அவசியம் கடைப்பிடிப்போம்
இத்தாலி அமெரிக்கா போன்ற முன்னேறிய நாடுகளின் கவனக்குறைவால் மக்கள் பெருமளவுக்கு பாதிப்புக்குள்ளாகி இருக்கிறார்கள்
நமது அரசின் மீது ஆயிரம் கருத்து வேறுபாடுகள் இருக்கலாம்
இருந்தாலும் கொரோனா வைரஸ் COVID-19 சம்மந்தமாக நமது
அரசு மேற்க்கொண்ட
ஆரம்பகட்ட நடவடிக்கைகள் திருப்தி அளிக்காவிட்டாலும் இப்போது முழு கவனத்துடன் தீர்வை நோக்கி செயல்படுகிறது
அதனால் அரசின்
அறிவுரைகளை கேட்டு
அதன்படி நடந்தால் மட்டுமே
அல்லாஹ்வின் உதவியால் மீள முடியும்
144 தடை உத்தரவுக்கு
முழுமையாக மக்கள் இன்னும் கட்டுப்படவில்லை
வந்தால் பார்த்துக்கொள்ளலாம்
என்கிற மனநிலை
பெரும்பாலான இளைஞர்களிடம் இருக்கிறது
இதுவரையில் பெரிதும் பாதிக்கப்பட்ட நாடுகளின்
சர்வேயின் முடிவில்
இறப்பு சதவிகிதம்
பெண்களைவிட ஆண்கள் அதிகமாக இருக்கிறார்கள்
இதற்கு காரணம்
நமது நாட்டைப் போல
அங்கும் ஆண்கள் முழுமையான ஒத்துழைப்பு கொடுக்காமல் இருந்திருக்கலாம்
என்பதை கவனத்தில் கொண்டு
இனிமேலாவது அரசு நடவடிக்கைகள் அனைத்திற்கும்
இளைஞர்கள் முழுமையாக ஒத்துழைக்க
வேண்டும்
ஒரு கார்ட்டூன் சமூகவலைத்தளங்களில் வந்துகொண்டிருக்கிறது
வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் தீக்குச்சிகள்
நெருப்பு வைக்கப்பட்டு சுற்றி வரும்போது
ஒரு குச்சி மட்டும் விலகி விடுகிறது
அதோடு நெருப்பு தொடர்பு கிடைக்காமல்
அணைந்து விடுகிறது
வைரஸ் பாதிக்காமல் இருக்க
தனித்திருத்தல் என்பது இதேபோன்றுதான்
தொடர்ந்து தாக்குவதற்கு
தொடர்பு கிடைக்காமல் தடுத்துக்கொள்ளலாம்
அதனால் தனிமைப் படுத்திக் கொள்வதில் கவனம் செலுத்த வேண்டும்
இன்றளவில் மருந்துகள் கண்டுபிடிக்கப்படாத காரணத்தினால்
தனித்திருப்பது ஒன்றே சிறந்த வழியாக இருக்கிறது
நமது நாட்டைப் பொருத்தவரை
வாரக்கணக்கில் வருவாய் நின்று போனால்
நெருக்கடியை சந்திக்கும் குடும்பங்கள்
நிறைய இருக்கிறார்கள்
அவர்களுக்கு அரசு உதவி கிடைக்கலாம்
அதை உடனடியாக எதிர்பார்க்க முடியாது
அதனால் அருகில் இருக்கும் வாய்ப்புள்ளவர்கள்
அவர்களுக்கு வலியச் சென்று
உதவிட வேண்டும்
சமைக்கும்போது அடுத்த வீட்டின் சூழ்நிலையை அறிந்து
கூடுதலாக சமைக்க சொன்ன மார்க்கத்தில் நாம் இருக்கிறோம்
இந்த இக்கட்டான
நேரத்தில் அவர்களுக்கு நாம் செய்யும் உதவிகளால் அல்லாஹ் நாடினால் நமது நெருக்கடியிலிருந்து நம்மை காப்பதற்கு காரணமாக அமையலாம்
நெருக்கடியான சூழ்நிலையில்
சில தேவைகளை நிறைவேற்றிக்கொள்ள
வழி தெரியாமல் சிலர் தடுமாறலாம்
அதற்கான சூழ்நிலையை ஏற்படுத்திக் கொடுப்பதும்
பெரிய நன்மைக்குரிய செயலாகும்
உதாரணமாக தூரத்தில் இருக்கும் மருத்துவமனைகளுக்கு செல்ல காவல்துறை அதிகாரியின் அனுமதி பெற்றுக்கொடுப்பது
சொந்த ஊருக்கு செல்வதற்கு அனுமதி வாங்க தெரியாமல் திணறி கொண்டிருப்பவர்களுக்கு
அதற்கான வழியைக் காட்டுவது
கிராமப்புறங்களில் உள்ளவர்களுக்கு
தொடர்ந்து எடுத்துக் கொள்ளும்
மருந்துகள்
வெளியூரில் போய் வாங்க வேண்டி இருக்கும்
அதுபோன்றவர்கள் யாரென தெரிந்து
அவர்களிடம் மருந்துச் சீட்டுகளையும்
பணத்தையும் பெற்றுக் கொண்டு
காவல் நிலையத்திற்கு சென்று
மருந்து வாங்க டவுனுக்கு செல்வதற்கு அனுமதி வாங்கி
எல்லோருக்கும் தேவையான மருந்துகளை வாங்கி கொண்டு வந்து கொடுப்பது
இது போன்ற இன்னும் பல தேவைகள் இருக்கலாம்
விபரமான இளைஞர்கள் இதுபோன்ற செயல்களில் ஈடுபடலாம்
அதேநேரம் தங்களையும் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்
No comments:
Post a Comment