Sunday, 11 September 2016

வெள்ளிக்கிழமை

*இன்று வெள்ளிக்கிழமை *

📢  ⓂAKKAL ⓂEDIA 📢

💠பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்💠

⚡பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹிம்⚡


✅ *இன்று சில நபிமொழிகள்*✅

*நாட்களிலே சிறந்த நாள்*

 ✅நபி (ஸல்)அவர்கள் கூறினார்கள்: “சூரியன் உதிக்கக்கூடிய நாளிலே சிறந்த நாள் வெள்ளிக்கிழமை நாளாகும்” (ஆதாரம்: முஸ்லிம்)


*பிரார்த்தனை ஏற்றுக்கொள்ளப்படக்கூடிய ஒரு நேரம் உள்ள நாள்*

✅நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:“வெள்ளிக்கிழமையில் ஒரு நேரம் இருக்கின்றது; அதில் எவரொருவர் இறைவனை தொழுது அவனிடம் பிரார்த்திக்கின்றாரோ நிச்சயமாக அல்லாஹ் அவனுடைய பிரார்த்தனையை ஏற்றுக் கொள்வான் என்று கூறிவிட்டு, அது செற்பமான நேரம் என்று தனது கையினால் சுட்டிக்காட்டினார்கள்.” (ஆதாரம்: புகாரி, முஸ்லிம்)

*மறுமை நாள்  நிகழக்கூடிய நாள்*

✅ நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “வெள்ளிக்கிழமை நாளிலே மறுமை நிகழும்” (ஆதாரம்: முஸ்லிம்

*பாவங்கள் மன்னிக்கப்படும் நாள்: நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்*

✅ “எவரொருவர் வெள்ளிக்கிழமை தினத்தில் குழித்து சுத்தம் செய்துகொண்டு, தலையில் எண்ணை தெய்த்து,வாசனை திரவியங்களை தடவிக்கொண்டு பின்னர் பிரரை கடந்து செல்லாமல்  பள்ளியினுல் நுழைந்து தனக்கு கடமையான தொழுகையை தொழுகின்றாரோ அவரது  இரண்டு வெள்ளிக்கிழமைகளுக்கும் இடைப்பட்ட பாவங்கள் மன்னிக்கப்படும்” (ஆதாரம்:புகாரி)

*ஜும்-ஆவுக்கு நடந்து செல்வதற்குறிய நன்மை:நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்*

✅ “எவரொருவர் ஜும்-ஆதினத்தில் அதிகாலையில் எழுந்து குளித்து, வாகனத்தில் ஏறாமல், ஜும்-ஆவுக்காக நடந்து சென்று, இமாமுக்கு அருகாமையில் அமர்ந்து, அவர் சொல்வதை செவிமெடுக்கின்றாரோ அவர் நடந்து சென்ற ஒவ்வொரு எட்டுக்கும், நின்று வணங்கிய, நோன்பு நோற்ற  நன்மை கிடைக்கும்” (ஆதாரம்: அபூதாவூத்)

*இரண்டு வெள்ளிக்கிழமை மற்றும் மூன்று நாட்களுக்கு இடைப்பட்ட பாவங்கள் மன்னிக்கப்படும்*

✅ நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “எவரொருவர் குளித்து ஜும்ஆவுக்குச் சென்று தொழுதுவிட்டு, இமாம்  ஜும்ஆவை  முடிக்கும் வரை மெளனமாக இருந்துவிட்டு ,அவருடன் தொழுகின்றாரோ அவருக்கு இரண்டு ஜும்ஆவுக்கும் மேலதிகமாக மூன்று நாட்களுக்கும் இடைப்பட்ட பாவங்கள் மன்னிக்கப்படும்” (ஆதாரம்: முஸ்லிம்)

*இத்தினத்தில் அதிகமாக நபி (ஸல்) அவர்கள் மீது ஸலவாத்து சொல்ல வேண்டும்*

✅நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “உங்களிடத்தில் சிறந்த நாள் வெள்ளிக்கிழமை நாளாகும். அத்தினத்தில் தான் நபி ஆதம் (ஆலை) அவர்கள் படைக்கப்பட்டார்கள். அதிலேதான் அவர் மரணித்தார், அதிலேதான் மறுமை நாள் நிகழும், மனிதன்  விசரனைக்காக மீண்டும் எழுப்பப்படுவான். இத்தினத்தில் அதிகமதிகம் என் மீது ஸலவாத்துச் சொல்லுங்கள், நிச்சயமாக நீங்கள்  சொல்லக்கூடிய ஸலவாத்து என்னிடத்தில்  எடுத்துக் காட்டப்படும், நபிமார்கள் உடலை  பூமி உண்பதை (அழிப்பதை) விட்டும்  அல்லாஹ் ஹராமாக்கினான்”(ஆதாரம்: அஹ்மத்)

*ஜும்ஆ தினத்தில் குளிப்பது சுன்னத்தாகும்*

 ✅நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “உங்களில் ஒருவர் ஜும்ஆவுக்கு செல்பவராக இருந்தால் அவர் குளித்துக் கொள்ளட்டும்” (ஆதாரம்: புகாரி, முஸ்லிம்)


*இமாம் பிரசங்கத்தை நிகழ்த்தும் போது அதனை சிறந்த முறையில் செவிமெடுக்க அதனை விளங்கி பிரயோஸனம் அடைய வேண்டும்*

✅ நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “இமாம் பிரசங்கத்தை நிகழ்த்தும் போது ஒருவர் தனது சகோதரனுக்கு வாயை மூடு என்று கூறினால் அவர் தனது ஜும்ஆவை வீனாக்கிவிட்டார்” (ஆதாரம்: புகாரி, முஸ்லிம்)

🔮🔮🔮🔮🔮🔮🔮🔮🔮🔮

🔮 இஸ்லாமிய மார்க்க செய்திகளை அழகிய முறையில் அறிய

♻ *வாட்ஸ்அப்பில் எங்கள் செய்தியை பெற* 👇

📲+919087971872

📱+919629167027

📲 +919994675186

*பேஸ்புக்கில் எம்மை தொடர* 👇

https://m.facebook.com/Makkalmedia-1684365771847561/?ref=wizard

📮 பதிவு நாள்:2: SEPTEMBER 2016

Part of 👇
📡 *ECHO DAWAH FOUNDATION* 📡

No comments:

Post a Comment