Sunday 11 September 2016

கடன் வாங்கி குர்பானி கொடுக்கலாமா?​*🐃

🐏 *கடன் வாங்கி குர்பானி கொடுக்கலாமா?​*🐃


📢  ⓂAKKAL ⓂEDIA 📢

💠பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்💠


✅ *இஸ்லாமிய மார்க்கம் இலேசானது படைத்தவனுக்கு தெரியும் எனது அடியான் எந்தஅளவு சமாலிக்க முடியும் என்று*

✅ நாம் இஸ்லாமிய சட்டதிட்டங்களை உற்று நோக்கினால் தெரியும் இந்த சத்திய மார்க்கம் எவ்வளவு எளிதாக உள்ளது என்று.

🐏 ஆனால் சிலர் கடன் வாங்கியாவது குர்பானி கொடுக்க வேண்டும் என்று நினைக்கின்றார்கள்.

🐏 இதை நிறைவேற்றுவதற்கு மிகவும் சிரமப்படுகிறார்கள்

❌கடன் வாங்கியாவது குர்பானி கொடுக்க வேண்டும் என்ற கருத்தில் சில ஹதீஸ்கள் வருவதால் இவ்வாறு செய்கிறார்கள்.

❌உண்மையில் இது தொடர்பாக வரும் செய்திகள் *மிகவும் பலவீனமானதாகும்*

❌ *ஒருவர் கடனாளியாக இருந்தால் குர்பானி கொடுப்பது அவர் மீது கட்டாயம் ஆகாது.*❌

 ✅கடனாளியாக ஒருவர் இருந்தால் அவர் முதலில்  கடனையே நிறைவேற்ற வேண்டும் என மார்க்கம் நமக்கு பல வகையில் கற்று தருகிறது.

⁉ ஏனென்றால் இஸ்லாத்தின் தூண்களாக விளங்கும் *ஜகாத் ஹஜ் போன்ற கடமைகள் கூட நம் சக்திக்கு உட்பட்டால் தான் கடமையாகும்.* மிகவும் வலியுறுத்திச் சொல்லப்பட்ட இந்தக் கடமைகளை கடன் வாங்கி நிறைவேற்ற வேண்டும் என்று மார்க்கம் பணிக்கவில்லை.

✅நபி (ஸல்) அவர்கள் தடுத்த காரியங்களை முழுமையாக தவிர்த்துக் கொள்ள வேண்டும்.

✅ அவர்கள் கட்டளையிட்டால் அதை நம்மால் முடிந்த அளவு நிறைவேற்ற வேண்டுமே தவிர சிரமப்பட்டு நிறைவேற்ற வேண்டிய அவசியமில்லை.

✅ *இவ்வாறு தான் நமது  மார்க்கம் நமக்கு உபதேசிக்கிறது.*

✅நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள ஒன்றைச் செய்ய வேண்டாமென உங்களுக்கு நான் தடை விதித்தால் அதிலிருந்து நீங்கள் தவிர்த்து கொள்ளுங்கள்.

✅ஒன்றைச் செய்யுமாறு உங்களுக்கு நான் கட்டளையிட்டால் அதை உங்களால் முடிந்த அளவிற்குச் செய்யுங்கள்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)

நூல் : புகாரி (7288)

✅வசதியில்லாதவர் சிரமப்பட்டு கொடுக்க வேண்டிய அவசியமில்லை. ஏனெனில் எந்த ஒருவரையும் அவர் சக்திக்கு மீறி அல்லாஹ் சிரமப்படுத்தமாட்டான்.

✅ *எவரையும் அவரது சக்திக்குட்பட்டே தவிர அல்லாஹ் சிரமப்படுத்த மாட்டான்.*

(அல்குர்ஆன் 2 : 286)

✅அல்லாஹ்வின்  பாதையில் உயிர் நீத்த தியாகியானாலும் கடனுடன் மரணித்தால் அல்லாஹ் அவரை மன்னிப்பதில்லை. எனவே முதலில் கடனை நிறைவேற்றும் கடமை அவருக்கு உள்ளது.

✅ *கடனைத் தவிர அனைத்து பாவமும் அல்லாஹ்வின் பாதையில் மரணித்தவருக்காக மன்னிக்கப்படுகிறது என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.*

அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் அம்ர் பின் அல்ஆஸ் (ரலி)

நூல் : முஸ்லிம் (3498)

✅ ஆக சகோதரர்களே நம்மிடம் குர்பானி கொடுக்க வசதி இருந்தால் கொடுப்போம்.

👍🏼 *இல்லையென்றால்  வல்லரஹ்மானிடம் பிராத்திப்போம்*👍🏼

🔮🔮🔮🔮🔮🔮🔮🔮🔮🔮

🔮 இஸ்லாமிய மார்க்க செய்திகளை அழகிய முறையில் அறிய

♻ *வாட்ஸ்அப்பில் எங்கள் செய்தியை பெற* 👇

📲+919087971872

📱+919629167027

📲 +919994675186

*பேஸ்புக்கில் எம்மை தொடர* 👇

https://m.facebook.com/Makkalmedia-1684365771847561/?ref=wizard

📮 பதிவு நாள்:31 AUGUST 2016

Part of 👇
📡 *ECHO DAWAH FOUNDATION* 📡

No comments:

Post a Comment