Monday 4 November 2019

இஸ்லாம் என்றால் என்ன


அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

இஸ்லாம் என்றால் என்ன? 

இஸ்லாம் என்பதின் பொருள் இறைவனுக்கு கட்டுப்படுதல்.கீழ்படிதல்,
என்பதாகும்

அதன் இன்னொரு பொருள் அமைதி,சாந்தி
என்பதாகும்.

அதாவது இந்த உலகத்தை  படைத்து பராமரித்து,கண்கானித்துவரும் இறைவன் கூறும் கட்டளை&விலக்கல்களுக்குக் கீழ்படிந்து நடப்பது

மேலும் தனிநபர் வாழ்விலும் அதன்மூலம் சமூக வாழ்விலும் கட்டுப்பாடும்(discipline) நல்லொழுக்கமும் உண்டாகிறது.

அதன்மூலம் ஏற்படும் அமைதிக்குப் பெயரே இஸ்லாம் எனலாம்.

அவ்வாறு பேணுதலோடு வாழ்வோருக்கு இம்மையிலும் மறுமையிலும் அமைதி தொடர்கிறது என்பதில் துளிஅளவும் சந்தேகம் இல்லை

அதாவது நிரந்தர இன்பங்கள் நிறைந்த சொர்க்கம் அவர்களுக்குப் பரிசாக வழங்கப்படுகிறது என்பது இந்த இறைமார்க்கம் முன்வைக்கும் தத்துவமாகும்

நிச்சயமாக (தீனுல்) இஸ்லாம் தான் அல்லாஹ்விடத்தில் (ஒப்புக்கொள்ளப்பட்ட) மார்க்கமாகும்; வேதம் கொடுக்கப்பட்டவர்கள் (இதுதான் உண்மையான மார்க்கம் என்னும்) அறிவு அவர்களுக்குக் கிடைத்த பின்னரும் தம்மிடையேயுள்ள பொறாமையின் காரணமாக (இதற்கு) மாறுபட்டனர்;  எவர் அல்லாஹ்வின் வசனங்களை நிராகரித்தார்களோ, நிச்சயமாக அல்லாஹ் (அவர்களுடைய) கணக்கைத் துரிதமாக முடிப்பான்

(அல்குர்ஆன் : 3:19)

இன்னும் இஸ்லாம் அல்லாத (வேறு) மார்க்கத்தை எவரேனும் விரும்பினால் (அது) ஒருபோதும் அவரிடமிருந்து ஒப்புக் கொள்ளப்பட மாட்டாது; மேலும் அ(த்தகைய)வர் மறுமை நாளில் நஷ்டமடைந்தோரில் தான் இருப்பார்.

(அல்குர்ஆன் : 3:85)



ⓂAKKAL ⓂEDIA

No comments:

Post a Comment