சென்ற பிறகு ஒரு சில மனக்கசப்பின் காரணத்தாலோ

💕அல்லது ஒரு சிலர் எடுக்கும் முடிவின் காரணத்தால் அவர்கள் பிரிவார்கள்

👆🏻இந்த பிரிவு அந்த ஜோடியில் ஒருவருக்கு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் இதன் விளைவாக சிலர் தற்கொலையும் செய்து கொள்கின்றனர்

💟இன்னும் சில இடங்களில் தன் பிள்ளைகள் காதலித்து கற்பை இழந்து தவிக்கும் காட்சியை பார்த்து பெற்றோர்கள் தற்கொலை செய்து கொள்கிறார்கள்

🎀இன்னொரு பக்கம் ஒரு சில கயவர்கள் காமம் முத்தி பெண்களுக்கு காதல் வலைவீசி அதில் சிக்கக்கூடியவர்களின் கற்புகளை சூறையாடுகிறார்கள்


👆🏻இதன் விளைவாக ஒரு சிலர் தற்கொலை செய்து கொள்கின்றனர் மற்றும் சிலர் தவறான வழியில் சென்று விடுகின்றனர் .

💞இன்னும் ஓர் சிலர் காதல் ஒப்பந்தம் என்ற பெயரில் திருமணத்திற்கு பிறகு செய்ய வேண்டிய காரியங்கள் அனைத்தையும் செய்து விட்டு

👆🏻அதன் விளைவாக ஏற்படக்கூடிய கருக்களை சர்வசாதாரணமாக எந்தவொரு அச்சமுமின்றி அழித்து விடுகின்றனர் இதன் விளைவாக அந்த பெண் தாய்மையை இழக்கிறால்


💗இப்படி காதலினால் ஏற்படக்கூடிய விளைவுகளை பட்டியலிட்டு கொண்டே போகலாம்

🔺ஆனால் நோக்கம் அது அல்ல


💗இந்த பட்டியலில் நம் முஸ்லிம் பெண்களும் இடம்பெறுவது இன்னும் வேதனையான விஷயம் ஓர் சில கயவர்களின் காதல் வலைகளில் சிக்கி கற்பையும் இழந்து மார்க்கத்தை விட்டும் வெளியேறியவர்களாக நின்று கொண்டு இருக்கின்றனர்.


📘நம்பிக்கையாளர்களே! ஷைத்தானுடைய அடிச்சுவட்டை நீங்கள் பின்பற்றாதீர்கள். (ஏனென்றால்,) எவன் ஷைத்தானுடைய அடிச்சுவட்டைப்  பின்பற்றிச் செல்கிறானோ அவனை அவன் மானக்கேடான விஷயங்களையும், பாவமான காரியங்களையும் செய்யும்படி நிச்சயமாகத் தூண்டிக் கொண்டே இருப்பான். அல்லாஹ்வுடைய அருளும், கிருபையும் உங்கள்மீது இல்லா திருப்பின் உங்களில் ஒருவருமே எக்காலத்திலும் பரிசுத்தவானாக இருக்க முடியாது. எனினும், அல்லாஹ் தான் நாடியவனைப் பரிசுத்தவானாக ஆக்குகிறான். அல்லாஹ் செவியுறுபவனும் (அனைத்தையும்) நன்கறிபவனாகவும் இருக்கின்றான்.
(அல்குர்ஆன் : 24:21)

💢அன்பார்ந்தவர்களே அல்லாஹ்விற்கு அஞ்ச வேண்டாமா❓

🔺அவன் நீங்கள் செய்யக்கூடிய அசிங்கங்களை பார்க்கவில்லை என்று எண்ணிக் கொண்டு இருக்கீர்களா❓

🔺இல்லை அல்லாஹ்வின் கோபத்தை சோதித்து பார்கீர்களா❓
 
📓மனிதர்களே! நீங்கள் உங்களுடைய இறைவனை பயந்து கொள்ளுங்கள்; நிச்சயமாக (கியாமத்து நாளாகிய) அவ்வேளையின் அதிர்ச்சி, மகத்தான பெரும் நிகழ்ச்சியாகும்.
(அல்குர்ஆன் : 22:1)

💝இன்ஷா அல்லாஹ் இதுவரை செய்த தவறுக்காக அல்லாஹ்விடம் தவ்பா கேட்டு விட்டு இனி வரக்கூடிய காலங்களில் முஸ்லிம்களாக வாழ்ந்து மரணிக்க அல்லாஹ் உதவி செய்வானாகா!!!!


⭕இன்ஷா அல்லாஹ் தொடரும்.....


🔃🔃🔃🔃🔃🔃🔃🔃🔃🔃🔃
🔮 இஸ்லாமிய மார்க்க செய்திகளை அழகிய முறையில் அறிய

♻ வாட்ஸ்அப்பில் எங்கள் செய்தியை பெற 👇

📱 0091- 9994675186

📱 0091- 9629167027

பேஸ்புக்கில் எம்மை தொடர 👇
https://m.facebook.com/Makkalmedia-1684365771847561/?ref=wizard

📢 ⓂAKKAL ⓂEDIA 📢
📝 பதிவு நாள்:  11 FEB 2016

Part of👇🏼
📡ECHO DAWAH FOUNDATION 📡

No comments:

Post a Comment