Friday 25 March 2016

பொய் சத்தியம்

📢  ⓂAKKAL ⓂEDIA 📢

💠பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்💠

         🚫பொய் சத்தியம்🚫

🗯அல்ஹம்துலில்லாஹ்🗯

🏮இன்று நம்மில் பலர் அவர்களின் வாழ்விலே பொய் சத்தியம் செய்வதை வாடிக்கையாக கொண்டுள்ளனர்.

✳குடும்ப வாழ்க்கை, வியாபாரம், நட்பு வட்டாரம், அரசியல், போன்ற அனைத்து நிலைகளிலும் பொய் சத்தியம் செய்கின்றனர்.

👆🏻இதற்கு முக்கிய காரணம் என்னவென்றால் பொய் சத்தியத்தின் பின் விளைவுகளையும், அதற்கு மறுமையில் கிடைக்கும் தண்டனைகளை நாம் உணராமல் இருப்பதுதான்.

💠இஸ்லாம் மார்க்கம் சத்தியத்திற்கு அதிகமாகவே கண்ணியம் வழங்கியுள்ளது.

🔰குர்ஆனில் அல்லாஹ் சத்தியமிட்டு கூறும் இறைவசனங்களும், நபி (ஸல்) அவர்களின் ஏராளமான நபி மொழிகளும் இதற்கு சான்றுகளாக உள்ளன.

♦காலத்தின் மீது சத்தியமாக.

(அல்குர்ஆன் : 103:1)

♦மூச்சுத்திணற விரைந்து ஓடுபவற்றின் (குதிரைகள்) மீது சத்தியமாக-

(அல்குர்ஆன் : 100:1)

♦அத்தியின் மீதும், ஒலிவத்தின் (ஜைத்தூன்) மீதும் சத்தியமாக-

(அல்குர்ஆன் : 95:1)



👆🏻இதுபோன்ற இறைவசனங்களை குர்ஆனில் பரவலாக நாம் பார்க்கலாம்.

💥அதேபோல் ஹதீஸ்களையும் நாம் பார்க்க முடியும்.

🔰1894.   என் உயிர் எவன் கைவசம் இருக்கிறதோ அ(ந்த இறை)வன் மேல் ஆணையாக! நோன்பாளியின் வாயிலிருந்து வீசும் வாடை, அல்லாஹ்விடம் கஸ்தூரியின் வாடையை விடச் சிறந்ததாகும்!

அறிவிப்பாளர்:

 அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

📚ஷஹீஹ் புகாரி

✳இதுபோல பரவலாக நபி (ஸல்)அவர்கள் அல்லாஹ்வின் சத்தியமிட்டு கூறுவதை பல ஹதீஸ்களில் நாம் பார்க்கலாம்.

✳அல்லாஹ்வும், ரஸூலும், சத்தியம் செய்வதின்மூலமாகவே சத்தியத்தின் சிறப்பை நாம் புரிந்து கொள்ள முடியும்.

🚫ஆனால் இவ்வளவு மேன்மையான சத்தியத்தை நம் வாழ்வில் தேவையில்லாத காரியங்களுக்கும், பொய்யை நம்ப வைப்பதற்காகவும் நாம் பயன்படுத்துகிறோம்.

🗯நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்👇🏻


🔰2357. அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார்.  ”ஒரு முஸ்லிமின் செல்வத்தை அபகரித்துக் கொள்வதற்காகப் பொய் சத்தியம் செய்பவன் (மறுமையில்) தன் மீது இறைவன் கோபம் கொண்டிருக்கும் நிலையில் அவனைச் சந்திப்பான்“ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். உடனே, “அல்லாஹ்வுடன் செய்த உடன்படிக்கையையும் தம் சத்தியங்களையும் அற்ப விலைக்கு விற்றுவிடுகிறவர்களுக்கு மறுமையில் எந்த நற்பேறுமில்லை. இறுதித் தீர்ப்பு நாளில் அல்லாஹ் அவர்களிடம் பேசவும் மாட்டான்; அவர்களைப் பார்க்கவும் மாட்டான். மாறாக, அவர்களுக்குத் துன்புறுத்தும் தண்டனைதான் இருக்கிறது“

📚ஷஹீஹ் புகாரி.


📗மேலும் அல் குர்ஆன்


📓எந்த சமூகத்தார் மீது அல்லாஹ் கோபம் கொண்டானோ, அவர்களுடன் சிநேகிக்கிறவர்களை (நபியே!) நீர் கவனித்தீரா? அவர்கள் உங்களில் உள்ளவர்களும் அல்லர்; அவர்களில் உள்ளவர்களும் அல்லர். அவர்கள் அறிந்து கொண்டே (உங்களுடன் இருப்பதாகப்) பொய்ச் சத்தியம் செய்கின்றனர்.
(அல்குர்ஆன் : 58:14)

✳பொய் சத்தியம் செய்பவனுக்காக நாளை மறுமையில் கிடைக்கும் தண்டனைகளை தான் மேற்கண்ட, குர்ஆன் வசனமும்,  ஹதீஸூம் எடுத்துரைக்கிரது.

💥மேலும் நாம் செய்யும் மற்றொரு தவறு என்னவெனில்,
ஏதேனும் நிர்பந்தங்களில் சத்தியம் செய்ய நேர்ந்தால்

🔹குர்ஆன் மீதும்

🔹 தாயின் மீதும்

🔹தந்தையின் மீதும்

🔹அவரவர் வாழ்வில் யார் முக்கியமான நபரோ அவர்களின் மீது சத்தியமிடுகிறோம்.

👆🏻இது முற்றிலும் தவறாகும்❌


👆🏻இவ்வாறு செய்வது சத்தியமாகாது. மேலும் பெறும் பாவமாகும். ❌


🔰அனைத்து மக்களிடமும் நேர்ச்சை செய்தல் எப்படி வழக்கமாக உள்ளதோ,
♦அது போல் சத்தியம் செய்தலும் உள்ளது.
♦தன்னை, தான் கூறும் வார்த்தைகளில், செய்யும் செயல்கள் உண்மையானவன் தான் எனக் காட்டிட இறைவன் மீது சத்தியமாக! என் தாயின் மீது சத்தியமாக! என் கண் மீது சத்தியமாக! இந்த வேதத்தின் மீது சத்தியமாக! என் குழந்தை மீது சத்தியமாக! என்று பல்வேறு முறைகளில், பலர் சத்தியம் செய்வர். சிலர் குழந்தைகளை தரையில் போட்டு அதை தாண்டி சத்தியம் செய்வர்.

💠இது போன்ற சத்தியம் செய்யும் பழக்கத்தில் முஸ்லிம்களும் விதிவிலக்கல்ல.

 💥குர்ஆன் மீதும், அன்னத்தின் (உணவின்) மீதும், அல்லாஹ் ரசூலுக்கு பொதுவில் என்றும், சத்தியம் செய்தல் இப்படி பலவிதமாக முஸ்லிம்களிடம் உள்ளன.

👆🏻இந்த சத்தியம் செய்யும் விஷயமாக இஸ்லாம் என்ன சொல்கிறது? என்பதை குர்ஆன் ஹதீஸ் ஒளியில் காண்போம்.

    இன்ஷா அல்லாஹ்

       
          🗯தொடரும்...


🔃🔃🔃🔃🔃🔃🔃🔃🔃🔃🔃

🔮 இஸ்லாமிய மார்க்க செய்திகளை அழகிய முறையில் அறிய

♻ வாட்ஸ்அப்பில் எங்கள் செய்தியை பெற 👇

📱 0091- 9994675186

📱 0091- 9629167027

பேஸ்புக்கில் எம்மை தொடர 👇
https://m.facebook.com/Makkalmedia-1684365771847561/?ref=wizard

📢 ⓂAKKAL ⓂEDIA 📢

📮 பதிவு நாள்:  25 MAR 2016

Part of 👇
📡 ECHO DAWAH FOUNDATION 📡

No comments:

Post a Comment