Monday 30 March 2020

நேரத்தை வீணடிக்க வேண்டாம்

இக்கணம் திருந்தவில்லை என்றால் எப்போது திருந்துவோம்

சிந்தித்து செயல்படுவோம்

நவ நாகரீக உலகில் மூழ்கி திளைத்த நம்மை என் நாட்டமில்லாமல் துரும்பும் அசையாது என அவனது வல்லமையை பரை சாட்டியுள்ளான் ரப்புல் ஆலமின் எல்லாப் புகழும் இறைவனுக்கே.

அரசாங்கத்திற்கு ஒத்துழைத்து அவர்கள் பிறப்பித்துள்ள ஆணைகளை தவறாமல் பின்பற்றுவோம். ( தலைமைக்கு கட்டுப்படுதல் நபிவழி )

💠 திருக்குர்ஆனை ஓதி வாருங்கள் தமிழ் மொழி பெயர்ப்புகளை ஓதுங்கள் என்று அறிவுரை கூறியவர்களுக்கு மக்களிடமிருந்து கிடைத்த பதில் நேரமில்லை

💠 தொழில் செய்பவர்கள் என் தொழிலை கவனிக்கவே என்னால் முடியவில்லை,

💠 மாணவ கண்மணிகள் பள்ளி,கல்லூரிகளுக்கு செல்லவே நேரம் சரியாக உள்ளது ஐந்து வேளை தொழுகைகளை தொழுவதே சிரமமாக எண்ணி திரிந்தவர்கள் எண்ணிலடங்காதவர்கள்

💠 இறைவன் அனைத்தையும் தழைகீழாக ஆக்கியுள்ளான்.

💠 உலகத்தின் வல்லரசு நாடுகள் பட்டியலில் முதலிடம் வகித்தவர்களே இன்று நோய் தொற்றில் முதலிடம் பிடித்துள்ளார்கள்.

💠 உலக நாடுகள் அனைத்து வசதிகளும் இருந்தும் செய்வதறியாது திகைத்து உள்ளனர் மக்களை வீடுகளில் அடைப்பதை தவிர...

💠 இந்த தருணத்தையேனும் நம் மறு வாழ்க்கையின் முன்னேற்றத்திற்கு உபயோகபடுத்த நாம் நம்மை தயார்படுத்தி கொள்ளல் வேண்டும்.

💠 விடுமுறை நாட்களை தொலைக்காட்சியிலும்,இணையத்திலும் கழிப்பதை போன்று இந்நாட்களையும் வீண் ஆக்காமல் இருப்பதற்கு அதிக முயற்சிகள் செய்ய வேண்டும்.

💠 தொழுகைகளை குடும்பத்தோடு ஜமாத்தாக தொழுது வாருங்கள்

💠 தனியாக தொழுவதை விட ஜமாத்தாக தொழுவதே 27 மடங்கு நன்மை அதிகம்.

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: 'தனியாகத் தொழுவதை விட ஜமாஅத்தாகத் தொழுவது இருபத்தேழு மடங்கு சிறந்ததாகும்.

என அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார். (நூல்: புகாரி)

குறைந்தது ஒரு நாளைக்கு 10 பக்கங்களாவது திருக்குர்ஆனை அரபு மொழியில் ஓதி வாருங்கள்,

கண்டிப்பாக இது சிறமமானது அல்ல ஒவ்வொரு தொழுகைக்கு பிறகும் இரண்டு பக்கம் ஓதி வந்தால் இலகுவாக ஒரு நாளில் நம் இலக்கை அடையலாம்.

سَمِعْتُ عَبْدَ اللهِ بْنَ مَسْعُودٍ، يَقُولُ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: مَنْ قَرَأَ حَرْفًا مِنْ كِتَابِ اللهِ فَلَهُ بِهِ حَسَنَةٌ، وَالحَسَنَةُ بِعَشْرِ أَمْثَالِهَا، لاَ أَقُولُ الْم حَرْفٌ، وَلَكِنْ أَلِفٌ حَرْفٌ وَلاَمٌ حَرْفٌ وَمِيمٌ حَرْفٌ.) سنن الترمذي( *அல்லாஹ்வின் வேதத்திலிருந்து யாரேனும் ஓர் எழுத்தை ஓதினால் அவருக்கு  ஒரு நன்மை உண்டு. ஒரு நன்மை என்பது அது போன்ற பத்து மடங்காகும். ஆலிப் லாம் மீம் என்பதை ஒரு எழுத்து என்று கூற மாட்டேன். எனினும் அலிப் என்பது ஒரு எழுத்து லாம் என்பது ஒரு எழுத்து மீம் என்பது ஒரு எழுத்தாகும். மூன்றும் மூன்று எழுத்துக்களாகும். அம்மூன்றையும் ஒருவர் ஓதினால் ஒவ்வொன்ருக்கும் பத்து நன்மைகள் வீதம் முப்பது நன்மைகளை பெறுவார் என்று நபி(ஸல்) கூறினார்கள்.* அறிவிப்பவர்:அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் (ரலி) நூல்:

💠 குர்ஆன் தர்ஜுமாவையும் நாளுக்கு நாள் அரபு குர்ஆனுக்கு ஏற்ப ஓதி வாருங்கள் திருக்குர்ஆனின் முழு சுவையையும் அடையலாம்.

💠 ஹதீஸ் கிரந்தங்களையும் சக்திக்கேற்றார் போல் படித்து வாருங்கள் .இந்த பதிவோடு இணைக்கப்பட்டுள்ள புத்தகத்தை தரவிறக்கம் செய்து வைத்துகொள்ளுங்கள்.

💠 குறைந்த இவற்றையாவது கடைபிடித்து வாருங்கள் வல்ல இறைவன் நமக்கு அருள்புரிவானாக.

No comments:

Post a Comment