Sunday 13 March 2016

❇முஹம்மது நபியும் முன்னறிவிப்பும்❇ ⭕பகுதி-1

📢  ⓂAKKAL ⓂEDIA 📢

💠பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்💠

❇முஹம்மது நபியும் முன்னறிவிப்பும்❇

             ⭕பகுதி1⃣
🏮பிற மத வேதங்களில்
முஹம்மது நபி பற்றி முன் அறிவிப்புகள்👇🏻

🏮கிறிஸ்தவர்களின் வேதமான
(பழைய ஏற்பாடு)
பைபிளில்"முஹம்மது "
நபி (ஸல் )அவர்கள் பற்றிய முன்னறிவிப்புகள் நிறைய காணப்படுகின்றன ..

🏮இயேசுவுக்கு முன்னர் அனுப்பப்பட்ட தீர்க்தரிசிகளுடைய வேத நூல்களின் தொகுப்பாகக் கருதப்படும் ”பழைய ஏற்பாட்டிலும்” இயேசுவின் போதனைகள் மற்றும் அவரது வரலாற்றுத் தொகுப்பான ”புதிய ஏற்பாட்டிலும் இத்தகைய முன்னறிவிப்புகளை நாம் காண முடிகிறது.

 👉🏻அந்த முன்னறிவிப்பகளை, இஸ்லாமிய சமுதாயத்திற்கு எடுத்துக்காட்டி, கிறிஸ்தவர்கள் நபிகள் நாயகத்தை அல்லாஹ்வின் தூதராக ஒப்புக் கொள்வது பைபிளின் கட்டளை என்பதை உணர்த்தவே இந்த தொடர் பதிவை நாம் வெளியிடுகிறோம்.

 🏮காய்தல், உவத்தல் இன்றி கிறிஸ்தவர்கள் இந்த முன் அறிவிப்புகளை, தீர்க்க தரிசனங்களை சிந்திப்பார்களானால் அவர்கள் இந்த உண்மையை ஒப்புக் கொள்வார்கள் என்பதே நம் நம்பிக்கை அந்த நம்பிக்கை நிறைவேற அல்லாஹ்வை பிரார்த்திக்கிறோம்👍🏻

📖பழைய ஏற்பாட்டின் முன்னறிவிப்புகள்👇🏻

1.மோஸேயைப் போன்றவர் யார்❓

📖பைபிளில் பழைய ஏற்பாட்டில் 5வது ஆகாமம், உபாகமம் எனப்படும். மோஸே (மூஸா) எனும் தீர்க்கதரிசிக்கு அருளப்பட்டதாக கிறிஸ்தவர்கள் நம்புகின்ற இந்த ஆகமத்தில் இரண்டு முன்னறிவிப்புகள் காணப்படுகின்றன.

🔺ஒன்று மோசே, மக்களுக்குச் சொன்ன முன்னறிவிப்பு,

🔺மற்றொன்று கர்த்தர் மோசேயிடம் சொன்னது.

🏮ஏறக்குறைய ஒரே விதமாக அமைந்த இந்த இரண்டு முன்னறிவிப்புகளும் எதிர்காலத்தில் வரக்கூடிய ஒரு தீர்க்கதரிசியின் அடையாளத்தைக் கூறுகின்றன.

❇இஸ்ரவேல் அனைவரையும் மோசே அழைத்து அவர்கள் கடைப்பிடிக்க வேண்டியவைகளையும் அவர்கள் தவிர்க்க வேண்டியவைகளையும் விரிவாகக் கூறுகின்றார். வரக்கூடிய தீர்க்கதரிசியைப் பற்றியும் அதனிடையே பின்வருமாறு கூறுகிறார்.

👉🏻உன் தேவனாகிய கர்த்தர் என்னைப் போல் ஒரு தீர்க்கதரிசியை உனக்காக உன் நடுவே உன் சகோதரரிலிருந்து எழும்பப் பண்ணுவார். அவருக்குச் செவி கொடுப்பீர்களாக. (என்றார்).

📖உபகாமம் 18:15)

 🏮கர்த்தர் மோசேயிடம் இதே விஷயத்தைப் பின்வருமாறு கூறுகிறார்.

🏮அப்பொழுது கர்த்தர் என்னை நோக்கி, அவர்கள் சொன்னது சரியே உன்னைப் போல் ஒரு தீர்க்கதரிசியை நான் அவர்களுக்காக அவர்கள் சகோதரரிலிருந்து எழும்பப் பண்ணி என் வார்த்தைகளை அவர் வாயில் அருளுவேன். நான் அவருக்குக் கற்பிப்பதையெல்லாம் அவர்களுக்குச் சொல்வார்.

📖உபாகமம் 18:17,18)

👆🏻இங்கே முன்னறிவிக்கப்படுபவர் யார்❓
🏮மோசேவுக்குப் பின் அந்தச் சமுதாயத்திற்கு வழிகாட்டியாகவும், தலைவராகவும் திகழ்ந்த யோசுவாவையே இந்த முன்னறிவிப்பு அடையாளம் காட்டுகிறது என்று யூதர்கள் நம்புகின்றனர்.
❌இல்லை இது இயேசுவையே குறிக்கிறது என்று கிறிஸ்தவர்கள் நம்புகின்றனர்.

 👆🏻இந்த முன்னறிவிப்பில் பயன்படுத்தப்பட்டுள்ள வார்த்தைகள் ஒவ்வொன்றுக்கும் உரிய அழுத்தம் கொடுத்துச் சிந்தித்தால் இது யோசுவாவையும் குறிக்காது❌ இயேசுவையும் குறிக்காது ❌
என்பதை அறிந்து கொள்ளலாம்.


👆🏻இது யாரைக் குறித்த முன்னறிவிப்பு என்பதை அறிந்து கொள்வதற்கு முன் இது யோசுவாவையும்,இயேசுவையும் குறிக்காது என்பதை முதலில் அறிந்து கொள்வோம்.

🏮மோசே இதை யாரிடம் கூறினார்? இஸ்ரவேலர்டகளிடம் கூறினார். இஸ்ரவேலர்களில் ஒன்றிரண்டு நபர்களை அழைத்து இதைக் கூறவில்லை. மாறாக இஸ்ரவேலர் அனைவரையும் அழைத்து அவர் இவ்வாறு கூறியதாக உபாகமம் கூறுகிறது.

 🏮வரக்கூடியவர் இஸ்ரவேலர்களில் ஒருவராக இருந்தால் மோசே எப்படி கூறியிருக்க வேண்டும்? உங்களுக்காக உங்களிலிருந்து என்று தான் கூறியிருக்க வேண்டும். அவ்வாறு கூறாமல் உனக்காக என் சகோதரரிலிருந்து என்று மோசே கூறியதாக உபாகமம் கூறுகிறது. உங்களிலிருந்து அவர் தோன்றுவார் என்று மோசே கூறாமல் உங்கள் சகோதரரிலிருந்து தோன்றுவார் என்று கூறியிருப்பதால் அந்தத் தீர்க்கதரிசி இஸ்ரவேல் இனத்தில் தோன்ற மாட்டார் என்பது தெளிவாகத் தெரிகிறது.

 🏮மோசேயிடம் கர்த்தர் கூறிய வார்த்தையைக் கவனியுங்கள்! அந்த வார்த்தையும் இதே கருத்திலேயே அமைந்திருக்கிறது.

❇அவர்களுக்காக அதாவது இஸ்ரவேலர்களுக்காக அவர்களிலிருந்து – அதாவது இஸ்ரவேல் இனத்திலிருந்து” அவர் தோன்றுவார் எனக் கூறப்படவில்லை. மாறாக அவர்களின் அதாவது இஸ்ரவேலரின் – சகோதரரிலிருந்து – அதாவது இஸ்ரவேலரின் சகோதர இனத்திலிருந்து தான் அந்தத் தீர்க்கதரிசி தோன்றுவார் என்று கூறப்பட்டுள்ளது.


🏮மோசே மக்களிடம் செய்த முன்னறிவிப்பும், மக்களுக்கு முன்னறிவிப்புச் செய்யுமாறு கர்த்தர் இட்ட கட்டளையும் வரக்கூடியவர் இஸ்ரேல் இனத்தில் தோன்ற மாட்டார் என்பதை இரண்டாவது கருத்துக்கு இடமின்றி தெரிவித்து விடுகின்றது.

 👆🏻இது யோசுவாவைத் தான் குறிக்கிறது என்று யூதர்கள் கூறுகிறார்கள். ஆனால் யோசுவா இஸ்ரவேல் இனத்தைச் சேர்ந்தவர்.

 ❇அது போல் இது இயேசுவைக் குறித்த முன்னறிவிப்பு என்று கிறிஸ்தவர்கள் கூறுகின்றனர். ஆனால் இயேசுவும் இனத்தால் இஸ்ரவேலர் தான்.

 🏮எனவே இஸ்ரவேல் இனத்தைச் சேராத ஒருவரைப் பற்றிக் கூறும் வேத வரிகள் இஸ்ரவேல் இனத்தைச் சேர்ந்த இவ்விருவரையும் நிச்சயம் குறிக்க முடியாது.

 ❇அப்படியானால் இது யாரைத் தான் குறிப்பிடுகிறது❓

👆🏻இதை விரிவாக பைபிளின் துணையுடன் நாம் ஆராய்ந்து பார்ப்போம்👍🏻

இன்ஷா அல்லாஹ்

 தொடரும் ...

🔃🔃🔃🔃🔃🔃🔃🔃🔃🔃🔃
🔮 இஸ்லாமிய மார்க்க செய்திகளை அழகிய முறையில் அறிய

♻ வாட்ஸ்அப்பில் எங்கள் செய்தியை பெற 👇

📱 0091- 9994675186

📱 0091- 9629167027

பேஸ்புக்கில் எம்மை தொடர 👇
https://m.facebook.com/Makkalmedia-1684365771847561/?ref=wizard

📢 ⓂAKKAL ⓂEDIA 📢
📝 பதிவு நாள்: 22 FEB 2016

Part of👇🏼
📡ECHO DAWAH FOUNDATION 📡

No comments:

Post a Comment