Sunday 13 March 2016

✔இஸ்லாமும் நட்பும் பகுதி-1

📢  ⓂAKKAL ⓂEDIA 📢

💠பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்💠


✔இஸ்லாமும் நட்பும்

பகுதி-1

   ♻இஸ்லாமும் நட்பும்♻

♻இஸ்லாம் நட்பிற்கு அதிகம் முக்கியத்துவம் கொடுக்கின்றது
நண்பனை எவ்வாறு தேர்வு செய்ய வேண்டும்
அவனது
தேவைகளை பூர்த்தி செய்வதில் எத்தணை நன்மைகள்
உள்ளது அவன் மீது அன்பு வைப்பதினால் எவ்வளவு உயர்ந்த
அந்தஸ்து உள்ளது என்பதை நமக்கு தெளிவாக விளக்குகின்றது

📗அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள்கூறினார்கள்:
அல்லாஹ் மறுமை நாளில் எனக்காக நேசம் வைத்துக்
கொண்டவர்கள்எங்கே? என்னுடைய நிழலைத் தவிர
வேறு நிழல் இல்லாத இந்நாளில் நான்அவர்களுக்கு
எனது நிழலைத் தருகிறேன் என்றுக் கூறுவான்
                                        (அபூஹூரைரா(ரலி)முஸ்லிம் 4655)

📗அல்லாஹ் கூறுவதாக, அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள்
கூறினார்கள்:                                                                                                                                                     என்விஷயத்தில் ஒருவருக் கொரு வர் நேசித்துக்
கொள்பவர்களுக்கும், என் விஷயத்தில்அமர்பவர்களுக்கும்
என் விஷயத்தில் போட்டி போட்டுக் கொண்டு செலவு
செய்பவர்களுக்கும் எனது பிரியம் உறுதியாகி விட்டது.

அஹ்மத்(21114)

✅நண்பர்களை எவ்வாறு தேர்வு
செய்ய வேண்டும்✅

 ♻பொதுவாக நண்பர்களை தேர்வு செய்தல் என்பது

🔺பணத்திற்காகவும்

🔺பதவிக்காகவும்

🔺ஜாலிக்காகவும்

🔺பொழுது போக்கிர்காகவும்

♻இன்று பெரும்பான்மையான நம் சகோதரர்கள் மேலே குறிப்பிட்ட சில அம்சங்களின் அடிப்படையில் தான் நண்பர்களை அமைத்துக் கொள்கின்றனர்.


♻இந்த
நண்பர்கள் வீணாகவற்றை பேசுவதும், ஊர்
சுத்துவதும், திரையரங்குகளுக்குச் செல்வதும் போன்ற
தீயகாரியங்களில் தான் ஈடுபடுகின்றனர்.


♻ இந்த நண்பர்களை யாரும்
அல்லாஹ்வுடைய மார்க்கம்
மேலோங்குவதற்காக
உழைப்பது அரிதிலும் அரிதாகிவிட்டது.


♻அதிலும் எந்தவொரு நபர் தன்னை போல் இருக்கிறானோ அதாவது மார்க்க பற்று இல்லாமல் அவனிடம் சென்று தன்னை அறிமுகப்படுத்தி நட்பை ஏற்படுத்தி கொள்கின்றனர்

♻இப்படிபட்ட நண்பர்களை வைத்து இந்த துண்யாவில் எந்த நன்மையும் கிடைக்காது

அல்லாஹ்விற்காக நட்பை வைக்க வேண்டும்

♻ இஸ்லாத்தை
பரப்புவதற்காக அறிமுகமில்லாத பலரிடம் சென்று தன்னை
அறிமுகப்படுத்தி நட்பை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.

♻இறைவனுக்காக நட்பு வைத்தவர் களுக்கு ஏராளமான
சிறப்புகள் இருப்பதாக அல்லாஹ்வின் தூதர் (ஸல்)

அவர்கள் கூறினார்கள்.


📗அல்லாஹ்வின்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

என் விஷயத்தில் ஒருவருக்கொருவர்நேசித்துக்

கொள்பவர்களுக்கும் என் விஷயத்தில் அமர்பவர்களுக்கும்

என்விஷயத்தில் போட்டி போட்டுக் கொண்டு செலவு

செய்பவர்களுக்கும் எனது பிரியும்உறுதியாகிவிட்டது

என்று அல்லாஹ் கூறுகிறான்.

அறிவிப்பவர்: முஆத் (ரலி)

நூல்: அஹ்மத் (21114)

இன்னும் ஒரு நண்பர்களுக்கு உதாரணம்

♻அவர்களை பார்த்தால் அல்லாஹ்வுடைய ஞாபகம் வரவேண்டும்

♻ மறுமையின் சிந்தனை வரவேண்டும்

♻ மரணத்தை பற்றிய ஞாபகம் தோன்ற வேண்டும்

♻தொடரும்.....

🔃🔃🔃🔃🔃🔃🔃🔃🔃🔃🔃
🔮 இஸ்லாமிய மார்க்க செய்திகளை அழகிய முறையில் அறிய

♻ வாட்ஸ்அப்பில் எங்கள் செய்தியை பெற 👇

📱 0091- 9994675186

📱 0091- 9629167027

பேஸ்புக்கில் எம்மை தொடர 👇
https://m.facebook.com/Makkalmedia-1684365771847561/?ref=wizard

📢 ⓂAKKAL ⓂEDIA 📢
📝 பதிவு நாள்: 18 FEB 2016

Part of👇🏼
📡ECHO DAWAH FOUNDATION 📡

No comments:

Post a Comment