Sunday 11 September 2016

இஸ்லாம் உயர் மார்க்கம்-2

✅ *இஸ்லாமிய மார்க்கம் உயர்ந்த மார்க்கம்​*✅

📢  ⓂAKKAL ⓂEDIA 📢

💠பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்💠

         _பாகம்-------2_


✅ *ஓர் முஸ்லிம் முழுமையாக இறை கட்டளைக்கு அடிபணிவார்*

✅உண்மை முஸ்லிம் தனது அனைத்து சந்தர்ப்பங்களிலும் அல்லாஹ்வுக்கு முற்றிலும் வழிப்பட்டு, அவனைப் பணிந்து அஞ்சி நடக்க வேண்டும்.

✅ தனது விருப்பத்திற்கு மாறாக இருப்பினும் அவர் அல்லாஹ்வின் கட்டளைக்கு முற்றிலும் அடிபணிந்து, எந்நிலையிலும் அல்லாஹ்வின் வரம்புகளை மீறமாட்டார்.

✅ மேலும் அவரது விருப்பத்திற்கு மாற்றமாக இருந்தாலும் அல்லாஹ்வின் வழிகாட்டுதலையே ஏற்பார்.

✅ *ஓர் உன்மை முஸ்லிம் அல்லாஹ் & அவனது தூதரின் வழிகாட்டுதலிலுள்ள சிறிய, பெரிய ஒவ்வொரு விஷயத்தையும் எந்தவித பாகுபாடுமின்றி பின்பற்றுவார்.*

✅நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

✅“நான் கொண்டு வந்ததற்கேற்ப *தனது மனோ இச்சையை மாற்றிக் கொள்ளாதவரை உங்களில் ஒருவரும் விசுவாசியாக மாட்டார்.*”

 *(ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)*

✅ஆனால் உம் இறைவன் மீதும் சத்தியமாக, அவர்கள் தங்களுக்குள் ஏற்பட்ட சச்சரவில் உம்மை நீதிபதியாக அங்கீகரித்து நீர் செய்யும் தீர்ப்பைத் தங்கள் மனதில் எத்தகைய அதிருப்தியுமின்றி அங்கீகரித்து முற்றிலும் வழிப்படாத வரையில் அவர்கள் உண்மை விசுவாசிகளாக மாட்டார்கள்.

 (அல்குர்அன் 4:65)

✅ஈமான் என்பது அல்லாஹ் மற்றும் அவனது தூதரின் கட்டளைகளை முழுமையாக ஏற்று பூரணமாக அடிபணிவதாகும்.

✅இந்த இரண்டுமின்றி ஈமானும் இல்லை, இஸ்லாமும் இல்லை. உண்மை முஸ்லிமின் வாழ்வில் அல்லாஹ்வின் நேர்வழியைப் புறக்கணிப்பதும், அவனது தூதருக்கு மாறு செய்வதும் இருக்க முடியாது.

✅இது தன்மைகள்  முஸ்லிமிடமும், அவருக்குக் கட்டுப்பட்ட அவரது குடும்பத்தினர் வாழ்விலும் காணப்படும் சிறப்புத் தன்மையாகும்.

*இஸ்லாம் இன்னும் பல விசயங்களை கூறுகிறது தெரியுமா????????*

        ✅ *தொட....ரும்*


🔮🔮🔮🔮🔮🔮🔮🔮🔮🔮

🔮 இஸ்லாமிய மார்க்க செய்திகளை அழகிய முறையில் அறிய

♻ *வாட்ஸ்அப்பில் எங்கள் செய்தியை பெற* 👇

📲+919087971872

📱+919629167027

📲 +919994675186

*பேஸ்புக்கில் எம்மை தொடர* 👇

https://m.facebook.com/Makkalmedia-1684365771847561/?ref=wizard

📮 பதிவு நாள்: 9: SEPTEMBER 2016

Part of 👇
📡 *ECHO DAWAH FOUNDATION* 📡

No comments:

Post a Comment