Sunday, 10 July 2016

நபி(ஸல்) வாழ்க்கை வரலாறு​ ​பகுதி-54🔰

📢  ⓂAKKAL ⓂEDIA 📢

💠பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்💠

☮ ​முஹம்மது நபி(ஸல்) வாழ்க்கை வரலாறு​

         🕋 ​பகுதி-54🔰

🔶அடுத்து ஸமவ்அல் இப்னு ஆதியா பற்றிய சம்பவமாவது: ஸமவ்அலிடம் இம்ரவுல் கைஸ் சில கவச ஆடைகளை அமானிதமாகக் கொடுத்திருந்தார்.

💠 ‘ஹாஸ்’ என்ற கஸ்ஸானிய மன்னன் அதனை அபகரிக்க நாடினான்.

💠ஸமவ்அல் தீமாவிலுள்ள தனது கோட்டையில் தஞ்சம் புகுந்தான்.

💠அவருடைய பிள்ளைகளில் ஒருவர் கோட்டைக்கு வெளியில் மாட்டிக்கொண்டார்.

💠 அவரை மன்னன் ஹாஸ் பணயமாகப் பிடித்துக்கொண்டு கவச ஆடைகளை கொடுக்காவிட்டால் பிள்ளையைக் கொன்று விடுவேன் என மிரட்டினான்.

💠ஸமவ்அல் கொடுக்க மறுத்து தன் கண்ணெதிரே தன் பிள்ளை கொல்லப்படுவதையும் சகித்துக்கொண்டார்.

🔶3) சுயகௌரவம் மற்றும் அநீதத்தை சகித்துக் கொள்ளாத் தன்மை:

💠இப்பண்புகள் அவர்களிடம் கட்டுக்கடங்கா வீரத்தையும் அதிரடி ரோஷத்தையும் வேகமாக உணர்ச்சி வசப்படுவதையும் தூண்டின.

💠எவருடைய சொல்லாவது தனக்கு கௌரவக் குறைவை அல்லது இழிவை ஏற்படுத்துகிறது என அறிந்தால் அவர்களுக்கு எதிராகக் கிளர்ந்தெழுவார்கள்.

💠 தங்களது உயிரைப் பற்றி சிறிதும் இலட்சியம் செய்யாமல் வாளாலும், அம்புகளாலும் அதற்கு பதிலடி கொடுப்பார்கள்.

🔶4) செயலில் உறுதியுடன் இருத்தல்:

💠 அம்மக்கள் ஒரு செயல் தங்களது பெருமைக்கும் உயர்வுக்கும் காரணமாக அமையும் என நம்பினால் அதை செயல்படுத்துவதிலிருந்து அவர்களை எந்தவொரு சக்தியும் தடுத்துவிட முடியாது.

💠 தங்களது உயிரைக் கொடுத்தாவது அதனை அவர்கள் செய்து முடிப்பார்கள்.


✳ ​தொட.....ரும்​....

(உதவி- அல் ரஹீக் அல் மக்தூம் கிதாப்)

🍃🍂🍃🍂🍃🍂🍃🍂🍃

🔮 இஸ்லாமிய மார்க்க செய்திகளை அழகிய முறையில் அறிய

♻ வாட்ஸ்அப்பில் எங்கள் செய்தியை பெற 👇

📲+919087971872

📲 +919994675186

​பேஸ்புக்கில் எம்மை தொடர​ 👇

https://m.facebook.com/Makkalmedia-1684365771847561/?ref=wizard

📮 பதிவு நாள்: 11 JULY 2016

📢 ⓂAKKAL ⓂEDIA 📢

Part of 👇

📡 ECHO DAWAH FOUNDATION 📡

No comments:

Post a Comment