Thursday 20 September 2018

அல்லாஹ்வை நாம் நேசிக்கிறோமா _1

🧠 *அல்லாஹ்வை நாம் நேசிக்கிறோமா❓*🧠

*ⓂAKKAL ⓂEDIA*

👉🏻 *இந்த உலகத்தில் வாழும் போது ஒவ்வொரு முஃமினுடைய உள்ளமும் மூன்று விதமாக அல்லாஹ்வைப் பற்றி நினைக்கிறது*

1⃣அவனது உள்ளம் அல்லாஹ்வைப் பற்றிய அச்சத்தை உணருவது

2⃣அல்லாஹ் தனக்கு சொர்க்கத்தைத் தர வேண்டும் என்று இறைவனின் கருணையை எதிர்பார்ப்பது இன்னொரு நிலை.

3⃣அல்லாஹ்வை நேசிப்பது மற்றொரு நிலை.

👆 *இந்த மூன்று நிலைகளில் நாம் இறந்து சொர்க்கத்தை அடைந்து விட்டால் அல்லாஹ்வை அஞ்சுவது மற்றும் அவனது சொர்க்கத்தை எதிர்பார்ப்பது ஆகிய இரு நிலைகள் நமது உள்ளத்தை விட்டு அகன்று விடும்.*

🗣 சொர்க்கத்தை அடைந்த பின்னர்சொர்க்கத்தை அடைய வேண்டும் என்ற ஆசையும் பூர்த்தியாகி விடுகின்றது.

👉🏻 *ஆனால் இந்த உலகத்தில் வாழும் போதும் சரி மறு உலகத்தில் சொர்க்கத்திற்குச் சென்ற பிறகும் சரி எப்போதும் நம் உள்ளத்தை விட்டு நீங்காமல் என்றும் நிலைத்திருக்கக் கூடியது அல்லாஹ்வின் நேசம் மட்டும் தான்.*

🗣தன்னை முஸ்லிம் என்று சொல்லிக் கொள்பவர்களில் ஏராளமானோர் அல்லாஹ்வை நேசிப்பதன் அவசியத்தை உணராதவர்களாகத் தான் இருக்கிறார்கள்.

🗣 எனவே தான் *தன், தாய்,தந்தை, நண்பர்கள், இன்ன பிற உறவினர்களை விரும்பும் அளவு கூட அல்லாஹ்வை  நேசிப்பதில்லை.*

🤔தொழுகைக்கு வருபவர்களில் உண்மையில் அல்லாஹ்வின் மீது உள்ள நேசத்தால் தொழக்கூடியவர்கள் எத்தனை பேர் என்பதை நாம் சிந்திக்க கடைமைப் பட்டுள்ளோம்.

💯அல்லாஹ்வை விரும்பியதால் மனப்பூர்வமாக இஸ்லாத்தை ஏற்றுள்ளவர்கள் எத்தனை பேர் இந்த நேசத்தை நம் மனம் சுவைக்காத காரணத்தினால் தான் மக்களுக்கு இஸ்லாமிய மார்க்கம் சுமையாகத் தெரிகிறது.

🗣 *இறைவனை வழிபடுவது மலையாகத் தெரிகிறது.* அவனுடைய நேசத்திற்கு ஒரு பெரும் பகுதியை நம் உள்ளத்தில் ஒதுக்கியிருந்தால் தொழுவதே நமக்கு இன்பமாக மாறியிருக்கும்.

🗣நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்வை அதிகம் நேசித்தக் காரணத்தினால் தொழுவது அவர்களுக்கு இன்பத்தைத் தரக் கூடியதாக இருந்தது.

📖 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: *எனது கண் குளிர்ச்சி தொழுகையில் வைக்கப்பட்டுள்ளது.*
நூல்: நஸயீ (3879)

🎙 *அல்லாஹ்வின் நேசம் ஒருவரை நல்ல காரியங்களைச் செய்யத் தூண்டும்*

📖 *அவனை நேசித்ததற்காக ஏழைக்கும், அனாதைக்கும், சிறைப்பட்டவருக்கும் உணவளிப்பார்கள்.*
அல்குர்ஆன் (76:8)

🗣 *அல்லாஹ்வின் மீது வைக்க வேண்டிய அளவு நேசத்தை உள்ளத்தில் வைக்காமல் அவ்வலியாக்கள் மற்றும் படைப்புகளின் மீது விட்டுவிட்டவர்கள்  வழி தவறியவர்களாக தான் இருக்கிறார்கள்*

📖 *அல்லாஹ் அல்லாதவர்களை அவனுக்கு இணையாக வைத்துக் கொண்டு, அவர்களை அல்லாஹ்வை நேசிப்பதற்கொப்ப நேசிப்போரும் மனிதர்களில் இருக்கிறார்கள்; ஆனால் நம்பிக்கை கொண்டவர்கள் அல்லாஹ்வை நேசிப்பதில் உறுதியான நிலையுள்ளவர்கள்.*
(அல்குர்ஆன் : 2:165)

✍🏼 நயவஞ்சகன் தான் அல்லாஹ்வை நேசிக்க மாட்டான் என்று நபி (ஸல்) அவர்கள் காலத்தில் நபித்தோழர்கள் விளங்கியிருந்தார்கள்.

📖 ஒருவரை ஏசும் போது அல்லாஹ்வை விரும்பாத நயவஞ்சகன் இவன் என்று நபித் தோழர்கள் கூறியிருக்கிறார்கள். நூல்: புகாரி (425)

🗣 *நாக்கு ருசியை உணர்வது போல நல்ல, கெட்ட விஷயங்களை சுவைக்கும் பண்பு உள்ளத்திற்கும் உண்டு.*

👆 இக்குணம் மனிதனின் உள்ளத்திற்கு வந்து விட்டால் அவன் உள்ளம் நல்ல கருத்துக்களை உள்ளே வைத்துக் கொண்டு கெட்டக் கருத்துக்களை வெளியே அனுப்பி விடுகிறது.

🗣 *ஆனால் நம் உள்ளம் இந்த பாக்கியத்தை அடைய வேண்டுமென்றால் மூன்று விஷயங்கள் நம்மிடத்தில் வர வேண்டும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.*👇🏻

*அவை அடுத்த தொடரில் இன்ஷா அல்லாஹ்*

〰⚜〰⚜〰⚜〰⚜
🔮 *மார்க்கத்தை தெளிவான முறையிலும் ஆதாரத்துடனும் கற்றுக்கொள்ள  #_மக்கள்_மீடியா_Facebook_பக்கத்தை_like_செய்து_கொள்ளுங்கள்​*

*https://m.facebook.com/Makkalmedia-1684365771847561/?ref=wizard*

*குழுமத்தில் இணைய விரும்பும் சகோதரர்கள் கீழ் உள்ள link மூலமாக இணைந்து கொள்ளவும்*👇🏻👇🏻

https://chat.whatsapp.com/8SnREh4Lh0CFBJo9xjL8O6

*ⓂAKKAL ⓂEDIA*
Part of....👇🏽👇🏽
*ECHO DAWA FOUNDATION*

No comments:

Post a Comment