Sunday, 10 July 2016

நபி(ஸல்) வாழ்க்கை வரலாறு​ ​பகுதி-47

📢  ⓂAKKAL ⓂEDIA 📢

💠பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்💠

☮ ​முஹம்மது நபி(ஸல்) வாழ்க்கை வரலாறு​

         🕋 ​பகுதி-47🔰

🔶கிறிஸ்துவ மதம் சிலைவணங்கும் மதமாக மாறியது.

🔶அல்லாஹ்வுக்கும் மனிதர்களுக்குமிடையே புதுமையானதொரு கலப்படத்தை கிறிஸ்துவ மதம் போதித்தது.

🔶அந்த மதத்தைப் பின்பற்றிய அரபியிடம் அது எவ்வித தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை.

🔶 ஏனெனில், அதன் போதனைகள் வாழ்க்கை நெறிக்கு ஏற்றதாக இருக்கவில்லை.

🔶 அம்மக்களுக்கு அதிலிருந்து விலகுவதும் சிரமமாக இருந்தது.

🔶அரபியர்களின் ஏனைய மதக்கோட்பாடுகள் சிலைவணங்கிகளின் மதக்கோட்பாடுகளுக்கு ஒத்திருந்தன.

🔶அவர்களின் இதயங்கள், கொள்கைகள், மூடநம்பிக்கைகள், பழக்கவழக்கங்கள் கூட ஒன்றுபட்டிருந்தன.

🔶 இதுவரை அரபிய தீபகற்பத்தில் நிலவிய அரசியல் மற்றும் மதக் கோட்பாடுகளை அறிந்தோம்.

🔶இப்போது அதன் சமூக அமைப்பு, பொருளாதாரம் மற்றும் பண்பாடுகளைப் பற்றி சுருக்கமாகக் காண்போம்.

🎾சமுதாய அமைப்பு

🔶அரபியர்களில் பலதரப்பட்ட வகுப்பினர் இருந்தனர். அவர்களில் உயர்மட்ட குடும்பங்களில் ஆண்கள் தனது குடும்பப் பெண்களுடன் உயர்வான நடத்தையைக் கொண்டிருந்தார்கள்.

🔶 அக்குடும்பங்களில் பெண்கள் சுய அதிகாரத்துடனும் கௌரவத்துடனும்

🔶. பெண்களுக்கு மிகுந்த பாதுகாப்பும் மரியாதையும் அளிக்கப்பட்டது. பெண்களின் கண்ணியத்தைப் பாதுகாக்க வாளேந்தி போர் செய்யவும் அவர்கள் துணிந்திருந்தனர்.

🔶ஓர் ஆண் தனது கொடைத்தன்மை, வீரம், வலிமையைக் கூறி தன்னைப் புகழ்ந்துக்கொள்ள நினைக்கும்போது தனது கவிதைகளில் பெண்ணை விளித்து பேசுவது போல பேசுவார்.

🔶சில சந்தர்ப்பங்களில் பெண் விரும்பினால் தங்களது குலத்தாரிடையே காணப்படும் பிளவுகளை சரிசெய்து அமைதி நிலவச் செய்திடுவாள்.

🔶அவள் நினைத்தால் மக்களிடையே போர் நெருப்பை மூட்டிவிடுவாள்.

🔶 எனினும், எவ்விதக் கருத்து வேறுபாடுமின்றி ஆண் குடும்பத் தலைவனாக விளங்கினான்.

🔶அவனே முடிவெடுக்கும் அதிகாரத்தைப் பெற்றிருந்தான்.

🔶 அவர்களிடையே ஆண், பெண் தொடர்பு என்பது அப்பெண்களுடைய காப்பாளர்களின் அனுமதி பெற்று திருமணத்தின் மூலமே ஏற்படுத்தப்பட்டது.

🔶 தங்கள் குடும்ப ஆண்களை மீறி செயல்பட, பெண்கள் அதிகாரமற்றவர்களாக இருந்தார்கள்.

✳ ​தொட.....ரும்​....

(உதவி- அல் ரஹீக் அல் மக்தூம் கிதாப்)

🍃🍂🍃🍂🍃🍂🍃🍂🍃

🔮 இஸ்லாமிய மார்க்க செய்திகளை அழகிய முறையில் அறிய

♻ வாட்ஸ்அப்பில் எங்கள் செய்தியை பெற 👇

📲+919087971872

📲 +919994675186

​பேஸ்புக்கில் எம்மை தொடர​ 👇

https://m.facebook.com/Makkalmedia-1684365771847561/?ref=wizard

📮 பதிவு நாள்: 29 JUNE 2016

📢 ⓂAKKAL ⓂEDIA 📢

Part of 👇

📡 ECHO DAWAH FOUNDATION 📡

No comments:

Post a Comment